காரிருளாய் இருந்த வாழ்வில் கதிராய் வந்தவனே... மலருக்குள் சிக்கிய வண்ணத்துப் பூச்சியாய் எனக்குள் சிக்கிய கவிதை நீ...
உன்னருகில் நிற்கும் போதெல்லாம் இடம் மாறத்துடிக்கும் இதயம் உன் மலராத விழிகள் கண்டு இடிந்தேதான் போகிறது.... பழகிய காலங்கள் எல்லாம் பார்வையில் மேய்ந்து செல்கின்றன...
எங்கே என் மனம்? இதயத்தின் இரைச்சல் மென்மையாக உருகி விழிவழியே வெளிவந்தபடியே.. ஈரத்தின் தளும்பல் கன்னங்களில் கண்ணீராய்..
உன் அழைப்பை இன்று, நாளை - என எதிர்பார்த்து எதிர்பார்த்து என் அலைபேசியும் அடங்கிவிட்டது! உன்னைத்தவிர எந்த அழைப்பையும் ஏற்க அதுவும் மறுக்கிறது என்னைப்போல்!
எதிர்பார்ப்பற்ற இதயத்தில் எண்ண அறுவடைகள் ஏகாந்தமாய்...ஏகமாய் விளைச்சலின் காரணம் நீயல்லவா..!!
எழுதும் எழுத்துக்களெல்லாம் உன்னைச் சார்ந்தே இருப்பதினால் என் பிறப்பின் ரகசியமானாய் நீ.. தேடல்களின் நாடல்கள் தொடரட்டும் தவிப்புகள் தொடர வேண்டாமே.... தயவுசெய்து தொடர்ந்துவிடு உன் பார்வைப் பனிக்கட்டிகள் பரிவோடு படட்டும் - என் ஜீவ தாகத்தைக் கொஞ்சமேனும் தணிக்கட்டும்..... |
No comments:
Post a Comment