Search This Blog

Friday, October 30, 2015

SCAPULAR BLADE FRACTURE

The shoulder blade (scapula) is a triangular-shaped bone that is protected by a complex system of surrounding muscles. Scapula fractures represent less than 1% of all broken bones and many of them can be treated without surgery.
High-energy, blunt trauma injuries, such as those experienced in a motorcycle or motor vehicle collision or falling from a significant height, can cause a scapula fracture. Other major injuries often accompany scapular fractures, such as fractures in the shoulder, collarbone and ribs, or damage to the head, lungs, or spinal cord.
One or more parts of the scapula may be fractured.
  • Scapular body (50% to 60% of patients)
  • Scapular neck (25% of patients)
  • Glenoid
  • Acromion
  • Coracoid
Symptoms
The most common symptoms of a scapula fracture include:
  • Extreme pain when you move the arm
  • Swelling around the back of the shoulder
  • Scrapes around the affected area.

Bhavishya Purana - Emergence of Mughal Empire, Akbar the Great and celebrities of the Era


Suta Maha Muni continued to narrate to the Congregation of Munis at Naimisharanya as Sumantu conveyed prophesies for the distant future with suprising accuracy!
As Hindu Dharma was once again got revitalised with various ‘Acharyas’ and their disciples like Shankaracharya, Ramanujacharya, Madhavacharya, and Chaitanya Maha Prabhu to withstand the forces of several alien influences in Bharata the seat of Vedas and Shastras, Devas got an upper hand and King Bali of Daityas called Roshana and instructed him to go to Dehali (Delhi) in Bharat as the son of Timiraling (Taimurlang) with the name of Sarush and commence the task of destroying Vedamarga and its followers gradually.
Sarush became the King of Dehali with the help of the Evil Forces backed up by Daityas and ruled there for five years. Babar was son of Sarush and strengthened the hold of the peace-loving and religious Hindus for twenty years either at Samarkhand or at Bharat as the Moghul dynasty came to reality. Babar’s son ‘Homaayu’ (Humayun) who became the next King took a cruel stand against Hindus and created havoc among them. But another Mleccha King in the neighbourhood called ‘Shekshak’ (Shersha) defeated Humayun and ruled Dehali for five years.
The fugitive Humayun and his brother Mukarram regrouped their army again and defeated Shersha and came back to power at Dehali once again. In this see-saw of power stuggle between one Mleccha Humayun and another Mlleccha King Shersha, there was damage of several deities of Hindu Gods and a descendant disciple of Shankaracharya called a Brahmana Mukund could not bear the scene of the destruction of Idols and immolated in a Fire Pit and twenty of his stadents too followed suit! Humayun who resumed his rule in Dehali Kingdom heard a celestial Voice that soon Humayun would be blessed with a Great Son of Mughal Empire called Akbar, literally meaning ‘Ak’for ‘Akasmat or ‘per chance’ and ‘Var’ or ‘Vardaan’ for a boon; the Vioce said ‘Your son will be an exemplary, brave and fortunate Emperor who shaal not follow the Mleccha or Paishaachika route in his Enlightened Administration; the Vioce further said that Mukund Brahmana would be Akbar and his twenty disciples who immolated in Fire Pits out of frustration and agony since Mughul Kings destroyed deities of Devas would reappear in the very Mughal dynasty!
A completely transformed Humayun was overjoyed the the Celestial Announcement and ordered charities all over the Kingdom. The beloved disciples of Mukund viz. Keshava, Madhava, Madhu, Devaapi, Somapa, Sura and Madana illuminated the Court as the Celebrities; Keshava as Gaansen or Tansen, Madhava as ‘Vaijavak’ or Baijbavara, Madhu as Haridasagayak, Devapi as Birbal who had the Mastery of Wit since he had the bounty of Devi Sarasvati, Somapa as Raja Mansingh, Sura as Bilva Mangala as Akbar’s close companion, and Madana as Chandal who was a Nartak (dancer) and Kreeda Visharada or Expert in Games.
While these Icons stayed in the Court of Akbar, there were other famous personalities of Akbar’s time: Shridhar as Tulasi Sharma or Tulasidas the exponent of Puranas who in previous birth was a Vaishnava Poet; Sripati in earlier birth as a follower of Madhvacharya appeared as the blind Poet Suradas famed for his memorable works of ‘Krishna Leelas’; Shambhu in the erstwhile birth came into distinction as Hari Priya as an authority of Vishnu Bhakti; Varenya in his previous birth became Agrabhuk or Agradas as renowned ‘Sant’(Saint); Madhuvrati in the earlier birth now famous as Keelak a Gyani, Poet reputed for Prosody and the Writer of Ramaleelas; Vimal of previous birth now known as Divakar, a Writer and Singer of Devi Sita’s Life-Story; Devavaan became Keshava the Writer of ‘Ramajyotsna’; Soma in the previous birth came again as Vyasadas who authored a Grandha titled ‘Raha Kreeda’; Vardhan became Charanadas who not only scripted ‘Gyana maala Grandha’ and more so as a Technician of Rodasi Marg or the Skyward route; Vartak of earlier life as Ratnabhanu who was Jaimini Bhasha (Language) exponent and follower of Ropana religion; Ruchi of past life as disciple of Madhvacharya wrote ‘Gaanamayi Leelas’in praise of Gods; Mandhata now reappeared as Bhupati who translated Maha Bhagavata in Hindi Language; Maankaar in earlier birth became Meera the daughter of Raja as an outstanding singer of Bhajans in praise of Lord Krishna as a keen follower of Madhvacharya.
Emporer Akbar established a new Religion Din Ilahi which underlined the essence of all Faiths including Hindu, Islam, Bouddha and Christianity. He reigned as a Supreme Controller of the Empire for fifty solid years known for values of virtue, justice, humanism and inclusiveness. His son Saloma (Saleem) or Jahangir followed the great example of Akbar and Khurdak (Kusro Shaajahaan) ruled for ten years [who built the immortal Taj Mahal].
There was a power struggle among four brothers and the middle son Navarang (Aourangajeb) succceded the throne; in his earlier birth he was a Daithya called Andhak. In his time, the Peace and Comfort among the masses disappeared and the autocrat King resorted to extensive damages to temples, Vigrahas (Idols), Salagranas, Shiva Lingas, and Ashrams. Under the oppressive rule of this Cruel and anti-Hindu tyrant, the Empire had to carry on under him for thrity nine long years.

