Thursday, April 28, 2011

மனித விந்து முதற்தடவையாக ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்டது


ஆய்வு கூடத்தில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மனித விந்தைத் தாம் உருவாக்கியுள்ளதாக இங்கிலாந்து, நியூகாசில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் வடகிழக்கு இங்கிலாந்தின் ஸ்டெம் செல் நிறுவனமும் அறிவித்துள்ளனர்.

ஆண்களிலுள்ள கருவளமற்ற தன்மை குறித்து சிறப்பான முறையில் விளங்கிக் கொள்ள இது உதவும் என்று நியூகாசில் பல்கலைக்கழக பேராசிரியர் கரீம் நயர்னியா கூறியுள்ளார்.

இந்தப்புரிந்துணர்வானது கருவளமின்றி துன்பப்படும் தம்பதிகளுக்கு உதவுவதற்கான புதிய வழிகளை அபிவிருத்தி செய்வதற்கு எமக்கு உதவும். பிறப்புரிமை அடிப்படையில் அவர்கள் பிள்ளையை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மீள் உற்பத்தியில் கலங்கள் எவ்விதம் சம்பந்தப்படுகின்றன மற்றும் இயற்கையாக நஞ்சாவதால் எவ்விதம் பாதிப்படைகின்றன என்பதை அறிவியலாளர்கள் கற்றுக் கொள்ளவும் இது இடமளிக்கிறது. எடுத்துக்காட்டாக, குருதிச் சோகையுடன் உள்ள இளம் பிள்ளைகள் வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்வதால் கருவளம் குறைந்த வாழ்வை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவது ஏன்? என்பது பற்றியும் அதற்கு தீர்வுகாணும் சாத்தியத்தை கண்டறியவும் இது தீர்வை வழங்கக் கூடிய நிலைமையை தோற்றுவிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், விந்தை உருவாக்கும் நடவடிக்கைகளை கற்றுக் கொள்வதானது பிறப்பு ரீதியான நோய்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பது தொடர்பாக சிறப்பான முறையில் விளங்கிக் கொள்வதற்கு இட்டுச் செல்லுமென இக்குழுவினர் நம்புகின்றனர்.

No comments:

Post a Comment