Tuesday, June 7, 2011

நீங்கள் கால் பாதிக்கும் அனைத்து துறைகளிலும் ஜெயிப்பது எப்படி ?


நீங்கள் கால் பாதிக்கும் அனைத்து துறைகளிலும் ஜெயிப்பது எப்படி ?

ஒரு கல்லூரிப் பேராசிரியர் ஜென் குரு ஒருவரைக் கண்டு தனக்கு ஏற்பட்ட ஐயங்களைக் களையச் சென்றார். வரவேற்று உபசரித்தார் குரு. உள்ளே சென்று அமர்ந்த பேராசிரியர் ஜென் பற்றிப் பேச ஆரம்பித்தார். அவரிடம் ஒரு தேநீர் குவளையை நீட்டிய குரு அதில் தேநீர் ஊற்ற ஆரம்பித்தார். பேசிக்கொண்டே போனார் பேராசிரியர். குவளை நிறைந்தாலும் தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருந்தார் குரு. பதறிப்போன பேராசிரியர் சூடு தாங்காமல் கீழே போட்டுவிட, அமைதியாக குரு சொன்னார், "உங்கள் மனம் இந்த நிறைந்த குவளையைப் போல உள்ளது, நான் எப்படி உங்களுக்கு ஜென்னைப் பற்றி விளக்க முடியும்?"
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSEWci-JzBZQr0Xm_lDXHQ7z08LVzxYPXgut7VhT6uRK7IFVwMP
சதா சர்வ காலமும் ஒன்றைப் பற்றி மனதில் ஒரு உருவகம் போட்டுக்கொண்டு "அது அப்படித்தான் இருக்கும், இது இப்படித்தான் இருக்கும்" என நமக்குள்ளேயே ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு சிந்திப்பதே பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வில்லாமல் போகும் காரணம்.

வாழ்க்கையில் மற்றவர்கள் மெச்ச வாழவேண்டுமா? கால் பதிக்கும் எதிலும் வெற்றி வேண்டுமா? 

ஒரு விஷயத்தில் இறங்குமுன் அதை முழுமையாக அலசவேண்டும், "திறந்த வெற்று மனதுடன்". உங்கள் மனதில் ஏற்கனவே அந்த விஷயத்தைப் பற்றி உருவகம் இருக்குமானால் உங்களுக்கு அதைப் பற்றி "முழுமையாக" அலச முடியாது. மனம் அந்த விஷயத்தின் ஒரு பகுதியைப் பற்றிக்கொண்டே சுற்றிச் சுற்றி வரும். மனதிலிருந்து வெளிவாருங்கள் முதலில். மற்ற எல்லாவற்றையும் எரித்துவிடுங்கள். புதிதாக யோசியுங்கள். புதுப்புது விஷயங்கள் அற்புதமாக மலரும். 

மனதை மென்மையாக மலர விடுங்கள். அதுபோக்கில் சிந்திக்கட்டும். நீங்கள் செய்யமுடியாது என்று நினைத்த விஷயம், நீங்கள் அடையமுடியாது என்று நினைத்த பொருள், அத்தனை 'முடியாது'களுக்கும் 'முடியும்' என்ற விடை கிடைப்பதைக் காணலாம். 

எண்ணங்களிலின்றி தெளிந்த நீரோடைபோல இருக்கும் மனதிலிருந்து கிடைக்கும் அற்புதங்களை சந்தேகிக்காதீர்கள். அவற்றைச் செயல்படுத்த முழுமூச்சாக இறங்கினால் வெற்றி நமதே.எந்த ஒரு இக்கட்டான சூழலிலும், பதட்டம் அடையாதீர்கள். அதுவே உங்களுக்கு பெரிய பக்க பலமாக இருக்கும்.

வெட்டவெளியில் திரியும் மனமே சக்திகளின் ஊற்று. 



"உங்கள் வாயைத் திறவுமுன் உங்கள் மனதைத் திறங்கள்"
"கற்றுக்கொள்வதற்குமுன் கற்றவற்றை மறந்துவிடுங்கள்"
"வெறுமையான நம் மனதை எதிரிகளால் படிக்க முடியாது"


Read more: http://www.livingextra.com/2011/06/blog-post_07.html#ixzz1OaNmNiAq

No comments:

Post a Comment