Friday, October 8, 2021

உலகம் அறிய வேண்டிய அதர்வண வேதத்தின் ரகசியங்கள்

நம்முடைய கலாச்சாரத்தில் ஆதியில் நான்கு வேதங்கள் உண்டு. ரிக், யஜூர், சாமம், அதர்வணம்.
இதில் வெள்ளைக்காரகள் கணக்குப்படி ரிக் வேதம் பழமையானது: சிலர் 6000 ஆண்டு பழமை என்பர்; இன்னும் சிலர் 3200 ஆண்டுகள் பழமை என்பர். அதர்வண வேதம் பிற்காலத்தியது என்பர். ஆனால் இந்துக்கள் இதை ஏற்பத்தில்லை. அவர்கள் கணக்குப்படி எல்லா வேதங்களும் கி.மு.3102 ஐ ஒட்டி வியாசரால் நான்காகப் பகுக்கப்பட்டவையே; அதாவது இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கும் முன்னரே 4 வேதங்களும் இருந்தன.
சங்க காலம் முதல் தமிழர்கள் சொல்லுவது நான்மறை; அதாவது 4 வேதங்கள். ஆனால் மனு முதலானோர் சில இடங்களில் த்ரயீ வேத = மூன்று வேதம் என்பதால் வெள்ளையர்களுக்கு சிறு குழப்பம்; அவர்களுக்கு தமிழும் தெரியாது. ஆகையால் அதர்வண வேதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பர்; உண்மையில் அதர்வண வேதம் என்பது அன்றாடம் பயன்படும் மருத்துவம், தாயத்து, பேய் ஓட்டல், விஷங்களை இற க்கல், தாய் மொழி, தாய் நாடு, "பூமி என்னும் அன்னை", எதிரிகளை ஒழிப்பது எப்படி என்பது பற்றிப் பேசுவதால் அதைச் சமயச் சடங்குகள் பற்றிப் பேசும் மூன்று வேதங்களுடன் சேர்க்காமல் பேசினர்.
வேத விற்பன்னர்களின் ஆயுதம் அதர்வண வேதம் என்று அகத்தியர் சொல்லுவார். கோபத பிராமணமோ எனில் நான்கு வேத புரோகிதர்களும் யாக யக்ஞங்களில் கலந்து கொள்வதைக் குறிப்பிடுகிறது. ஆகையால் வெளிநாட்டினர் சொல்வதை நம்ப வேண்டியதில்லை.
அதர்வண வேதத்தில் 6000 மந்திரங்கள் 760 துதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் சில அபூர்வ தாவரங்கள் அரிதானவை. அவைகளைத்தான் தாயத்துகளாக அணிந்து வந்தனர்.
அதர்வண வேதத்தை 20 காண்டங்களாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு காண்டத்திலும் எது சம்பந்தமான மந்திரங்கள் உள்ளன என்று சுருக்கமாக உங்களுக்கு புரியும் வண்ணம் இன்று சித்தர்களின் குரலில் பகிர்கிறேன்; இந்தப் பட்டியலைப் பார்த்தாலேயே நம் முன்னோர்களின் சிறந்த நாகரீகமும் உயர்ந்த சிந்தனையும் உடையவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.
1ம் காண்டம்:
***************
முதல் காண்டத்தின் முதல் மந்திரமே வாசஸ்பதி என்னும் வாக் (பேச்சு) தேவனையும் வசோஸ்பதி என்னும் செல்வ தேவனையும் வணங்கும் மந்திரம் ஆகும்.
கல்விக்கான மந்திரங்கள்
வெற்றிக்கான மந்திரங்கள்
எதிரிகளை அழிப்பதற்கான மந்திரங்கள்
நோயை அகற்றுவதற்கான மந்திரங்கள்
தண்ணீர் தேவதை பற்றிய மந்திரங்கள்
வரங்களைப் பெறும் மந்திரங்கள்
தர்மம் தொடர்பான மந்திரங்கள்
இதில் உள்ளன. ஒவ்வொன்றிலும் 4 மந்திரங்களைக் கொண்ட
35 துதிகள் முதல் காண்டத்தில் காணப்படுகின்றன.
2 ஆம் காண்டம்:
*******************
இதில் ஒவ்வொன்றிலும் 5 மந்திரங்களைக் கொண்ட 36 துதிகள் காணப்படுகின்றன.
நோயைக் குணப்படுத்தும் மந்திரங்கள்
ஜங்கிடா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்
அக்னி, இந்திரன், பரப் பிரம்மம் பற்றிய துதிகள்
இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.
ஜங்கிடா மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!
3 ஆம் காண்டம்:
*******************
ரிக் வேதத்தில் இடம்பெற்ற வசிஷ்ட மஹரிஷியின் முக்கிய மந்திரம், கொஞ்சம் மாறுதல்களுடன் இதில் உள்ளது. இது செல்வத்தை வேண்டும் மந்திரமாகும்.
