| கிரிக்கட் போட்டியின் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள |
கூகுள் குரோம் உலாவியின் வெப் ஸ்டோர் நாளுக்கு நாள் புதிதாக ஏதாவது ஒரு சேவையை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் கிரிக்கட் விளையாட்டின் ஸ்கோர் போர்டை நேரடியாக நம் குரோம் உலாவியில் பார்க்கலாம். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியை நம்முடைய குரோம் உலாவியில் கொடுத்து வரும் திரையில் Install என்ற பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் குரோம் உலாவியில் கிரிக்கட் ஸ்கோர் போர்டு நிறுவலாம். இனி நம் உலாவியில் C என்ற ஐகானை சொடுக்கி நொடியில் கிரிக்கட் போட்டியின் ரன் மற்றும் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் இணையதளம் சென்று பார்ப்பதற்கு பதில் தேவைப்படும் நேரம் நொடியில் கிரிக்கட் போட்டி பற்றிய விபரங்களை உடனடியாக கொடுக்கும் இந்த கூகுள் நீட்சி நமக்கு பயனுள்ளதாக இருக்கும். |
No comments:
Post a Comment