Search This Blog

Monday, May 8, 2017

எகிப்தும் பிரமிடுகளும் மர்மங்கள்

மர்மங்கள் என்று எடுத்துக்கொண்டால் இவ்வுலகம் முழுவதும் விதவிதமாக கொட்டிக்கிடக்கும். பல மர்மங்களில் ஒரு சில காலப்போக்கில் விடை காணப்பட்டிருக்கின்றன.
எகிப்தும் பிரமிடுகளும் எகிப்தின் பிரமிடுகளைப்பற்றி நம்மில் சிலபேர் முன்னரும் பலபேர் மம்மி பார்ட்-1 மற்றும் பார்ட்-2 திரைப்படங்கள் பார்த்த பின்னரும் அறிந்திருப்போம். பிரமிடுகள் என்றாலே இன்றளவும் ஒரு மலைப்பும் ஆச்சர்யமும் உண்டாவது நிச்சயமாய் அவற்றின் தனிச்சிறப்பே.
’பிரமிடு’ என்றால் பலரும் சொல்வது, ”அது எகிப்தில் இருக்கும் ஒரு கட்டிடம். அதில் அக்காலத்தில் இறந்த மன்னர் போன்றவவர்களின் சடலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ‘மம்மி’ என்றழைக்கப்படும் அவற்றின் உடல்கள் இன்னமும் கெடாமல் இருக்கின்றன. அது தவிர பல்வேறு புதையல்களும் அங்கே இருக்கக்கூடும்” என்பதுதான். ஆனால் இவை மட்டும் தான் பிரமிடா? இன்று உலகில் பல நாடுகளில் பிரமிட்கள் உள்ளன. அந்த பிரமிட்களை பற்றியும் பார்க்கலாம்.






எகிப்து நாட்டில் காணப்படும் பிரமிடுகள் கற்களால் கட்டப்பட்ட
பிரம்மாண்டங்கள். 2008ம் ஆண்டு வரையிலும் கிட்டத்தட்ட 138 பிரமிடுகள்
கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பிரமிடுகளுக்குப் பின்னாலான மர்மங்கள் கணக்கிலடங்காதவை. பிரமிட்கள் சாதாரண மக்களை மட்டுமல்ல, பொறியியல் வல்லுநர்களையும் வியக்க வைக்கும் அமைப்புகள். ஒரிஜினல் ஏழு உலக அதிசயங்களில், இன்று நாம் காணக் கிடைக்கும் ஒரே அதிசயம் பிரமிட்கள்தாம். கிங் குஃபு வின் பிரமிடு என்றும் இது அழைக்கப்படுகிறது.
இதுவரை கண்டறியப்பட்ட எகிப்து பிரமிடுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவிலானது. இதன் உயரம் 146 மீட்டர் (கிட்டத்தட்ட 500அடி). கிட்டத்தட்ட 4600 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் முதன் முதலில் கட்டப்பட்டது கிரேட் பிரமிடு அல்ல. கிங் குஃபு வின் தந்தை கிங் ஸ்நெஃப்ருவினால் கட்டப்பட்ட ஸ்டெப் பிரமிடுதான் முதன் முதலில் கட்டப்பட்ட பிரமிடாகும். கிரேட் பிரமிடு 2.3 மில்லியன் எண்ணிக்கையிலான கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த எடை 5.9 மில்லியன் டன்கள்.கிஸா (Giza) நகரில் இருக்கும் பெரிய பிரமிட் சுமார் 476 அடி உயரமானது, 13.6 ஏக்கர் நிலப் பரப்பு கொண்டது 5,90,712 கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கம்ப்யூட்டர் கணக்கீடுகள் சொல்கின்றன. கற்களின் எடை ஒவ்வொன்றும் இரண்டில் இருந்து முப்பது டன் வரை. இதில் முக்கியமான விஷயம்
என்னவென்றால் இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது. நகரத்தின் அருகில் மட்டுமல்ல,
தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும் தான் இந்நகரைச் சுற்றி உள்ளது. அப்படியானால் இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள், இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள், இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி எழுப்பியிருப்பார்கள் என்றுதான் வரலாற்றாய்வாளர்களும், விஞ்ஞானிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த அளவுக்கு அருகில்
பூமியில் எங்காவது கற்களைத் தோண்டி எடுத்து இவற்றைக் கட்டியிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவ்வாறு தோண்டி எடுத்த இடங்களில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் பலமைல் சுற்றளவிற்கு அப்படி எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி இவற்றை உருவாக்கியிருப்பார்கள் என்று இன்னமும் விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டுதான் உள்ளனர். உச்சியை எட்டும்போது கற்களை 400 அடிகளுக்கு மேல் தூக்கிக் கொண்டு போயிருக்க வேண்டுமே? அவர்களிடம் கிரேன் மாதிரி எந்திரம் இருந்ததா? ஒரு லட்சம் தொழிலாளிகள் இருபது வருடம் பணியாற்றியிருந்தால் மட்டுமே பெரிய பிரமிட் உருவாகியிருக்கும் என்பது கட்டடக் கலை வல்லுநர்கள் கணிப்பு. மிஸிரினஸ் பிரமிடில் உபயோகித்திருக்கும் ஒரேயொரு கல்லின் எடை மட்டும் 285 டன் என்பதும், இவ்வளவு எடையுள்ள கல்லை எப்படி கையாண்டிருப்பார்கள் என்பதும் ஆராயமுடியாத மர்மமாகவே நீடிக்கிறது.
பிரான்ஸ் நாட்டின் மாவீரராக இருந்த நெப்போலியன் இந்தப் பிரமிடுகளில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் கொண்டார். தனி ஆளாக ஓரிரவு முழுக்க இந்தப் பிரமிடில் தங்கினார். மறுநாள் காலை வெளிவந்த அவர், பிரமிப்பின் உச்சியில் இருந்தார். பிரமிடின் பல்வேறு ரகசியங்களைத் தெரிந்து கொண்டிருந்த அவர், அவற்றை முழுமையாக வெளியிடவில்லை. ”நான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்” என்ற கருத்தை மட்டும்
தெரிவித்தார்.
பிரமிட் என்றால் கூம்பு வடிவம். அடிப்பகுதி நீண்ட சதுரமாக இருக்கும். நான்கு சரிவான முக்கோணப் பகுதிகள் உச்சியில் ஒன்றாக இணையும். இந்தப் பிரமிட்களுக்குள் ராஜா ராணிகள், விஐபிகள் ஆகியோரின் உடல்கள் அவர்கள் மறைவுக்குப்பின் மம்மிகளாக, உடல் கெடாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன. பிரமிட்களின் கூம்பு வடிவம் இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
பிரமிட்கள் எல்லாமே ஏன் கூம்பு வடிவில் மட்டுமே கட்டப்பட்டுள்ளன? வீடுகளை சாதாரணமாக, சதுர, செவ்வக வடிவங்களில் கட்டியவர்கள், பிரமிட்களை மட்டும் கூம்பு வடிவம் ஆக்கியது ஏன்?
ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகள் செய்த பரிசோதனைகளின் அடிப்படையில் தரும் விளக்கங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
பிரமிட் வடிவ அறைக்குள் காய்கறிகள், பழங்களை வைத்தால், மற்ற அறைகளில் வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்களைவிட அதிக நாட்கள் கெடாமல் இருகின்றன.
பிரமிட் வடிவக் கட்டங்களில் தூங்குபவர்களுக்கு, சாதாரண அறைகளில் தூங்குபவர்களைவிட, அதிகம் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் இறந்த ஒரு பூனையின் உடலை, மரத்தால் செய்த பிரமிட் வடிவப் பெட்டிக்குள் வைத்தார்கள். பல நாட்கள் ஆன பின்னும் இந்த உடல் கெட்டுப் போகவில்லை.
பிரமிட் வடிவ அறைக்குள் இருக்கும் இரும்புப் பொருட்கள் எளிதாகத் துருப் பிடிப்பதில்லை.
இப்படி ஆச்சரியமான கண்டுபிடிப்புகள்!
கூம்பு வடிவ அமைப்பு, சுற்றுப்புறத்திலிருந்து ஒரு வித மின்காந்த ஆற்றலை உள் வாங்குகிறது. பிரமிடின் உச்சிப்பகுதி, அந்த ஆற்றலை, பிரமிடின் உள்பகுதியில் ஒரே சீராகப் பரவ வைக்கிறது. இதுதான் ரகசியம் என்கிறார்கள்.
இது முழுமையான விளக்கமா? சரி என்று ஒத்துக்கொண்டாலும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், எகிப்தியர்களுக்கு இந்த விஞ்ஞான உண்மை எப்படித் தெரிந்தது, புரிந்தது?
பிரமிடு போலவே இன்னுமொரு தீராத மர்மம் அதன் முன்னால் இருக்கும் ஸ்பிங்க்ஸ் சிற்பம். மிகப்பிரமாண்டமான அளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த சிற்பம் கிரேட் பிரமிடை பாதுகாக்கத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற வாதங்களையும் தாண்டி காலச்சிதைவுகளுடன் அமர்ந்திருக்கிறது.
ஸ்பிங்க்ஸ் பிரமிடைப் போன்ற ஓர் பிரமிடு உருவச்சிலை செவ்வாய்க்
கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாகக் கூறியிருக்கின்றனர். அவர்கள், செவ்வாய்க் கிரகத்தில் சைடோனிக் எனக் குறிக்கப்படும்
ஒரு பகுதியில் காணப்படும் பிரமிடு போன்ற அமைப்புகளுக்கும், எகிப்தின்
பிரமிடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர்.
சில ஆராய்ச்சியாளர்கள் கிரேட் பிரமிடு நாலு லட்சம் மனிதர்களை கொண்டு சுமார் 20 ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். (சிலர் பிரமிடுகளை கட்டியது மனித சக்தியே அல்ல… நிச்சயமாய் ஏதோவொரு சூப்பர் பவரோ... இல்லை... வேற்றுக்கிரகவாசிகளோதான் கட்டியிருக்கவேண்டும் என்றும் வாதிக்கின்றனர். ஏனென்றால் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட மனிதர்களால் கிரேட் பிரமிடு போன்ற ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லாதபோது 5000 வருடங்களுக்கு முன் இது எப்படி மனித சக்தியால் கட்டப்பட்டிருக்கும் என்ற கேள்வியும் வாதத்திற்கு வலு சேர்ப்பதாய்த்தான் இருக்கிறது)
உலகில் கட்டப்பட்ட பிரமிடுக்களில், அடிப்படையில் மிகப் பெரியது
மெக்சிக்கோவில் உள்ள சோலுலாவின் பெரிய பிரமிடு ஆகும். இப் பிரமிடு இன்னும் தொல்பொருள் ஆராய்ச்சியில் அகழப்பட்டு வருகின்றது.
பிரமிடு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயன், சுமேரியர் உள்ளிட்ட பல பழமையான நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன.
பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகம் முன்பாகக் கண்ணாடியாலான பிரமிடு அமைக்கப்பட்டுள்ளது.
மெசபடோமியர்கள், சிக்குரத்கள் எனப்பட்ட பழமையான நாகரிக மக்கள் துவக்க கால பிரமிடுகளை முதன்முதலாகக் கட்டினர். இவை சூரிய வெப்பத்தில் உலர்ந்த செங்கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டமையால் அனைத்தும் அழிந்துபோயின. இத்தகைய சிக்குரத்களை சுமேரியர்கள், பாபேலியர்கள், ஈலாமியர்கள், அக்காடியர்கள், மற்றும் அசிரியர்கள் அவரவர் பகுதிகளில் பல பிரமிடுகளை கட்டினர்.
சூடான்
பிரமிடுகள் எகிப்துடனேயே அடையாளப்படுத்தப் பட்டாலும் உலகின் மிகக்
கூடுதலான பிரமிடுகளை கொண்ட நாடாகச் சூடான் விளங்குகிறது. இங்கு 220 பிரமிடுகள் இன்றும் உள்ளன. நுபியர்கள் சூடானின் மூன்றிடங்களில் இந்த 220 பிரமிடுகளை அமைத்துள்ளனர். நாப்பட்டா மற்றும் மெரோ
அரசர்/அரசிகளின் கல்லறைக் கட்டிடங்களாக இவற்றைக் கட்டினர். இவை எகிப்திய பிரமிடுகளிலிருந்து மாறுபட்டுள்ளன. அவற்றைவிட நுபியப் பிரமிட்கள் செங்குத்தான கோணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
சூடானில் கிமு 300 வரை பிரமிடுகள் கட்டப்பட்டு வந்தன.
நுபியப் பிரமிட்கள்
நைஜீரியா
அபுஜாவில் சுடெ பிரமிடுகளை அங்கு வாழ்ந்த குபோ நாகரிகத்தின் கூறாகக்
காணலாம். களிமண்ணால் கட்டப்பட்ட பத்து பிரமிடுகள் இங்குள்ளன. முதல் கட்ட அடிப்பகுதி 60 அடி சுற்றளவையும் 3 அடி உயரத்தையும் கொண்டுள்ளது.
அடுத்தப்படியில் 45 அடி சுற்றளவில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறான அடுக்குகள் வட்டவடிவ ஒன்றன்மேல் ஒன்றாக மேல்வரை கட்டப்பட்டுள்ளன. இவை கடவுளரின் இருப்பிடமாகவும் சிகரத்தில் அவர்கள் வசிப்பதாகவும் நம்பப்பட்டது. இதன் அடையாளமாக ஒரு கம்பு அங்கு நடப்பட்டிருந்தது. இவை ஐந்து குழுக்களாக ஒன்றுக்கொன்று இணையாகக் கட்டப்பட்டன.
இவை களிமண்ணால் கட்டப்பட்டமையால் அவ்வப்போது மீளுருவாக்கம் செய்ய வேண்டியிருந்தது.
சுடெ பிரமிடு
கிரீஸ்
கிமு இரண்டாம் நூற்றாண்டின் புவியியலாளர் பவுசானியாசு பிரமிடுகளை ஒத்த இரு கட்டிடங்களைக் குறிப்பிடுகிறார்; இவற்றில் ஒன்று ஹெலனிக்கோன் நகரிலிருந்து 19 கிமீ தொலைவில் தென்மேற்கே
இருந்ததாகவும் அர்கோசு ஆட்சிக்காகப் போராடிய போர்வீரர்களின் நினைவாக இவை கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை இரண்டுமே பிரமிடுகளை ஒத்து இருந்ததற்கான எந்தவொரு சான்றும் இதுவரை
கிடைக்கப்பெறவில்லை.
பவுசானியாசு பிரமிடு
இந்தியா
சோழர்கள் காலத்தில் தென்னிந்தியாவில் கருங்கற்களால் கட்டப்பட்ட பிரமிடு வடிவ கோபுரங்களுடன் கூடிய பல பெரும் கோவில்கள் இன்றும் சமயப் பயன்பாட்டில் உள்ளன. தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கம் வட்டத்திலுள்ள அரங்கநாதசுவாமி கோயில் ஆகியன இவற்றில் சிலவாம். 11ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீசுவரர் கோவில் யுனெசுகோவால் உலகப் பாரம்பரியக் களமாக 1987இல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கமாக 2004ஆம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலும் தாராசுரம் கோயிலும் இணைக்கப்பட்டன.
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்
இந்தோனேசியா
இந்தோனேசியாவின் ஆஸ்த்ரேலேசிய பாறைக் கட்டமைப்பு பண்பாட்டில் குத்துக்கல், கல் மேடைகள், கற்சிலைகளுக்கு அடுத்ததாகப்
புந்தென் பெருந்தக் எனப்பட்ட மண்,கற்களாலான அடுக்கு பிரமிடு
கட்டமைப்புகள் இருந்தன. இவை மேற்கு சாவாவின் குனுங் படாங் பகுதியிலும் சிசுலோக் பங்குயங்கன் பகுதிகளிலும் காண்டறியப்பட்டன. மலைகளிலும் உயர்ந்த இடங்களிலும் மூதாதையரின் ஆவி வாழ்வதாக
உள்ளூர் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இக்கற்கட்டிடங்கள் கட்டப்பட்டன. மத்திய சாவாவில் உள்ள போரோபுதூரில்
8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமய பிரமிடு ஒன்று உள்ளது. பிந்தையக் கால சாவா கட்டமைப்புக்கள் இந்திய கட்டிடக்கலையின் தாக்கத்துடன் கட்டப்பட்டன.
குனுங் படாங்
பெரிய பிரமிட் பிரம்மாண்டம் என்று நினைக்கிறீர்களா? இதோ வருகிறது நிஜ பிரமாண்டம். கார்நாக் (Karnak) எகிப்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் கிராமம். ஆலயங்கள் நிறைந்த இடம். சிதிலமாகிவிட்ட பல கோவில்கள் நெஞ்சில் துயரம் பொங்க வைக்கின்றன. இங்கே இருக்கும் ஆமுன் ரே (Amun Re) கோவில் எகிப்தின் மற்ற எல்லாக் கோவில்களையும் விட மிகப் பெரியது. ஆமுன் ரே எகிப்தியரின் முழுமுதற் கடவுள். நாட்டையும், மன்னர்களையும், மக்களையும், எல்லாத் துன்பங்களிலிருந்தும், எப்போதும் காப்பாற்றுபவர் என்பது பொது நம்பிக்கை.
Amun Re
ஆமுன் ரே கோவிலில் இருக்கும், கி.மு. 14 – ம் நூற்றாண்டில், இரண்டாம் ராம்சேஸ் மன்னரால் கட்டப்பட்ட அரங்கம் முக்கிய அம்சம். ஹைப்போ என்னும் வித்தியாசமான கட்டடக் கலைப் பாணியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. தாங்கும் வளைவுகள் இல்லாமல், வரிசையாகத் தூண்களை நிறுவி, அவற்றின்மேல் தட்டையான கூரை அமைக்கும் முறை இது. அரங்கம் எத்தனை பெரியது தெரியுமா? பரப்பளவு 52,000 சதுர அடி. 16 வரிசைகளில், 134 தூண்கள் அரங்கத்தைத் தாங்கி நிற்கின்றன. இவை ஒவ்வொன்றின் சுற்றளவு 10 அடி. 122 தூண்களின் உயரம் 33 அடி: எஞ்சிய 12 தூண்களின் உயரம் 70 அடி. பிரமிடுகள் கட்டப்பட்ட விதமும் கட்டப்பட்டதற்கான காரணங்களும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளுடன் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மர்மங்கள்.
karnak temple
இறந்து போன மன்னர், மகாராணி ஆகியோரின் சடலங்கள்
பதப்படுத்தப்பட்டு அவர்கள் உபயோகிக்கும் பொருட்களுடன் பிரமிடுக்குள்
அமைக்கப்பட்டிருப்பது இறப்பிற்கு பின்னாலான வாழ்க்கை குறித்த இன்று வரை மர்மமாகவே ஆராயப்படுகிறது.
மர்மங்கள் வெறும் பிரமிடுகளுடன் முடிந்து விடுவதல்ல. மம்மிகள்
எனப்படும் பதப்படுத்தப்பட்ட உடல்கள், பிரமிடுக்குள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே ஃபிளையிங் மெஷின் மற்றும் பல்பு போல செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள், மனித உடலும் விலங்கு தலையுமான உருவங்கள் என நீளும் விஷயங்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் தீர்க்க முடியாத எகிப்தின் மர்மங்களே!!!