எதிரிகளத் தோற்கடிப்பதற்காக்ன மந்திரம்
தேச ஒற்றுமைக்கான மந்திரம்
பட்டாபிஷேக மந்திரம்
பர்ண மணி என்னும் அபூர்வ தாயத்து மந்திரம் — இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.
பர்ண மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!
இதில் ஒவ்வொன்றிலும் 6 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.
4 ஆம் காண்டம்:
*******************
இதில் ஒவ்வொன்றிலும் 7 மந்திரங்களைக் கொண்ட 40 துதிகள் காணப்படுகின்றன.
ரிக் வேதத்தில் உள்ள யார்? என்னும் மந்திரம் இதில் இடம்பெறுகிறது. யார் என்றால் சம்ஸ்கிருதத்தில் க:– இது பிரம்மாவுக்கும் பெயர்! அதாவது ஓரெழுத்துச் சொல். இதை வைத்து யாரை வணங்குவது என்று மந்திரம் முழுதும் திரும்பத் திரும்ப வரும்.
இதில் அதிசய ஒற்றுமை என்ன வென்றால் தமிழ் “க” பிராமி லிபியிலிருந்து வந்தது. அந்த “க” பிராமியில் சிலுவை வடிவில் இருக்கும். அது எகிப்தில் கடவுளைக் குறிக்கும் சித்திர எழுத்து. ஆனால் வெறும் சிலுவையாக இல்லாமல் இரு புறமும் கைகளை உயரத் தூக்கிய மனிதன் போல மேல் நோக்கிய கோடுகளுடன் இருக்கும்.
விஷத்தை அகற்றும் மந்திரம்
எதிரிகளை நாடு கடத்தும் மந்திரம்
பலத்தை அதிகரிக்கும் மந்திரம்
தூக்கமின்மையை அகற்றும் மந்திரம்
சங்கு கிழிஞ்சல்களைக் கொண்டு தாயத்து செய்யும் மந்திரம்
மரங்கள், மழையை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்
மூலிகைகள் பசுக்களை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்
பாவங்களைப் போக்கும் மந்திரங்கள்
புழுக்களை அகற்றும் மந்திரங்கள்
சக்தியை அதிகரிக்கும் மந்திரங்கள்
5 ஆம் காண்டம்:
*******************
இதில் ஒவ்வொன்றிலும் 12 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.
குஸ்ட, சிலாச்சி, லக்ஷா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்
இவை என்ன தாவரம் என்பது பற்றி தகவல் கிடைக்கவில்லை.
வெற்றிக்கான மந்திரங்கள்
பிரம்மன் பற்றிய மந்திரங்கள்
எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்
பிராமணர்கள், பசுக்களைப் போற்றும் மந்திரங்கள்
எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்
ஆன்மீக பலத்தை உயர்த்தும் மந்திரங்கள்
ஆயுளை அதிகரிக்கும் மந்திரங்கள்
டாமாரங்களை அடித்து எதிரிகளை பயமுறுத்தும் மந்திரங்கள்
ஒரு அபூர்வ பசுவை வைத்திருப்பது பற்றி அதர்வணுக்கும் வருணனுக்கும் இடையே நடக்கும் சுவையான சம்பாஷணை,
பிராமணனின் மனைவி கடத்தல் பற்றிய செய்தி
பிராமணர்களை ஒடுக்கும் கொடுமை
ஆகியனவும் உள்ளன.
போர் முரசுக்குச் சொல்வது போன்ற இரண்டு மந்திரங்கள்.
6- ஆம் காண்டம்:
********************
இதில் ஒவ்வொன்றிலும் 3 மந்திரங்களைக் கொண்ட 142 துதிகள் காணப்படுகின்றன.
அமைதிக்கான மந்திரங்கள்
வளையல்கள் பற்றிய மந்திரங்கள்
‘ரேவதி’ தாயத்து பற்றிய மந்திரங்கள்
சவிதா, இந்திரன் போற்றும் மந்திரங்கள்
எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்
பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரங்கள்
7 ஆம் காண்டம்:
*******************
இதில் 118 துதிகள் காணப்படுகின்றன.
நீண்ட ஆயுளைத்தரும் மந்திரங்கள்
தாய் நாடு பற்றிய மந்திரங்கள்
தாய் மொழி பற்றிய மந்திரங்கள்
ஜனநாயக சட்டசபை பற்றிய மந்திரங்கள்
ஆத்மா பற்றிய மந்திரங்கள்
சரஸ்வதி மந்திரங்கள்
கணவன்– மனைவி நல்லுறவு பற்றிய மந்திரங்கள்
8 ஆம் காண்டம்:
*******************
இதில் ஒவ்வொன்றிலும் 26 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.
