Search This Blog

Tuesday, May 23, 2017

ஆதி விருட்சம்


அது
உடலுக்கும்
பருவத்திற்கும் நடுவே
தீர்க்க முடியாத புதிரென
திங்கள்தோறும்
முகிழ்கிறது

‘தாங்கவே முடியவில்லை’
என்கிறாள் மகள்

அம்மாவுக்குத் தெரியும்
அது எப்போதும் அப்படித்தான்
மடல் பூத்த தாழையின்
மணம் போலும்
மடந்தையர் எவரும்
கடந்துவரும் இரகசியமெனவும்

பேதைமை தொலைந்து
பெதும்பையென திரளும் பொழுதில்
ஒவ்வொரு சிறுபெண்ணையும்
சேர்த்தணைக்கும் இவ்வலி
வழிவழியாகத் தொடர்ந்திருக்கிறது

துளிர்த்து இலைவிட்டு கிளைப்பரப்பியிருக்கும்
அடிபெருத்த மரத்தின்
திண்மைக்குள்
வளையமிட்டிருக்கும்
அநாதியான காலமென
அந்த நித்திய வேதனை. 


 Sakthi Jothi

இதய ரேகைகள் ஒருவரது காதல் வாழ்க்கைக் குறிக்கும்

இரு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது, கையில் உள்ள இதய ரேகைகளைப் பாருங்கள். இதய ரேகைகள் ஒரே அளவில் இருக்கிறதா இல்லையா என்றும் பாருங்கள். அப்போது இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இம்மாதிரியான இதய ரேகைகள் அனைவருக்குமே அமையாது. இதய ரேகை என்றதும் அது நம் இதய ஆரோக்கியத்தைப் பற்றி எதுவும் கூறாது. உண்மையில் இது ஒரு காதல் ரேகை. இது ஒருவரது காதல் வாழ்க்கைக் குறிக்கும்.
இதய ரேகை கைரேகை ஜோதிடர்கள் கையில் உள்ள இந்த இதய ரேகையின் அளவு மற்றும் அமைப்பைக் கொண்டு தான், ஒருவரது காதல் அல்லது திருமண வாழ்க்கை குறித்து கூறுகின்றனர். எனவே உங்களது வலது மற்றும் இடது கைகளில் உள்ள இதய ரேகையை சோதித்துப் பாருங்கள்.
இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால்… இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால்..
வாழ்க்கைத் துணை இம்மாதிரியான இதய ரேகைகளைக் கொண்டவர்களுக்கு துணையாக வருபவர்கள், அவர்கள் மீது கொள்ளை பிரியம் வைத்திருப்பார்கள். இந்த மாதிரியான இதய ரேகை கொண்டவர்களுக்கு அமையும் துணை, அவர்களை நன்கு புரிந்தவர்களாகவும், அனுசரித்து நடந்து கொள்பவர்களாகவும் இருப்பர்.
இடது கையை விட வலது கையின் இதய ரேகை உயரமாக இருந்தால்… இந்த மாதிரியான இதய ரேகையைக் கொண்டவர்கள், நல்ல காதலராக இருப்பர். காதலுக்காக எதையும் செய்யக்கூடியவர்களாக இருப்பர். மற்றவர்களைப் பற்றி எதையும் யோசிக்காமல், தனக்கு தோன்றுவதை மட்டும் செய்வார்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்காமல், தன் இதயம் சொல்வதைக் கேட்டு நடப்பார்கள். மேலும் இவர்கள் சொந்த வரையறையில் வாழ்க்கையை வாழ விரும்புவார்கள் மற்றும் மற்றவர்களது கருத்துக்களின் மீது அக்கறை கொள்ளமாட்டார்கள்.
வலது கையை விட இடது கையின் இதய ரேகை உயரமாக இருந்தால்… இந்த மாதிரியான இதய ரேகையைக் கொண்டவர்கள், மிகவும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள் மற்றும் ஆக்கிரோஷ குணம் கொண்டவர்களாக இருப்பர். சவால்களை விரும்புவார்கள்.
அதுமட்டுமின்றி இந்த வகையினர் தனக்கு ஒரு துணை வந்தால் தான் தன் வாழ்க்கை முழுமை அடையும் என்றெல்லாம் உணரமாட்டார்கள். மேலும் இவ்வகையினர் எதற்கும் அஞ்சமாட்டார்கள். காதலுக்காக யார் பின்னாலும் செல்லமாட்டார்கள். ஆனால் இத்தகையவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் கவர்ச்சிகரமாக இருப்பார்கள்.

Saturday, May 20, 2017

ஒருவரது பிறந்த திகதியை கூட்டினால், எண் 7 வந்தால், அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும்



ஜோதிடத்தில் கைரேகை, கிளி, நாடி என பல வகைகள் இருக்கின்றன. இந்த ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விஷமாக ஜோதிட பலன்கள் கூறுவார்கள். இவற்றுள் ஒன்று தான் எண் கணித முறை. இதில், ஒவ்வொரு எண்ணை வைத்தும் ஒருவரது வாழ்க்கை எப்படி அமையும் என கூறப்படும்.

அந்த வகையில் ஒருவரது பிறந்த திகதியை கூட்டினால், எண் 7 வந்தால், அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என இங்கு காணலாம்...

கிரக அதிபதி!

7ம் எண்ணின் அதிபதியாக இருப்பது கேது பகவான். கேது பகவானை ஞானகாரகன் என்றும் கூறுவர்.

கூட்டு எண் 7!

உங்கள் பிறந்த திகதி மாதம், வருடம் மூன்றையும் கூட்டி, அது 7 என்று வந்தால் அவர்களுக்கு பொதுவாக திருமண தடங்கல்களும், தாமதமும் ஏற்படுகின்றன என கூறப்படுகிறது.

கணவன் - மனைவி!

இவர்களுக்கு திருமணம் நடந்தாலும் கூட, கணவன் - மனைவி உறவில் ஏதாவது காரணத்தால் சண்டை, பிரச்சனைகள் எழும்.

திருமண நாளும்!

பிறந்த திகதி மட்டுமின்றி, திருமண நாளின் கூட்டு எண் 7 என வருபவர்களுக்கும் இந்த தாக்கம் இருக்கிறது என ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மாற்று என்ன?

திருமண திகதியை நாம் கூட்டு எண் 7 வராமல் தடுக்கலாம். ஆனால், பிறந்த தேதி கூட்டு எண் 7 வருவதை நாம் தடுக்க முடியாது.

தீர்வு? எனவே, பிறந்த திகதி கூட்டு எண் 7 வருபவர்கள், 1,2,5,6 என்ற தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால் இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என கூறுகின்றனர்.

கவனம்!

மேலும், இவ்வாறு திருமணம் செய்பவர்கள், அவர்களது திருமண நாளும் 1, 2, 6 திகதிகளாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

8 வேண்டாம்!

முக்கியமாக, பிறந்த திகதி கூட்டு 7 வருபவர்கள், 8-ம் தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்ள கூடாதாம். 8 தேதியிலும் திருமணம் செய்துக் கொள்ள கூடாதாம்.
- See more at: http://www.manithan.com