Tuesday, August 31, 2021

Magical Realism மாய யதார்த்தவாதம்

Magic realism (also known as magical realism or marvelous realism) is a 20th- century style of fiction and literary genre influenced by an eponymous German painting style in the 1920s. As a literary fiction style, magic realism paints a realistic view of the modern world while also adding magical elements, often dealing with the blurring of the lines between fantasy and reality.

The term “magischer realismus,” which translates to “magic realism,” was first used in 1925 by German art critic Franz Roh in his book Nach ExpressionismusMagischer Realismus (After Expressionism: Magical Realism). He used the term to describe the “Neue Sachlichkeit,” or New Objectivity, a style of painting that was popular in Germany at the time that was an alternative to the romanticism of expressionism.

Roh used the term “magischer realismus” to emphasize how magical, fantastic, and strange normal objects can appear in the real world when you stop and look at them.

The genre was growing in popularity in South America when Nach Expressionismus: Magischer Realismus was translated into Spanish in 1927. During a stay in Paris, French-Russian Cuban writer Alejo Carpentier was influenced by magic realism. He further developed Roh’s concept into what he called “marvelous realism,” a distinction he felt applied to Latin America as a whole.

நவீன இலக்கியம் உருவாகிவந்தபோது ‘உள்ளது உள்ளபடி’ சொல்லும் கதைப்பாணி மேலோங்கியது. இதையே நாம் யதார்த்தவாதம் மற்றும் இயல்புவாதம் என்கிறோம். இந்தப் பாணி உருவானதற்குக் காரணம் மேலைநாட்டில் உருவாகி வந்த பகுத்தறிவு நோக்கு மற்றும் நிரூபணவாத அறிவியல் நோக்கு. இன்றைய இலக்கியத்தில் மைய ஓட்டம் இதுவே. யதார்த்தவாதம் பலவகை வேறுபாடுகளுடன் மையச்சரடாக இருப்பது இயல்பானதுமாகும்.


மாய யதார்த்தம் அல்லது மாய யதார்த்தம் என்பது அன்றாட வாழ்வில் கற்பனை மற்றும் புராணத்தைத் தழுவி நிற்கும் இலக்கியம். உண்மையான என்ன? கற்பனை என்ன? மாயாஜால யதார்த்தத்தின் உலகில், அசாதாரணமானது அசாதாரணமானது, மாயாஜாலமானது பொதுவானது.

"வியக்கத்தக்க யதார்த்தம்" அல்லது "அற்புதமான யதார்த்தவாதம்" என்று அழைக்கப்படும் மாயாஜால யதார்த்தம் உண்மையில் ஒரு தன்மை அல்லது ஒரு வகையல்ல.

புத்தகங்கள், கதைகள், கவிதைகள், நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள், உண்மை கதை மற்றும் தொலைதூர கற்பனை ஆகியவை சமுதாய மற்றும் மனித இயல்பு பற்றிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்துவதற்கு இணைகின்றன. "மாய யதார்த்தவாதம்" என்பது யதார்த்தமான மற்றும் figurative கலைப்படைப்புகள் - ஓவியங்கள், வரைபடங்கள் மற்றும் சிற்பம் ஆகியவற்றோடு தொடர்புடையது - மறைக்கப்பட்ட அர்த்தங்களைக் குறிக்கும். மேலே காட்டப்பட்டுள்ள ஃப்ரீடா கஹ்லோ உருவப்படம் போன்ற உயிர்நாடி படங்கள், மர்மம் மற்றும் மாயவித்தை காற்றில் பறக்கின்றன.

வரலாறு

இல்லையெனில் சாதாரண மக்கள் பற்றி கதைகள் மீது strangeness infusing பற்றி புதிய எதுவும் இல்லை. எமிலி ப்ரெண்ட்டின் உணர்ச்சி, பேராசையுள்ள ஹெய்டிளிஃப் ( வதர்சிங் ஹைட்ஸ் , 1848) மற்றும் ஃபிரான்ஸ் காஃப்காவின் துரதிருஷ்டவசமான கிரிகோர் உள்ள மந்திர யதார்த்தத்தின் கூறுகளை அறிஞர்கள் அறிந்திருக்கிறார்கள், அவர் ஒரு பெரிய பூச்சி ( தி மெட்டமோர்ஃபோஸ் , 1915 ) மாறும். இருப்பினும், இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய குறிப்பிட்ட கலை மற்றும் இலக்கிய இயக்கங்களின் வெளிப்பாடாக "மாயாஜால யதார்த்தவாதம்" வளர்ந்தது.

1925 ஆம் ஆண்டில், விமர்சகர் ஃபிரான்ஸ் ரோ (1890-1965), மேக்சிஷர் ரியலிமஸ் (மேஜிக் ரியலிசம்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

1940 கள் மற்றும் 1950 களில், விமர்சகர்கள் மற்றும் அறிஞர்கள் பலவகையான மரபுகளிலிருந்து கலைக்கு முத்திரை குத்தப்பட்டனர். ஃப்ரிடா கஹ்லோ (1907-1954) மற்றும் எட்வர்ட் ஹாப்பர் (1882-1967) ஆகியோரின் நகர்ப்புற காட்சிகளை ஜோர்ஜியா ஓ'கீஃபி (1887-1986) .

இலக்கியத்தில், மாயாஜால யதார்த்தம் ஒரு தனித்துவமான இயக்கமாக உருவானது, காட்சி கலைஞர்களின் அமைதியான மர்மமான யதார்த்த யதார்த்தத்தைத் தவிர. கியூப எழுத்தாளர் அலேஜோ கார்பெண்டியர் (1904-1980) " உண்மையான ஸ்பெயின் " ("அற்புதமான உண்மையான") என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார். அவர் 1949 ம் ஆண்டு ஸ்பானிஷ் அமெரிக்காவின் மாபெரும் ரியல் இல் வெளியிட்ட கட்டுரையை வெளியிட்டார். வியத்தகு வரலாறு மற்றும் புவியியல் ஆகியவை உலகின் கண்களுக்கு அழகாக அமைந்தன.1955 இல், இலக்கிய விமர்சகர் ஏஞ்சல் ஃப்ளோரர்ஸ் (1900-1992) லத்தீன் அமெரிக்கன் எழுத்துக்களை விவரிக்க மந்திர யதார்த்தத்தை ( மாய யதார்த்தத்தை எதிர்த்தது) "பொது மற்றும் அன்றாட வாழ்த்துக்கள் மற்றும் உண்மையற்றவையாக மாற்றும் ஆசிரியர்கள்."

தமிழில் மிக ஆரம்பகாலத்தில் கிருஷ்ணன்நம்பி அங்கதமாக எழுதிய ‘நகரம்‘ மாந்திரிக யதார்த்தச் சாயல் கொண்ட கதை. தமிழவன் [‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ நாவல் மற்றும் தமிழவன் சிறுகதைகள்], கோணங்கி [‘பாழி‘ நாவல் மற்றும் பொம்மைகள் உடைபடும் நகரம் போன்ற கதைகள்], எஸ்.ராமகிருஷ்ணன் [காட்டின் உருவம், தாவரங்களின் உரையாடல் போன்ற கதைகள்] ஆகியோரின் பல கதைகள் மாய யதார்த்ததைக் கையாண்டவை.

தமிழ்ச் சூழலில் மாய யதார்த்தவாத (Magical Realism) எழுத்தில் தன் படைப்புகளை முன்வைத்த முதன்மையான ஆளுமைகளில் ஒருவர் கோணங்கி. புதிர்த்தன்மையே கோணங்கியின் எழுத்துகளுடைய சாரம். அந்தப் புதிர்த்தன்மையே நம்மைப் பல தளங்களுக்குக் கொண்டு செல்வது.

https://www.masterclass.com/
https://ta.eferrit.com/
https://www.jeyamohan.in/

Friday, August 27, 2021

பாரதியின் இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை


பாரதி உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப் பிடியில் உழல விட்டு, கண்டும் காணாது போலிருந்தது அவரைச் சுற்றி வாழ்ந்திருந்த சமூகம்.

குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி செல்லம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு பீடு நடை போட்டு வரும் பாரதியை பைத்தியக்காரன் என செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லி கேலி செய்தது அந்த சமூகம்.
பாரதி சாதம் சாப்பிடும் முறையே விசித்திரமாக இருக்கும்!
சாப்பிட உட்காரும் போதும் ஒரு மஹாராஜா உட்காருவது போல தரையில் உட்காருவார்.
கட்டை விரல் நடுவிரல் மற்றும் மோதிர விரல் மட்டுமே பயன்படுத்துவார்.
அவருக்குப் பிடித்த உணவே சுட்ட அப்பளம் தான். வறுமையின் கோரப் பிடியினால் மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே ஏதாவது காய்கறி இருக்கும். மற்ற நாட்களில் சுட்ட அப்பளம் தான்.
பாரதி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு உடல் நலிவுற்றுக் காலமானதாக இக்கணம் வரை பள்ளிப்பாடங்களிலும் தவறாகச் சொல்லப்படுகிறது.
அத்துயர நாளில் பாரதி யானைக்குத் தேங்காய் பழம் கொடுக்கச் சென்ற போது பலரும் தடுத்து எச்சரித்தார்கள்.
ஆனால் பாரதி நெருங்கிய போது யானை அமைதியாகவே இருந்தது.
ஆனால் துதிக்கையால் தேங்காய் பழத்தைப் பற்றாமல் பாரதியின் இடுப்புக்கு மேலே சுற்றி தன் நான்கு கால்களுக்கும் நடுவே வீசியது..
கண்ணிமைக்கும் நேரத்தில் குவளைக்கண்ணன் என்ற பாரதியின் சிநேகிதரான அந்த புண்ணிய ஆத்மா, தன் உயிரையும் பொருட்படுத்தாது யானையின் கால்களுக்கு நடுவே புகுந்து, குனிந்து பாரதியை தன் தோளில் போட்டுக் கொண்டார்.
யானை நினைத்திருந்தால் தன் கால்களுக்கு நடுவே இருக்கும் இருவரையும் அக்கணமே நசுக்கி சட்னி செய்திருக்க முடியும்.
ஆனால் தான் பண்ணிய மாபெரும் தவறு அதற்கு உரைத்ததோ என்னவோ அதற்குப் பிறகு அதனிடத்தில் எந்த சலனமும் இல்லை.
கீழே பாரதி விழுந்த போது முண்டாசு இருந்ததால் பின்புற மண்டை தப்பியது.
ஆனால் கட்டாந்தரையில் விழுந்ததில் முகம், மூக்கு, தோள்பட்டை, முழங்கை மற்றும் முழங்கால்களில் பலத்த ரத்தக்காயத்தோடு பாரதி மயங்கினார்.
காயம்பட்ட கவிஞனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நண்பர் சீனுவாசாச்சாரியார் கொண்டு போய்ச் சேர்த்தார்.
பகைவனுக்கும் அருளச் சொன்ன பாரதி தன்னைப் பழுதாக்கிய யானையை பழித்தாரா? இல்லவே இல்லை!
கொஞ்சம் நினைவு வந்ததும் சொன்னாராம்,
''யானை முகவரி தெரியாமல் என்னிடம் மோதி விட்டது. என்ன இருந்தாலும் என்னிடம் இரக்கம் அதிகம் தான். இல்லையென்றால் என்னை உயிரோடு விட்டிருக்குமா?''
அங்கங்களின் காயம் ஆறத் தொடங்கியது.
பாரதியும்
சுதேசமித்திரன் ஆபீஸூக்கு ஐந்தாறு மாதங்கள் சிரமத்தோடு சென்று வந்தார்.
காயம் ஆறியதே தவிர, அந்த அதிர்ச்சியோ அவசர வியாதிகளை அழைத்து வந்தது.
சீதபேதி பாரதியின் உடலைச் சிதைக்கத் தொடங்கியது.
மீண்டும் அதே ராயப்பேட்டை ஆஸ்பத்திரி.
செப்டம்பர் 11, அதிகாலை இரண்டு மணி.
வெளியேறத் துடிக்கும் உயிரோ பாரதியின் உடலை உதைத்துக் கொண்டிருக்கிறது.
சில நிமிடங்களில் அந்த 39 வருஷக்
கவிதைக்கு மரணம் முற்றுப்புள்ளி வைத்தது.
ஒரு யுக எரிமலை எப்படி அணைந்ததோ?
ஒரு ஞானக்கடல் எப்படித் தான் வற்றியதோ?
குவளைக்கண்ணன், லட்சுமண ஐயர், ஹரிஹர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா, நெஞ்சு கனத்துப் போன நெல்லையப்பர் ஐவரின் தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தைச் சுமந்து கிருஷ்ணாம்பேட்டை மயானம் நோக்கி நடந்தன.
இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கையோ வெறும் பதினொன்று, சுமந்தவர்களையும் சேர்த்து.
மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ?
அவர் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் வரவில்லையே.
இது புலிகளை மதிக்காத புழுக்களின் தேசமன்றோ.
தூக்கிச் சென்றவர்களோ தோளின் சுமையை இறக்கி வைத்தார்கள். ஆனால் துயரத்தின் சுமையை?
எரிப்பதற்கு முன் ஒரு இரங்கல் கூட்டம்...
பாரதியின் கீர்த்தியை சுரேந்திரநாத் ஆர்யா சொல்லி முடிக்க, ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ மூட்டுகிறார்.
ஓராயிரம் கவிதைகளை
உச்சரித்த உதடுகளை
ஞான வெளிச்சம் வீசிய
அந்த தீட்சண்ய விழிகளை
ரத்தம் வற்றினாலும்
கற்பனை வற்றாத
அந்த இதயத்தை...
தேடித்தேடித் தின்றன
தீயின் நாவுகள்.
மகா கவிஞனே!
எட்டையபுரத்து கொட்டு முரசே!
உன்னைப் பற்றி உள்ளூரே புரிந்து
கொள்ளாத போது,
இவ்வுலகதிற்குப் புரிவது ஏது?
உன் எழுத்துக்களை வாழ்க்கைப் படுத்தினால் அன்றி உன் பெயரை உச்சரிக்கக் கூட எமக்கு யோக்கியதை தான் ஏது?
படித்து பகிர்ந்தது ...
Arunan Meenachchisundaram

