| 453 ஆண்டு கால பழமையான கடனட்டை கண்டுபிடிப்பு |
மத்திய கால கட்டத்தில் கடன் அட்டைகள் நீண்ட குச்சி வடிவில் உள்ளன. ஆய்வாளர்கள் கண்டுபிடித்த மரகுச்சி 30 செ.மீ நீளத்துடனும், அதன் மேற்பரப்பில் கடன் வாங்கியதற்கான 23 வெட்டு குறியீடுகளும் உள்ளன. இந்த கடன் அட்டை 1558ம் ஆண்டை சார்ந்ததாக உள்ளது. இந்த விவரம் கடன் அட்டையிலேயே குறிக்கப்பட்டுள்ளது. மத்திய காலத்தில் படிக்கவோ, எழுதவோ தெரியாத மக்கள் கடன் அட்டைகளை மரக்குச்சிகளில் உருவாக்கினர். இந்த கடன் அட்டைக் குச்சிகள் 2 ஆக பிரிக்கப்பட்டு ஒரு பகுதியை கடன் கொடுத்தவரும், இன்னொருப் பகுதியை கடன் அளித்தவரும் வைத்து இருந்தார்கள். பணம் திரும்ப செலுத்தும் போது உடைக்கப்பட்ட குச்சி ஒன்றாக இணைக்கப்பட்டு கடன் விவரம் சரிபார்க்கப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment