ஆராய்சி செய்தி |
புற்றுநோய் தற்போது ரத்தம், குடல், மார்பகம், நுரையீரல், மூளை, சிறுநீரகம், கர்ப்பப்பை, வாய், தொண்டை என உடம்பின் சகல பாகங்களையும் பாதிக்கிறது.இதனை ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எண்டோஸ்கோபி மூலமாக கண்டறியலாம். ஆனால் அறிகுறிகளைக் கண்டறிந்து விடுவதற்குள் பல வேளைகளில் முற்றிவிடுகிறது. முன்கூட்டியே கண்டறிவதில் டொக்டர்களுமே திணறித்தான் போகிறார்கள். வலி நிவாரணிக்கு அடங்கி விடுவதால் சாதாரண தலைவலி, வயிற்றுவலி என்று விட்டு விடுகிறார்கள். இந்த சிக்கல்கள் அனைத்தையும் தீர்க்கும் வகையில் "எலக்ட்ரானிக் மூக்கு" ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் இஸ்ரேல் தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள். இதன் ஆய்வுக்குழு தலைவர் ஹோசம் ஹெய்க் இதுபற்றி கூறியதாவது: புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே உணர்ந்து சிகிச்சை பெறுபவர்கள் மிகவும் குறைவானவர்கள் தான். அதிலும் குறிப்பாக தலை, மூளை, தொண்டை, வாய், கழுத்து, குரல்வளை பகுதி புற்றுநோய் கடைசி நேரத்தில் தான் தெரியவருகிறது. இந்த வகையை "ஹெட் அண்ட் நெக்" புற்றுநோய் என்று குறிப்பிடுவார்கள். இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாசத்தில் இருந்தே புற்றுநோயை கண்டுபிடிக்க வசதியாக எலக்ட்ரானிக் மூக்கு ஒன்றை கண்டுபிடித்துள்ளோம். அவர்களுடைய சுவாசத்தை வைத்தே ஹெட் அண்ட் நெக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களா? என்பதை இக்கருவி கண்டுபிடித்துவிடும். இதன் முதல்கட்ட சோதனை 82 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. அதில் வெற்றியும் கிடைத்துள்ளது. இன்னும் பலகட்ட சோதனைகளுக்கு பிறகு இக்கருவி அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு ஹோசம் ஹெய்க் கூறினார். |
No comments:
Post a Comment