| ரத்த சோதனை மூலம் ஒருவரின் ஆயுட் காலத்தை கண்டறியலாம் |
ஆய்வு பற்றி மரியா பிளாஸ்கோ கூறியதாவது: டி.என்.ஏ மற்றும் புரோட்டீன் இணைந்தது குரோமோசோம் எனப்படுகிறது. இது உயிர்களின் ஒவ்வொரு செல்லிலும் உள்ளது. குரோமோசோமின் இரு முனைகளிலும் தலோமர் என்பது உள்ளது. குரோமோசோம்களை அழியாமல் பாதுகாப்பது இவை தான். இவை நன்றாக இருந்தால் குரோமோசோம் நன்றாக இருக்கும். வயது ஆக ஆக இந்த தலோமர் அளவு சிறிதாகிறது. இவை வலிமை இழக்கின்றன. ஆரோக்கியமான குரோமோசோம்களைக் கொண்ட உயிர்கள் நீண்ட காலம் உயிர் வாழும். தலோமர் நார்மலான நீளத்தில் இருக்கிறதா என்பதை ரத்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். தலோமர் எந்த நீளம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் நமது ஆயுளை ஓரளவு யூகிக்க முடியும். முக்கியமாக நமது உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மை நிலையை தெரிந்து கொள்ள முடியும். நமது உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி போன்றவற்றையும் மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கும். இந்த ரத்த பரிசோதனை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். |
No comments:
Post a Comment