| ஆராய்சி செய்தி |
அமெரிக்காவைச் சேர்ந்த நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் நரம்பு அறிவியல் ஆய்வக இயக்குனர் நினா கிராஜ் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. நீண்ட காலம் இசைப்பயிற்சி மேற்கொள்வதால் வயோதிகம் தெரிவதில்லை. நல்ல நினைவுத்திறன், தெளிவான கேட்கும் திறன் ஆகியவை ஏற்படும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வயதானவர்களுக்கு சத்தமான இடத்தில் கேட்கும் திறன் மிகவும் குறைவாக இருக்கும். காது சரியாக கேட்காத நிலையில் சமூகத்தில் தனித்து விடுதல் மற்றும் மனஅழுத்த நிலைக்கும் வயதானவர்கள் ஆளாவது உண்டு. இசைப்பயிற்சி பெற்றவர்களுக்கு நரம்புகள் வயதான காலத்திலும் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன. சிறிய வயதில் இருந்து மேற்கொள்ளும் தொடர் இசைப்பயிற்சி நரம்பு செயல்பாட்டு முறையை நல்ல நிலையில் வைக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வயதானவர்கள் தகவல் தொடர்பு பிரச்சனையை தவிர்க்க உதவும் இசைப்பயிற்சி குறித்த ஆய்வு ஓன்லைன் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment