Saturday, May 21, 2011

திமுகவின் ஆரம்ப நாட்களும், தொடரும் பொம்பளைப் பொறுக்கிகளும்…

திமுகவின் ஆரம்ப நாட்களும், தொடரும் பொம்பளைப் பொறுக்கிகளும்…

திமுகவின் ஆரம்ப நாட்களும், தொடரும் பொம்பளைப் பொறுக்கிகளும்…

கட்டுரை கண்ணதாசனால், திமுக வின் ஆரம்ப நாட்களை (1950கள்) பதிவு செய்யப்பட்டது--
அவனும் ஒரு தலைவனும் ஒரு நாள் இரவு ஒரு பெரிய வாடகைக் காரை வைத்துக் கொண்டு பெண் வேட்டையில் ஈடுபட்டார்கள். ஒவ்வோர் இடமாக போய்ப் பார்த்தார்கள். கடைசியில், தேனாம்பேட்டைப் பக்கமுள்ள குடிசைகளின் அருகில் வாடகைக்கார் நின்றது. ஒரு நாலைந்து பெண்கள் – கிராமத்துப் பெண்கள் – வேறு பெயரில் சொல்வதானால் நாட்டுக்கட்டைகள ், மடமடவென்று வந்து காரில் ஏறிக்கொண்டனர். காமுகன் பசிக்கு ருசியா தெரியும்?

அத்தனையையும் ஏற்றிக் கொண்ட வாடகைக்கார், நேரே சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் உள்ள ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டது.

திராவிட விடுதலை வீரர்கள் திராவிட நாடு அந்தப் பெண்களிடம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்கள் . காமக்கடலில் மூழ்கி எழுந்தார்கள். ஆனால் காரில் போவதற்குக் கூட பணம் கொடுக்காமல், அவர்களை வெளியே அனுப்பி விட்டார்கள்.

அன்றும் அதற்குப் பிறகும், நடைபெற்ற களியாட்டங்களை, ஒவ்வொன்றாக விவரிக்கத் தேவை இல்லை. அது சுவை குறைவாகவும் போய்விடும்.

ஆனால் சில பெண்கள், அவ்வப்போது நறுக்குத் தெறித்தாற்போல் கெட்ட கேள்விகளை அவனால் மறக்க முடியவில்லை!

“மேடையில் என்னென்னமோ பேசுகிறீர்கள்! அதெல்லாம் ஊருக்குத்தான் உபதேசமா?”
“நீங்களே இப்படி நடப்பதைப் பார்த்தால், யாரை நம்புவதென்றே தெரியவில்லை.”
“உங்கள் கையில் நாடு கிடைத்தால் – சட்டசபை எல்லாம் பெண்களாகவே இருப்பார்கள்.”
இப்படி ஆணித்தரமான பொன்மொழிகள் பலவற்றை அவர்கள் சந்தித்த பெண்கள் உதிர்த்திருந்தா ர்கள்.

-- திமுகவின் ஆரம்ப நாட்களும், தொடரும் பொம்பளைப் பொறுக்கிகளும்…

No comments:

Post a Comment