Stairs Of Nature










GOD GANESH


திருபுவனம் திருக்கோயில் ...


Wednesday, October 28, 2015

Meat Is Linked to Higher Cancer Risk, W.H.O. Report Finds


Sausages, ham and other processed meats cause bowel cancer, and red meat "probably" does too, a UN agency warned.
A review of 800 studies from around the world found "sufficient evidence in humans that the consumption of processed meat causes colorectal cancer," said the International Agency for Research on Cancer (IARC).

visit the link to read more:
http://sciencemission.com/site/index.php…

Evergreen Valparai


The evolution of human faces in the last 6 million years


Tuesday, October 27, 2015

குளத்தங்கரை அரசமரம்-வ.வே.சு. ஐயர் தமிழில் முதல் சிறுகதை


வ.வே.சு. ஐயர் 
பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என்மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன் ! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால் நான் சொல்லுகிறதிலே எள்ளளவேணும் பொய்யில்லை. நான் பழைய நாளத்தது மரம்- பொய் சொல்லக் கத்தவில்லை. இப்போ தொண்ணூறு நூ று வருஷமிருக்கும். உங்கள் கொள்ளு பாட்டிகளின் பாட்டிகளெல்லாம் நம்ம குளத்துங்கரைக்குத்தான் குடமுங் கையுமாக வருவார்கள். சில பேர் குழந்தைகளையுங் கூட கூட்டி வருவார்கள். பட்டு பட்டாயிருக்கும் குழந்தைகள். அதுகளை கரையில் விட்டுவிட்டுப் புடவைகளை அழுக்குப் போகத் தோய்த்து, மஞ்சள் பூசிக்கொண்டு அழகாக ஸ்நானம் பண்ணுவார்கள். குழந்தைகளெல்லாம் ராஜகோபாலன் போலத் தவுந்துகொண்டு மல்லிகைச் செடியண்டே போய் மல்லிகை மொக்குகளை பார்த்து சிரிக்கும். அந்தக் காலத்திலே ஒரு பவள மல்லிகைச் செடி, முத்து முத்தாய்ப் பூப் பூத்துக் கொண்டு அந்த ஓரத்திலிருந்தது.
lollipop-tree-two-pamela-cisneros
குளத்தங்கரையெல்லாம் கம் என்று மணம் வீசும். இப்பொழுது ஆதரிப்பாரில்லாமல் பட்டுப்போய்விட்டது. கொஞ்சம் பெரிய குழந்தைகள் அதன்அதன் புஷ்பங்களை பொறுக்கி ஆசையுடன் மோந்து பார்க்கும்...ஆ! அந்த நாளையெல்லாம் நினைத்தால் ஆசையாயிருக்கிறது! ஆனால் இப்போது நான் உங்களுக்கு அந்தக் காலத்துக் கதை ஒன்றும் சொல்லுவதாக இல்லை. மனசு சந்தோஷமாயிருக்கும்போது சொல்லுகிறேன். ஏழெட்டு நாளாய் எனக்கு ருக்மிணியின் ஞாபகமாகவே இருக்கிறது. பதினஞ்சு வருஷமாச்சு. ஆனால் எனக்கு நேற்று போலிருக்கிறது. உங்களில் ஒருவருக்கும் ருக்மிணியைத் தெரியாது. பார்த்தால் சுவர்ண விக்கிரகம் போலிருப்பாள் குழந்தை. அவளுடைய சிரிச்ச முகத்தை நினைச்சால் அவளே எதிரில் வந்து நிற்பது போலிருக்கிறது எனக்கு. அவள் நெத்தியின் அழகை இன்னைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். நல்ல உயரமாக இருப்பாள். அவள் கையும் காலும் தாமரைத் தண்டுகள் மாதிரி நீளமாயிருக்கும். அவள் சரீரமோ மல்லிகைப் புஷ்பம் போல் மிருதுவாக இருக்கும். ஆனால் அவள் அழகெல்லாம் கண்ணிலேதான். என்ன விசாலம்! என்ன தெளிவு! என்ன அறிவு! களங்கமற்ற நீல ஆகாசம் ஞாபகத்துக்கு வரும். அவள் கண்களை பார்த்ததும் நீலோற்பலம் நிறைஞ்ச நிர்மலமான நீரோடையைப் போலிருக்கும். பார்வையிலுந்தான் எத்தனை அன்பு! எத்தனை பரிவு! ஸோமவார அமாவசைகளில் பரமாத்மாவைப் பூஷிக்கிறதற்காக என்னைப் பிரதஜிணம் செய்வாள். அப்போது அவள் என்னைப் பார்க்கும் பார்வையிலிருக்கும் அன்பை என்னவென்று சொல்லுவேன்! என்னுடைய காய்ந்துபோன கப்புகளுங்கூட அவளுடைய பிரேமையான பார்வை பட்டதும் துளிர்த்துவிடுமே! ஐயோ, என் ருக்மிணித் தங்கமே! எப்போ காண்பேன் இனிமேல் உன்னைப் போலக் குழந்தைகள்? அவள் குழந்தைப் பருவம் முதல், அவளுடைய கடைசி நாள் வரையில், இங்கே வராத நாளே கிடையாது. அஞ்சாறு வயஸின் போதெல்லாம் ஸதா ஸர்வ காலமும் இங்கேயேதான் விளையாடிக்கொண்டிருப்பாள். அவளைப் பார்த்ததும் வாரியெடுத்து முத்தங் கொடுக்க வேணுமென்று நினையாதவர் இல்லை. எத்தனை அவசரமான காரியமிருந்தாலும் சரி, நம்ம வேணுகோபால் சாஸ்திரி இருந்தாரே, அவர் காலமே ஸ்நாநஞ் செய்துவிட்டு, குழந்தை கை நிறைய மல்லிகைப் பூப்பறித்துக் கொடுத்துவிட்டுத்தான் போவார். நம்ர் மாடு கன்றுகள் கூட, எத்தனை முரடாக இருந்தாலும் சரி, அவளைக்கண்டதும் உடனே முரட்டுத்தனத்தையெல்லாம் விட்டுவிட்டு, அவளுடைய சிறிய கைகளால் தடவிக் கொடுக்க வேணுமென்று அவள் பக்கத்திலேயே போய்க் காத்துக் கொண்டிருக்கும். குழந்தைகள் என்றால் எனக்கு எப்பொழுதுமே ஆசை. அனால் அவள் வந்துவிட்டால் போதும், மெய் மறந்து போய்விடுவேன். அவள் பேரில் துளி வெயில் படக்கூடாது. அவள் கொஞ்சம் ஒதுங்கியிருந்தால்கூட என் கைகளை நீட்டி அவளுக்கு குடை பிடிப்பேன். என்னுடைய நாதனான சூரியனுடைய முகத்தை காலமே ஆசை பயபக்தியோடு தரிசனம் செய்தானதும் எனக்குக் குழந்தை ருக்மிணியின் ஞாபகம் வந்துவிடும். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டேயிருப்பேன். அவள் வந்ததும் எனக்குள் அடங்காத ஆனந்தம் பிறந்துவிடும். குழந்தைகளுக்குள் பேதம் பாராட்டக்கூடாதுதான்.  