பகிரப்படாத என் வாழ்வின் பக்கங்களில் ஆசைகள் நிறைந்திருக்கின்றன.. பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க எண்ணிய என் ஆசைகள் பட்டுப்புடவையாய் செத்துப்போயின.. பட்டுப்புடவை பார்ப்போருக்கழகு... இழைபிரிக்க வெந்நீரில் வெந்தவலி ...? கூட்டுப்புழு கதறும் சத்தம்கூடக் கேட்காமல் கருவே கல்லறையானது போல்... என் ஆசைகள் எனக்குள்ளேயே புதைந்துபோயின .. என் சிறகிலிருந்து பிரிந்த இறகுகள் உங்கள் காலடிகளில் சிதறிக்கிடக்கின்றன இயன்றவர் சேகரித்துத் தாருங்கள் மீண்டும் ஒருமுறை முயற்சிக்கிறேன்.. இறகுகள்கூட்டி சிறகுசெய்து பறப்பதற்கு..!! நட்புடன் ...யாழினி... |
No comments:
Post a Comment