புற்றுநோய் (பீர் குடித்தால்)


கோடைகாலத்தில் மதுப் பிரியர்கள் அதிகமாக பீர் அருந்துகிறார்கள். அது உடலுக்கு குளிர்ச்சியை தருவதாகவும், உற்சாகத்தை அளிப்பதாகவும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெகுகாலம் பீர் அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று டாக்டர் கூறுகிறார்.

பிரபல டாக்டர் ஒருவர் தனது அனுபவத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்:


“பல வருடங்களுக்கு முன்பு என்னை ஒருவர் சந்திக்க வந்திருந்தார். அவர் தினமும் பீர் பருகுவதாக சொன்னார். நான் அவரிடம், அதற்கு நீங்கள் அடிமையாகிவிட்டால் புற்றுநோய் வரக்கூடும் என்றேன். பின்பு அவர் வெளிநாடு சென்றுவிட்டார்.

வருடங்கள் கழித்து அவர் மீண்டும் வந்தார். என்னிடம், ‘என்னால் கஞ்சிதான் குடிக்க முடிகிறது. சோறு சாப்பிடமுடியவில்லை’ என்றார். என்டோஸ்கோபி பரிசோதனை செய்ய பரிந்துரைத்தேன். பரிசோதனைகளுக்கு பின்பு அவருக்கு குட்டிநாக்கு பகுதியில் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இறப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன்பு அவர் ‘டாக்டர் நான் தவறு செய்துவிட்டேன்’ என்று சொன்னார்.

பீரில் கலரிங் மெட்டீரியலாக ‘என்நைட்ரோசோ அமென்’ சேர்க்கப்படுகிறது. பீருக்கு நிறம் தரும் ரசாயனப் பொருள் இது. இது புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. இதை பெரும்பாலானவர்கள் உணருவதில்லை. அதுபோல் பீரில் ஆல்கஹால் அளவும் அதிகமாக இருக்கிறது. 6 சதவீத ஆல்கஹால் என்று கூறப்பட்டாலும் அதைவிட அதிக போதைத்தன்மை அதில் உள்ளது” என்கிறார், டாக்டர்.

பொதுவாக மது அருந்துகிறவர்கள் பலர், தாங்கள் மது அருந்துவதை நியாயப்படுத்த, ‘உடலுக்கு கெடுதல் செய்யும் மதுவை நாங்கள் அருந்துவதில்லை. நல்லது செய்யும் மதுவை தான் அருந்துகிறோம்’ என்று சொல்வார்கள். மதுவை நல்லது, கெட்டது என்று தரம் பிரிக்க முடியாது. எல்லாம் மதுதான். எல்லாவற்றிலும் ஆல்கஹால் இருக்கிறது.

பருகும் மது வாய் வழியாக இரைப்பையை அடையும். அதில் 20 சதவீதம் ரத்தத்தில் கலந்துவிடும். மீதி 80 சதவீதமும் சிறுகுடலில் போய் சேரும். சிறுகுடலுக்கு ரத்தம், ஈரல் வழியாகச் செல்லும். உடலுக்கு தேவையில்லாததை வெளியேற்றுவது ஈரலின் வேலை. ஆனால் அங்கே வரும் மதுவின் அளவு மிக அதிகமாகும்போது, ஈரலால் தன் பணியை செய்ய முடியாது. தடுமாறி, காலப்போக்கில் ஈரல் பாதிக்கப்படும்.

மதுவின் தரம் என்பது அதில் எவ்வளவு ஆல்கஹால் கலந்திருக்கிறது என்பதை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. விலை உயர்ந்ததெல்லாம் தரமான மது என்று சொல்லிவிட முடியாது. எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும், மது என்றால் அது உடலுக்கு கெடுதியைத்தான் உருவாக்கும்.

ஒரு சில கிராமங்களில் பிரசவமான பெண்களுக்கும், உடல் பலகீனமாக இருப்பவர் களுக்கும் மதுவை மருந்தாக கருதி கொடுக்கிறார்கள். அதில் சில திரவங்களை கலந்தும் தருகிறார்கள். அதன் மூலம் உடல் வலுவடையும் என்று நம்புவது தவறு. மதுவை அப்படியே குடித்தாலும், எதனுடனாவது கலந்து குடித்தாலும், எத்தனை வயதில் குடித்தாலும், யார் குடித்தாலும் அது உடலுக்கு கேடுபயக்கவே செய்யும்.

மூளை, நரம்பு, ஈரல் போன்று உடலின் பல பகுதிகளை மது பாதிக்கும். உணர்வு நரம்புகள் அதிகமாக பாதிக்கப்பட்டு அது மரத்துப்போய்விடுவதால்தான், மது அருந்துகிறவர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு தன்னிலை இழந்துவிடுகிறார்கள்.

மது அருந்துபவர்கள் அதிக அளவில் ஏப்பம் விடுவார்கள். குறட்டையால் பாதிக்கப்படுவார்கள். சுவாச தடைகொண்ட நோய்களும் அவர்களை பாதிக்கும். ஆல்கஹால் மூளையையும் பாதிப்பதால், காலப்போக்கில் அவர்களுக்கு நினைவாற்றல் குறைந்துகொண்டே போகும்.

தொடர்ச்சியாக மது அருந்துகிறவர்களுக்கு உடலுறவு நாட்டம் குறைந்துபோகும். தொடக்கத்தில் அது பாலியல் வேட்கையை அதிகப்படுத்துவதுபோல் தோன்றினாலும், நாளடைவில் அவர்களுக்கு உறுப்பு எழுச்சி குறைந்துபோகும்.

ஆண், பெண் இருபாலரிடமும் ஆண் ஹார்மோனும், பெண் ஹார்மோனும் கலந்து காணப் படும். இந்த ஹார்மோன் கணக்கை சீர்படுத்துவதில் ஈரல் பெரும் பங்கு வகிக்கிறது. ஈரல்தான் ஆண்களிடம், பெண் ஹார்மோனை கட்டுக்குள் வைக்கும். அடிக்கடி மது அருந்துகிறவர் களுக்கு ஈரல் பாதிக்கப்படுவதால், அவர்கள் உடலில் பெண் ஹார்மோன் அதிகரிக்கும். அதனால் அவர்களிடம் பெண்தன்மை மேம்பட்டு, பாலுறவு ஆர்வம் குறைந்துவிடும்.

