இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் தங்களது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்க இதயவியல் கல்லூரி இதழில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் கூறுகையில்,"இதய நோய்த் தாக்கம் குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்" என அறிவுறுத்தி உள்ளது. மயோ கிளினிக் ஆய்வாளர்கள் இடுப்பு வயிற்றுப் பகுதியை ஆய்வு செய்தனர். சாதாரண வயிற்றுப் பகுதியை விட அதிக பருமன் உள்ள வயிற்றுப் பகுதி பெருத்தவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் 75 சதவீதம் கூடுதலாக உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண உடல் எடை கொண்டவர்களாக இருந்த போதும் வயிற்றுப் பகுதி பருத்தவர்கள் கொழுப்பு கூடுதல் காரணமாக இதய நோய்களை சந்திக்க வேண்டி உள்ளது. இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் காணப்படும் அளவீடுகளை டொக்டர்கள் ஆய்வு செய்து இதய நோய்களை தவிர்க்க நோயாளிகளுக்கு உரிய அறிவுரை தர வேண்டும் என கூறுகின்றனர். |
No comments:
Post a Comment