Monday, April 18, 2011

மூளை ஸ்கேன் மூலம் அல்சீமர் நோயை முன்கூட்டியே அறியலாம்

அல்சீமர் என்கிற நினைவு தடுமாற்ற நோய் தோன்றுவதற்கு முன்பாகவே, மூளையை ஸ்கேன் செய்து அந்நோயை முன்கூட்டியே அறியலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அது குறித்த புதிய ஆய்வு முடிவு நரம்பியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அல்சீமர் நோய் தாக்கம் வாழ்வின் நடுத்தர வயதுக் காலத்திலேயே துவங்குகிறது. இதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதை பிரிட்டன் அல்சீமர் ஆராய்ச்சி அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.
அல்சீமர் தீவிரமாக பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே துவக்கக் கட்டத்திலேயே சிகிச்சை அளித்தால் நோய் பாதிப்பை குறைக்க முடியும். இதில் 65 நோயாளிகளின் மூளை செயல்பாடு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது எம்.ஆர்.ஐ ஸ்கேன்களும், மூளையின் அடர்த்திப் பகுதிகளும் அளவிடப்பட்டன. இந்த சோதனையின் போது மூளையின் சராசரி அடர்த்தியில் உள்ள 20 சதவீத நோயாளிகள் அல்சீமர் நோய் தாக்கத்திற்கு ஆளாகி இருந்தது தெரியவந்தது. மூளைப் பகுதி மிக அதிக அடர்த்தியுடன் இருந்த நபர்கள் அல்சீமர் நோய்த் தாக்கம் இல்லாததும் தெரியவந்தது.
பிரிட்டனில் 65 வயதை கடந்த 14 பேரில் ஒருவருக்கு அல்சீமர் நோய் உள்ளது. மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் நடுத்தர வயதிலேயே அல்சீமரை கட்டுப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment