| மனம் கவர்ந்த நபர்களின் பட்டியல் வெளியீடு: பொப் பாடகி லேடி ககா முதலிடம் |
படங்களில் நடித்தது, ஆல்பங்கள் வெளியிட்டது, சிறப்பு விருந்தினராக விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றது என கடந்த ஆண்டில் ரூ.405 கோடி சம்பாதித்திருக்கிறார். பேஸ்புக்கில் இவருக்கு 3.2 கோடி ரசிகர்களும், டுவிட்டரில் 90 லட்சம் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். கடந்த ஆண்டில் நான்காம் இடத்தில் இருந்தவர் தற்போது நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தவர் ஓப்ரா வின்பிரே(57). இவர் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளர் ஆவார். கடந்த ஆண்டில் ரூ.1305 கோடி சம்பாதித்துள்ளார். மனம் கவர்ந்த வி.ஐ.பி பட்டியலில் இரண்டாவது இடம் வின்பிரேவுக்கு டுவிட்டரில் 58 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி 11வது இடம், டைட்டானிக் ஹீரோ லியனார்டோ டிகாப்ரியோ 15வது இடம், நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் 21வது இடம், ஜுராசிக் பார்க் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் 22வது இடம், சுவிட்சர்லாந்து மென்பந்தாட்ட வீரர் ரோஜர் பெடரர் 25வது இடத்தில் உள்ளனர். |
No comments:
Post a Comment