ஆங்கிலத்தில் " Murphy 's law " என்று ஒன்று இருக்கிறது. அதாவது ஏதாவது நடப்பதற்கு வாய்ப்பு ரொம்ப கம்மி . ஆனால் , அது நடந்தால் ஒட்டு மொத்தமே பலன் இல்லாமல் போய்விடும், என்று ஒரு அமைப்பு இருக்கும்போது , சரியாக அதுதான் நடக்கும்.
ஒருவர் தினமும் குடை எடுத்துக்கொண்டு ஆபீஸ் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். எதாவது ஒரு நாள், அவசரத்தில் மறந்து சென்று விடுவார். சரியாக , அதே நாள் - மழை பிச்சு உதறும். bread லே ஜாம் தடவுவோம். எங்கேயோ பராக்கு பார்ப்பீங்க.. கையிலே இருந்து ஸ்லிப் ஆகி கீழே விழும்.. கரெக்டா ஜாம் தடவுன பக்கம் தரையோட விழும்.. தூசு எல்லாம் ஒட்டிக்கிடும். இந்த மாதிரி நடக்குறத தான் " Murphy 's Law " னு சொல்றாங்க.
நமது வாழ்க்கையில் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் தடைப்பட்டுக்கொண்டே இருந்தால், வாழ்வில் எப்படி முன்னேறுவது? இந்த மாதிரி நடக்கவே நடக்காதுன்னு ஒரு ரிஸ்க் எடுத்து இருப்போம்.. வேணும்னே அந்த மாதிரி நடக்கும்.. எல்லாமே கவுந்து , கடுப்பாகி .. எல்லார் மேலேயும் எரிஞ்சு விழுந்துக்கிட்டு இருப்போம்..

அதாவது , ஒரு விஷயம் நமக்கு கிடைக்காதுன்னு இருந்துட்டாப் பரவா இல்லை. ஆனா, இதோ கைக்கு வரப்போகுது , எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு இருக்கிறப்போ.. தட்டிப் போயிடுச்சுனா ??
உங்கள் ஜாதகத்தில் பிதுர் தோஷ அமைப்பு இருக்குதான்னு பாருங்க.. !
நம்ம இணைய தளத்துலே பித்ரு தோஷம் பற்றி - ஏற்கனவே இரண்டு மூன்று கட்டுரைகள்ளே தெளிவா எழுதி இருந்தேன். அந்த மாதிரி உங்க குடும்பத்துலே இருந்த முன்னோர்கள் , அவர்கள் ஆத்மா சாந்தி அடைய ஒரு அற்புதமான வாய்ப்பு இப்போ வரப்போகிற ஆடி அமாவாசை. இந்த மாதம் 30 ஆம் தேதி வருது. சனிக்கிழமை. மாதக்கடைசி , கம்பெனிலே வேலை அதிகமா இருக்கும்.. !! Murphy's Law படி நீங்க கோயில்கூட போக முடியாத சூழல் வரலாம். ... ஆனா , இப்போ இருந்தே பிளான் பண்ணுங்க.. முடிந்தால் சதுரகிரி வந்து பாருங்க.
ஒவ்வொரு வருடமும் எத்தனையோ விழாக்கள் , மாத பூஜைகள் சதுரகிரியில் நடந்தாலும் , இந்த ஆடி மாத அமாவாசை போல வேறு எந்த நாளும் விசேஷம் , பிரசித்தி பெற்றதில்லை.
தட்சிணாயனத்தின் முதல் மாதமான ஆடி மாதம் இறைவழிபாட்டுக்கு மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாத அமாவாசை பிதுர்பூஜைக்கு உரியதாகபோற்றப்படுகிறது.
ஆடி அமாவாசை அன்று நீர் நிலைகளிலும் சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும் உறவினர்களுக்கும் முறையாகப் பூஜை செய்து வழிபட்டால் எடுத்த காரியங்கள் நிறைவேறும்; பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும்; இடையூறு இல்லாமல் சுகமாக வாழலாம் என்பதால், அன்று பிதுர் பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.
பெற்றோர்களுடன் வாழ்ந்த காலத்தில் அவர்களைச் சீராக கவனிக்காதவர்கள்கூட, அவர்கள் இந்த உலகைவிட்டு மறைந்தபின் மிகுந்த பக்தியுடன் பிதுர்பூஜை செய்து வழிபட்டு மனதில் உள்ள உறுத்தலையும் அச்சத்தையும் போக்கிக் கொள்கிறார்கள்.
Sathuragiri - Sundaramahalingam (Old Photo )
சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என ஈசன் இரண்டு சிவலிங்க மூர்த்தங்களாய் கோவில் கொண்டுள்ள இத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசையும் பௌர்ணமியும் மிகவும் விசேஷமாகக் கருதப்பட்டாலும், ஆடி அமாவாசை மிகவும் போற்றப்படுகிறது. அந்த நாளில் இந்த மலை உச்சியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள அமாவாசைக்கு ஒருநாள் முன்னதாகவே பக்தர்கள் தகுந்த உணவு, பாதுகாப்பாக மருந்து, மாத்திரையுடன் வந்துவிடுகிறார்கள்.
அடிவாரத்திலிருந்து சுமார் நான்கு மணி நேரம் பயணித்து சுந்தர மகாலிங்க சுவாமியைத் தரிசித்துவிட்ட நிலையில், தங்கள் துன்பங்களும் பாவங்களும் நீங்கியதாக உணர்கிறார்கள். ஆடி அமாவாசையன்று நடைபெறும் பிதுர்பூஜைக்குரிய பொருட்களை மலையடிவாரத்திலிருந்தே வாங்கிச் சென்று இறைவனின் சந்நிதியில் சமர்ப்பித்து, தங்கள் முன்னோர்களையும் மறைந்த பெற்றோர்களையும் நினைவு கூர்ந்து வழிபடுகிறார்கள். இதனால் அவர்களின் ஆசி கிட்டும் என்பதுடன் பிதுர்தோஷமும் விலகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது.
பொதுவாக ஆடி அமாவாசை அன்று மூலிகைகளின் சக்தி அபரிமிதமாக வெளிப்படுவதாகச் சொல்வார்கள். அன்றைய தினம் அதிகாலை மூன்று மணிக்குமேல் காலை எட்டு மணிக்குள் அங்குள்ள மூலிகைகள்மேல் படர்ந்து வரும் காற்றினை சுவாசிக்கும்போது உடலில் உள்ள அத்தனை நோய்களும் நீங்கும் வாய்ப்பு உள்ளது. இதனால்தான் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடுகிறார்கள். மேலும், அங்குள்ள நீரூற்றுகளிலும் அருவிகளிலும் மூலிகைகளின் சத்து இருப்பதால், அதில் நீராடும்பொழுது உடலிலுள்ள நோய்கள் நீங்குவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும். மேலும், மலை உச்சியில் பிதுர்பூஜை செய்வதால் அந்தப் பலன் எளிதாகக் கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளதால் ஆடி அமாவாசை சதுரகிரி மலையில் போற்றப்படுகிறது.

இந்த ஆடி , அமாவாசை நாளில் சதுரகிரி மலையே அல்லோல கல்லோலப் படும். வந்து இருக்கும் மக்கள் மன சாட்சியே இல்லாமல் - மலையே அசுத்தப்படுத்தி, அருவருப்பை உண்டாக்கி விடுகின்றனர்.
நீங்களும் அந்த தவறை செய்து விடாதீர்கள்... ! எப்படி திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபம் உள்ளதோ, அந்த அளவுக்கு சதுரகிரிக்கு இந்த ஆடி அமாவாசை ! உங்கள் வாழ்வில் தொடர்ந்து கொண்டு இருக்கும் பிரச்னைகள் - சுமுகமாக தீர்ந்து , உங்கள் மூதாதையரின் பரிபூரண ஆசி கிடைக்க - ஆடி அமாவாசையில் சுந்தர மகா லிங்கத்தின் அருள் பெறுங்கள். !

மதுரையிலிருந்து --- ஸ்ரீவில்லிபுத்தூர் , ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பேருந்துகளில் ஏறி - கிருஷ்ணன் கோவில் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். மதுரையில் இருந்து சுமார் 65 km தொலைவு.
இந்த கிருஷ்ணன் கோவிலில் பெரிய இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது. அதனால் எல்லா பேருந்துகளுமே இங்கு நின்று செல்லும். கிருஷ்ணன் கோவிலில் இருந்து வத்ராப் / வத்திராயிருப்பு என்ற ஊருக்கு வந்து விடுங்கள். சுமார் 10 km தொலைவில் உள்ளது. அங்கு இருந்து ஆட்டோ / வேன் / மினி பஸ் பிடித்து தாணிப்பாறை சென்று விடுங்கள். இதுவே சதுரகிரி மலை அடிவாரம். இங்கு இருந்து நடந்து தான் மேலே செல்ல வேண்டும்.
தினமும் சதுரகிரி இலிருந்து காலை 5 .30 மணிக்கு , தாணிப்பாறை வரை பேருந்து செல்கிறது. மாலை 5 மணி அளவில் திரும்பவும் உள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் மேலே சென்று தரிசனம் செய்து திரும்ப முடியும். பௌர்ணமி, அமாவாசை தினங்களில் கூட்டம் அலை மோதும். முதல் தடவை / அல்லது தனியே செல்பவராக இருந்தால் , இந்த விசேஷ தினங்களில் வரவும். சில முறை வந்து பழகிய பிறகு, நீங்கள் சாதரணமான நாட்களில் செல்லலாம்.

ஏதாவது காரணத்தால் சதுரகிரி போக இயலவில்லை என்றால், உங்கள் அருகில் இருக்கும் ஆலயங்களில் இந்த அமாவாசை அன்று பிதுர் தர்ப்பணம் மறக்காமல் செய்யுங்கள்.. !!
No comments:
Post a Comment