மது அருந்துகிறவர்களில் பலர் ‘பாற்றி லிவர்’ என்ற பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். ஈரல் திசுக்களில் கொழுப்பு படிவதால், இந்த வீக்கம் ஏற்படுகிறது. இதனால் மஞ்சள்காமாலை, பசியின்மை, வலி போன்றவை தோன்றும். இந்த ஈரல் வீக்கத்தை குணப்படுத்திய பின்பு மீண்டும் மது அருந்தினால் விளைவுகள் மிக மோசமாகிவிடும். மது அருந்துவதை முழுமையாக கைவிட்டால் ஈரல் மீண்டும் இயல்புநிலைக்கு வர வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாக மது அருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு ‘லிவர் ஸிரோஸிஸ்’ என்ற கடுமையான ஈரல் பாதிப்பு ஏற்படும். அதற்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், உயிருக்கே ஆபத்தாகிவிடும்.  
http://www.dailythanthi.com/News/Districts/2017/05/07124244/Beer-drinking-Cancer.vpf

Sunday, May 7, 2017

வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கான மந்தப்போக்கிற்கான முக்கிய காரணி எமது தமிழ் அரசியல்வாதிகள்

வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கான மந்தப்போக்கிற்கான முக்கிய காரணி எமது தமிழ் அரசியல்வாதிகள் என்பதுதான் கவலைக்குரிய விடயமாக உள்ளது. இதில் எனது 5 திட்டங்களும்
1. வடமாகாணத்துக்கான குடிநீர்
2. யாழ் வைத்தியசாலைக்கான பிரத்தியேக சத்திர சிகிச்சைப்பிரிவு
3. முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை
4. கிளிநொச்சி வைத்தியசாலை மகப்பேற்றுப்பிரிவு
5. கிழக்குமாகாண ஜேர்மன் தொழில்நுட்பக்கல்லூரி
அடங்கும். இதுதான் இன்றய யதார்த்தநிலை.
யாராவது எனது கூற்றை மறுப்பவராயின் உங்கள் அரசியல் தலைமைகளை கூட்டிவாருங்கள். பொதுத்தளமொன்றில் பகிரங்கமாக விவாதிக்க தயாராக இருக்கிறேன். ஆதாரங்களோடு!

என்னுடன் முன்னய ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினரும் Rockerfeller குழுமத்தின் மூத்த ஆலோசகரும் இலங்கை நிதி மந்திரியை உத்தியோகபூர்வமாக சந்தித்தபொழுதில் எடுத்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு!!!!





Puloliyuran Yogeesen

1.. நிரந்தரமான அரசியல் தீர்வு தமிழர்களுக்கு கிடைக்கவேண்டும்.// தற்போதைய தமிழ் தலைமையின் கீழ் அரசியல் தீர்வு தமிழர்களுக்கு கிடைக்காது
2. அதுவும் நீதி, நிதி, நிலம் போன்ற அதிகாரம் கிடைக்காமல் எதுவுமே செய்ய முடியாது.// இதில் எந்தவொரு அதிகாரமும் தற்போதைய தமிழ் தலைமையின் கீழ் கிடைக்காது
3. உலக நாடுகளின் உதவியோடு ஒரு தீர்வு அமைய எமது தமிழ்தலைவர்களும் மக்களும் உழைத்து வருகிறார்கள்.. /// அந்த உலகநாட்டை ஆட்டிவைக்கும் உரியவர்களுடன்தான் நானும் உள்ளேன். அங்கு எந்த எமது தமிழ்தலைவர்களுமோ மக்களுமோ இல்லை. இருந்தால் அடையாளம் காட்டுங்கள். அத்தோடு என்ன தீர்வு இவர்களிடம் எனச்சொன்னால் நன்று.
4. தமிழ்தலைவர்கள் என்பது மக்களால் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்டவர்கள்.// ஓ.... அப்படியா!! மக்களுக்காக வாழப்பிறந்த ஜனநாயக பொதுநலவாதிகள். அப்ப அவர்கள் திருடுவது, அபகரிப்பது, கொலை, சுருட்டுவதெல்லாம் மக்களுக்காக!! சரி சரி. !!
5. 2015 பிறகு தான் தீர்வுக்கான ஆக்கபூர்வமான கருமங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமது தலைவர்கள்.// 2009ல் முடிந்த போர். என்ன தீர்வு முன்வைக்கிறார்கள்? என்ன ஆக்கபூர்வமான கருமங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள்?? நீங்கள் அல்லது நீங்கள் குறிப்பிடும் தலைவர்கள் பட்டியலிடட்டும்.
6. எனவே நல்லது நடக்கும் என்று நம்புவோமாக.//// எதுவரை?? கடந்தவாரம்தானே சம் சும் மாவை ஏதோ சூடு சூடாக சீனவெடி விட்டார்களே. அப்ப அது சனத்துக்கு விட்ட சுடுகாத்தா?
7. வெளியில் இருந்து எதையும் பேசலாம். நடைமுறை சிக்கலை கொஞ்சம் உள்ளவாங்க வேண்டிய தேவையுள்ளது. /// இதுவரையில் ஒண்டுமே செய்யாதவர்களின் நொண்டிச்சாட்டு இது. அன்று தொடங்கி இன்றுவரை சிக்கல்இருக்கிறது. இப்ப என்ன புதிய சிக்கல்.
8. இனி வழமையான உங்கள் பாணியில் பொங்குங்கோ.!!!/// பாணி, பொங்குங்கோ எல்லாம் சொம்புகளின் வழி. எனதல்ல
Puloliyuran Yogeesen

பலம் மிக்கதோர் வடக்கு கிழக்கு!!!


வடக்கு கிழக்கு பொருண்மியத்தை கட்டி எழுப்பி தன்னிறைவு பெற முயல்வோம்.
வடக்கு கிழக்கில் தமிழர் தவிர்ந்த வல்லாதிக்கம் வலுப்படுவதை அனுமதிக்கக் கூடாது. புலம்பெயர்ந்த மக்கள் அங்கு முதலீடுகளைச் செய்வதோடு மேலதிக வருவாயை புலம்பெயர் நாடுகளுக்கு எடுத்து வர வேண்டும் அல்லது அங்கு வடக்கு கிழக்கு கட்டுமானத்தில் முதலீடாக்க வேண்டும். சிறீலங்காவில் சர்வதேச வங்கிகளில் வைப்புக்களை வைக்க சர்வதேச வங்கிக் கிளைகளை வடக்குக் கிழக்கிற்கு எடுத்து வர வேண்டும்.
புலம்பெயர் மக்கள் மேற்குலக பல்கலைக்கழகங்களோடு ஒன்றிணைந்து தனியார் உயர்கல்வி நிறுவனங்களை வடக்கு கிழக்கு எங்கும் நிறுவி தமிழ் மக்களின் கல்வி அறிவூட்டலையும் அடுத்த நூற்றாண்டிற்கு அவசியமான தொழில்நுட்பக் கல்வியையும் வழங்க வேண்டும்.
பெருகி வரும் ஆசியப் பொருளாதார போட்டி தொழில்நுட்பக் கல்வி கற்ற உயர் கல்வியாளர்களின் தேவைகளை ஆசியப்பிராந்தியத்தில் அதிகரிக்கச் செய்வதோடு மேற்குலகில் இருந்து வரும் விஞ்ஞானக் கல்வியில் அக்கறையின்மை அதற்கான தேவையை இன்னும் அதிகரிக்கும். இதன் அடிப்படையில் தான் நான் ஜேர்மன் அரசினது ஆலோசனை, ஆதரவுடன் கிளிநொச்சி அறிவு நகரில் ஜேர்மன் தொழில்நுட்பக்கல்லூரியை நிறுவினேன்.
இலங்கை கல்வி அமைச்சின் கீழ் இருந்தாலும் ஜேர்மனியரின் நிர்வாகத்தின் கீழ் தற்போது 1200 மாணவர்கள் கல்வி கற்பது எனக்கு மிகுந்த சந்தோசம். தனி ஒருவனாக எந்தவொரு அரசியல் கலப்பும் இன்றி இலங்கையில் இதை நடத்தி முடித்ததன் வலி எனக்கொருவனுக்குத்தான் தெரியும்.
நாம், வடக்கு கிழக்கின் பிரதான முதலீட்டாளர்களாக இருப்பதோடு பெறப்படும் பொருளியல் வளத்தைக் கொண்டு வடக்கு கிழக்கில் உட்கட்டுமானங்களை வளப்படுத்த வேண்டும்.
நாமும் துரிதமாக வளரும் சந்தர்ப்பத்தில் தான் சர்வதேசத்தின் பார்வையை செல்வாக்கை எம்மை நோக்கி திருப்பி ஆதிக்கத்திற்கும் எதிரான எமது குரலை உலகு செவிமடுக்கச் செய்ய முடியும்.
தமிழர்கள் இயன்றவரை சேமிப்புக்களை குறைத்துக் கொண்டு உட்கட்டுமானம் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் வர்த்தகம் கல்வி சுகாதாரம் சேவைகள் சுற்றுலாத்துறை என்று முதலீடுகளில் அவற்றை இட்டு தமிழர் தேசங்களை வளமிக்கதாக்குவதோடு எமது வளங்களை நாமே பயன்படுத்தும் நிலைக்கு வரவேண்டும். அந்நியருக்கு எமது வளங்கள் ஆதிக்க சக்திகளால் விற்கப்படுவதும் எமது வளங்களைச் சுரண்டி எடுக்க வரும் அந்நியமுதலீட்டாளர்களை முறியடிக்கவும் நாம் விரைந்து செயற்பட வேண்டும்.
யாழ்ப்பாணம் வன்னி மற்றும் திருமலை மட்டக்களப்பை மையமாக வைத்து அந்நிய முதலீட்டாளர்களும் கல்வி நிறுவனங்களும் படையெடுக்கும் இன்றைய காலத்தில் நாம் எமது உட்கட்டுமானங்கள் கல்வி மற்றும் இதர தேவைகளை, சவால்களை சந்திக்கும் வகையில் கட்டி எழுப்ப வேண்டும்.
ஆதிக்க சக்திகள் எமது வளங்களைச் சுரண்டி இலாபம் ஈட்ட அனுமதிக்கக் கூடாது. அந்த நிலையை தவிர்த்து நாம் சர்வதேச அளவில் பேசக் கூடிய அளவிற்கு எமது பொருளியலை கட்டி எழுப்பி செல்வாக்குள்ளவர்களாகும் நிலை வரின் நிச்சயம் நாமும் ஒருநாள் உலகால் வியந்து பார்க்கப்பட்டு எமது உரிமைகள் தொடர்பில் உலகை நோக்கி காத்திரமான கோரிக்கைகளை முன்வைக்கும் பலத்தைப் பெறலாம்.
ஆயுதப்போராட்டம் ஊடான விடுதலை என்பது சாத்தியப்படாத நிலையில் எமது போராட்ட வடிவங்களை எமது வளர்ச்சியோடு ஒருமித்துக் கொண்டு இட்டுச்செல்ல வேண்டும். ஏற்கனவே சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள எமது தேசத்தைக் கட்டி எழுப்பி எமக்கு தேவையான அத்துணை வளங்களையும் சேவைகளையும் நாமே எமது தேசத்தில் நிறைவு செய்யும் போது நாம் முழுமையாக விடுதலை பெற முடியும்.
எமக்கான நவீன துறைமுகங்கள், விமான நிலையங்கள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்று சர்வதேசத்தோடு இணைந்து நாம் பணிகளை முன்னிட்டுச் செல்லும் போது ஆளும் வர்க்கம் அதற்கு தடைபோட முடியாது. எமது நவீன கட்டுமானங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்களை கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும். நெடிய அதிவேக வீதிகள் மேம்பாலங்கள் நவீன அதிவேக தொடரூந்து நிலையங்கள் நடுத்தர சர்வதேச விமான நிலையங்கள் என்று எமது தேசத்தை எமது மனித மற்றும் இதர வளங்களைப் பயன்படுத்தி கட்டி எழுப்ப வேண்டும்.
வடக்குக் கிழக்கில் கிட்டத்தட்ட 4 துறைமுகங்களாவது அமைக்க வேண்டும். சர்வதேச வர்த்தகக் கப்பல்களுக்கான வழியை எம்மை நோக்கி இழுக்க வேண்டும்.
பொருளியல் பலத்தைக் காட்டி எமது அரசியல் பலத்தை வெல்ல நாம் இனிப்போராட வேண்டும். ஆசியப் பிராந்தியத்தில் சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளியல் சக்தியாக உருவெடுத்துவிட்டது. ஜப்பான் 3ம் இடத்தில் உள்ளது. இந்தியா மிக விரைந்து வளரும் பொருளியல் சக்தியாக உள்ளது.
இந்த நிலையில் மேற்குலகம் பொருளியலில் பிந்தங்கிச் செல்லும் சூழல் இருப்பதால் அவர்களுக்கு தெற்காசியாவில் தமது நட்புப் பொருளியல் தளம் ஒன்று உருவாவது எதிர்க்கப்படக் கூடியதல்ல. அதேவேளை ஆசிய பொருளியல் சக்திகளோடு நேரடிப்பகை பாராட்டாது அதேவேளை அவர்களின் ஆதிக்கத்துக்குள் செல்லாது சிங்கள தேசம் எமக்கு அளிக்கும் அல்லது கிடைக்கப்பெறும் மட்டுப்படுத்திய அரசியல் உரிமையை எமக்கு சாதமாக்கிக் கொண்டு நாம் எம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமே தமிழர் தேசத்தை அடுத்த நூற்றாண்டில் உலகம் வியக்க முன்னேற்றிச் செல்ல முடியும்.
தமிழனா இப்படி எழுந்து நிற்கிறான் என்று இந்த உலகம் எம்மை உற்றுநோக்க வேண்டும். ஒரு பொருளியல் பலம் மிக்க இனமாக நாம் இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் இந்த உலகம் எம்மைப் போட்டு மிதித்திருக்குமா..??! சிங்கப்பூரை எந்த நாடாவது போருக்கு இழுக்குமா..??! இல்லை. Singapore, Hong Kong, Taiwan, Luxemburg, Lichtenstein, Switzerland இராணுவ பலத்தால் அல்ல பாதுகாக்கப்பட்டிருக்கிறது. பொருளியல்பலத்தால் அது பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
நாம் சிந்திக்க வேண்டும். எமது பொருளாதாரத்தை வளங்களைக் கொண்டு நாமே கட்டி எழுப்ப வேண்டும். இதர சக்திகளின் ஆதிக்கத்துக்குள் எமது பொருண்மியம் வளம் செல்ல அனுமதிக்கக் கூடாது.
தொடர்ந்து தாயகம் புலம்பெயர் மக்கள் என்று பிரித்துப் பேசிக் கொண்டிராமல் இரண்டு மையங்களும் இணைந்து செயற்படும் நிலை உருவாக வேண்டும். எம்மிடம் உழைக்கும் சக்தி இருக்கிறது. பொருண்மிய திறன் இருக்கிறது. கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவு இருக்கிறது. சிறந்த உல்லாசப் பிரயாணத்துறைக்கான வழிமுறைகள் தெரிந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது உலகில் வளர்ந்து வரும் இரண்டு பெரிய பொருளியல் சக்திகள் இருக்கும் கேந்திர ஸ்தானத்தில் இருந்து கொண்டும் எமது நிலத்தை வளத்தை சுடுகாடாக விட்டுவிட்டு குளிர்நாடுகளில் கூலிக்கு மாரடிப்பதை பெருமையாக நினைத்துக் கொண்டிருப்பதிலும் அந்தக் கூலியில் இருந்து முதலாளி ஆகும் நிலைக்கு நாம் வளர முயற்சிக்க வேண்டும். அதுவே இன்றைய தேவை.
இது தொடர்பில் உங்கள் கருத்துக்கள், நிலைப்பாடுகள், இந்த முன்மொழிவுகளில் இருக்கக் கூடிய குறைகள், நிறைகள், அவற்றை எவ்வாறு சீர்செய்வது, எந்த இடத்தில் என்ன திட்டத்தை செய்யலாம், எப்படி அந்நிய ஆதிக்கத்தில் இருந்து எமது பொருண்மியத்தை மீட்டு எமதாக்குவது என்பவற்றை இட்டு உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.
2018ல் சிறந்த 50 திட்டங்களை வடக்குக் கிழக்கில் தெரிவு செய்து ஆரம்பிப்பதற்கான அடிதளம் போடப்பட இருக்கிறது. அத்திட்டங்களை உள்வாங்கும் கிராம நகரமக்களும் அதில் பங்காளராக இருப்பார்கள்.
அது தவிர்ந்து குதர்க்கங்கள் இங்கு வேண்டாமே
Puloliyuran Yogeesen

