Thursday, June 30, 2011

இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் ! வாங்க ! Tips and Tricks!!( பாகம் - 02 )


இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் ! வாங்க ! Tips and Tricks!!( பாகம் - 02 )

அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம் !

நேற்றைய நமது கட்டுரை படித்துவிட்டு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட நண்பர்களுக்கு , மிக்க நன்றி. ஆரம்ப நிலையிலிருந்து நான் எழுத விருப்பதால், பிளாக்கர் பற்றி ஏற்கனவே அறிந்தவர்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இருக்காது. எனக்கு இதில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது.. நான் எப்படி இதில் சம்பாதிக்கிறேன்.. என்று , இது கிட்டத்தட்ட நான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் ஒரு பயணம் தான். நானே ஒரு அரை வேக்காடாகக் கூட இருக்க கூடும், நானும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் கடல் அளவு. இந்த தொடர் கட்டுரை , எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் முயற்சி. புதிதாக இணையம் மூலம் பணம் பண்ணும் வித்தைகளை கற்றுக் கொள்பவர்களுக்கு, நிச்சயம் , இது ஒரு ஜாக்பாட்.. புதையல் போலே இருக்கும்... சரி  , இனி .. இன்றைய கட்டுரை..
=============================
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSndVVsUgcw_Sr74JnEdve1Xv-ePpmIH5eVdoD5ZzQxob7b89Or
வலைப்பூ எப்படி தொடங்குவது என்பது பற்றி நான் உங்களுக்கு விரிவாக சொல்லப்போவதில்லை. கூச்சப்படாமல் கூகுளில் தேடினால் உங்களுக்கு அது ஒரு ரெண்டு லட்சம் ரிசல்ட் காட்டும். எத்தனையோ பதிவர்கள் இதே தலைப்பில் பல கட்டுரைகளை  ஒரு ஆர்வக்கோளாறில் பதிவு செய்தோ / காப்பி பேஸ்ட் செய்தோ இருக்கலாம். 
நாம் சொல்லவிருப்பது எந்த மாதிரி வலைப்பூ தொடங்கினால் , நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் என்பது பற்றி.. 

எனக்கு ஆங்கிலம் அவ்வளவா தெரியாதே.. தமிழிலேயே நானும் வலைப்பூ ஆரம்பித்து , சம்பாதிக்க முடியுமா? முடியும்.. ஆனால் , கொஞ்சம் நாளாகும். நீங்கள் ஆரம்பிக்கும் வலைப்பூவைப் பொறுத்து, அதில் வரும் வாசகர் எண்ணிக்கை , உங்கள் அலெக்ஸா ரேங்க் , பேஜ் ரேங்க் பொறுத்து . நீங்கள் இன்று ஆரம்பித்தால் ஒரு வருடமோ , இரண்டு வருடமோ ஆகலாம். அதுவரைக்கும் யார் பொறுத்து இருப்பது..? அதற்குள் இங்கிலீஷ் கற்று  முடிச்சிடலாமே.... அதனாலே ஆங்கில ப்ளாக் ஆரம்பிக்கிறதே நல்லது.

இதனாலே என்ன அட்வான்டேஜ் ... ஒன்னு நமக்கு விசிட்டர்ஸ் அதிகம் வருவாங்க. .. ஒரு சிம்பிள் லாஜிக் .. கூகுள் சர்ச் என்ஜின் இல் நம்மில் எத்தனை பேர்  தமிழ் கீவோர்ட் போட்டு தேடுறோம்.. ....??  ரெண்டாவது பிளஸ்  ஆட்சென்ஸ் அக்கௌன்ட் வாங்கலாம்... விளம்பரம் நிறைய கிடைக்கும்.. இப்படி.. ஏகப்பட்ட பிளஸ் இருக்கு.   சம்பாதிக்கணும்னு நெனைச்சா இங்கிலீஷ் ப்ளாக்  தான். ... !!

