| மனித இனம் அழிந்த பிறகும் கூட உயிர் வாழும் உயிரினங்கள்: விஞ்ஞானிகள் தகவல் |
சுமார் ஐந்து கோடி வருடங்களுக்குப் பிறகு தான் பூமியில் மனிதன் இருக்கமாட்டான். ஆனால் விசித்திரமான புது வகையான மிருகங்கள் நிச்சயமாக உலாவிக் கொண்டிருக்கும் என்கிறார் பூமி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நியூயார்க்கைச் சேர்ந்த டொக்டர் சைமன். அந்த விசித்திர மிருகங்களின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை இவர் தலைமையிலான ஆய்வு கற்பனை செய்து வைத்திருக்கிறது. ஐந்து கோடி வருடங்களுக்குப் பிறகு இன்றுள்ள முயல்கள் ஆறடி உயரம் இருக்கும். நீண்ட கால்களுடன் பார்ப்பதற்கு அருவருப்பாகக் காட்சியளிக்கும் என்கின்றனர். மேலும் பாம்புகளின் குறைந்த பட்ச நீளம் முப்பது அடியாக இருக்கும். மேலும் அவை யாரையும் கொத்தத் தேவையில்லை. மாறாக விஷத்தை ஐம்பது அடி தூரம் வரை பீய்ச்சியடித்து எதிரிகளைக் கொல்லும் வல்லமை பெற்று இருக்கும். ராட்சத அணில்கள் தங்கள் வாலை பாராசூட் போல பயன்படுத்தி மரத்துக்கு மரம் தாவும். மான்களோ தோற்றத்தில் காண்டாமிருகம் போல காட்சியளிக்கும். அது போன்ற விலங்குகளுக்கு "நைட் ஸ்டார்க்கர்" என்று இப்போதே பெயரும் வைத்து விட்டனர். |
No comments:
Post a Comment