Tuesday, August 24, 2021

'Green' synthesis of plastics from CO2

By combining a CeO2 catalyst with atmospheric carbon dioxide, researchers from Osaka City University, Tohoku University, and Nippon Steel Corporation have developed an effective catalytic process for the direct synthesis of polycarbonate diols without using dehydrating agents. Their method, published in Green Chemistry, does not rely on toxic chemical feedstock like phosgene and carbon monoxide, making it the world's first high yield "green" reaction system.

(Nanowerk News) Using a CeO2 catalyst, researchers develop an effective catalytic process for the direct synthesis of polycarbonate diols without the need for dehydrating agents. The high yield, high selective process has CO2 blown at atmospheric pressure to evaporate excess water by-product allowing for a catalytic process that can be used with any substrate with a boiling point higher than water.


CeO2 catalyzes the direct polymerization of flow CO2 and diols to provide polycarbonate diols in high yields, which are useful chemicals for polyesters, polyurethanes, and acrylic resins. (Image: Masazumi Tamura)
By combining a CeO2 catalyst with atmospheric carbon dioxide, researchers from Osaka City University, Tohoku University, and Nippon Steel Corporation have developed an effective catalytic process for the direct synthesis of polycarbonate diols without using dehydrating agents. Their method, published in Green Chemistry, does not rely on toxic chemical feedstock like phosgene and carbon monoxide, making it the world’s first high yield “green” reaction system.
There is a worldwide need to reduce carbon dioxide, one of the major greenhouse gases, and converting it into a useful chemical compound has attracted much attention in recent years. Various effective catalyst systems have been developed but they rely on toxic chemicals that churn out unmanageable by-products. Processes using substrates that are easily available and safe, with water as the only by-product, have emerged as an alternative. Yet, high levels of water by-product keep these processes from synthesizing enough polycarbonates.
"Most processes use a dehydrating agent to keep water levels low to overcome an equilibrium," said Masazumi Tamura of the Osaka City University, "but some of the issues to address are the high pressure of carbon dioxide needed, the recovery and regeneration of the dehydrating agent, and contamination of by-products generated by its use."
To bypass these issues, the research team developed a catalytic process that does not use a dehydrating agent. By focusing on the difference in boiling points between the chemical product/diol and water, the research team predicted a high carbon fixation yield by blowing in CO2 at atmospheric pressure to evaporate excess water.
“It became clear that among the metal oxide catalysts we used,” stated Keiichi Tomishige of Tohoku University, “CeO2 showed the highest activity.” This simple catalytic reaction system is the first ever to successfully synthesize polycarbonate diols from carbon dioxide and diols at atmospheric pressure. “This process, without the need of dehydrating agents, can chemically convert carbon dioxide using any substrate with a boiling point sufficiently higher than water,” concluded Kenji Nakao of Nippon Steel Corporation, “and can be applied to the synthesis of carbonates, carbamates, and ureas, which are useful additives for lithium-ion batteries and/or raw materials for polymer synthesis.”
Source: Osaka University
https://www.nanowerk.com/

Monday, August 23, 2021

குபேர முத்திரையின் மூலம் சிரசின் சக்கரங்கள் இயக்கப்படுகின்றன.

 பார்வை குறைபாடு, காதில் இரைச்சல், வலி, தலையில் நீர் கோத்தல், மூக்கடைப்பு ஆகியவை நீங்க குபேர முத்திரை!!

குபேரன் செல்வத்தின் அதிபதி. அவருடைய திசை வடக்கு. நமது உடலில் வடக்கு திசை சிரசைக் குறிக்கும். எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். இறைவன் குடியிருக்கும் இடம் சிரசு.
எனவே, இந்த முத்திரையின் மூலம் நமது வேண்டுதல்களை இறைவனிடம் நேரடியாகச் சமர்ப்பிப்பதாகவே கொள்ளலாம்.
எப்படிச் செய்வது?: இந்த முத்திரையை அதிகாலையில் செய்வது சிறப்பு.
சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்து, கண்களை மூடி, ஆள்காட்டி விரல் நுனி, நடு விரல் நுனி மற்றும் கட்டை விரல் நுனி ஆகியவற்றை சேர்த்துவைக்கவும்.
மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நுனிகளை மடக்கி உள்ளங்கை பகுதியில் அழுத்தி வைத்துக்கொள்ளவும். இந்த நிலையில் உள்ளங்கை மேல்நோக்கி இருக்கவேண்டும். முதலில் செய்ய சிரமமாக இருக்கும். பழகப் பழக எளிதாகிவிடும்.
முத்திரையின்போது எதை மனதில் நிறுத்தலாம்?
உங்களது குறிக்கோளை மூன்று சொற்கள் அடங்கிய வாக்கியமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
கண்களை மூடி அந்த வாக்கியத்தைச் சொல்லத் தொடங்கலாம். அதிலிருந்து ஒரு காட்சி விரியும்.
உங்கள் மனதுக்கு இனிமையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தும்
அக் காட்சியை ஓர் அசையாத சித்திரமாக மனக்கண்ணில் நிறுத்துங்கள். உதாரணத்துக்கு, ‘சகல சௌபாக்கியங்களோடு, மங்களகரமான மனைவியும், குழந்தைகளும் உள்ள ஒரு வீட்டின் சித்திரம்’.
இதை மனதில் நிறுத்தியவுடன் கைகளில் முத்திரையை வைக்க லாம். பின்னர் இதே நிலையில் 5 முதல் 20 நிமிடங்கள் வரை அமர்ந்திருக்கவும்.
கவனத்தைக்கலைக்காமல், உங்களால் எவ்வளவு நேரம் இயலுமோ அவ்வளவு நேரம் இந்த முத்திரையைச் செய்யலாம்.
பயன்கள்:
இம்முத்திரையைச் செய்து வரும் போது, உடலில் மண் மற்றும்நீர்பூதம்குறைக்கப்படுவதால், ஆழ் மனதில் தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் அழிக்கப்படுகின்றன.
செல்வம் மட்டுமல்ல, நமது உயர்ந்த குறிக்கோள் எதுவாயினும் அதை அடைய உதவும் முத்திரை.
இது. எந்தவொரு பெரிய செயலைத் துவங்குவதாக இருந்தாலும் அதற்குமுன் இந்த முத்திரையைச் செய்வது நன்கு பலனளிக்கும்.
தீ, காற்று மற்றும் ஆகாய பூதங்கள் சமநிலையில் இயக்கப்படுவதால், விசுத்தி மற்றும் ஆக்ஞா சக்கரங்கள் இயங்கத் தொடங்கும்.
எனவே பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் மற்றும் மூளை பிரகாசமாகச் செயல்பட்டு ஆழ்மன அமைதி கிட்டும்.
பார்வை குறைபாடு, காதில் இரைச்சல், வலி, தலையில் நீர் கோத்தல், மூக்கடைப்பு ஆகியவை நீங்கும்.
இந்த முத்திரையை ஒரு மண்டலம் (48 நாட்கள்) செய்து வர, மனதில் உள்ள குழப்பங்கள், அழுத்தம் தரும் எண்ணங்கள் நீங்கித் தெளிவு கிடைக்கும். மருக்கள், கருமை நீங்கி முகம் பொலிவடையும்.
இந்த முத்திரை ஆல்பா தியான நிலைக்கு நம்மை எடுத்துச் செல்கிறது. அதாவது ஆழ்மனதின் கதவுகள் திறக்கப்படுகின்றன.
எனவே தொலைந்த பொருளைத் தேடவும், பொருள் வைத்த இடத்தை ஞாபகப்படுத்தி எடுக்கவும், விரும்பிய நிறமுள்ள ஆடைகள், அணிகலன்கள் நம்மைச் சேரவும், ஆசைப்பட்ட பொருளை வாங்கவும், இம்முத்திரையைச் செய்து பயனடையலாம்.
குபேர பூஜையோ, மகாலட்சுமி யாகமோ செய்ய இயலாத நிலையில் உள்ளவர்களும் குபேர முத்திரையை செய்து வந்தால், சகல ஐஸ்வர்யங் களும் பெற்று நிறைவாக வாழலாம்.

சித்தர்களின் குரல்

குறுங்கதை-மேற்கோள்

 

என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு போவான். குடித்து விட்டு வந்து தூங்குவான். வழக்கம் போல் காலையில் அலுவலகம் கிளம்பிவிடுவான். தினம் வழமையாக நடக்கும் இது அவனுக்குச் சலிப்பைத் தரவில்லையா என்று ஒரு நாள் கேட்டேன். ஆம் என்றான். இனிமேல் சண்டை போட்டாலும் வேறு ஏதாவது புதுமையாகச் செய்யலாம் என சொல்லிவிட்டுப் போனான். அலுவலகம் போய் ஒரு தத்துவவாதியின் கீழ்க்கண்ட மேற்கோளை அனுப்பினான்:
“இருவருக்கு இடையில் இணக்கம் என்பது இணக்கமின்மைக்கான அச்சத்திலிருந்து வருவது. இதில் இணக்கம் என்பதில் அன்பு, பாசம் போன்ற பெயரிடப்படாத பல உணர்வுகளைப் பொதித்து வைப்பதன் மூலம் இணக்கமின்மை வெடித்துவிடுகிறது. அன்பின்மை, வெறுப்பு, துயரம் போன்ற பல எதிர்மறை உணர்வுகள் குடியேறிவிடுகின்றன. இணக்கமும் இணக்கமின்மையும் ஒரே பொருளைத்தான் கொண்டிருக்கின்றன. இதுதான் சலிப்புக்கு அடிப்படையாகிறது. இணக்கமும் சலிப்பைத் தருகிறது. இணக்கமின்மையும் அவ்வாறே. இதில் சலிப்பின்றி இருப்பது குறித்தத் தேடல் மறைகையில் வாழ்வின் சுமை கூடிவிடுகிறது. அதை அடுத்தவர் தலைமேல் போட்டுவிடுவதே குறிக்கோளாக இருப்பதால் போர் மூளுகிறது. இதில் சமாதானமும் சலிப்பின் ஒரு வடிவம்தான். போரில் இருக்கும் சுவை சமாதானத்தில் இருப்பதில்லை. போர் உருவாகிவிடும் அல்லது போரை உருவாக்கவேண்டும் என்பதில் உள்ளார்ந்து ஏற்படும் கிளர்ச்சிக்கு நிகர் ஏதுமிருப்பதில்லை. அதை அனுபவிக்கத்தான் சலிப்பை அதிகப்படுத்த முனைகிறோம். போர் அபின் போன்றது. அந்த மயக்கம் தரும் போதைக்காக எவ்வளவு சலிப்பையும் தாங்குகிறோம். பால், சாதி, மத, இன வேறுபாடு எல்லாம் முக்கியமல்ல. தொடர்ந்து சலிப்படைந்து போரிடுகிறோம். போரைக் கைவிட்டு அங்குக் குடியேறிவிடும் சலிப்பை வெளியேற்ற எந்த ஆயுதமும் இல்லை. போரும் இன்றி சலிப்பும் இன்றி இருப்பதுதான் முக்தி நிலை. அது ஒருவருக்கு வாழ்நாளில் எதற்குத் தேவை? எனவே போரிடலாம் சலிப்படைய. சலிப்படையலாம் மீண்டும் போரைத் தொடங்க…”
இப்படி தினம் ஒன்றைப் புதுமையாகச் செய்து நாம் இணக்கமும் இணக்கமின்மையும் கொள்ளலாம் என்றும் ஒரு செய்தியை அனுப்பியிருந்தான். இந்தப் புதுமைக்கு சண்டையே பரவாயில்லை என்று தோன்றியது.

Mubeen Sadhika

Sunday, August 22, 2021

பொறியியல் சித்தர் போகர்!

 


