- வரும் அக்டோபர்-31 ஆம் தேதியன்று உலக மக்கள் தொகை 700 கோடியாக இருக்கும் என்றும், கி.பி.2099 ஆம் ஆண்டுக்குள் அது 10 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் தற்போது வெளியாகியுள்ள ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே உல...க மக்கள் தொகை முந்தைய கணிப்பான 9.15 பில்லியனைத் தாண்டி 9.31 பில்லியனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹானியா ஜோல்ட்னிக் தலைமையில் அமைக்கப்பட்ட ஐநா குழுவின் கணிப்புப் படியே உலக மக்கள் தொகை 7 பில்லியனாக அக்டோபர்-31 அன்று இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைத் தெரிவிக்கும் விதமாக ஐநா அமைப்பான UNFPA சார்பில் ஏழுநாள் கவுண்ட் டவுனை அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை கடந்த 1998 ஆம் ஆண்டு 6 பில்லியனைத் தொட்டது. அதே வருடம் ஜூலையில் 6.89 பில்லியனாக உயர்ந்தது. கி.பி 2100 இல் சீன மக்கள் தொகை, தற்போதைய அளவான 1.34 இல் இருந்து 1 பில்லியனாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.See more
No comments:
Post a Comment