மனஅழுத்தம் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் |
குழந்தைகள், பெரியவர்கள் என எந்த வயதினருக்கும் மன அழுத்தம் ஏற்படலாம். வாழ்வில் எதிர்மறை பிரதிபலன்கள், நிறைவேறாத எதிர்பார்ப்புகள், இலக்கினை அடைய முடியாமை போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.ஆளுமை வகைக்கு அமைய ஒரு சிறு மன உழைச்சல் கூட பாரிய மன அழுத்தத்தைத் தூண்டி விடுகிறது. இந்த மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவே கவலை, உதவியற்ற மற்றும் நம்பிக்கையற்ற உணர்வுகள் ஏற்படுகின்றன. இந்த மன அழுத்தமானது கோபம், பயம், கவலை, நம்பிக்கையின்மை, குற்ற உணர்வு, அக்கறையின்மை, துக்கம் போன்ற பலதரப்பட்ட உணர்வுகளின் கலவை. இதன்போது தற்கொலை செய்து கொள்வதற்கான எண்ணம் தோன்றுவதும் கூட பொதுவானது. எனவே இதனை ஆரம்பத்திலேயே கண்காணிப்பது மிக முக்கியமானது. இந்த மன அழுத்தம் மூளையின் செயற்பாட்டைப் பாதிப்பதோடு இது மனித உடலுக்கும் தீங்கானது. எனவே மன அழுத்தம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள். கீழுள்ள ஆலோசனைகள் உங்களுக்கு உதவக்கூடும். உங்கள் உணர்வுகளைப் பற்றியும் நடந்தவைகள் குறித்தும் நீங்கள் கண்டிப்பாக யாருடனாவது பேச வேண்டும். உங்கள் குடும்பத்தினரிடமோ நண்பர்களிடமோ இது பற்றிக் பேசுவதை அசௌகரியமாக நினைத்தால் ஆற்றுப்படுத்துநர் ஒருவரை அணுகுங்கள். ஆனால் குடும்பத்தவர்களையோ நண்பர்களையோ உங்களுக்கு உதவி செய்ய அனுமதிக்க மறுக்க வேண்டாம். கேளிக்கை செயற்பாடுகளில் கலந்து கொள்ளுங்கள். குழந்தைகளுடனும் அருகில் இருப்பவர்களுடனும் விளையாடுங்கள். புதிய விடயங்களை முயற்சித்துப் பாருங்கள் அல்லது ஏற்கனவே நீங்கள் செய்தவற்றில் மகிழ்ச்சியாக அனுபவித்த விடயங்களை மீண்டும் செய்து பாருங்கள். அன்றாடம் உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள். இந்த சக்தியூட்டும் செயற்பாடு உங்கள் பொது சுகாதாரத்தைப் பேணுவதோடு மன உழைச்சலைக் குறைக்கவும் உதவுகிறது. சுகாதார அலுவலர் ஒருவருடன் பேசுங்கள். அவர்களுடன் நேர்மையாக இருங்கள். அவர்கள் உங்களுக்கு சிறப்பு மருந்துகளை வழங்கி அல்லது சிகிச்சைகளை வழங்கி உதவக் கூடும். துக்கத்தை அனுஸ்டிக்க உங்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள். அவசரமான சூழ்நிலையில் எடுக்கும் முடிவுகள் பிரச்சினையை அதிகரிக்கும். அடையக்கூடிய இலக்கொன்றைத் தீர்மானித்துக்கொண்டு அது நோக்கி செயற்படுங்கள். போதுமான அளவு உணவு தூக்கம் இரண்டும் உடலுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இறுதியாக இந்த சின்ன விடயம் உங்கள் வாழ்க்கையின் நீடிப்புத் தன்மையை வழங்கும். மது அருந்துதல், போதைப் பழக்கம் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள சிலர் இவற்றை நாடுகின்றனர். ஆனால் இவை அதிகரிக்கவே செய்யும். ஆரோக்கியமான உணவுக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துங்கள். சர்க்கரை மற்றும் கபீன் அடங்கிய உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். மன அழுத்த ஹோர்மோன்களை இந்த கபீன் சுரக்கச் செய்வதோடு உணர்ச்சிகளை கூட்டிக் குறைப்பதில் சர்க்கரை முக்கிய பங்கு வகிக்கிறது. |
No comments:
Post a Comment