படித்து பாருங்கள், வியந்து போவீர்கள்...
யார்யாரோ கப்பல் கண்டுபிடித்தார்கள் என்று நாம் படிக்கின்றோம். ஆனால் பல துறைகளைப்பற்றி ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ள போகர் கப்பல் செய்வது எப்படி என்றும், அதை செய்யும் முறையையும், போகர், தனது போகர் ஏழாயிரம் சத்தகாண்டம் என்ற நூலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். அதுபற்றி சசில முக்கிய குறிப்புகளை சித்தர்களின் குரல் வாயிலாக இன்று பகிர்கிறேன்......
''வாழவே யின்னுமொரு சூத்திரங் கேள்/
வையகத்தில் நாதாக்கள் செய்ய மாட்டார்/
நீழ்கவே கருவூரார் அனேகஞ் செய்தார்/
நிலையான வித்தையது அதீத வித்தை/
மூழ்கவே கண்ணபிரான் பள்ளி கொண்ட/
முனியான சித்தரிஷி தாமுங் கண்டேன்/
மாழ்கவே பாற்கடலின் மத்தி யத்தில்/
மகத்தான கப்பலொன்று செய்தேன் யானே.'' (போகர்- 7000/ 1926)
1926 ஆவது பாடலில் இருந்து 1943 ஆவது பாடல்கள் வரையில் கப்பல் செய்வதற்கான மரங்கள், பலகைகள், சட்டங்கள், ஆணிகள் என பலவித பொருட்கள் பற்றியும், கப்பல் செய்யும் முறையை பற்றியும் படிப்படியாக விளக்கி சொல்லுகின்ற போகர் சித்தர், தொடர்ந்து கப்பலில் சித்தர்களை ஏற்றிக்கொண்டு சீனாவுக்கு சென்றதையும், அங்கிருந்து இமயமலை பகுதிக்கு சென்றதையும் கூறுகின்றார்.
''ஆக்கமுடன் கப்பலொன்று நேமித்தே தான்/
அதின்மேலே வெகுசனங்கள் யேத்தி விட்டேன்/
பார்க்கமுடன் சித்தர்முனி ரிஷிகள் தம்மை/
பாங்குபெற மேலவரை யேத்தி விட்டேன்/
நோக்கமுடன் மேல்வரையில் தானிருந் தேன்/
நோட்டமுடன் சுக்கானை முடுக்கி விட்டு/
சேர்க்கமுடன் கடலேழுஞ் சுத்தி வந்து/
சூட்சமுடன் கப்பலதை நிறுத்தி னேனே.'' (போகர்- 7000/ 1944)
''நிறுத்தினேன் சீனபதி கடலோரந் தான்/
நேர்ப்புடனே சித்தர்முனி ரிஷிகள் தாமும்/
திருத்தமுடன் தானிறங்கி யாசீர் மத்தில்/
சிறப்பாக சென்றுவிட்டார் செனங்க ளெல்லாம்/
பெருத்தமுடன் சுக்கானை முடுக்கி யானும்/
பொங்கமுடன் சீனபதி கடலை விட்டு/
வருத்தமுட னிமையகிரி யோரப் பக்கம்/
வாகுடனே சென்றுமல்லோ நிறுத்தி னேனே.'' (போகர்- 7000/1945)
" பாற்கடலின் மத்திமத்தில் மகத்தான மரக்கப்பல் ஒன்று செய்தேன். ஆயிரம் பேர் பயணிக்க கூடிய அக் கப்பலை சீனபதி மக்கள் மிகவும் மெச்சினார்கள். அதன் நீளம் 800கஜம், அகலம் 100 கஜம். (1 கஜம் என்பது 3 அடி). நீள் சதுரமான அதை எப்படி பிசகில்லாமல் செய்து முடித்தேன் என்று சொல்கிறேன்.
வலுவான பலகைகள் எடுத்து வில்லாணி அடித்து நீளமான கட்டுமானம் செய்தேன். அதன் மத்தியில் பீடம் அமைத்து, அதை முழு உயரத்திற்கு கொண்டு சேர்த்தேன். கப்பலில் ஏழு தளங்கள் அமைத்தேன், ஒவ்வொன்றிலும் தொட்டிஎன்ற பீடம் வைத்து, உயரம் நூறு கஜம் உயரம் கொண்ட மண்டப தூண்கள் அமைத்தேன். கீழிருந்து முதல் மாடிக்கு செல்ல சாளரமும் கதவும் வைத்து வழி செய்து, எல்லா தளங்களையும் சேர்த்து மொத்தம் 64 வீடுகளை கட்டி கிழக்கு-மேற்காக 128 வாசலோடும், தெற்கு-வடக்கு முகமாய் உருதியாணி அடித்து கண்ணாடி சாளரங்கள் வைத்து, கப்பலின் சுவரோரம் கம்பிகள் வைத்து ஒரு பெரிய கோட்டையை பாங்குடன் அமைத்தேன்.
தளத்தின் ஒருபுறம் சுக்கான் அமைத்து, நால்புறமும் கதவு வைத்து, ஒவ்வொரு தளத்திலும் பரண் (deck) அமைத்து, வடம் வைத்து சங்கிலி கொண்டு சுக்கான் போட ஏதுவாக வழி செய்து, கப்பலின் மேலிருந்து கீழ்வரை இரும்பு குழாய் உருளை அமைத்து (pipes) வைத்தேன். தளத்தின் தலைபுரத்தில் அக்னிவைத்தேன், இடப்பக்கம் தண்ணீர் தொட்டி அமைத்து, (boiler) கொதிகலன் செய்து, (airtight) குழாய்கள் கசிவின்றி நீராவி கொண்டு செல்லும். கீழ்நிலையில் பொருத்திய சக்கரங்களை (turbine shaft) நீராவியின் உயர் அழுத்தம் கொண்டு திருப்ப, கப்பலும் நகரலாச்சு.
கடைசி முனையில் வசதியாய் நங்கூரம் மாட்டி, கப்பல் ஓடாமல் இருக்க அதை தட்டிப் போட்டேன். கீழ்நிலையில் கொதிபெரும் நீராவிக்கு வெப்பமூட்டும் அக்கினியின் புகை சூழாதிருக்க, வாட்டமுடன் எட்டங்கால் மேலே புகைபோக்கியும் (chimney) இரும்பினால் அமைத்தேன். நீராவியின் நிதானம் அறிந்து நேர்த்தியுடன் சூத்திரமுடன் ஓட்டினேன். வெகு ஜனகளையும், சித்தர் முனிகளையும் எற்றிபோனேன். மேல் அறையில் நானிருந்து சுக்கானை இடமும் வலமும் வளைத்து முடக்கிட்டேன். கடல் ஏழும் சுத்தி வந்து இமயகிரி பக்கத்தில் சீனபதி கடலோரம் கப்பலை வாகாக வந்து நிறுத்தினேன். என்மீது பட்சம் வைத்து என் நூதனமான வித்தைகளுக்கு அருள்புரிந்த திருமூலர்/ காலாங்கிநாதர் பாதங்களுக்கு என் அனந்தங்கள்".
இவ்வாறு போகர் தன சப்தகாண்டத்தில் சொல்லியுள்ளதை படித்தவுடன் பிரமித்து போனேன். ஆய்வின் படி சீனாவில் இவர் வந்து நிறுத்திய இடம் மவுண்ட் கிங்யாங் பகுதி என அறிந்து கொண்டேன். அன்றே அவர் Underwater telescope பொருத்தியுமிருந்தார். பரங்கியர் தேசத்தில் (சீனராக) 12000 வருடங்கள் வாழ்ந்தேன் என்று சொல்லியுள்ள போகர், துவாபரயுக பிறபகுதியில் (அ) கலியுகத்தின் முற்பகுதியில் இந்த பிரம்மாண்டமான டைடானிக் போன்ற கப்பல் கட்டுமான சாதனையை செய்திருப்பார் என்று நினைக்கிறன்.
சித்தர் போகர் பிரான் ஓர் அற்புத சித்தர் பொறியியல் துறையின் மிக சிறந்த சித்தர். சீன தேசத்தில் அவர் செய்த வித்தைகள்
பற்பல கோடி. தன் வித்தைகளை "வேடிக்கைச் சிமிட்டு வித்தை" என கண்சிமிட்டிச் சொல்லுவார் போகர்.
கவி பாடும் புலவர் என்பதால் அத்தனை செயல்களையும் அனுபவங்களையும் கண்டுபிடிப்புகளையும் அப்படியே பதிவு செய்திருக்கிறார் சீன மொழியில்.
போகர் கட்டிய மரக் கப்பலும் தேவரதங்களும் வேறெந்த சித்தர்களும் சிந்திக்காதவை.
அவற்றை உருவாகிய விதத்தை
பாடம் போல் தன் பாடல்களில் பாங்காய் படைத்திருக்கிறார்.
2400 அடி நீளம்.
300 அடி அகலம்.
300 அடி உயரம்.
7 மாடிகள்.
64 வீடுகள்.
கொஞ்சம் கற்பனை செய்யுங்கள் !
2400 அடி நீளம்..
300 அடி அகலம்...
300 அடி உயரம்....
7 மாடிகள்.....
64 வீடுகள்.
இவை அரண்மனை ஜாடையில்....!
கிழக்கும் மேற்குமாய் வாயில்கள்.
தெற்கும் வடக்குமாக ஜன்னல்கள்.
ஒவ்வொரு மச்சும் ஆறுகால் மண்டபம். ஒவ்வொரு மாடியிலும் 128 வாயில்கள்..
இத்தனை பிரமாண்டமும் எதன்மீது தெரியுமா ?
ஒரு மரக் கப்பலின் மீது.!!
டைட்டானிக் கப்பலே கிட்ட வர முடியாத அத்தனை அம்சங்கள்!
கப்பல் இயங்கும் தொழில்நுட்பம்.
போகர் கொண்ட மதிநுட்பம்.
அப்பப்பா...
என்ன ஆச்சரியம் ..!
அந்த கப்பல்
நீராவிக் கப்பலாம்.
கப்பலின் தலைவர்.. இயக்கிய மாலுமி
யார் தெரியுமா ?
போகர் தான்...
தன்னிகரில்லாத போகர் பிரான் தான்.
சீனாவில் இருந்தபோது
அமைத்த
அந்த கப்பலில்
சீன மக்களையும்
ரிஷிகள் பலரையும் ஏற்றிக்கொண்டு உலகைச் சுற்றி
ஏழு கடல்களையும் காண்பித்தார்
சுற்றுலா பிரியரான பற்றிலா சித்தர்.
சுற்றுலா.
ஆன்மீக சுற்றுலா.
அவர் மக்களுக்கு சொன்ன
அகமகிழ் தத்துவம்.
கடல் வழிப் பயணத்திற்கு
மரக் கப்பல் படைத்தவர் விண்வெளிப் பயணத்தை
விட்டு வைப்பாரா என்ன !
வானூர்தியும் படைத்தார்.
கையை நீட்டி , சித்து புரிந்து மந்திரத்தால் மாங்காய் பறித்திடவில்லை சித்தர் பிரான்.
உயர் தொழில்நுட்பம்.
நுட்ப இயந்திர இயக்கம் அதன் சிறப்பம்சம்.
அந்த பறக்கும் விமானத்தின் பெயர் தேவரதம் .
விளையாட்டாய்
அதை காத்தாடி
என்று அழைப்பது
போகரின் வழக்கம்.
காத்தாடிக்குப்
பட்டம் என பெயர் உண்டு அல்லவா?
பறக்கும் பட்டமே காத்தாடி.
30 அடி நீளம்
30 அடி அகலம்
என சதுர பரப்பில் பட்டம் செய்தார்
போகர்.
ஒரு குடை ராட்டினம் போல் அதை அமைத்து இன்றைய ஹெலிகாப்டர் மாதிரி பறக்க வைத்தார்.
காந்த கொலுசுகளும் நார்ப்பட்டு கயிறுகளும் சித்தர் தொழில்நுட்பங்களும் கொண்டு காத்தாடி செய்து பறக்கவிட்டார் போகர்.
சீன மக்களை ஏற்றிக் கொண்டு முதலில் முப்பது மைல் தூரம் பறந்து இருக்கிறார்.
பின் உலகம் முழுதும் பல நாடுகளுக்குப் பறந்திருக்கிறார்.
ஏற்கனவே ககன குளிகை கொண்டு தான் மட்டும் பறந்தவர்- பல்லாயிரம் மைல்கள் கடந்தவர். இப்போது சீன அன்பர்களுக்காக- சீன மக்களுக்காக காத்தாடியை அர்ப்பணித்திருக்கிறார்.
போகர் காத்தாடி துணை கொண்டு போன நாடுகள் பார்த்த சித்தர்கள் பெற்ற பாடங்கள் படைத்த பாடல்கள் அதிகம்.
போகர் சித்தர்களில் விவேகமானவர். விஞ்ஞானத்தில் விற்பனர்.
கற்க வேண்டியதைக் கற்பதும் கற்பிக்க வேண்டியதை பிறருக்குக் கற்பிப்பதுமே அவரது கல்விக்கொள்கை.
காத்தாடி தயாரிப்பதற்காகவே போகர்
அஸ்வினி மகரிஷியை சந்தித்ததாக புலிப்பாணியார் ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.
அஸ்வினி மகரிஷியிடம் ஓர் ஆகாயப் புரவியிருந்ததாம்.
அது பஞ்சலோகத்தை உருக்கிச் செய்த உலோகப் புரவி .
அது பறப்பதைப் பார்க்கும் போது ஒளிபொருந்திய சிவரதம் போல் இருக்குமாம்.
அஸ்வினி சித்தரைச் சந்தித்து போகர் பிரான் தாள் பணிந்த போது போகரின் பெருமைகளை திறமைகளை
அம்மகரிஷி ஏற்கனவே அறிந்திருந்ததால் போகரை வாழ்த்திப் போற்றியதோடு தான் வைத்திருந்த ஆகாயப் புரவியையும் அதிலிருந்த தொழில்நுட்பத்தையும் அதற்கேற்ற சித்த மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார் அசுவினி.
அதன்படி வானரதம் தயாரித்த போகர் பிரான் அன்பர்களை நண்பர்களை ஏற்றிக்கொண்டு உலகம் சுற்றி வந்தார்.
உண்மையில் முதன் முதலில் "உலகம் சுற்றிய வாலிபர்" போகர் தான்.
போகரின் உலக பயணம் அறிய அவர் வார்த்தைகளுடன் பயணித்தால் சுவாரசியம் கூடும்.
'தானான ரோமாபுரி சுற்றி வந்தேன்.
தக்காண எண்ணாயிரம் காதமப்பா...
"வேனான சித்தர்களை ஏற்றிக்கொண்டு வேகமுடன் தானடத்தி வந்தேனப்பா."
"கோடி பேர் சமாதிநிலை
தன்னைக் கண்டேன் கொற்றவனாம் ரோமாபுரி சமாதியோரம்"
இப்படித் தொடர்கிறது போகரின் வான்வெளிப் பயணம். கலைமிகு ரோமாபுரிப் பயணம். ரோமாபுரிக்கு
அடுத்து ஜெருசலேம் செல்கிறார்.
"பாலான குருபரனை வணங்கி யானும் பார்க்கவே ஜெருசலேம் போகவென்று மானான மாதாவைக் காணவென்று வணங்கினேன்
அவர் பாதம் தொழுதிட்டேனே!"
என்னவே இயேசுவின் தன் மகிமை மெத்த எடுத்துரைத்தார்.
"சீஷர் வர்க்க அநேகம் பேர்."
ஜெருசலேமில் மேரி மாதாவையும் இயேசு பிரானையும் தரிசனம் கண்டவர் அடுத்து சென்றது அரபு தேசம்.
அரபு நாட்டு பயணத்தின் நோக்கம் இணையற்ற இறைதூதர் நபிகள் நாயகத்தை தரிசிப்பது தான். அதை போகரே சொல்கிறார்.
"மன்னர் மெய்ச்சு மக்கவாம் புரியை
காண உவகையுடனே ரதம் திருப்பி."
"திண்பான முகமது மார்க்கத்தார்கள் சிறப்புடனே கண்டேனே கோடி பேரே!"
மெக்காவில் சமாதி நிலையிலிருந்த யாகோபுவைச் சந்தித்த போகர் அவரது ஞான சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். அப்புறம் அவரது பயணம்
தென் அமெரிக்கா என்கிறது பிறதொரு குறிப்பு.
"போச்சா" என்பவர் தென் அமெரிக்கா வந்து
எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்ததாக -
கலாச்சார மாற்றம் ஏற்படுத்தியதாக
எழுதி வைத்திருக்கிறார் சிலி நாட்டு வரலாற்றாசிரியர் மைகாஸ் ( Mucas ) என்பவர்.
அந்த போச்சா போகர் தான் என்கிறது ஓர் ஆய்வுக் குறிப்பு.
உலகம் சுற்றிய வாலிப சித்தர் பாரிஸ் நகரையும் விட்டுவைக்கவில்லை.
"பண்பான குளிகையது பூண்டு கொண்டேன்.
பாங்கான பாரிஸ் சபதியைக் கண்டேன்"
என வியக்க வைக்கிறார்.
உலகைச் சுற்றிய அனுபவம் ,
உமையவள் வழங்கிய ஞானம்
போகருக்கு மட்டுமல்ல உலகுக்கும்
பற்பல அறிவியல் நன்மைகளை வழங்கின.
நிலம் ஒரு பங்கு
நீர் மூன்று பங்கு
என்று புவிச்சூழல் அமைப்பை முதலில் சொன்னவர் போகர் பெருமானே.
கடல் பயணத்தின் போது கடும் பாறையை - பாயும் சுறாவைக் கண்டறிந்து விலகிச் செல்ல கப்பலுக்குள் கண்ணாடிக் கருவி கண்டுபிடித்து அமைத்திருந்தார் போகர்.
இன்றைய பெரிஸ்கோப்... போகர் கண்டுபிடித்த அன்றைய போகர் ஸ்கோப் .
பீங்கானும் கண்ணாடியும் போகரின் கண்டுபிடிப்புகளே.
வெப்பக் காற்றை நிரப்பி உயரே பறக்கும்
பலூன் போகரின் கண்டுபிடிப்பே. அதற்கு அவர் வைத்த பெயர் "கூண்டு வித்தை"
பாராசூட்டிற்கு முன்னோடி போகரே. அதை "குடை வித்தை" என அறிமுகம் செய்தார் விஞ்ஞானி போகர்.
கடலுக்கடியில் பாதுகாப்போடு பயமின்றிப் பயணிக்க கவச உடையோடு சுவாசக்குழாய்
முதலான உபகரணங்களை பன்னிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்தவர் போகர் பிரான்.
அன்று உருவாய் உலகைச் சுற்றிய போகர் பிரான் இன்று அருவாய் பழனி, மகேந்திரகிரி , காஞ்சிபுரம் பேரூர், சதுரகிரி ஆகிய தமிழகத் திருத்தலங்களிலும் , இலங்கையில் கதிர்காமத்திலும் சமாதி நிலையிலும் , இந்திய இமயமலைப் பகுதிகளில் அமர்நாத், கேதார்நாத் பத்ரிநாத். திபெத் - சீன பகுதியில் கைலாஷ்நாத்.
நேபாளத்தில் பசுபதிநாத் ஆகிய
ஐந்து தலங்களில் நிஷ்ட நிலையிலும்
அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

சித்தர்களின் குரல்