பேயை ஓட்டும் மந்திரங்கள்
ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள்
விராஜ்- விராட் என்னும் தேவதை பற்றிய மந்திரங்கள்
இறந்துகொண்டிருக்கும் மனிதனை எழுப்பும் குளிகை பற்றிய மந்திரங்கள்
9 ஆம் காண்டம்:
*******************
ஒன்பதாம் காண்டத்தில் பத்து துதிகள் இடம்பெறுகின்றன.
இதில் விருந்தினரைப் போற்றும் நீண்ட மந்திரம் உளது.
அஸ்வினி தேவர்களின் இனிமையான உதவி பற்றிய மந்திரமும் உளது.
ரிக் வேதத்தில் முதல் மண்டலத்திலுள்ள தீர்கதமஸ் என்ற முனிவரின் மிகவும் புகழ்பெற்ற மந்திரம் இங்கே இடம்பெறுகிறது இதில்தான் “கடவுள் ஒருவரே; அறிஞர்கள் அவரை வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்” என்ற புகழ் பெற்ற வாசகம் வருகிறது.
இது தவிர கிருஹப் ப்ரவேச மந்திரம்
நோய்களைத் தடுக்கும் மந்திரம்
பசுக்கள், காளைகளைப் பற்றிய மந்திரங்கள்
ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.
10- ஆம் காண்டம்:
*********************
இதில் ஒவ்வொன்றிலும் 25 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.
கேன (யாரால், எதனால்) என்ற கேள்வி மந்திரமும்
பிரபஞ்சத்தைத் தாங்கும் ஸ்கம்ப (தூண்) என்ற மந்திரமும்
பரப் பிரம்மம், பசுக்களைப் போற்றும்
விஷத்தை அகற்றும் ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன
11 ஆம் காண்டம்
********************
பதினோராம் காண்டத்தில் 10 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 31 மந்திரங்கள் இருக்கும்.
மூன்றாவது துதி உரைநடையில் இருக்கிறது. பாலில் சோறு பொங்கும் விஷயம் இது. எட்டாவது துதி, பல கடவுளரின் தோற்றம் பற்றியும் மனிதனின் படைப்பு பற்றியும் பாடுகிறது.
எதிரிகளை அழிப்பதற்கான மந்திர உச்சாடனங்கள், கடைசி இரண்டு துதிகளில் இடம்பெறும்.
ருத்ரனைப் பற்றிய நீண்ட துதி இருக்கிறது.
பிரம்மசர்யத்தின் சிறப்பு
உணவு தானியம் பற்றிய பிரார்த்தனை
பிரம்மனைப் பற்றிய மந்திரங்கள்
இந்தக் காண்டத்தின் சிறப்பு
12 ஆம் காண்டம் :
*******************
தாய்நாடு பற்றிய அருமையான நீண்ட கவிதை
காச நோயைத் தடுக்கும் மந்திரம்- இந்தக் காண்டத்தின் சிறப்பு
பன்னிரெண்டாம் காண்டத்தில் 5 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 60 மந்திரங்கள் இருக்கும்
இரண்டாவது துதி அந்திம யாத்திரை பற்றியது. இதன் பாதிப் பகுதி ரிக்வேதத்தில் (10-18) இருந்து எடுக்கப்பட்டது. ஒரு பிராமணனிடமிருந்து பசுவைத் திருடினால் என்ன பாவம் வரும் என்பதை 4, 5 துதிகளில் காணலாம்.
13 ஆம் காண்டம் :
*********************
பதிமூன்றாம் காண்டத்தில் 4 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 47 மந்திரங்கள் இருக்கும்
சிவப்பு (ரோஹித) வர்ணத்தைப் போற்றும் துதிகள் இதில் அடங்கும். சிவப்பு வர்ணம் என்பது சூரியனையும் அக்னியையும் குறிக்கும்.
அந்திமக் கிரியை பற்றிய மந்திரங்களைக் கொண்ட காண்டம்
14 ஆம் காண்டம் :
*********************
இரண்டே துதிகள்; ஆனால் மொத்தம் 139 மந்திரங்கள். கல்யாணம், சாந்தி முகூர்த்தம் தொடர்பான விஷயங்கள் உள; ரிக் வேத துதி 10-85 சில மாறுதல்களுடன் காணப்படும்.
15 ஆம் காண்டம் :
*********************
இதில் 18 துதிகள் உள. உரைநடையில் உளது. புரியவில்லை என்று வெள்ளைக்காரர்கள் எழுதியுள்ளனர். இதில் விராத்தியர்கள் எனப்படும் நாடோடிப் பிராமணர்கள் பற்றி உளது. அவர்கள் யாக யக்ஞாதிகளைச் செய்யாதவர்கள்; சித்தர்கள் போல!
பரமாத்மனைப் போற்றும் மந்திரங்களும் உண்டு
16 ஆம் காண்டம் :
**********************
இதில் 9 துதிகள் உள. பெரும்பாலும் உரைநடை. தாயத்துகள், குளிகைகள் பற்றிய அதிசய விஷயங்கள் நிறைய உள்ளன.