மனித புலன்கள் புரிதலும் மற்றும் ஆற்றலறியும் முறைகளும்


இந்த உலகில் மிகவும் பயனுள்ளதும் அதே நேரத்தில் புரிந்து கொள்ளக்கடினமானதும் ஒன்று உண்டென்றால் அது மனிதனின் உள்ளுக்குள் புதைந்து இருக்கும் அவனின் தன்மைகளும் மற்றும் குணாதிசயங்களும்தான்.
மிகவும் முக்கியமான இந்தக்கலை, தொன்று தொட்டு பல்வேறு வடிவங்களில் இருந்து வருகிறது என்பது ஒரு உண்மை. அற்புதமான மனித ஆற்றலை இனங்கண்டு, அதை சரியான வடிவத்தில் பயன்படுத்தும் முறையை இன்றும் உலகில் பலவேறு பகுதிகளில் பல உத்திகள் கொண்டு கண்டுபிடிக்கும் நிலை நடைமுறையில் உள்ளது.
நம்மில் உள்ள சாஸ்திர சம்பிரதாய முறையைப்போல், மேலை நாடுகளிலும் பல்வேறு உத்திகள் கையாளப்பட்டு, மனித வளத்தின் தன்மைகளையும் மற்றும் திறன்களையும் அறிகிறார்கள். மிகவும் நீண்டுச்செல்லும் இந்த தலைப்பின் செய்திகளை, எளிதாக்கி தரவேண்டும் என்ற சிந்தனையில், மிக சுருக்கமாக சில குறிப்புகளை மட்டும் இங்கே தர விழைகிறேன்.
மனித வளம் மேலாண்மை (Human Resource Management & Personnel Administration) என்பது மிக அறிய, நீண்ட மற்றும் அதிசயங்கள் நிறைந்த ஒரு பகுதி. அதில், மனித திறன் கன்டுபிடிப்பு (Analysis and Finding of Human Traits) என்பது கடலில் முத்து தேடும் முதற்சியே. இதை நாம் நன்கு விளங்கிக்கொள்ளல் வேண்டும். இருப்பினும், கீழ்காணும் சில முறைகளின் மூலம் மனித குணங்களையம், தன்மைகளையும் மற்றும் திறன்களையும் தெரிந்து கொள்ள இயலும் என்பது உண்மையே.
1 . கண்களின் பார்வை நிலையை வைத்து (Analysis from Vision of Human)
2 . தலை வாரும் நிலையை வைத்து (முடி சூடியவருக்கு மட்டும்) (Hair Style and its dressing mode of Human Analysis)
3 . நடந்து வரும் நிலையை வைத்து (Watching of Walking Style of Human)
4 . உடை அணித்தலை வைத்து (Dressing Code or Style of Human Analysis)
5 . உட்காரும் முறையை வைத்து (Looking on Sitting Style of Human)
6 . தலை ஆட்டும் விதம் கொண்டு (Noting the way of turning head by Human)
7 . பேசும் முறையில் இருந்து (Through conversation or talking ways)
8 . சாப்பிடும் விதம் வைத்து (Mode of taking food in common places)
9 . உடல் அங்க அசைவுகள் கொண்டு (Body Language Analysis)
10 . தன்னை மதிப்பிட்டு சொல்லும் விதம் வைத்து (Expressing self-analysis)
11 . தன்னம்பிக்கையின் வெளிப்பாடு வைத்து (Exposing of self-confidence)
12 . பொது அறிவு, உலக புரிதலை வெளிப்படுத்தும் விதம் வைத்து (General Knowledge and World affairs exposure method)
மேற்சொன்ன முறிகளின் மூலம், ஏறக்குறைய யாரும் சொல்லாமலே ஒருவரை பற்றி அதிகம் நாம் அறிந்துகொள்ள முடியும். மேலே குறிப்பிட்ட ஒவ்வொன்றும் ஒரு தனி தலைப்பாக கொண்டு விவரிக்கும் அளவிற்கு கருத்துக்கொண்டவை.
மனித ஆளுமை அபிவிருத்தி (Human Personality Management) கல்வியின் ஒரு சிறு துளியே நான் இங்கே கோடிட்டு கட்டியிருப்பது. இதை தாண்டியும் பல செய்திகள் மனித வள மேம்பாடு (Human Resource Development) என்ற மிக பெரிய பாடத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது என்றல் அது மிகை யாகாது.
மனித திறன் அபிவிருத்தி மற்றும் மேம்பாடு (Human Traits Development and Management), மனித ஆளுமை திறன் வளர்ச்சி (Human Personality Development), மனித வளம் பெருக்கம் மற்றும் பயன்பாடு (Increasing of Human Resources & deployment) , மனித சிந்தனை உருவாக்கம் (Human Think-tank process) , மனித நேய கோட்பாடுகள் (Humanity Ethics), மனித வாழ்வியல் நியதி (Human Life Ethics), மனித அறநெறி வளர்ச்சி (Human Morality Development) போன்று எண்ணற்ற பகுதிகள் மனித வள மேலாண்மையில் (Human Resource Management) இருக்கின்றன.
இதை எல்லாம், சரி வர தெரிந்து கொள்ளாமல், எந்த சமூகமும் உயர்வை எட்ட இயலாது என்பது உண்மை,
மீண்டும் ஆராய்வோம் .....

Shiridi Saibaba Tamil Movie

வடமாகாண சபையின் வீழ்ச்சி ,வடக்குக் கல்வி அமைச்சின் சீர்கேடு

வடமாகாண சபையின் வீழ்ச்சியைப் பற்றியும் வடக்குக் கல்வி அமைச்சின் சீர்கேட்டைப்பற்றியும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பொதுவெளியில் கவனப்படுத்தி வருகிறேன். இதையெல்லாம் கண்டு கொள்ளவே கூடாது என்ற மாதிரி தமிழ்ப்பெருங்குடி கள்ள மௌனம் காத்துக் கொண்டிருக்கிறது.
இதன் விளைவுகள் வினையாகத் தமிழ்ச்சமூகத்தைச் சூழத் தொடங்கி விட்டன. இப்போது வடக்கு மாகாணம் உற்பத்தியிலும் பிற பொருளாதார நடவடிக்கைகளிலும் சமூக வளர்ச்சியிலும் பின்தங்கியிருக்கிறது. வன்முறையிலும் குற்றச்செயல்களிலும் வீண் விரயங்களிலும் முன்னேறியுள்ளது.
ஆனாலும் அது தன்னுடைய வீழ்ச்சியை மறைத்துக் கொண்டேயிருக்கிறது. தன்னுடைய தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்கிறது. என்னதானிருந்தாலும் கிழிந்த கோமணத்தினால் இழுத்துப் போர்த்த முடியாது என்பது தெளிவான உண்மையல்லவா!
வட மாகாணம் இலங்கையில் கடைசி இடத்தில் உள்ளது. கிளிநொச்சி மாவட்டம் 125 ஆவது இடத்தில், கடைசியில் உள்ளது.
இதற்கெல்லாம் காரணம் முறைகேடான நிர்வாக முறைமையும் அரசியல் தலையீடுகளுமே.
கீழே பாருங்கள்.
கிளிநொச்சி - பூநகரிக் கல்விக் கோட்டத்தில் உள்ள 1சி பாடசாலையான முட்கொம்பன் வித்தியாலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் அதிபர் இல்லை. சுமார் அறுநூறு மாணவர்களை கொண்ட இந்தப் பாடசாலையை ஆண்டு ஒன்றுக்கு கல்வி கற்பிக்கும் பயிற்றப்பட்ட ஆரம்பக் கல்விப் பிரிவு ஆசிரியரே நடத்திவருகின்றார். ஆனால் நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு ஐந்து அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி ம.விக்கு ஐந்து அதிபர்கள் உள்ளனர். அதிபர் தரம் ஒன்றில் ஒருவர். அதிபர் தரம் இரண்டில் இரண்டு அதிபர்கள். அதிபர் தரம் மூன்றில் இரண்டு அதிபர்கள் இருக்கிறார்கள்.
மத்திய கல்லூரியின் ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் இரண்டில் இரண்டு அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்,
பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் தரம் இரண்டு அதிபர் அதிபராக கடமையாற்றுகிறார். தரம் ஒன்றைச் சேர்ந்த அதிபர் ஒருவர் எவ்வித பொறுப்பும் இன்றி இருந்தார். தற்போது இவர் எந்தப் பொறுப்புகளும் வழங்கப்படாமல், பாடசாலை எதுவும் வழங்கப்படாமல் கண்டாவளைக் கோட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார்.
இராமநாதபுரம் பாடசாலையில் தரம் இரண்டு அதிபர்கள் இருவர் உள்ளனர், இராமநாதபுரம் மேற்கு பாடசாலையில் தரம் இரண்டு அதிபர் ஒருவரும் தரம் மூன்று அதிபரும் ஒருவரும் உள்ளனர்
இவ்வாறு மாவட்டத்தின் நகரை அண்டிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரிய வளமும் அதிபர்களும் குவிக்கப்பட்டுள்ள நிலையில் கிராமப்புறப் பாடசாலைகள் போதுமான வளங்கள் இல்லாமல் தொடர்ச்சியாக காணப்படுகின்றன.
க.பொ.த உயர்தரத்தில் கலை வர்த்தக பிரிவுகளைக் கொண்ட முட்கொம்பன் பாடசாலையில் அறுநூறு மாணவர்கள் படிக்கின்றனர். மீள் குடியேற்றத்தின் பின்னர் படிப்படியாக கல்வியில் வளர்ச்சியடைந்து வந்த இந்தப் பாடசாலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அதிபர் வெற்றிடமும் அங்கு நிலவும் ஆசியர் வெற்றிடமும் மிகமோசமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இந்தப் பாடசாலையில் கற்பிப்பதற்கு கணித பாடத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் தேவையாக உள்ள போதும் ஒருவரும் இல்லாத நிலை. அவ்வாறே விஞ்ஞானப் பாடத்திற்கும் இரண்டு ஆசிரியர்கள் தேவையாக உள்ள போதும் எவரும் இல்லை. இந்த நிலைமை கடந்த பல மாதங்கள் காணப்படுகிறது.
அத்தோடு உயர்தரத்தில் இந்து நாகரீகத்திற்கும் ஆசிரியர் இல்லை என தெரிவிக்கும் பெற்றோர், இந்த நிலைமை நீடித்தால், தங்களுடைய பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும். இது குறித்து எல்லா இடமும் முறைப்பட்டிருக்கிறோம். நடவடிக்கையை எடுப்பதற்கு யாருமே முன்வரவில்லை எனக் குறிப்பிடுகின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சியில் கற்பிப்பதற்கான ஆசிரிய வளப்பகிர்வைச் சரியாகச் செய்ய முடியாத, பிரதேச வேறுபாட்டை மேவிச் சிந்திக்கப் பண்ணாத மாகாண நிர்வாகமும் தமிழ் அரசியல் தலைமையும்தான் வடக்குக் கிழக்கு இணைப்பைப்பற்றியும் தேசியத்தைப் பற்றியும் பெருங்கதையாடல் செய்கிறது.
இதற்குள்தான் இத்தனை பெருமைகளும் கனவுகளும்.
இந்த லட்சணத்தில்தான் இவர்களுக்குக் குடைபிடிப்போர் உள்ளனர்.
Sivarasa Karunagaran

