| Video Preview: கூகுள் தேடலில் மற்றும் ஒரு சிறப்பம்சம் |
இணையத்தில் நிறைய தேடியந்திரங்கள் இருந்தாலும் கூகுள் மற்றவைகளை விட தனிச்சிறப்பு பெற்றது. நாம் கேட்கும் தகவல்களை உடனுக்குடன் துல்லியமாக கொடுப்பதால் அனைவரும் இதனை விரும்பி பயன்படுத்துகிறோம். நாம் கூகுள் தேடலின் போது வீடியோக்களை Preview பார்க்கும் வசதி. இந்த வசதி மூலம் நாம் அந்த வீடியோவை சுமார் 5 நொடிகள் வரை கூகுளில் காணலாம். இதில் நமக்கு தேவையான வீடியோவை மட்டும் நாம் கிளிக் செய்தால் நேரடியாக அந்த வீடியோ நமக்கு ஓபன் ஆகும். இந்த முறையில் யுடியுப் வீடியோக்களை மட்டுமே காணமுடிகிறது. மற்ற தளங்களில் உள்ள வீடியோக்களின் preview தெரிவதில்லை. முதலில் கூகுள் தளத்திற்கு சென்று ஏதேனும் வீடியோ கோப்பை தேடுங்கள். முடிவு வந்ததும் அந்த வீடியோவுக்கு நேராக உள்ள ஒரு லென்ஸ் போன்ற ஐகானை கிளிக் செய்தால் அந்த வீடியோவுக்கு சம்பந்தமான அனைத்து வீடியோக்களும் வரும். அது தானாகவே ஒவ்வொரு வீடியோவாக ஓடும். அதில் உங்களுக்கு தேவையான வீடியோ மீது கிளிக் செய்து அந்த வீடியோவை பார்த்து கொள்ளுங்கள். இது போன்று வரும் Preview வீடியோக்களில் ஆடியோவை கூட நாம் கேட்க முடியும். |
Search This Blog
Thursday, May 19, 2011
Video Preview: கூகுள் தேடலில் மற்றும் ஒரு சிறப்பம்சம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment