| ஒசாமா தாக்கப்பட்ட நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய உளவாளி |
இதில் ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தவிர இன்னும் ஒரு பெண் படத்தின் பின்னால் காணப்படுகின்றார். கருமையான கூந்தலுடன் காணப்படும் இந்தப் பெண் யார்? என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. அமெரிக்காவின் உயர்மட்ட முக்கியப் பிரமுகர்கள் கூடும் அந்த அறைக்குள் அவர் எப்படி வந்தார்? ஹிலாரியைத் தவிர அங்கிருந்த ஒரே பெண் அவர் தான். இவர் 40 வயதுக்கும் குறைவானவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் ஒரு உயர் மட்ட உளவாளியாக இருக்கலாம் என்று சில புலனாய்வு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அந்தப் பெண் படத்தில் தோன்றி தனது முகத்தைக் காட்டியுள்ளதால் அவர் இப்போது ஆபத்தை எதிர்நோக்கியுள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். |
No comments:
Post a Comment