சரஸ்வதியின் பன்னிரு நாம துதி
ரொம்பநாளைக்கு முன்னர் ஸ்ரீசரஸ்வதி தேவியின் பன்னிரு திருப்பெயர் மந்திரங்கள் அடங்கிய துதியை அகத்தியர் குழுவில் எழுதியிருந்தேன். சிலருக்கு அது தேவைப்படுகிறது.
ஸ்ரீசரஸ்வதிக்கு ஒரு த்வாதச நாம ஸ்தோத்திரம் இருக்கிறது. பன்னிரு நாமங்கள் கொண்டது.
ஸரஸ்வதி திவ்யம் த்ருஷ்டா
வீணாபுஸ்தக தாரிணீ
ஹம்ஸவாஹ ஸமாயுக்தா
வித்யா தாநகரீ மம
ப்ரதமம் பாரதீ நாம
த்விதீயம் ச சரஸ்வதி
த்ருதீயம் சாரதா தேவீ
சதுர்த்தம் ஹம்ஸவாஹினீ
பஞ்சமம் ஜகதீக்யாதம்
ஷஷ்டம் வாகீஸ்வரீ தத
கௌமாரீ ஸப்தமம் ப்ரோக்தா
அஷ்டமம் ப்ரஹ்மசாரிணீ
நவமம் புத்திதாத்ரீ ச
தசமம் வரதாயினீ
ஏகாசதசம் க்ஷ¥த்ரகண்டா ச
த்வாதசம் புவனேச்வரீ
ஸர்வஸித்திகரீ தஸ்ய
ப்ரஸன்னா பரமேச்வரீ
ஸா மே வஸது ஜிஹ்வாக்ரே
ப்ரஹ்மரூபா ஸரஸ்வதீ:
"வித்யா தானத்தைச்செய்யும் சரஸ்வதி தேவி திவ்யமான பார்வையால் என்னைப் பார்க்க வேண்டும். அவள் வீணை, புஸ்தகம் ஆகியவற்றைத் தாங்கியவள்; அன்னப்பட்சியை வாகனமாகக் கொண்டிருப்பவள்" என்று சங்கல்பித்து அவளைக் கேட்டுக்கொண்டு,
பாரதி,
ஸரஸ்வதி,
ஸாரதாதேவி,
ஹம்ஸவாஹினி,
ஜகதி,
வாகீஸ்வரி,
கௌமாரி,
ப்ரஹ்மாசாரிணி,
புத்திதாத்ரி,
வரதாயினி,
க்ஷ¤த்ரகண்டா,
புவனேஸ்வரி
ஆகிய பன்னிரு நாமங்களால் துதிக்கிறோம்.
"அவள் எல்லாவகையான சித்திகளையும் செய்பவள். மலர்ச்சியுடன் எழுந்தருளியிருப்பவள். அவள் என்னுடைய நாவில் வசிக்கவேண்டும். அவள் பிரம்மரூபியாகிய சரஸ்வதி" என்றும் பிரார்த்திக்கிறோம்.
Dr.Jayabarathi
No comments:
Post a Comment