17 ஆம் காண்டம் :
*********************
ஒரே துதி! ஆனால் 30 மந்திரங்கள். இந்திரனைக் குறித்த துதியில் விஷ்ணு, சூரியன் ஆகியோருடன் அவரை ஒப்பிடுவர். மனிதர்கள், மிருகங்கள் ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் நலன் வேண்டும் துதி!
வெற்றிக்கான பிராத்தனை மந்திரங்கள்.
18 ஆம் காண்டம் :
********************
நாலே துதிகள்; ஒவ்வொன்றிலும் சராசரி மந்திரங்கள் 70; அந்திமக் கிரியைகள், திதி முதலியன இதில் அடக்கம். பல துதிகள் ரிக் வேத துதிகள்- சில மாறுதல்களுடன்.
முதல் துதி யமா-யமி உரையாடல்.
19 ஆம் காண்டம் :
*********************
72 துதிகள்; ஒவ்வொன்றிலும் சராசரி மந்திரங்கள் 8. பல இடைச் செருகல் இருப்பதாக வெள்ளையர் கணிப்பர். தாயத்துகள், குளிகைகள் பற்றிய பகுதிகளும் உள. ரிக்வேத புருஷ சூக்தம் 10-90 கொஞ்சம் மாறுதல்களுடன் காணப்படும்.
நதிகள், தண்ணீர், பரமாத்மன் பற்றிய மந்திரங்கள்
28 நட்சத்திரங்கள் பற்றிய மந்திரங்கள்
அமைதி, சமாதான மந்திரங்கள்
இதன் சிறப்பு அம்சங்கள்
20 ஆம் காண்டம் :
*********************
இருபதாம் காண்டம்தான் கடைசி காண்டம்; இதில் 143 துதிகள் உண்டு. பெரும்பாலும் இந்திரனைப் பற்றிய ரிக் வேத துதிகள்; குண்டபா பிரிவு (127-136) மிகவும் வியப்பான மந்திரம்- வயிற்றைச் சுற்றியுள்ள 20 உறுப்புகள், நாளங்கள், சுரப்பிகள் பற்றீயன. பல பாடல்கள் விடுகதை போன்றவை. அசுரர்களை விடுகதை போட்டே தோற்கடித்தனர் கடவுளர்.
இது போன்ற சிந்தனைகள் இந்த வேதம்— அறிவாளிகளின் வேதம்— என்பதைக் காட்டும். முதல் துதி வாக் (பேச்சு) பற்றி துவங்கியது. இப்படிப்பட்ட அறிவு தொடர்பான செய்திகளை சுமேரிய, எகிப்திய துதிகளில் காணமுடியாது. விருந்தினரைப் போற்றும் உயரிய பண்புகள், சத்தியத்தைப் போற்றும் கொள்கைகள் இவைகள் வெளிநாட்டுச் துதிகளில் இல்லை. இவை எல்லாம் பாரத சிந்தனையின் முன்னேற்றமடைந்த நிலையைக் காட்டும்.
- சித்தர்களின் குரல் shiva shangar

நவராத்திரி பூஜை முறைகள்.



நவராத்திரி கோலாகலம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது என்றாலும், வருடத்துக்கு வருடம் புதுமெருகு காணும் வித்தியாசமான விழா அது. வருடந்தப்பாமல் புதிது புதிதாக பொம்மைகள் வாங்குபவர்களும், ஒவ்வொரு வருடமும் ஒரு புதுமையான ஆன்மிகத் தத்துவ அடிப்படையில் கொலு வைப்பவர்களுமே இதற்குச் சான்று. அவரவருக்குப் பிடித்தவகையில் விதவிதமாக கொலு வைத்தாலும், ஒன்பது நாட்களும் கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்களும், வழிபாட்டு முறைகளும் பொதுவானதாகவே இருக்கின்றன.
பூர்வாங்கம்
--------------------
அமாவாசை தினமான இன்று நீராடிய பின் கும்ப கலசத்தை சுத்தம் செய்து சாம்பிராணி புகையிட்டு பச்சைக் கற்பூரம், குங்குமம், மஞ்சள், வெட்டிவேர் மற்றும் சில்லறை நாணயம் போட்டு, மாவிலை கொத்து அதன் நடுவே தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம், புஷ்பம் இட்டு மந்திரம் சொல்லி இலையில் பச்சரிசி (நெல்) பரப்பி அதில் மஞ்சள் பிள்ளையார் வைத்து,
கும்பத்தை ஏற்றிவிட வேண்டும். பின் பூஜை செய்ய வேண்டும்.
