Wednesday, April 20, 2011

இஸ்லாமிய மதப்போதகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பயங்கர ஆயுதங்கள்

இஸ்லாமிய மதப்போதகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பயங்கர ஆயுதங்கள்

இஸ்லாமிய மதப்போதகராக மாறிய முன்னாள் பெர்லின் ராப் இசைக்கலைஞர் டெசோ டோக் வீட்டில் பொலிசார் திடீர் சோதனை நடத்தி பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினர்.35 வயது டெசோ டோக்கின் உண்மையான பெயர் மமோடு. இஸ்லாமிய வட்டாரத்தில் அவரது பெயர் அப்துல் மலிக் என பரவலாக அறியப்படுகிறது. 2010ம் ஆண்டு மார்ச் மாதம் அவரது வீட்டில் 16 முறை சுடக்கூடிய துப்பாக்கிக் குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
இசைக்கலைஞர் டெசோ யூடூப்பில் பதிவு செய்த வீடியோவிலும் பகுதி அளவில் தானாக இயங்கக்கூடிய க்ளாக் பிஸ்டலில் அவர் குண்டுகள் நிரப்புவது போன்ற காட்சி உள்ளது. அவர் வைத்திருந்த நவீனத் துப்பாக்கிக்கு உரிய லைசென்ஸ் இல்லை.
முன்னாள் ராப் கலைஞர் மீதான ஆயுதக் குற்றச்சாட்டை பெர்லின் மாநில விசாரணை செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் ஸ்டெல்ட்னர் உறுதிப்படுத்தினார். மமோடு பெயரில் இருந்த போது அவர் போதை மருந்துக் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார்.
இஸ்லாமியராக மதம் மாறிய அப்துல் மலிக் என்ற பெயர் பெற்றுள்ள ராப் இசைக் கலைஞர் வெளிப்படையாக வன்முறை ஜிகாத் முறையை பாராட்டி விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.

No comments:

Post a Comment