| உலகளவில் பொழுது போக்குதுறையில் முக்கிய பங்காற்றுவது சினிமா தான். சினிமாவை கண்டுபிடித்தது இந்தியர்கள் இல்லையென்றாலும் இந்தியர்கள் தான் அதிகளவு சினிமாக்களை தயாரித்து வருகின்றனர். 1896ஆம் ஆண்டு இந்தியாவில் சினிமா அறிமுகமானது. லுமியர் பிரதர்ஸ் சினிமாட்டோகிரபி என்னும் நிறுவனம் சிறிய அளவிலான ஊமைப் படங்களைத் திரையிட்டது. பின்னர் 1912ஆம் ஆண்டு, இந்திய சினிமா துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகிப் பால்கே முதன் முதலாக முழுநீள படமான ராஜா ஹரிச்சந்திரா என்ற படத்தை எடுத்தார். இப்படம் 1913ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி திரைக்கு வந்தது. வங்க மொழியில் உருவான இப்படம் ஊமை படமாக வெளியானது. அதனைத்தொடர்ந்து காலத்திற்கு ஏற்றவாறும், தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறும் இந்திய சினிமா துறை வளர்ச்சி அடைந்தது. இந்தியாவின் முதல்பேசும் படமாக ஆலம் ஆரா என்ற படம் 1931ஆம் ஆண்டு வெளியானது. அர்தேசர் இராணி என்பவரால் இயக்கப்பட்ட இப்படம், டேவிட் என்பவர் எழுதிய ஒரு பார்சி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். ஊமை படங்களில் ஆரம்பித்த இந்திய சினிமா இன்று ஹாலிவுட் படங்களுக்கு நிகரான படங்களை கொடுக்கும் அளவுக்கு தொழில்நுட்படம் உள்ளிட்ட எல்லா வகையிலும் வளர்ச்சி அடைந்தது இருக்கிறது. அதன்விளைவு இன்று உலகளவில் அதிக சினமா படங்களை இந்திய சினிமா கொடுத்து வருகிறது. |
No comments:
Post a Comment