எண்ணெய் பசை சருமம் :
எண்ணெய்ப் பசை சருமம் ஒருவரது அழகையே பாழாக்கிவிடும். எப்போது பார்த்தாலும் முகத்தில் எண்ணெய்ப் பசை வழிந்து கொண்டே இருக்கும். இதை துடைத்து அப்புறப்படுத்துவதற்கு என்றே ஒரு துணி வைத்திருக்க வேண்டும். இந்த எண்ணெய்ப் பசை சருமத்தால் பொடுகு, பருக்கள் வர அதிக வாய்ப்புகள் உண்டு. அதனால், இந்த சருமம் உள்ளவர்கள் தலையினை சுத்தமாக வைக்க வேண்டும். இவர்கள் வாரம் ஒருமுறை முகத்துக்கு ஆவி பிடிப்பதும் நன்மை தரும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியாகும். அத்துடன் இவர்கள் தங்கள் உணவில் பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் சேர்த்துக்கொள்வது சிறந்தது. இவற்றைத்தவிர கொழுப்பு நீக்கிய பால், தயிர், மோர் ஆகியவையும் நன்மை தரும். உணவில் அடிக்கடி முளைக் கட்டிய பயிறு வகைகளை சேர்த்துக்கொள்வது இன்னும் நன்மையளிக்கும்.
உலர்ந்த சருமம் :
இவர்களின் சருமம் எப்போதும் ட்றைல்' ஆகவே இருக்கும். இவர்களுக்கு சீக்கிரமே முகச்சுருக்கம் வர வாய்ப்புகள் உண்டு. எனவே இவர்கள் விற்றமின்கள் நிறைந்த உணவுகளையும், தாது உப்புக்கள் நிறைந்த உணவுகளையும் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. அத்துடன் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம்.
சாதாரண சருமம் :
இவர்களுக்கு சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவே. இவர்கள் எந்த வகை உணவையும் எடுத்துக்கொள்ளலாம். இருந்தாலும், அளவுக்கு மிஞ்ச வேண்டாம். அதிகமாக மோர், தண்ணீர் குடிப்பதும் எண்ணெய் உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக்கொள்வதும் இவர்களது சருமத்தை பட்டுப்போன்ற அழகுடன் வைத்திருக்கும்.
நட்புடன்,
பாரதி சதிஷ்குமார்..
No comments:
Post a Comment