யூதர்கள் இனவழிப்பு
யூதர்கள் இனவழிப்பை அதிகாரபூர்வமாக ஹிட்லர் அறிவித்த கடிதம் இதுதான். செய்தி :-Wednesday, 08 June 2011
யூதர்கள் அழிக்கப்பட வேண்டுமென, ஹிட்லர் அதிகாரபூர்வமாக அறிவித்த முதல் கடிதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முதலாம் உலகமகாயுத்தம் முடிவடைந்த நிலையில் தயாரிக்கப்பட்ட இக்கடிதத்தில், ஜேர்மனிய சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் கையோப்பமிட்டு, யூதர்களுக்கு எதிரான anti Semitism கோட்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளது இக்கடிதத்தில் தான் என்கிறார்கள். இத கடித ஆதாரத்தை, Simon Wiesenthal மையம், நேற்று நியுயோர்க்கில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த மையத்தின் பொறுப்பாளரும், ஆராய்ச்சியாளருமான Rabbi Marvin Hier தெரிவிக்கையில், இக்கடிதம் 1919 ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. வரலாற்றில் மிக மிக முக்கியமான ஆதாரம் ஒன்றாக இது மாற்றம் பெற்றுள்ளது.
மஞ்சள் நிற கடதாசியில் சுமார் 4 பக்கங்களுக்கு டைப்ரைட்டர் மூலம் அச்சடிக்கப்பட்ட இக்கடிதம் பத்திரமாக வெள்ளை நிற கடித உறையில் வைக்க்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் குறிப்பிடப்படும் "Entfernung der Juden'' எனும் ஜேர்மன் மொழிச் சொல், யூதர்களை இல்லாதொழித்தல் எனும் அர்த்தப்படுகிறது. ஹிட்லர் தனது ஆட்சிபீடத்தில் இறுதி இலக்கு இது தான் என இக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதில் குறிப்பிடப்பட்ட படி 22 வருடங்கள் கழித்து, தனது சபதத்தை நிறைவேற்றும் முகமாக பெருமளவான யூதர்களை அவர் இல்லாதொழித்தார், என தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தை, யூதர்களின் மனித உரிமை ஒன்றியம், சுமார் 150,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கிக்கொண்டதுடன், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தமது அருங்காட்சியத்தில் நிரந்தரமாக பார்வைக்கு வைக்கப்போவதாக அறிவித்துள்ளது. 1919ம் ஆண்டு செப்டெம்பர் 16ம் திகதி இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதில் ஹிட்லர் கையொப்பமிட்ட போது, அவருக்கு 30 வயது. முதலாம் உலக யுத்தம் முடிவடைந்திருந்த அடுத்த வருடமே, இரண்டாம் உலகமகா யுத்ததிற்கான அடித்தளத்தை அமைத்துள்ளார் ஹிட்லர் என்பது இதிலிருந்து புலனாகிறது
.
No comments:
Post a Comment