தகுதி கூடிய வடக்கு முதலமைச்சரை விட எட்டாம் ஆண்டு படித்த வடமேல் மாகாண முதலமைச்சர் சிறப்பாக மாகாணத்தை கொண்டு நடத்துகின்றார் என வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக அமையத்தில் இன்று(06) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர்,

இலங்கையில் உள்ள முதலமைச்சர்களில் தகுதி கூடிய முதலமைச்சர் என்றால் அது வடக்கு முதலமைச்சர்தான். அது அனைவருக்கும் தெரியும்.
அண்மையில் கல்வி அமைச்சருடன் வட மேல் மாகாணத்தில் வயம்ப எனும் இடத்தில் கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு குறிப்பிட்டுள்ளார்கள் வட மேல் மாகாண முதலமைச்சர் எட்டாம் ஆண்டுதான் படித்தவர் என்று.
ஆனால் அவர் அந்த மாகாணத்தை சிறப்பாக கொண்டு நடத்துகின்றார். இதற்கு தகுதி அல்ல முக்கியம், ஆளுமைதான் காரணம் அவரிடம் ஆளுமை இருக்கிறது. இதனை பல இடங்களில் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
அது போலதான் வடக்கு கல்வி அமைச்சரும் அவர் ஆசிரியராக, அதிபராக, வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்து கல்வி அமைச்சராக வந்தவர் என்பது முக்கியமல்ல அவரது ஆளுமைதான் முக்கியமானது.
வடக்கின் கல்வித்துறையில் வளங்கள் சரியாக பகிரப்படாமை, சரியாக பயன்படுத்தப்படாமை, மற்றும் நெறிப்படுத்தப்படாமை போன்ற காரணங்களால் கல்வித்துறை என்றுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை ஆசிரியர் வளங்கள் உள்ளிட்ட கல்வித்துறையின் வளங்கள் சரியாக முறையாக பங்கிடப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக ஒரு சில வலயங்களில் கல்வித்துறையின் ஆளணி வளம் குவிக்கப்பட்டுள்ளது. எத்தனையோ தடவைகள் எடுத்துக் கூறியும் அது சீர்செய்யப்படவில்லை.
அதற்கு மேலதிகமாக இந்தக் குறைபாடுகளை நீக்குவதற்காகதான் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்கள் குறிப்பாக வன்னி பிரதேசங்களில் நியமிக்கவே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
குறிப்பாக 400 பேரளவில் யாழ்ப்பாணத்திற்கு வெளியே நியமிக்கப்பட்டார்கள் அதில் ஐம்பது பேர் இடமாறுதல் மூலம் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்றார்கள்.
ஆனால் 75 பேர் அரசியல்வாதிகளின் சிபாரிசு மற்றும் உயர்மட்ட செல்வாகின் அடிப்படையிலும் யாழ்ப்பாணத்திற்கு வந்துவிட்டார்கள் இதில் எந்தெந்த அரசியல்வாதிகள் ஈடுப்பட்டுள்ளனர் என்ற ஆதாரமும் என்னிடம் உண்டு.
வடக்கிலும் முதலமைச்சர் அமைச்சர்கள் அவர்களுக்குச் சம்பளங்கள் சலுகைகள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களுக்கு சம்பளம் என வழங்கி வருவது ஏன் மக்களுக்கு வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆனால் அது எதுவும் நடந்ததாக தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா
http://www.tamilwin.com/politics


கேரளத்தில் புற்றுநோய்க்கு ஒரு ஆச்சரிய ஆயுர்வேத மருத்துவர்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தலமன்னா பேருந்து நிலையத்துக்கு எதிர்ப்புறம் பிரியும் சின்ன சாலையில் அரை கிலோ மீட்டர் நடந்தால் அரசு ஆயுர்வேத மருத்துவர் மனோஜ்குமாரின் கிளினிக் இருக்கிறது. ஆயுர்வேத மருத்துவம் பயின்று 1998 முதல் அரசு ஆயுர்வேத மருந்தகத்தில் முதன்மை மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வரும் ஏ.மனோஜ்குமார், ஆயுர்வேத மருந்துகளின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கிறார்.
‘ஈரல் புற்றுநோய்க்கான ஆயுர்வேதச் சிகிச்சை முறைகள்’ குறித்துத் தனது சிகிச்சை அனுபவங்களை உள்ளடக்கி, இவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையை (19.09.2015), ஜெர்மனியைச் சேர்ந்த ஐரோப்பிய ஆயுர்வேத அகாடமி என்ற அமைப்பு சிறந்த ஆயுர்வேதச் சிகிச்சை முறை என அங்கீகரித்துள்ளது. இதே சிகிச்சைக்காக இந்திய மருத்துவ முறைகளின் அமைப்பான ஆயுஷ்ஷின் கீழ் இயங்கும் கேரள அரசு மருத்துவப் பிரிவு, 2015-ம் ஆண்டின் சிறந்த மருத்துவருக்கான விருதை இவருக்கு வழங்கியுள்ளது.
தமிழகம், கேரளத்தைச் சேர்ந்த நோயாளிகள் இவரிடம் அதிகமாகச் சிகிச்சை பெறுகின்றனர். கத்தியில்லை, ரத்தமில்லை, உள் நோயாளி சிகிச்சை இல்லை. தான் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகளின் மூலமாகவே நாள்பட்ட புற்றுநோய்களுக்கும் இவர் சிகிச்சை அளிக்கிறார்.
சில நோயாளிகள்
டாக்டர் மனோஜ்குமாரை சந்தித்தபோது, சிகிச்சைக்கு வந்திருந்த பெண்ணுக்கு 48 வயது. மலப்புரம் அருகே அமரம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர். நான்கு வருடங்களுக்கு முன்பு எலும்பில் புற்று ஏற்பட்டு, கருப்பைக்கும் பரவி, வயிற்றுவலியால் துடித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அறுவைசிகிச்சைதான் வழி, அதைச் செய்தாலும் பிழைக்க வாய்ப்பு குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அந்நிலையில் உறவினர் ஒருவர் மூலம் இங்கு வந்துள்ளார். இரண்டு மாதம் டாக்டர் மனோஜ்குமார் அளித்த ஆயுர்வேத மருந்துகள், அந்தப் பெண்ணைப் புற்றுநோயிலிருந்து மீட்டுள்ளன.
இதேபோல் கோவையை சேர்ந்த ஒருவருக்குப் பிரைன் ட்யூமர். திடீரென்று வாய், கை கால்கள் கோணி நினைவிழந்து விட்டார். அத்தனை சோதனைகளையும் செய்து பார்த்த புகழ்பெற்ற ஆங்கில மருத்துவர் குழு ஒன்று, ‘மூளையில் குறிப்பிட்ட அளவு புற்று கட்டி. அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதுதான் வழி. ஆனால் பிழைப்பதற்கு உத்தரவாதம் இல்லை!’ என்றே சொல்லிவிட்டது. அவருக்கு டாக்டர் மனோஜ்குமார் இரண்டு மாதம் சிகிச்சை அளித்தார். இப்போது மனிதர் எழுந்து உட்கார்ந்துவிட்டார். இப்படிப் பல உதாரணங்கள் உள்ளன.

ஆயுர்வேத மருத்துவத்தில் பொதுவாக வழங்கப்படும் கஷாயம், சூரணம், மாத்திரை வடிவங்களிலேயே இங்கே புற்றுநோய்க்கும் மருந்து வழங்கப்படுகிறது. அதில் சில மருந்துகளை டாக்டர் மனோஜ்குமாரே தயாரிக்கிறார். செலவும் அதிகப்படியாக ஆவதில்லை.
அனுபவம் தந்த சிகிச்சை
“நான் ஆயுர்வேதத்தில் பொது மருத்துவர்தான். கேன்சர் பேஷண்ட் வந்தபோது ஆயுர்வேதத்தில் உள்ள சில மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தேன். ஒரு ஸ்பிரிசுவல் நேச்சர் என்று சொல்லுவார்களே, அப்படி அந்த மருந்துகள் அவர்களைக் குணப்படுத்தியதைக் கண்டு, அதில் ஆர்வம் கொண்டேன். பிறகு அந்தச் சிகிச்சைக்கான மருந்துகளை அனுபவம் மூலமாகக் கையாள ஆரம்பித்தேன். அது வெற்றிகரமாக அமைய, அது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினேன். ஒரு நோயாளியைப் பார்த்தால் அவருக்கு எந்த அளவு அந்த நோயின் தன்மை இருக்கிறது என்பதைப் பொருத்தே மருந்து கொடுக்கிறேன்.
கருப்பை புற்றுநோய் என்றால் ஒரே மருந்து கொடுப்பார்கள். நான் அப்படிக் கொடுப்பதில்லை. நோயாளியின் உடல் தன்மைக்கும், நோய்த் தன்மைக்கும் ஏற்ப வேறு வேறு மருந்துகளே கொடுக்கிறேன். அது குணமாகும்போது ஒவ்வொரு முறையும் மருந்தை மாற்றிக் கொடுக்கிறேன். ரத்தப் புற்றுநோயில் பல வகைப்பட்டவர்கள், கருப்பை புற்றுநோய், ஈரல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் என உள்ளவர்கள் பல தரப்பட்டவர்களும் என்னிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.
நான் ஒரு அரசு மருத்துவர். எனது வேலைநேரம் போக எஞ்சிய நேரத்தில்தான் புற்றுநோய் சிகிச்சைக்காக நேரம் ஒதுக்குகிறேன்,” என்கிறார் டாக்டர் மனோஜ்குமார், அமைதியாக.
http://tamil.thehindu.com/general/healthwidget-art=four-all

