நாஜி படைத் தலைவரான ஹிட்லர் பயங்கரமான கொலை வெறித்தாக்குதல் மனநிலையில் இருந்தார். ஒரே நேரத்தில் பல ஆயிரம் யூதர்களை விஷ வாயு கூடத்தில் பூட்டி நச்சு வாயுவை பரப்பி கொலை செய்தார். அவர் போர் வெறியை ஒடுக்குவதற்கு பிரிட்டன் உள்பட உலக நாடுகள் ரகசிய திட்டம் தீட்டின. பெண்களிடம் மென்மைதன்மை ஏற்படுத்தக்கூடிய ஹோர்மோனை ஹிட்லரின் உணவில் கலந்துவிட வேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது. இந்த ஹோர்மோன் பெறும் நபர் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்கும் சூழல் ஏற்படும். ஹிட்லரின் சகோதரி பவுலா வோல்ப் அண்ணன் ஹிட்லர் போலவே வெறிக்குணம் கொண்டவர் அல்ல, அமைதியாக காணப்படுவார். அவரைப் போல ஹிட்லரை அமைதிப்படுத்த வேண்டும் என திட்டம் தீட்டினர். இந்த ஹோர்மோன் மணம் இல்லாதது. எனவே இதனை உணவில் கலந்தால் அதை சாப்பிடுபவருக்கு அதைப்பற்றி தெரியாது. எனவே இந்த திட்டம் தீட்டப்பட்டது. ஹிட்லரின் தங்கை 1920ம் ஆண்டு வியன்னாவில் செயலாளராக பணியாற்றினார். அவருக்கு 1945ம் ஆண்டு வரை ஹிட்லர் நிதியுதவி செய்து வந்தார். இரண்டாம் உலக போருக்கு பின்னர் பவுலாவை அமெரிக்க ஏஜென்ட்டுகள் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் விடுவிக்கப்பட்டார். 1960ம் ஆண்டு வரை அவர் தனிமையில் இருந்து மரணம் அடைந்தார். இத்திட்டம் குறித்து கார்டிப் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் போர்டு புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் செப்டம்பர் 20ம் திகதி வெளியிடப்படுகிறது. |
No comments:
Post a Comment