கன்யா பூஜை
------------------------
கும்பத்துக்குப் பக்கத்தில் ஒரு பெண் குழந்தையை ஒரு பலகை மீது அமர்த்தி வைக்க வேண்டும். குழந்தைக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நெற்றிச்சுட்டி, ஜிமிக்கி, வளையல், பொட்டு, பாசிமணி, ஒட்டியாணம், கண்ணாடி, சீப்பு, புத்தாடை, பூ, தேங்காய், பழம் போன்ற பொருட்களை ஒரு தாம்பாளத்தில் வைக்க வேண்டும். தாம்பாளத்தை பூஜை செய்கிற பெண் குழந்தை கையில் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் குழந்தைக்கு அணிவித்து மறுபடியும் குழந்தையை பலகையில் அமர்த்தி தாம்பாளத்தில் இரு கால்களையும் வைத்து தெய்வமாக நினைத்து பாத பூஜை செய்ய வேண்டும். மலர் தூவி, மாலை அணிவித்து மலர்களால் அர்ச்சித்து கற்பூரம் காட்டி மந்திரம் சொல்லி வழிபட வேண்டும். அன்றைக்குள்ள நைவேத்தியத்தை குழந்தைக்கு ஊட்டி விடவேண்டும். குழந்தை காலில் விழுந்து வணங்கிட வேண்டும். பக்கத்தில் (1 ரூபாய் அல்லது 5 ரூபாய் நாணயம்) காசு வைத்திருக்க வேண்டும். அதை குழந்தை கையினால் நாம் வாங்கிக் கொள்ள வேண்டும். அதை நாம் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதனால் செல்வம் பெருகும். இறுதியில் கண்ணாடியைக் குழந்தை கையில் கொடுத்து தன் முகம் பார்க்கச் சொல்ல வேண்டும். குழந்தை சந்தோஷத்தில் சிரிக்கும். அது நமக்கு அம்பாள் மகிழ்ச்சி அடைவதற்குச் சமம். தேங்காய், பழம், சந்தனம், குங்குமம் எல்லாம் கொடுத்து ஆரத்தி எடுத்து விட்டு குழந்தையை எழுந்திருக்கச் செய்ய வேண்டும்.
கோலங்கள்
---------------------
நல்ல முறையில் போடப்படும் கோலங்கள் மனிதர் மட்டுமல்லாது தேவதைகளையும் ஆகர்ஷிக்கக் கூடியன. முறையாகக் கோலங்கள் போட்டால் லக்ஷ்மிகரமாக இருக்கும். தேவதைகளுக்குப் ப்ரீதியை உண்டாக்கக் கூடிய வகையில் யந்திர வடிவில் அந்தக் கோலங்கள் அமைய வேண்டும். பகவான் ஆதிசங்கரர் நமக்கு அவ்வகை கோலங்களை அமைத்துத் தந்திருக்கிறார். நவகிரஹங்களின் சாராம்சங்களை அனுசரித்து, யந்திர உருவங்களை உள்ளடக்கிய கோலங்களைப் போட்டு அந்தந்த கிழமைகளில் அதற்குரிய பொருளை வைத்து அதற்கு எதிரில் குத்து விளக்கு ஏற்றி அந்தந்த கிழமைக்குரிய கிரஹத்தின் ஸ்லோகத்தையும், ஸெளந்தர்யலஹரி ஸ்லோகத்தையும் பக்தியுடன் படிக்க வேண்டும். இப்படிப்பட்ட வீடுகளில் லோகமாதாவின் பரிபூரண கடாட்சம் நிலவி நவகிரஹங்களும் நல்லதே செய்வார்கள்.
முதல் நாள் துர்க்கை அம்மன்
***********************************
1. அம்மன்: மஹேஸ்வரி பாலா
2. மலர்: மல்லிகை
3. இலை: வில்வம்
4. பழம்: வாழை
5. பிரசாதம்: வெண்பொங்கல், கருப்பு காராமணி சுண்டல்
6. விளக்கு: பஞ்சமுகம்
7. ராகம்: தோடி
8. வாத்தியம்: மிருதங்கம்
9. நினைக்க வேண்டிய தெய்வம்: நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன்
10. வஸ்திரம்: சிவப்பு வண்ண பட்டாடை
11. கோலம்: அரிசி மாவு
12. நட்சத்திரம்: ஹஸ்தம்
13. நவகிரகம்: அங்காரகன்
14. கோயில்: வைத்தீஸ்வரன் கோயில்
15. மலர்: சிவப்பு அரளி, செண்பகப்பூ
16. தான்யம்: துவரை
17. வஸ்திரம்: சிவப்பு
18. ரத்தினம்: பவளம்
19. நைவேத்தியம்: துவரம்பருப்பு பொடி சாதம், வெண் பொங்கல்.
பலன்: எல்லோராலும் வேண்டப்பட்டு சந்தோஷம் பெருகும்.
புத ஸ்தோத்திரம்:-
-------------------------------
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந் தந்தாள்வாய் பண்ணொளியாளனே
உதவியே அருளும் உத்தமா போற்றி.