அதிகம் கண்டிராத நடராஜர் வடிவம்

Saturday, May 6, 2017

விநாயகர் உருவம் பற்றிய சில ஆன்மிக தகவல்கள்

விநாயகர் உருவம் சில ஆன்மிக தகவல்களை உணர்த்தும் வகையில் உள்ளது.
விநாயகப் பெருமான் அரவத்தை தனது இடுப்புக் கச்சையாக அணிந்திருப்பதன் தத்துவம் மாயையினைத் தமது விருப்பம்போல இயக்கும் வல்லமை பெற்றவர் என்பதாகும்.
விநாயகரின் பெருச்சாளித் தத்துவத்தின் விளக்கம் பெருச்சாளி இருளை விரும்பும், கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும். அதனால் அது அறியாமை அல்லது ஆணவ மலத்தைக் குறிக்கும். எனவே அப்பெருச்சளியைப் பிள்ளையார் தமது காலின்கீழ் கொண்டிருப்பது அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை உணர்த்துகின்றது.
காகவடிவாக வந்து கமண்டல தண்ணீரை தட்டியூத்திய தத்துவம் உணரத்துவது அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள காவிரி நதியினை காகவடிவத்தில் வந்த விநாயகப் பெருமான் கவிழ்த்துவிட இந்த நதி பெருகி பலசோலைகளைக் கடந்து இறுதியில் கடலுடன் கலந்தது. கமண்டலம் மனித உடல், அதற்குள் இருந்த காவிரிநீர் ஆன்மசக்தி.
ஆன்மா அறியாண்மை காரணமாக இவ்வுடலே நிலையானது என்று நினைத்திருக்கின்ற காலத்தில் குரு வந்து நினைப்பது பிழை நீ போகவேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதைப்போல காக வடிவத்தில் வந்த விநாயகர் கமண்டலத்தை கவிழ்த்துவிட வெறும் உடம்புக்குள் இருந்த ஆன்மா இறுதியில் இறைவனைப்போய் சேருவது போல காவிரி நீரானது இறைவனைப்போய் சேருகின்றது என்ற பரந்த ஆழமான தத்துவத்தை விளக்குகின்றது.விநாயகரின் பெருவயிறானது, பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குள் அடக்கம் என்பதையும் இருபெருங்காதுகள் பலகோடி உயிர்களின் முறையீடுகளைக் களைவதற்காகப் பெரும் இரு காதுகளை கொண்டுள்ளார் என்பதையும் பஞ்சபூத தத்துவத்தின் விளக்கம் பஞ்சபூதங்களை தம்முள் அடக்கி ஆள்பவர் என்பதைக் காட்டுவதற்காகவும் அவர் மடித்து வைத்துள்ள ஒருபாதம் பூமியையும், சரிந்த தொந்தி நீரையும், அவருடைய மார்பு நெருப்பையும், இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம் காற்றையும், அதன் நடுவில் வளைந்திருக்கும் கோடு ஆகாயத்தையும் உணர்த்தி நிற்கின்றன அவர் வைத்திருக்கும் ஆயுதங்கள் ஐந்தொழிலை உணர்த்துகின்றன. அவரது பாசம் படைத்தலையும், அங்குசம் அழித்தலையும், ஒடிந்த தந்தம் காத்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் அருளலையும் உணர்த்தி நிற்கின்றன. - See more at: http://www.raasipalan.com/




Friday, May 5, 2017

The DNA Journey

Where do you think you come from? I’ve always been curious about my ancestry, so I decided to take one of those home DNA tests. The results were fascinating.
Like me, I’m sure your family has told you stories passed down from generation to generation. Stories about your heritage, culture, and ancestry. The more we know about ourselves and our family’s past – the more our personal identity evolves.
For me, the stories included family members immigrating from Ireland and Poland looking for a better life in the United States. But these tales are sometimes vague and incomplete after being passed down from person to person, like a childhood game of telephone.
How much is true? How much is being left out? This is where genealogy research and modern DNA technology can give you a more accurate picture of where you really come from. Sometimes, there are surprises…
I partnered up with the flight search experts at Momondo to answer those questions for myself, and hopefully inspire you to do the same. 

Fight Against Depression In Mysterious Dark Paintings

Polish Artist Illustrates His Fight Against Depression In Mysterious Dark Paintings


“I started to have problems with anxiety/depression and one day I just made the first picture, that evolved into the next one and then another,” Planeta said.
“It didn’t do them to fight or cope with depression, but after a few pictures I realised that they pretty much picture what is going on in my head and how I feel deep inside, so the pictures helped me in understanding, and understanding can help to solve the problem.
“The pictures I’ve made lately have changed, they are more calm and bright, so I know that something is changing, although I cannot see or observe the change in my life yet.”

 


Depression is not easy thing to deal with, but sometimes you can take your weakness and turn it into something beautiful.
That's exactly what polish artist Dawid Planeta did - to help himself he created an imaginary world where a small man is traveling through long forgotten jungle meeting his weaknesses and fears presented as giant animals with glowing eyes. The vision created by the artist is dark, mysterious, and very beautiful.
 “One challenge at a time, I try to turn into the face of fear and tell it “you are not my master, you are the product of my self and I am your master.” I look into the monster’s eyes until it disappears. Then I am free.” ― Rohvannyn Shaw
 “Never go into the deep parts of the forest, for there are many dangers there, both dark and bright, and they will ensnare your soul.” ― Robert Beatty, Serafina and the Black Cloak
 “Allow the power to flow through you. Don’t try to capture it. You wish only to borrow it.” ― G.G. Collins

 “The deeper I go into myself the more I realize that I am my own enemy.” ― Floriano Martins

 http://www.boredpanda.com

கீழடி கண்டுபிடிப்பின் தனித்துவம் என்ன? தமிழர் நாகரிக வரலாற்றின் உயிர் நாடி


சங்க காலத் தமிழகத்தில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. முதன்முறையாக ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான முழுமையான அடையாளங்கள் கீழடியில்தான் கண்டறியப்பட்டுள்ளன. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, வளர்ச்சி பெற்ற முழுமையான ஒரு நகரம் இப்போது இங்கு கண்டறியப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு தமிழக வரலாற்றுக் காலத்தை புதிய மறுபரிசீலனையை நோக்கி நகர்த்துகிறது. அதுமட்டுமல்ல, தமிழகத்தின் இலக்கியத்திற்கும் வரலாற்றிற்கும் அறிவியல் பூர்வமான ஒளிபாய்ச்சும் இடமாக கீழடி இருக்கிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாளர்கள் பலரும் பழந்தமிழகத்தை ஒரு இனக்குழு சமூகமாகத்தான் வரையறுத்தார்கள். சிந்துவெளி நாகரிகத்தைப் போல, ஒரு நகர நாகரிகம் இங்கு இல்லை என்பது அவர்கள் கருத்தின் அடிப்படை. இலக்கிய வர்ணனைகளை மட்டும் வரலாற்று ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே கடந்த இலக்கியத்தைக் கடந்த ஆதாரங்கள் கண்டறியப்படாத நிலையில் அவர்களது கருத்துக்கு உயிர் இருந்தது. ஆனால், இன்று கீழடியில் கண்டறியப்பட்டுள்ள தரவுகள் அந்தக் கருத்தியலை தகர்த்திருக்கின்றன. சங்க காலத்தில் நகர நாகரிகம் செழிப்புற்று இருந்ததை மெய்ப்பிக்கின்றன.
நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்திய வரலாற்றுப் பேரவையின் (ஐசிஎச்ஆர்) மாநாடு இருவாரங்களுக்கு முன் ( 2016 டிச.29,30 தேதிகளில்) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் கீழடி கண்டுபிடிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன. அந்த அமர்வுக்கு தலைமை வகித்த வரலாற்று அறிஞர் பேராசிரியர் ரொமிலா தாப்பர், “தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் இவை. இக்கண்டுபிடிப்புகளின் மூலம் தமிழக வரலாற்றை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
கண்டறியப்பட்டுள்ள அந்த நகரத்திற்கு கீழடி என்றுதான் பெயரா?
வரலாற்றில் இரண்டு உதாரணங்களைச் சொல்ல முடியும். ஒன்று, ஹோமர் எழுதிய இலக்கியத்தில் “டிராய்” என்ற பெயர் இருப்பதன் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த நகரத்தை பூமியின் அடியில் ஆய்வு செய்து கண்டுபிடித்தார்கள். இது ஒரு வகை என்றால், இன்னொரு வகையாக இந்தியாவில் ஹரப்பா-மொகஞ்சதாரோவை குறிப்பிடலாம். அங்கு கண்டறியப்பட்ட நகரத்திற்கு முன்பு என்ன பெயர் இருந்தது என்று யாருக்கும் தெரியாது. கண்டறியப்பட்ட இடத்தில் இருக்கும் கிராமங்களின் பெயர்தான் ஹரப்பா-மொகஞ்சதாரோ.
இப்போது கீழடியில் கண்டறியப்பட்டுள்ள நகரத்தின் பெயர் என்னவென்று தெரியாது, இப்போது இருக்கும் அந்த கிராமத்தின் பெயர் கீழடி என்பதால், அந்தப் பெயரிலேயே அழைக்கிறோம். ஆனால், சங்க கால இலக்கியங்களில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில், இது பழைய மதுரையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், சங்க இலக்கியத்தில் மதுரை என்பது திருப்புவனத்திற்கு நேர் மேற்கிலும், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கிலும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தற்போதைய மதுரையோ திருப்பரங்குன்றத்திற்கு வடகிழக்கிலும் திருப்புவனத்திற்கு வடமேற்கிலும் இருக்கிறது.
ஆனால், கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள நகரமானது சங்க இலக்கியத்தில் வருகிற நிலவியல் குறிப்பின் படி மிகத் துல்லியமான இடத்தில் அமைந்துள்ள நகரமாக இருக்கிறது. எனவே இதுவே சங்க கால மதுரையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு நகர நாகரிகம் என்று எதன் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்?
ஒரு நகரத்தினுடைய முழுமையான கட்டமைப்பு அங்கு கண்டறியப்பட்டுள்ளது. வரிசை வரிசையாக கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; அந்த தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளிச் செல்லவுமான அமைப்புகள்; அந்தக் கால்வாய் தடத்தை ஒட்டி சிறிதும் பெரிதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள்.
இவைகளெல்லாம் முதன்முறையாக கிடைத்துள்ளன. இவற்றை ஒப்பிடுவதற்கு தமிழ்நாட்டிலோ அல்லது தென்னிந்தியாவிலோ வேறு இடங்களே இல்லை.
மேலும் ஆப்கானிஸ்தானப் பகுதியைச் சேர்ந்த சூது பவளத்தினால் ஆன மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும் ,வட இந்திய பிராகிருத பெயர்கள் தாங்கிய எழுத்துக்களும் கிடைத்துள்ளன. பானை ஓடுகளில் இதுவரை 73 பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதேபோல, ஒரு தொழிலகம் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.
மொத்தத்தில், வணிகமும் பண்பாடும் ஊடறுத்துக் கிடக்கும் பெருநகரமாக இது இருந்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்ட சுமார் 5000க்கும் மேற்பட்ட பொருட்களை முழுமையாக பட்டியலிட முடியாது என்றாலும், வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் சிறந்த சான்றுகளை நம்மால் அங்கே காண முடிகிறது.

(எழுத்தாளர் சு.வெங்கடேசன் நேர்காணல்)

https://theekkathir.in

இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரமும் அனுபவப்பகிர்வும்

 – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-
பெண்களுக்கு என்ன என்ஜினியரிங் என கேள்வி எழுப்பிய காலத்தில் இலங்கையில் உருவான முதலாவது பெண் பொறியியிலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரம்.
அதி வணக்கத்திற்குரிய வல்பொல ராஹூல தேரர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையில் பௌத்த மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு ஆயத்தமானார்.
இந்த கட்டடம் அமைக்கப்படும் மண் மற்றும் கட்டட நிர்மான தொழில்நுட்பம் தொடர்பில், இளம் பெண் பொறியியலாளரிடம் இது குறித்து ஆலோசனை வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
‘நாயக்கத் தேரரே இந்த இடத்தில் மரத்திலான பயில்கள் கீழ் இறக்காமல் கட்டிட நிர்மானம் செய்யக் கூடாது. அது கட்டடத்தின் ஆயுட்காலத்தை பாதிக்கும்’ என தனக்கு கிடைக்கப் பெற்ற மண் மாதிரியை பரிசோனை செய்த பெண் பொறியியலாளர் கூறினார்.
‘அத்தனை பெரிய செலவினை செய்ய முடியாது. எனினும் இந்த கட்டடத்தை நிர்மானிக்க வேண்டும் அல்லவா’ என ராஹூல தேரர் கூறினார். இந்த சம்பாசனை நடைபெற்ற போது ராஹூல தேரரின் உறவினரான சித்தாலபே நிறுவனத்தின் தலைவர் விக்டர் ஹெட்டிகொடவும் பிரசன்னமாகியிருந்தார்.
‘எனினும் மற்றுமொரு முறை காணப்படுகின்றது எனினும் இந்த முறை இலங்கையில் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை’ என அந்த இளம் பெண் பொறியியலாளர், நாயக்க தேரரிடம் கூறினார்.
‘அம் சொல்லுங்கள் பார்க்கலாம் என்னவென்று’ என விக்டர் ஹெட்டிகொட இந்த சம்பாசனையில் இணைந்து கொண்டு கூறினார்.
‘ ஒட்டு மொத்த கட்டடத்தின் அத்திவாரத்தையும் ஒன்றாக நிர்மானிக்காது பகுதி அளவிலான அத்திவாரங்களின் ஊடாக நிர்மானிக்க முடியும். இவ்வாறு செய்தால் ஓர் இடத்தில் தாழிறங்கினாலும் ஒட்டு மொத்த கட்டடத்தையும் பாதிக்காது, புனர்நிர்மானப் பணிகளும் இலகுவில் செய்ய முடியும் என தனது புதிய தொழில்நுட்பத்தை பெண் பொறியியியலாளர் விபரித்தார்.
அதி வணக்கத்திற்குரிய ராஹூல தேரர் இந்த புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டடத்தை நிர்மானிக்க இணங்கியிருந்தார். சகதி மிக்க மண்ணில் கட்டிட அத்திவாரத்தை போட்டால் பாரியளவில் செலவாகும். எனினும் இளம் பெண் பொறியியலாளரின் யோசனைக்கு அமைய நிர்மானம் செய்ததனால் பாரியளவு செலவு குறைக்கப்பட்டது.
எனினும் அந்த பெண் பொறியியலாளர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இணைந்த போது பெண்களுக்கு என்ன என்ஜினியரிங் என கேள்வி எழுப்பியிருந்தனர்.
1960களில் அவர் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொள்ளும் போது பெண்கள் மருத்துவம், ஆசிரியம் மற்றும் தாதியர் ஆகிய உத்தியோகங்களிலேயே அதிகளவில் ஈடுபட்டனர்.
எனினும், அவர் இலங்கை பெண்களின் வரலாற்றில் புதிய ஓர் அத்தியாயத்தை ஆரம்பித்து முதல் பெண் பொறியியலாளராக உருவாகியிருந்தார். அவரது பெயர் பிரமிளா சிவபிரகாசிப்பிள்ளை சிவசேகரம் ஆவார்.
‘எனது தந்தை கொழும்பு துறைமுகத்தில் பொறியியலாளராக கடமையாற்றியிருந்தார். இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்த போது எனது குடும்பத்தினர் மீளவும் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவிட்டனர்’ இலங்கையின் முதல் பெண் பொறியியிலாளரான பிரமிளா தான் பிறக்கும் முன்னதாகவே பெற்றோர் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவிட்டதாகக் கூறுகின்றார்.
ரீ. சிவபிரகாசபிள்ளை, மனைவி லீலாவதி, பிள்ளைகளான பூமன் மற்றும் பிரபான் ஆகியோருடன் மனைவியின் சகோதரான மாவட்ட நீதவான் சீ.குமாரசுவாமியின் வீட்டில் தங்கியிருந்தனர். இந்த வீடு யாழ்ப்பாணம் கோட்டைக்கு உள்ளே அமைந்திருந்தது. பிரமிளா அங்கேதான் பிறக்கின்றார். 1943ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் திகதி பிரமிளா பிறந்தார்.
1950ம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படுகின்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்படும் ரீ.சிவபிரகாசபிள்ளை தனது மனைவி பிள்ளைகளுடன் கொழும்பில் மீளவும் குடியேறுகின்றார்.
‘தரம் ஒன்று முதல் எச்.எஸ்.சீ வரையில் நான் கொழும்பு மகளிர் கல்லூரியில் கல்வி கற்றேன்’. பாடசாலை காலத்தில் பிரமிளா மிகவும் சிறந்த மாணவியாக திகழ்ந்தார்.
‘விளையாட்டில்; எனக்கு அதிக நாட்டம் இருக்கவில்லை. எனினும் இசை மற்றும் நடனம் என்பனவற்றை நான் மூன்று வயதிலிருந்தே கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்’ என அவர் கூறுகின்றார்.
‘திருமதி ஞானபிரகாசத்திடம் நான் பரதம் மற்றும் மனிப்பூரி ஆகிய நடனங்களை கற்றுக்கொண்டேன். அந்த இடத்தில் திருமதி பலிஹக்காரவும் கற்பித்தார். திருமதி சிவபிரகாசம் சில நாட்களுக்கு இந்தியாவிற்கு சென்றிருந்தார். அவருக்கு பதிலீடாக கோவிந்த ராஜபிள்ளை என்பவர் நடனம் கற்றுக் கொடுத்தார். அவர் மதுவிற்கு அடிமையாகியிருந்த காரணத்தினால் ஒழுங்காக பாடம் எடுக்கவில்லை. இதனால் பரதம் கற்றுக் கொள்வதனை கைவிட நேரிட்டது. எனினும் பல்கலைக்கழகம் செல்லும் வரையில் மனிப்பூரி கற்றுக் கொண்டேன்.’ என இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றார்.
படிக்கும் போது ஆண்டு நிறைவு நிகழ்வின் போது சில நடனங்களை ஆடியிருந்தார். ஓர் தடவை நடைபெற்ற கூட்டு நடன நிகழ்வில் பிரமிளா கிருஸ்ணன் வேடமிட்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுக் கொண்டு சில காலங்களில் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பிரிவின் விரிவுரையாளராக கடமையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது.
1959ம் அண்டில் நான் எச்.எஸ்.சீ பரீட்சைக்கு தோற்றியிருந்தேன். அந்த ஆண்டில் கொழும்பு மகளிர் கல்லூரியில் இருந்து இரண்டு பேர் மட்டுமே பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெற்றுக்கொண்டனர். அந்த இருவரில் நானும் ஒருவராவேன். மற்றையவர் லெலானி சுமனதாச. அவர் வீட்டு நிர்மான கற்கை நெறியை பயின்றார். பிரமிளா இவ்வாறே பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக் கொண்டார்.
1960ம் ஆண்டில் பொறியியல் பீடத்தில் அவர் இணைந்து கொண்ட போது பல்வேறு எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன. அவரது பெற்றோர் கூட வேறும் ஒர் துறையை தெரிவு செய்யுமாறு கோரியிருந்தனர்.
‘பொறியியல் கற்கை நெறியில் இரும்பு வேலைகள், மரத் தளபாட பாஸ்மார், வெல்டிங், பொருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பெண் பிள்ளையொன்று எவ்வாறு இதனை செய்வது என சிலர் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.’
எனினும் தன்னை தைரியமிழக்கச் செய்யும் மக்களின் கருத்துக்கைள ஒரு சதத்திற்கேனும் பிரமிளா கண்டுகொள்ளவில்லை.
பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் பெண் பிள்ளையொன்று பொறியியல் பீடத்தில் இணைந்து கொள்வதில்லை எனக் கூறி அதனை விரும்பவில்லை என அவர் கூறுகின்றார்.
பிரமிளவிற்கு முன்னதாக பொறியியல் பீடத்தில் இணைந்து கொள்வதற்காக இரண்டு பெண்கள் விண்ணப்பம் செய்த போதிலும், இருவரிடமும் போதியளவு புள்ளிகள் கிடையாது எனக் கூறி பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்திருந்தது என பிரமிளா கூறுகின்றார்.
‘பெண் ஒருவர் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி தொழில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதன் பின்னர் தொழிலை விட்டு விடுவார்கள் என பல்கலைக்கழகம் நிர்வாகம் கூறியது. இதனால் ஆண்களுக்கான தொழில் வாய்ப்பு முடக்கப்படுகின்றது என கூறியது. பெண் ஒருவர் பொறியியலாளர் பதவியை பெற்றுக் கொள்வதனை ஆண்கள் எவ்வாறு எதிர்த்தார்கள் என்பதனை பிரமிளா விபரிக்கின்றார். எனினும் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி தொழில் பெற்றுக் கொhண்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பிள்ளைகள் பிறந்ததன் பின்னரும் 95 விதமானவர்கள் தொழில்களில் ஈடுபடுகின்றார்கள்’
அந்தக் காலத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொறிறியல் பீடம் தகரத்தினால் அமைக்கப்பட்ட கொட்டகை ஒன்றிலேயே காணப்பட்டது. இதன் காரணமாக பொறியியல் பீடம் அந்தக் காலத்தில் தகரப் பெகல்டீ என அழைக்கப்பட்டது.
பல்வேறு தடைகளைத் தாண்டி பிரமிளா 1960ம் ஆண்டில் தகரப் பீடத்தில் இணைந்து கொண்டார்.
‘அந்தக் காலத்தில் பகிடிவதை இவ்வளவு கடுமையாக இருக்கவில்லை. மிகவும் எளிமையான நகைச்சுவைகள் காணப்பட்டன, எனக்கு எவரும் பகிடி வதை செய்யவில்லை. எனினும் எல்லோருக்கும் கூக்குரல் எழுப்பப்பட்டது.’ என அந்தக் கால பகிடிவதை பற்றி பிளமிளா விபரிக்கின்றார்.
அந்தக் காலத்தில் மருத்துவம் பொறியியல் பீடங்களின் மாணவ மாணவியர் முதலாம் ஆண்டில் ஒரே வகுப்பிலேயே அப்போது கல்வி பயின்றிருந்தனர்.
எச்.எஸ்.சீயில் கற்பிக்கப்பட்ட பாடங்களே மீளவும் கற்பிக்கப்பட்டது. இதனால் முதலாம் ஆண்டு மிகவும் எளிமையாக கடந்து சென்றது. இரண்டாம் ஆண்டிலேயே மருத்துவ மற்றும் பொறிறியல் பீடங்கள் தனித்தனியாக பிரிகின்றன.
பல்கலைக்கழகம் சென்ற போது நான் சேலையே அணிந்தேன். அது எனது தந்தையின் சட்டமாக அமைந்ததிருந்தது. அது மட்டுமல்ல தலை வாரிச் செல்ல வேண்டும் என தந்தை உத்தரவிட்டிருந்தார். பொறியியல் பீடத்திற்கு சென்ற காரணத்தினால் இந்து கொள்கைகளை விட்டுக் கொடுக்க பிரமிளாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
பொறியியல் மாணவர்கள் அந்தக் காலத்தில் உருக்கு வேலைகள், மர வேலைகள், வேல்டிங் வேலைகள் போன்றவற்றை நடைமுறை ரீதியாக கற்றுக்கொண்டனர். யுவதி என்ற காரணத்தினால் அந்தப் பணிகளை மேற்கொள்வதிலிருந்து பிரமிளாவினால் அதனை விட்டு விலகியிருக்க முடியவில்லை. ஏனைய ஆண் மாணவர்களைப் போன்றே பாரிய இரும்பு தகடுகளை வெட்டி வீசினார். வேல்டிங் செய்தார்.
அனைத்து நடைமுறை பயிற்சிகளின் போதும் ஆண் மாணவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்யப்பட்டன, எனினும் எனக்கு அவ்வாறு உதவி வழங்கப்படவில்லை. மர வேலை குறித்து போதிக்கும் விரிவுரையாளர் மொரட்டுவ பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் தளபாட வேலைகள் செய்வார்கள் என கூறியிருந்தார். என தனியாகவே நடைமுறைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இந்த அடக்குமுறைகள் அவருக்கு நன்மையையே ஏற்படுத்தியிருந்தது. நடைமுறைப் பயிற்சிகளை உரிய முறையில் மேற்கொண்ட காரணத்தினால் பின்னொரு காலத்தில் பணியில் ஈடுபட்ட போது எந்தவொரு தொழிலாளியும் அவரை ஏமாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டது. அந்தக் காலத்தில் உருவாக்கிய மரத்திலான மின்குமிழ் தாங்கியொன்றும் இன்னமும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்ட பாடங்களை நினைவில் நிறுத்திக் கொள்ள இந்த மின்குமிழ் தாங்கியை பாதுகாப்பாக வைத்திருப்பதாக பிரமிளா தெரிவித்துள்ளார்.
1964ம் ஆண்டில் இலங்கையின் முதல் பெண் பொறியியலாளராக பிரமிளா சிவபிரகாசபிள்ளை பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
‘நான்தான் முதல் பெண் பொறியியலாளராவேன், எனக்கு பின்னர் 1966ம் ஆண்டில் சுசி முனசிங்க (சுனில் முனசிங்கவின் மனைவி) மின் பொறிறியல் பயிற்சி நெறியை தெரிவு செய்தார். எனக்கு பத்து ஆண்டுகளின் பின்னர் அதாவது 1970ம் அண்டில் இந்திரா அருள்பிரகாசம் மெக்கானிக்கல் பொறியியல் பட்ட கற்கை நெறியை தெரிந்திருந்தார். இந்திரா சமரசேகர தற்போது கனடாவின் அல்பர்ட்டாவின் பல்கலைக்கழகமொன்றின் துணை வேந்தராக கடமையாற்றி வருகின்றார் என பிரமிளா கடந்த காலத்தையும் தற்காலத்தையும் ஒப்பீடு செய்துள்ளார்.
பட்டக் கற்கை நெறியை பூர்த்தி செய்ததன் பின்னர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பதவியொன்று வழங்கப்டப்டது. இந்தக் காலத்தில் கொழும்பில் காணப்பட்ட பொறியியல் பீடம் பேராதனைக்கு மாற்றப்பட்டது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் அநேகமான இயந்திரங்களை நிறுவுவதற்கு நாம் மிகுந்த சிரமப்பட்டோம்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக கடமையாற்றிய பிரமிளா சிறிது காலத்தின் பின்னர் அரசாங்கத் திணைக்களமொன்றில் பொறியியலாளர் பதவி வழங்கப்பட்டது.
எனினும், சில மாதங்களின் பின்னர் இங்கிலாந்தில் பட்டப்பின் கற்கை நெறி ஒன்றை கற்க அரசாங்கம் புலமைப் பரிசில் வழங்கியருந்தது. இதனால் எனக்கு களத்தில் பணிகள் வழங்கப்படவில்லை. சில மாதங்கள் காரியாலயப் பணிகளை மேற்கொண்டிருந்தேன்.
1965ம் ஆண்டு பிரமிளா பட்ட பின் கற்கை நெறி ஒன்றி;ற்காக பிரித்தானியா சென்றார். அவருடன் ஹர்சா சிறிசேன என்ற மற்றுமொரு யுவதியும் பட்ட பின் கற்கை நெறிக்காக பிரிட்டன் சென்றிருந்தார். ஹர்சா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், பிரமிளா ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்கை நெறிகளை ஆரம்பித்தனர்.
‘நான் சமர்வில் கல்லூரிக்கு சென்றிருந்தேன் அங்கு பெண்கள் மட்டுமெ கற்றுக்கொண்டனர்.’ இந்தக் காலத்தில் சுனேத்திரா பண்டாரநாயக்கவும் கல்லூரியில் பட்டக் கற்கை நெறி ஒன்றை கற்று வந்தார்.’
பிரமிளா சிவபிரகாசபிள்ளை, சிவசேகரம் என்ற பெயர் மாற்றம் பெறும் நிகழ்வு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றக் காலத்தில் இடம்பெற்றது. 1968ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி பிரமிளா திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.
பிரமிளாவின் கணவர் சிவானந்தம் சிவசேகரம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி பயின்றுவந்தார். கல்வி கற்கும் காலத்தில் பிரமிளா குறித்த ஓர் ஈர்ப்பு சிவசேகரத்திற்கு ஏற்பட்டது. பேராதனை பல்கலைக்கழகத்தில் வைத்து தனது காதலை வெளிப்படுத்தினார். இந்த சந்தர்ப்பத்தில் இருவரும் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக கடமையாற்றியிருந்தனர்.
‘என்னை பிடிக்குமா என நான் பிரமிளாவிடம் கேட்டேன்’ என பேராசிரியர் சிவசேகரம் தெரிவித்தார்.
என்ன சொன்னார் பிரமிளா?முடியாது என்றார் பிரமிளா என்றார் சிவசேகரகம். ‘இல்லை அப்பாவிடம் கேட்குமாறு நான் கூறினேன்’ என 72 வயதான பிரமிளா வெட்கத்துடன் தெரிவித்தார்.
அவர்கள் இருவரினதும் காதலின் பிரதிபலனை தற்போது பிரித்தானியாவில் காண முடிகின்றது. அவர்களது ஒரே மகன் மணிமாறன் சிவசேகரம் ஆவார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான மணிமாறன் ஐக்கிய இராச்சியத்தில் ஓர் நிர்வாக அதிகாரியாக கடமையாற்றுகின்றார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் பொறியியாளர் மாநாடு ஒன்றில் உரையாற்ற பிரமிளாவிற்கு சந்தர்ப்பம் கிட்டியது. எதிர்வரும் நூற்றாண்டில் பெண் பொறியியலாளர்களின் பணி என்ற தொனிப் பொருளில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் ஓர் அமர்வின் தலைவியாகவும் பிரமிளா கடயைமாற்றியிருந்தார்.
பட்ட பின் கற்கை நெறியை பூர்த்தி செய்த பிரமிளா மீளவும் இலங்கை அரச சேவையில் இணைந்து கொள்கின்றார். 1971ம் ஆண்டு அரச கட்டிடப் பொருள் கூட்டுத்தாபனத்தின் பொறியியலாளராக நியமனம் பெற்றுக்கொண்டார். இந்த கூட்டுத்தாபனத்தின் முதல் பொறியியலாளராக கடமையாற்றினார்.
பெண்களினால் முடியாது என கூறப்பட்ட தொழிலை நான் திறம்பட செய்தேன். பணியாற்றும் போதே நான் சில விடயங்களை பாஸ்மாரிடம் கற்றுக்கொண்டேன். எனது காலத்தில் மாத்தளை வைத்தியசாலைக்கு ஒர் களஞ்சியசாலை அமைக்கப்பட்டது. பல மாடிகளைக் கொண்ட ரெலிகொம் நிறுவனத்தின் பல கட்டடங்கள் நிர்மானிக்கப்பட்டன.
முதல் நியமனமாக கட்டட திணைக்களத்தின் கண்டி காரியாலயத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை பிரமிளா பகிர்ந்து கொள்கின்றார். இந்த அனுபவம் மறக்க முடியாதது என்கின்றார்.
‘ஒரு நாள் கண்டி அரசாங்க அதிபர் என்னை அழைத்து தமது அலுவலக மலசல கூடங்கள் புனரமைக்கப்பட உள்ளதாகவும் அதனை சோதனையிடுமாறும் கோரியிருந்தார். இந்த விடயம் குறித்து மாவட்ட பிரதம பொறியியலாளருக்கு அறிவித்தேன். பீ.எச்டி பட்டம் பெற்ற ஒருவர் அவ்வாறு பணியாற்ற வேண்டியதில்லை என பிரதம பொறியியலாளர் கூறினார்.’ பெண் என்ற காரணத்தினால் எனக்கு இழைக்கப்பட்ட ஓர் அநீதியாகவே நான் இதனைக் கருதுகின்றேன்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச உள்ளுராட்சி மன்ற மற்றும் வீடமைப்பு அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் நான் கொழும்பு கட்டட திணைக்களத்தின் பொறியியலாளராக கடமையாற்றியிருந்தேன்.
‘பிரேமதாச அவர்கள் ஓர் நாள், தான் கல்வி கற்ற வாழைத்தோட்ட பாடசாலையை இரண்டு மாடிகளாக தரம் உயர்த்துமாறு’ கோரியிருந்தார்.
இந்தப் பாடசாலை அமைந்துள்ள மண்ணை பரிசோதனை செய்த போது நிலக்கீழ் சேற்று மண் காணப்பட்டமை தெரியவந்தது. அவ்வாறான ஓர் மண்ணில் மாடிகளைக் கொண்ட கட்டடம் அமைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது.
‘பிரேமதாசவிடம் சென்று கட்டடம் அமைக்க முடியாது என கூறுவதற்கு பிரதான பொறியியலாளர்கள் அஞ்சினார்கள். பெண் ஆகிய என்னிடம் அந்தப் பணியை ஒப்படைத்தனர்.’
பிரமிளா, பிரேமதாசவிடம் சென்று நிலைமையை விளக்கினார். இந்த விளக்கத்தை பிரேமதாச ஏற்றுக்கொண்டார். ஆண் பொறியியலாளர்கள் அஞ்சிய பிரச்சினைக்கு பிரமிளா இலகுவில் தீர்வு வழங்கினார்.
அவர் கட்டட திணைக்களத்தின் பிரதம பொறியியலாளராக கடமையாற்றிய காலத்தில் இதேவிதமான ஓர் அனுபவத்தை எதிர்நோக்க நேரிட்டது.
பாரிய கட்டடம் அமைக்கும் போது இரவு வேளையில் அத்திவாரத்தை சென்று பார்வையிட வேண்டும், அந்தப் பணி ஓர் கனிஸ்ட பொறியியலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்தப் பணியை மேற்கொள்கின்றீர்களாக என பிரமிளா குறித்த கனிஸ்ட பொறியியலாளரிடம் கேட்டார்.
இது உங்கள் பணமில்லையே என கனிஸ்ட பொறியியலாளர் பதிலளித்திருந்தார். அப்போது நான் கூறினேன் இது மக்களின் பணமாகும், எனவே அது எனதும் பணமாகும் எனக் கூறினேன் என பிரமிளா தெரிவித்துள்ளார்.பெண் என்ற காரணத்தினால் இந்த நிலையை எதிர்நோக்க நேரிட்டது என அவர் கருதுகின்றார்.
1978ம் ஆண்டில் கட்டடத் திணைக்களத்தின் பிரதம கட்டுமான பொறியியலாளராக நியமிக்கப்பட்டார். பெண் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
தேசிய நூலகம், காவல்துறை தலைமையகம், மாளிகாவத்தை அரச கட்டடங்கள் சில என்பன பிரமிளாவின் தலைiமையில் நிர்மானிக்கப்பட்டவையாகும்.
கொரிய நிறுவனம் செத்சிரியபா கட்டடத்தை அமைத்த போதும், ஜப்பான் இசுறுபாயவை அமைத்த போதும் அவற்றை கண்காணித்த பிரதம பொறியியலாளராக பிரமிளா செயற்பட்டிருந்தார்.
இசுறுபாய நிர்மானிக்கப்பட்ட போது அந்த மண்ணை தெற்காசியாவில் புகழ்பூத்த திரு.துரைராஜா பரிசோதனையிட்டிருந்தார். இந்தப் பகுதியில் கபுக் மண் காணப்படுவதாகவும் இதனால் உறுதியான கட்டடத்தை அமைக்க முடியும் எனவும் அவர் கூறியிருந்தார், இந்த விடயம் கொரிய பொறியியலாளர்களுக்கு புரியவில்லை என பிரமிளா கூறியுள்ளார்.
1976ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரையில் இலங்கைப் பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்படும் தி இன்ஜினியர் என்ற சஞ்சிகையின் ஆசிரியராக கடமையாற்றியிருந்தார். 1906 முதல் 2006ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியை மையமாகக் கொண்டு 2006ம் ஆண்டில் இலங்கை பெறியியலாளர் வரலாறு என்ற பெறுமதி மிக்க நூல் ஒன்றை உருவாக்கியிருந்தார். 1997ம் ஆண்டு முதல் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றிய பிரமிளா 2007ம் ஆண்டு ஓய்வு பெற்றுக்கொண்டார்.
இலங்கையின் சிலுமின பத்திரிகையில் வந்த இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரமும் அனுபவப்பகிர்வும் என்ற இந்த நேர்காணலை தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் வழங்குகிறது. இதனை மீள் பதிவு செய்பவர்கள் மொழிபெயர்ப்பின் தமிழ் மூலமான குளோபல் தமிழ்ச் செய்திகளை குறிப்பிட்டு மீள்பதிவு செய்யலாம்.

