Tuesday, June 14, 2011

தீர்ப்புகள்!

தீர்ப்புகள்!

என் கண்ணுக்கு
என் இமையே
பகை..!
மூடிக் கொள்கிறது
பார்க்க முடியவில்லை..!

என் வாய்க்கு
என் உதடுகளே
பகை..!
ஒட்டிக் கொள்கிறது
பேச முடியவில்லை..!

என் கனவுக்கு
என் தூக்கமே
பகை..!
கலைத்து விடுகிறது
நினைவில் இல்லை..!

என் கற்பனைக்கு
என் மனமே
பகை..!
சிதற விடுகிறது
முடிவு தெரியவில்லை..!

என் நடைக்கு
என் கால்களே
பகை..!
துவண்டு விடுகிறது
இலக்கு எட்டவில்லை..!

எனக்கு
நானே பகை..!
விடை தெரியாத
தீர்ப்புகள்..!
-பாளை.சுசி.

No comments:

Post a Comment