ஆட்சென்ஸ் அக்கௌன்ட் நீங்க வாங்கணும்னா , உங்க ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு ஆறு மாசமாவது ஆகி இருக்கணும். கன்டென்ட் ஒரிஜினலா  இருக்கணும் இப்படி ஏகப்பட்ட லொள்ளு இருக்கு... இதை எல்லாம் விட பெரிய ரோதனை.. சம்பந்தமே இல்லாம , நீங்க வயலேட் பண்ணிட்டீங்கன்னு அக்கௌன்ட் லாக் பண்ணிடுவாங்க..     நம்ம ஆளுகளும் சும்மா இல்லாம இல்லாத தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ணி இருப்பாங்க..   அவங்களே விளம்பரத்தை க்ளிக் செஞ்சு இருப்பாங்க.. நீங்க எந்த சைட் வேணும்னாலும் ஓபன் பண்ணிப் பாருங்க.. உதாரணத்துக்கு  ஒரு ப்ளாக்  .... (www .charmingindians .blogspot .com )  இது நமக்கு தெரிஞ்சவர் ஒருத்தரோட சைட் தான்.. சாதாரணமான சினிமா செய்திகள் , நடிகைகளின் படங்கள் .. இதே தான் இருக்கும்.. முழுக்க, முழுக்க.
பாருங்க எவ்வளவு விளம்பரம் வருதுன்னு.. நீங்க அந்த விளம்பரங்களை க்ளிக் பண்ணினா அவருக்கு காசு வரும்.

உதாரணத்துக்கு நீங்க பார்க்கும்போது நோக்கியா விளம்பரம் ஒன்னு வருதுன்னு வைச்சுப்போம்.. நோக்கியா மாதிரி கம்பெனிக்கு எல்லாம் விளம்பரத்திலே கோடிகளை கொட்டுறது சகஜம் இல்லையா.. அவங்களுக்கு இருக்கிற விளம்பர ஏஜென்ட் கிட்ட பட்ஜெட் கொடுப்பாங்க.. அதில் ஒரு பகுதி இணையத்திலே விளம்பரம் கொடுக்க அலாட் பண்ணுவாங்க.. அந்த விளம்பர  கம்பெனியோ , இல்லை அதே மாதிரி விளம்பர ஏஜெண்டோ  ... நீங்க பெரிய வலைப்பூ / இணையம் வைச்சு இருந்தா , உங்களை அணுகுவாங்க.. இந்த அளவு இடம் வேணும்,, இத்தனை மாசம்... மாச வாடகை இவ்வளவு டாலர். இப்படித் தான் டீலிங் இருக்கும்.

சரி, நீங்க ஒரு குட்டி வலைப்பூ வைச்சு இருக்கீங்க.. உங்களை அவங்க அணுக மாட்டாங்களே.. அதற்குத் தான் கூகுள் ஆட்சென்ஸ் ...  உங்களை மாதிரி கோடி, கோடி கணக்கிலே ப்ளாக் வைச்சு இருக்கிறவங்க எல்லாம்.. ஆட்சென்ஸ் லிங்க் பண்ணும்போது , கூகுள் ஆட்ஸ் வரும். ஒட்டு மொத்தமா ப்ளாக் லே வர்ற பேஜ் இம்பிரஸ்ஸ்சன்  இத்தனை மில்லியன் .. இந்த இந்த ப்ளாக் லே ... அதுலே உள்ளேபோய் க்ளிக் பண்ணினவங்க இத்தனை லட்சம் பேர்னு , கூகுள் அவங்க கிட்டே இருந்து காசு வாங்கிக்கும்.  அதுலே ஒரு பகுதி தான் , உங்களுக்கு வரும். நீங்க நல்லா வளர்ந்தா.. நீங்க ரொம்ப சம்பாதிச்சா.. கூகுள் நல்லா சம்பாதிக்கும். உங்களுக்கு மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கணும்னு ஆசை இருந்தா.. நீங்க அதுக்கேற்ப உங்க ப்ளாக்கை வளத்தீங்கன்னா .. கூகுளும் இன்னும் நூறு மடங்கு வளரும்.. உங்களை மாதிரி இன்னும் எத்தனை கோடி பேர்... யோசிங்க... உங்க சந்தோசம் ,,, எங்க சந்தோசம்.. நீங்க வளர்ந்தா.. நாங்களும் நல்லா இருப்போம்...

எப்படி இருக்கு.. கூகுள் கான்செப்ட்...?? ருசி கண்ட அத்தனை பெரும் ... ஒரு வெறியோட  சம்பாதிக்கிறாங்க.. அவங்க சம்பாதிக்க, சம்பாதிக்க.. கூகுளும் நெறைய சம்பாதிக்குது... இது ஒரு சின்ன சாம்பிள் தான்... இந்த மாதிரி ஏகப்பட்ட விஷயம் பின்னாலே பார்க்கப் போறோம்..

சரி , நாம மேலே பார்த்த அந்த (www .charmingindians .blogspot .com )  சைட் ஐ பார்ப்போம்.. இவர் பண்றது இதே மாதிரி லட்சக்கணக்கிலே இருக்கிற எதோ ஒரு ப்ளாக் லே போய் , அப்படியே  காப்பி  & பேஸ்ட் - ஒரு 2 / 3 போஸ்டிங் ஒரு வாரத்துக்கு போடுவாரு. அதிகமா , கவர்ச்சிகரமா நடிகைப் படங்கள் இருக்கும். ஒரு மாசத்துக்கு பேஜ் impression மட்டும் ஒன்றரை லட்சம் வரும். அதுக்கு வர்ற காசு ஒரு 60 லிருந்து 70 டாலர் வரும். யாராவது ஆட்ஸ் க்ளிக் பண்ணினா அதுக்கு தனி காசு. ..


இவர் போடுற படங்கள் அனேகமா , நம்ம இந்தியன் விசிட்டர்ஸ் அதிகமா இருக்கிறதாலே காசு கம்மி. .. இதுவே US , Eurpoe லிருந்து ட்ராபிக் அதிகமா வந்தா, இந்த பேஜ் impression க்கு மட்டுமே 150 டாலர் வரும்.   ஆனா, நம்ம ஊரு நடிக்கப் படங்களுக்கு பதிலா , ஹாலிவுட் பொண்ணுங்க படத்தை காப்பி / பேஸ்ட் பண்ணினா , எவனாவது ஒருத்தன் copyright பிரச்னைன்னு ஆரம்பிப்பாங்க.. உடனே கூகுள் லே கம்ப்ளைன் கொடுப்பான். ஏன்? என்னனே யோசிக்காமே கூகுள் ஆட்சென்ஸ் ப்ளாக் பண்ணுவாங்க.. சில சமயம் சர்ச் என்ஜின் லேயே ப்ளாக் பண்ணுவாங்க. எதுக்கு லொள்ளு..?

சரி, எப்படி ட்ராபிக் அதிகமா வரும்..? புதுசா ஒரு கன்டென்ட் நீங்க போட்டா , அது உலகத்துலே யாருமே பப்ளிஷ் பண்ணிடாம இருந்தா , உங்க சைட் தான் கூகுள் செர்ச் என்ஜின் லே  முதல் லே வரும்.... சரி, அதை தேடனும்லே யாராவது? அதுக்கு சுவாரஸ்யமா தகவல்கள் இருக்கணும். .. அதே தகவல் , உங்களை விட பெரிய சைட் பப்ளிஷ் பண்ணினா, அவங்க உங்களைவிட முன்னாலே போயிடுவாங்க.. யாராவது தேடும்போது....அதனாலே உங்க ப்ளாக் கும் சீக்கிரம் பெரிய ப்ளாக் ஆகணும்.... 

இதை எல்லாம் விட்டுத் தள்ளுங்க. நீங்க பாட்டுக்கு , குவாலிட்டி  கட்டுரைகளை போட்டுக்கிட்டே வந்தா, போதும்.. ட்ராபிக் தானே இம்ப்ரூவ் ஆகும்.  ஒரு முறை உங்க சைட் க்கு வந்தா, அந்த வாசகர் திரும்ப உங்க சைட் க்கு வரணும். அவரை வர வைக்கிற மாதிரி நீங்க எழுதணும்.

சரி, அகைன் அந்த சார்மிங் இந்தியன்ஸ் சைட் க்கு வருவோம். வாரம் அந்த சைட் லே அவரு செலவழிக்கிற நேரம் ஒரு அஞ்சு நிமிஷம் தான். ஆனா, ஒரு மூணு வருஷம் முன்னாலே ஆரம்பிச்ச விஷயம் . ஆரம்பிச்ச காலத்துலே பைத்தியம் மாதிரி அவரு வேலை பார்த்தாரு. நெறைய தடவை .. ஆட்சென்ஸ் ப்ளாக் ஆச்சு. கொஞ்சம் கூட மனம் தளரலை. அவர் பாட்டுக்கு அவர் கான்செப்ட் லே யோசிச்சு , போய்கிட்டே இருந்தாரு. முதல் ரெண்டு வருஷம் அஞ்சு பைசா புண்ணியம் இல்லை. இருந்தாலும், தொடர்ந்து செய்து வந்தாரு. இப்போ...? பெரிய பிஸ்தாதான். நீங்க ஒரு பெரிய கம்பெனியிலே வேலை பார்த்தாக் கூட அவரு இப்போ சம்பாதிக்கிறது உங்களாலே முடியாது.. அதை விட , அந்த சுதந்திரம் ... enjoynment ..!  அதைவிட பெரிய விஷயம், சும்மா ஒரு மாசம் ஒரு ப்ளாக் கை கை வைச்சு , concentrate பண்ணினா , கிடு கிடு னு அலெக்ஸா ரேங்க் குறையிது. ..விஷய ஞானத்துக்கு அவ்வளவு மதிப்பு. .. மூளையே பலம்.!!