கன்யா பூஜை:-
-------------------------
2 வயது சிறுமி
பெயர்: குமாரிகா
பலன்: தரித்திர நாசம்.
இரண்டாம் நாள் துர்க்கை அம்மன்
*****************************************
1.அம்மன்: ராஜயோகம் தரும் ராஜராஜேஸ்வரி
2. மலர்: ரோஜா, மல்லிகை, முல்லை
3. இலை: துளசி
4. பழம்: மாம்பழம்
5. பிரசாதம்: புளியோதரை, புட்டு, சுண்டல்
6. விளக்கு: வெண்கல விளக்கேற்றி கூட்டு வழிபாடு
7. ராகம்: கல்யாணி
8. வாத்தியம்: புல்லாங்குழல்
9. நினைக்க வேண்டிய தெய்வம்: காமாட்சி, கருமாரி
10. வஸ்திரம்: பச்சை
11. கோலம்: கோதுமை மாவு
12. நட்சத்திரம்: சித்திரை
13. நவகிரகம்: புதன்
14. கோயில்: திருவெண்காடு
15. மலர்: வெண்காந்தள்(மரு)
16. தான்யம்: பச்சைப் பயிறு
17. வஸ்திரம்: பச்சை
18. ரத்தினம்: மரகதம்
19. நைவேத்தியம்: புளி சாதம், பாசிப்பருப்பு பொடி சாதம்.
பலன்: நல்லவற்றையே பேச நல்லறிவு பெருகும்.
குரு ஸ்தோத்திரம்:-
--------------------------------
குணமிகு வியாழக்குருபகவானே
மணவுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரஹ தோஷமின்றி கடாக்ஷித்தருள்வாய்.
கன்யா பூஜை:-
-------------------------
3 வயது சிறுமி
பெயர்: த்ரிமூர்த்தி
பலன்: தன தான்ய வளம்.
மூன்றாம் நாள் துர்க்கை அம்மன்
***************************************
1. அம்மன்: வளங்களை கொடுக்கும் வாராஹி
2. மலர்: சம்பங்கி
3. இலை: மரு
4. பழம்: பலா
5. பிரசாதம்: சர்க்கரைப் பொங்கல்
6. விளக்கு: பஞ்சமுக விளக்கேற்றி உற்றார் உறவினரோடு பிரார்த்தனை
7. ராகம்: காம்போதி
8. வாத்தியம்: வீணை
9. நினைக்க வேண்டிய தெய்வம்: மீனாட்சி
10. வஸ்திரம்: இளம் பச்சை, மஞ்சள்
11. கோலம்: முத்து (பாசி மணி)
12. நட்சத்திரம்: ஸ்வாதி
13. நவகிரகம்: குரு பகவான்
14. கோயில்: ஆலங்குடி
15. மலர்: முல்லை
16. தான்யம்: கடலை
17. வஸ்திரம்: இளம்பச்சை, மஞ்சள்
18. ரத்தினம்: புஷ்பராகம்
19.நைவேத்தியம்: தயிர் சாதம், சுண்டல், கடலை பொடி சாதம்.
பலன்: செல்வம் பெருகும். துன்பங்கள் மறையும்.
சுக்ர ஸ்தோத்திரம்:-
---------------------------------
சுக்ரமூர்த்தி சுப மிக ஈவாய்!
வக்கிரமின்றி வர மிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!
கன்யா பூஜை:-
-------------------------
4 வயது சிறுமி
பெயர்: கல்யாணி
பலன்: பகை ஒழிதல்.
நான்காம் நாள் மகாலக்ஷ்மி
**********************************
1. அம்மன்: மகாலக்ஷ்மி
2. மலர்: மல்லிகை, முல்லை, வெண்தாமரை,செந்தாமரை
3. இலை: கதிர்ப்பச்சை
4. பழம்: கொய்யா
5. பிரசாதம்: கதம்ப சாதம்
6. விளக்கு: பஞ்சமுக விளக்கு, கூட்டுப் பிரார்த்தனை
7. ராகம்: பைரவி
8. வாத்தியம்: கோட்டு வாத்தியம்
9. நினைக்க வேண்டிய தெய்வம்: விசாலாட்சி
10. வஸ்திரம்: வெள்ளை
11. கோலம்: அட்சதை
12. நட்சத்திரம்: விசாகம்
13. நவகிரகம்: சுக்கிரன்
14. கோயில்: கஞ்சனூர், சூரியனார் கோயில் மற்றும் ரங்கம்.
15. மலர்: வெண்தாமரை
16. தான்யம்: மொச்சை
17. வஸ்திரம்: வெள்ளை
18. ரத்தினம்: வைரம்
19. நைவேத்தியம்: மொச்சைப் பொடி சாதம்.
பலன்: எல்லா நன்மைகளும் பெருகி நவகிரஹங்களின் அருளைப் பெறலாம்.
