Tuesday, June 14, 2011

தடுமாறி நுழைகின்றேன்..


 

யாருமற்ற அந்தி நேரம்
எப்போதும் நினைவுகளை
அள்ளித்தரும்...
Join Only-for-tamil
தொலைதூரத்தில்
நான் தனிமையில் கிடந்தாலும்
தொலைபேசியில் கசியும்
உன் குரலின் ஓசையில்
வெளியேறும் உன் நேசங்கள்
என் மனம் மடை திறந்த
அணையாய் பிரமிக்கும்......

ஏங்கித் தவிக்கும் இந்த
தவிப்புகளையெல்லாம்
அடர்ந்திருக்கும் இந்த இருளின்
தனிமையில் என்னைச் சுற்றிவரும்
இந்த மின்மினிப்பூச்சிகளிடம்
சொல்லி அனுப்புகின்றேன்....
Join Only-for-tamil
உன் நினைவுகள்
உயிர் நடுங்கும் குளிராய்
என்னோடு இணைந்திருக்க
நீ இல்லாத பொழுதாக
எதுவுமே ஏற்படவில்லை!

நிலவின் ஒளியில் விழும்
நிழல் பூமியோடு
ஒட்டிக்கொள்வதுபோல்
என் இதயத்தில் ஒளிரும்
உன் உருவமும்
என் நிழலோடு
இணைந்து நடக்கும்!!
Join Only-for-tamil
எப்படியோ எங்கிருந்தபடியோ
தடுமாறி தடுக்கி வீழ்ந்தாலும்
பற்றிக் கொண்டு எழுவதோ
உன் நினைவுக் குச்சிகளுடன் தான் ......

நீ சென்று வந்த திசையெங்கும்
சூழ்ந்திருக்கும் என் புலம்பலின்
வாசம் கருகலாய்.....
காற்றில் மிதக்கும்
என் வார்த்தைகள் களைப்படைவதற்குள்
துளிர்க்கக் காத்திருக்கும்
என் நம்பிக்கைகளை
அள்ளி அணைத்துக் கொள்...
Join Only-for-tamil
நினைவுகளின்  சங்கமத்தில்
மீண்டும் மூழ்கிவிட
மறுபடியும் - உன்
நினைவுகளுடனேயே
தடுமாறி நுழைகின்றேன்... 


No comments:

Post a Comment