உங்களது இரகசியத் தகவல்களை சேமித்து வைத்துள்ள கோப்பை யாரும் தெரியாமல் அழிக்கவோ அல்லது கொப்பி செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
இதற்கு Prevent என்ற மென்பொருள் பயன்படுகிறது.
இந்த மென்பொருளை நிறுவிய பின் தோன்றும் விண்டோவில், Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key ஒன்றை தெரிவு செய்து கொள்ளவும். உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தெரிவு செய்து கொள்ளவும்.
இதன் பின் Activate என்ற பட்டனை அழுத்தவும். பின் தோன்றும் விண்டோவில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட், பேஸ்ட், கொப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.
மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.
உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தெரிவு செய்த key அழுத்தினால் போதும். அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.
|
Search This Blog
Monday, April 16, 2012
இரகசிய தகவல்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment