ஜிமெயிலில் டுவிட்டரை பயன்படுத்த |
டுவிட்டர் தளமானது நண்பர்களிடம் தகவல்களை பறிமாறிக் கொள்ள உதவும் தளம் ஆகும். சமூக இணையதளத்தில் அதிகமாக பயன்படுத்தபடும் தளத்தில் இந்த தளமும் ஒன்றாகும்.சாதாரண மனிதனில் தொடங்கி மிகப்பெரிய நபர்கள் வரை டுவிட்டர் தளத்தில் கணக்கு வைத்திருப்பார்கள். இவர்கள் தங்களுடைய சுயவிவரங்களையும், பிடித்த செயல்களையும் அவ்வப்போது டுவிட்டர் தளத்தில் வெளியிடுவார்கள். செய்திதாள்களில் கூட வெளிவராத செய்திகள் இதுபோன்ற சமூக இணையதளங்களில் காண முடியும். இதுபோன்ற செய்திகளை நாம் டுவிட்டர் தளத்தில் நம்முடைய கணக்கில் நுழைந்த பின்புதான் காண முடியும். ஒரே நேரத்தில் பல தளங்களில் பணியாற்றும் போது நாம் தனியாக இந்த தளத்திற்கு சென்று இதுபோன்ற செய்திகளை காண முடியாது. டுவிட்டரில் பதிவிடும் செய்திகளை ஜிடால்கில் இருந்தவாறே காண முடியும் இதற்கு ஒரு தளத்தில் ஜிமெயில் கணக்கு மற்றும் டுவிட்டர் கணக்கினை சமர்பிக்க வேண்டும். இந்த தளத்தின் நுழைந்து முதலில் கொடுக்கப்பட்ட சுட்டியை கிளிக் செய்து கூகுள் கணக்கின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு Allow என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக டுவிட்டர் கணக்கின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு Allow என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்து ஜிடால்கினை ஓபன் செய்து அதில் புதியதாக வந்துள்ள நண்பர் அழைப்பினை ஒகே செய்யவும். அவ்வளவு தான் இனி டுவிட்டரில் பதியப்படும் உங்கள் கணக்கு தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களால் ஜிடால்கில் இருந்தவாறே பெற முடியும். இந்த வசதியினை நீங்கள் ஜிமெயில் அரட்டையிலும், ஆர்குட் அரட்டையிலும் பெற முடியும். விரும்பினால் நிறுத்திக் கொள்ளவும் முடியும். இந்த வசதியின் மூலம் இனி தனியாக டுவிட்டர் கணக்கினை திறக்க வேண்டிய அவசியம் இருக்காது. |
No comments:
Post a Comment