இதே மாதிரி ஒரு 10 ப்ளாக் இருந்தா.., இந்த மாதிரி இல்லாம முக்கியமான மருத்துவம், சுற்றுலா, டெக்னாலஜி , சாப்ட்வேர் , ஹார்ட்வேர் ,  மாதிரி எல்லா  தலைப்புலேயும் ஒரு ரெண்டு ப்ளாக் , மூணு ப்ளாக் இருந்தா,,.. அதை எல்லாம் சின்சியரா நீங்க வளர்த்தா , பட்டையக் கெளப்பலாம்.

அவரு எனக்குத் தெரிஞ்சு ஒரு 30 ப்ளாக் சின்சியரா ரன் பண்றாரு. மொத்தமா ஒரு இருநூறு ப்ளாக் க்கும் மேலே வைச்சு இருக்கிறாரு. வெறும், இந்த மாதிரி விஷயங்கள் தான். டெய்லி ஆபீஸ் முடிச்சு , வீட்டுக்கு போய் ஒரு மணி நேரம் வேலை பண்றாரு. எவ்வளவு சம்பதிக்கிறார்னு நீங்களே கால்குலேட் பண்ணிக்கோங்க. ஒரு பத்து நிமிஷம் வேலை. ஒரு மணி நேரம் , புதுசு புதுசா கூகுள் லே என்ன இம்ப்ரூவ் பண்ணி இருக்கிறாங்க னு பார்க்கிறதுதான் வேலை. 

உங்க கிட்டே ரெண்டு ஆப்ஷன் இருக்கு. நச்சுனு ஒரு நாலு ப்ளாக். இல்லையா , நெறைய G -மெயில் id . ஒரு 200 ப்ளாக்... இத்துப்போன சமாச்சாரங்கள் கூட போடுங்க. .. ஆனா, சம்பாதிக்கணும். என்ன வேணும்னாலும் பண்ணு.. ஆனா .. காசு சம்பாதிக்கணும்..!! நாய் வித்த காசு குரைக்கவா போகுது..?

சரி, உடனே ஆட்சென்ஸ் அக்கௌன்ட் வாங்கணும்.. என்ன பண்றது..? என்ன குறுக்கு வழி.. .. !! நாம தான் சிங்க தமிழனாச்சே.. ! விடுவோமா என்ன? கூகுளுக்கே நாங்க அல்வா குடுப்போம் இல்லே... !!
அப்புறம் அந்த எந்திரன் படத்தை வைச்சு BMW வாங்கின  மேட்டர். அது எப்படின்னு அடுத்த கட்டுரை லே பார்ப்போம்.. !!

OK வா....  ??  சரி , எத்தனை பேர் .. இந்த தொடர் கட்டுரையை பாலோ பண்றீங்க.. நம்ம livingextra லே இது வருவது உங்களுக்கு பரவா இல்லையா..? இல்லை வேற ப்ளாக் லே கொண்டு போயிடலாமா? Your opinion please .....

என்னைப் பொறுத்த வரை , நாலு பேருக்கு நல்லா informative விஷயங்கள் தந்தா , அது தப்பே இல்லைன்னு தோணுது...(  நாயகன் ட்யூன் தான்..  டன் ட டன் ட....   டொடய்ங் ) ..

அதனாலே ... போடுவோமே. னுதான் எனக்கு தோணுது.... !!  
ஹல்லோ.. நம்ம வாசகர்லேயும்.. யாராவது செமத்தியா பணம் சம்பாதிக்கிறதுலே அனுபவம் இருக்கிறவங்க.. உங்க அனுபவத்தையும்  பகிர்ந்துக்கலாமே...! சம்பாதிச்சாதான்னு  இல்லை.. அனுபவம்  கூட உதவும்.. !


Read more: http://www.livingextra.com/2011/06/tips-and-tricks-02.html#ixzz1Qj2lze76

No comments:

Post a Comment