சனீஸ்வர ஸ்தோத்திரம்:-
-------------------------------------------
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே!
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச் ஜெகம் வாழ இன்னருள் தா! தா!
கன்யா பூஜை:-
-------------------------
5 வயது சிறுமி
பெயர்: ரோகிணி
பலன்: கல்வி வளர்ச்சி.
ஐந்தாம் நாள் மஹாலக்ஷ்மி
*********************************
1. அம்மன்: வளர்ச்சியைக் காட்டும் வைஷ்ணவி
2. மலர்: பாரிஜாதம், முல்லை, செவ்வந்தி
3. இலை: விபூதி பச்சை
4. பழம்: மாதுளை
5. பிரசாதம்: தயிர் சாதம்
6. விளக்கு: நிறைய ஏற்றவும்.
7. ராகம்: பந்துவராளி
8. வாத்தியம்: அல்லரி
9. நினைக்க வேண்டிய தெய்வம்: ஜலஜாக்ஷி
10. வஸ்திரம்: நீலம்
11. கோலம்: கடலை
12. நட்சத்திரம்: அனுஷம்
13. நவகிரகம்: சனி பகவான்
14. கோயில்: திருநள்ளாறு
15. மலர்: கருங்குவளை
16. தான்யம்: எள்
17. வஸ்திரம்: நீலம்
18. ரத்தினம்: நீலம்
19. நைவேத்தியம்: எள்ளன்னம்
பலன்: கடன்கள் நீங்கி செல்வம் கொழிக்கும்.
சூரிய ஸ்தோத்திரம்:-
------------------------------------
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி
சூர்யா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்
கன்யா பூஜை:-
-------------------------
6 வயது சிறுமி
பெயர்: காளிகா
பலன்: துன்பம் நீங்குதல்.
ஆறாம் நாள் மகாலக்ஷ்மி
******************************
1. அம்மன்: செல்வ வளர்ச்சியைத் தரும் சண்டிகா, இந்த்ராணி
2. மலர்: செம்பருத்தி
3. இலை: சந்தன இலை
4. பழம்: உலர் திராட்சை, நார்த்தம் பழம்
5. பிரசாதம்: தேங்காய் சாதம்
6. விளக்கு: பஞ்சமுக தீபம்
7. ராகம்: நீலாம்பரி
8. வாத்தியம்: பேரி
9. நினைக்க வேண்டிய தெய்வம்:இந்த்ராக்ஷி
10. வஸ்திரம்: தாமரை சிவப்பு
11. கோலம்: பருப்பு
12. நட்சத்திரம்: கேட்டை
13. நவகிரகம்: சூர்யபகவான்
14. கோயில் : ஆடுதுறை
15. மலர்: செந்தாமரை
16. தான்யம்: கோதுமை
17. வஸ்திரம்: தாமரை சிவப்பு
18. ரத்தினம்: மாணிக்கம்
19. நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
பலன்: வீட்டில் செல்வ வளம் பெருகும்.
சந்திர ஸ்தோத்திரம்:-
-------------------------------------
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி.
கன்யா பூஜை:-
------------------------
7 வயது சிறுமி
பெயர்: சண்டிகா
பலன்: செல்வ வளர்ச்சி.
ஏழாம் நாள் மகாசரஸ்வதி
*******************************
1. அம்மன்: கலைமகள், சாம்பவி தேவி
2. மலர்: மல்லிகை, தாழம்பூ
3. இலை: தும்பை
4. பழம்: பேரீச்சை, திராட்சை, பானகம்
5. பிரசாதம்: எலுமிச்சை சாதம், பிட்டு, மிளகு வடை, பானகம்
6. விளக்கு: பஞ்சமுகம்
7. ராகம்: பிலஹரி
8. வாத்தியம்: படகம்
9. நினைக்க வேண்டிய தெய்வம்: பத்மாக்ஷி
10. வஸ்திரம்: வெள்ளை
11. கோலம்: மலர்
12. நட்சத்திரம்: மூலம்
13. நவகிரகம்: சந்திரபகவான்
14. கோயில்: திங்களூர்
15. மலர்: வெள்ளலரி (மல்லிகைப்பூ)
16. தான்யம்: பச்சரிசி, நெல்
17. வஸ்திரம்: வெள்ளாடை
18. ரத்தினம்: முத்து
19. நைவேத்தியம்: தயிர் சாதம்.
பலன்: நோயற்ற வாழ்வுடன் எல்லா நலன்களும் பெருகும்.
செவ்வாய் ஸ்தோத்திரம்:-
--------------------------------------------
சிறப்புறு மணியே! செவ்வாய்த் தேவே!
குறைவிலாதருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு.
கன்யா பூஜை:-
-------------------------
9 வயது சிறுமி
பெயர்: துர்க்கா
பலன்: பயம் நீங்குதல்.