Thursday, April 27, 2017

Your perception of reality may really be a hallucination






























Philosophy and Predictive Processing is a new online research compendium in which neuroscientists, psychiatrists, philosophers-of-mind, and other big thinkers explore the theory that we're always hallucinating. The authors argue that our brains aren't just processing information from our senses so we can perceive reality but also constantly predicting what we'll encounter, presenting that to us as what's actually happening and then making error connections. From New Scientist:
...Predictive processing argues that perception, action and cognition are the outcomes of computations in the brain involving both bottom-up and top-down processing – in which prior knowledge about the world and our own cognitive and emotional state influence perception.
In a nutshell, the brain builds models of the environment and the body, which it uses to make hypotheses about the source of sensations. The hypothesis that is deemed most likely becomes a perception of external reality. Of course, the prediction could be accurate or awry, and it is the brain’s job to correct for any errors – after making a mistake, it can modify its models to account better for similar situations in the future.
But some models cannot be changed willy-nilly, for example, those of our internal organs. Our body needs to remain in a narrow temperature range around 37°C, so predictive processing achieves such control by predicting that the sensations on our skin should be in line with normal body temperature. When the sensations deviate, the brain doesn’t change its internal model but rather forces us to move towards warmth or cold, so that the predictions fall in line with the required physiological state.
more: http://boingboing.net/…/26/your-perception-of-reality-may.h…