Thursday, May 26, 2011

Vetri Vidiyal Srinivasan ரசித்ததும் புசித்ததும்

மகத்தான படைப்புக்களின் எழுத்தும் எண்ணமும் ஒரு கவிஞனின் சிந்தனையில் ஊடுகதிர் போலப் பாய்ந்து அவன் எழுதுகோல் முனை வழியே வடிகிறது.

" காலங்களில் அவள் வசந்தம் " திரைப்படப் பாடல் - பகவத் கீதையின் 11 ஆம் அத்தியாயத்தின் சாரம்.
" சுட்டும் விழிச் சுடர்தான் சூரிய சந்திரரோ ? " என்பது " சுட்டும் விழிச் சுடரே ! " என்னும் பாடலின் நதிமூலம் !

சுதந்திரம்
==========
இரவில்தான் வாங்கினோம்
ஆனால் இன்னும்
விடியவேயில்லை !

ஒரு அற்புதமான புதுக்கவிதை.

அதே த்வனி.... ஆனால் முற்றிலும் மாறுபட்ட காட்சி... கருத்து !

திருமணத்தன்று
மெட்டி போடக்
குனிந்தோம்.
நிமிரவேயில்லை !

இரண்டு கவிதைகளும் மிக நன்றாக இருப்பதிலிருந்தே தெரியவில்லையா... நான் எழுதியவை அல்ல என்று ...!
THANKS  Vetri Vidiyal Srinivasan

No comments:

Post a Comment