எட்டாம் நாள் மகாசரஸ்வதி
*********************************
1. அம்மன்: நாரஸிம்ஹி
2. மலர்: ரோஜா, சம்பங்கி, மருதோன்றி பூ
3. இலை: பன்னீர்
4. பழம்: திராட்சை
5. பிரசாதம்: பால் சாதம், அப்பம்
6. விளக்கு: பஞ்சமுகம்
7. ராகம்: புன்னாகவராளி
8. வாத்தியம்: கும்மி
9. நினைக்க வேண்டிய தெய்வம்:வனஜாக்ஷி
10. வஸ்திரம்: சிவப்பு
11. கோலம்: காசு
12. நட்சத்திரம்: பூராடம்
13. நவகிரகம்: அங்காரகன்
14. கோயில்: வைத்தீஸ்வரன் கோயில்
15. மலர்: செண்பகப் பூ, சிவப்பு அரளி
16. தான்யம்: துவரை
17. வஸ்திரம்: பவளம்
18. ரத்தினம்: வெண் பொங்கல்
19.நைவேத்தியம்: துவரம்பருப்பு பொடி சாதம்.
பலன்: எல்லோராலும் விரும்பப்பட்டு சந்தோஷம் பெருகும்.
புத ஸ்தோத்திரம்:-
-------------------------------
இதமுற வாழ இன்னல்கள் நீங்கு
புதபகவானே பொன்னடி போற்றீ!
பதந்தந்தாள்வாய் பண்ணொளியாளனே]
உதவியே அருளும் உத்தமா போற்றி.
கன்யா பூஜை:-
------------------------
9 வயது சிறுமி
பெயர்: துர்க்கா
பலன்: பயம் நீங்குதல்.
ஒன்பதாம் நாள் மகா சரஸ்வதி
************************************
1. அம்மன்: கலைமகள், சரஸ்வதி
2. மலர்: தாமரை
3. இலை: மரிக்கொழுந்து
4. பழம்: நாவல்
5. பிரசாதம்: சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம்
6. விளக்கு: பஞ்சமுகம்
7. ராகம்: வசந்தா
8. வாத்தியம்: கோலாட்டம்
9. நினைக்க வேண்டிய தெய்வம்: பங்கஜாக்ஷி
10. வஸ்திரம்: பச்சை
11. கோலம்: வாசனைப் பொருட்கள்
12. நட்சத்திரம்: உத்திராடம்
13. நவகிரகம்: புதன்
14. கோயில்: திருவெண்காடு
15. மலர்: வெண்காந்தள் (மரு)
16. தான்யம்: பச்சைப் பயிறு
17. வஸ்திரம்: பச்சை
18. ரத்தினம்: மரகதம்
19. நைவேத்தியம்: புளி சாதம், பாசிப்பருப்பு பொடி சாதம்.
பலன்: நல்லவற்றையே பேசி நல்லறிவு பெருகும்.
குரு ஸ்தோத்திரம்:-
---------------------------------
குணமிகு வியாழக்குருபகவானே
மணவுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரஹ தோஷமின்றி கடாக்ஷித்தருள்வாய்.
கன்யா பூஜை:-
------------------------
10 வயது சிறுமி
பெயர்: சுபத்ரா
பலன்: சர்வ மங்களம் உண்டாதல்.
பத்தாம் நாள் விஜயதசமி
******************************
பிரசாதம்: சுத்த அன்னம் ( வெறும் பச்சரிசி சாதம், உளுந்து வடை, வெண்ணெய், கருப்பட்டி போட்டு சுக்கு வெந்நீர்). இன்றைய பிரசாதத்தை வீட்டிலுள்ள நபர்கள் மட்டுமே உண்ண வேண்டும். பூஜை நடத்தும்போது குறைகள் ஏதும் நடந்திருந்தால் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளவும். மனமுருகி நமக்கு வேண்டிய வரங்கள் கேட்கவும், ஒன்பது நாட்களும் அம்பிகையை சந்தோஷமாக ஆராதனை செய்து 10ம் நாள் நம் வீட்டை விட்டு வழியனுப்பும்போது அவள் நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் தருவாள். அதிகாலையிலேயே ( சூரிய உதயத்திற்குள்) பூஜையை முடித்து விட வேண்டும். ஆரத்தி எடுக்க வேண்டும். மரம் அல்லது செடிக்கடியில் எடுத்த ஆரத்தியை ஊற்ற வேண்டும். கொலு வைக்கப்பட்டிருக்கும் பொம்மையை நல்ல நேரம் பார்த்து நகர்த்தவும். முளைப்பாரியை ஓடுகிற தண்ணீரில் விடவும் அல்லது பசுவிற்குத் தரவும். இந்நாளில் இல்லாதவர்களுக்கு முடிந்த அளவு தானம் செய்யவும்.
- சித்தர்களின் குரல் shiva shangar