ஆனால் மற்ற யார் வந்தாலும் எனக்கு அவள் வருகிறது போல் இருப்பதில்லை. நான் மாத்திரமா? ஊரில் உள்ள மற்ற குழந்தைகள்கூட அவள் வந்த பிறகுதான் பூரணமான ஆனந்தத்துடன் விளையாடும். அவள்தான் அவர்களுக்குள்ளே ராணி. அத்தனை காந்த சக்தியிலிருந்து அவளிடத்தில். அப்போதெல்லாம் அவள் அப்பா காமேசுவரையர் நல்ல ஸ்திதியில் இருக்கிறார். குழந்தை பேரில் அவருக்கு மிகுந்த பிரேமை. அவளுக்குச் செய்வதற்கு என்றால் அவருக்கு சலிக்கிறதே இல்லை. கடை வீதியில் பட்டுத்தினுசுகள் புதுசாக வந்திருப்பது ஏதாவது பார்த்தால் நம்ம ருக்மிணி அணிந்துகொண்டால் அழகாக இருக்கும்' என்று உடனே வாங்கி வந்துவிடுவார். முதல் தரமான வைரமும் சிவப்பும் இழைத்து அவளுக்கு நிறைய நகைகள் செய்திருந்தார். அவளுக்குப் பத்து வயசாயிருந்தபோது கோலாட்ட ஜோத்ரைக்கு என்று ஒரு பாவாடையும் தாவணியும் வாங்கியிருந்தார். அந்த நிலாவுக்கும் அவளுடைய அலங்காரத்திற்கும் அவளுடைய அழகுக்கும் என்ன ஏர்வை! கண்கொள்ளா காட்சியாயிருந்தது எனக்கு! அவள் குரலைப்பற்றி உங்களுக்குச் சொல்ல மறந்து போய்விட்டேன். குயில் என்னத்துக்கு ஆச்சு! தங்கக் கம்பிபோல் இழையும் அவள் சாரீரம். இன்னைக்கெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாலும் சலிக்காது. ஜோத்ராக்களின் போதுதான் அவள் பாட்டை நான் கேட்டிருக்கிறேன். இப்போது நினைச்சாலுங்கூட அவளுடைய குரல் அதே இனிமையுடன் நயத்துடன் என் மனசில் கேட்கிறது. அவளுக்கு வயசாக ஆக, அவளுடைய அன்பு வளர்ந்த அழகை என்ன என்று சொல்லுவேன்? குழந்தையாக இருக்கும்போதே யாரிடத்திலும் ஒட்டுதலாக இருப்பாள். இந்தக் குணம் நாளுக்கு நாள் விருத்தியாய்க் கொண்டே வந்தது. தோழிகள் வேறு, தான் வேறு என்கிற எண்ணமே அவளுக்கு இராது. ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, பணக்காரர் வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, அவளுக்கு எல்லா தோழிகள் பேரிலும் ஒரே பயந்தான். இன்னும் பார்க்கப்போனால் ஏழைக் குழந்தைகள் பேரில் மற்றவர்கள் பேரில் விட அதிக பாசம் காட்டுவாள். பிச்சைக்காரர்கள் வந்தால் கை நிறைய அரிசி கொண்டு வந்து போடுவாள். கண் பொட்டையான பிச்சைக்காரர்களைப் பார்க்கும் போது அவளை அறியாமலேயே அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகுவதை பார்த்திருக்கிறேன்! அவர்களுக்கு மற்றவர்களுக்குப் போடுவதை விட அதிகமாகவே போடுவாள். இப்படி அளவு கடந்த தயையும் இரக்கமும் அவளுக்கு இருந்ததனால்தான் அவளை நினைக்கும்போதெல்லாம் எனக்கு கடினமான கோடைக்குப் பிறகு நல்ல மழை பெய்யும்போது உண்டாகுமே, அந்த நிரதிசயமான ஆனந்தம் உண்டாகிறது. இவ்விதம் கண்ணுக்குக் கண்ணாய் நான் பாவித்து வந்த என் அருமைக் குழந்தையின் கதி இப்படியா போகணும்! நான் பாவி வெச்ச ஆசை பழுதாய் போகனுமா! பிரும்ம தேவனுக்குக் கொஞ்சங்கூடக் கண்ணில்லாமல் போய்விட்டதே! ஆனால் பிரும்மதேவன் என்ன பண்ணுவான், மனுஷாள் செய்யும் அக்கிரமத்துக்கு? ருக்மிணிக்கு பன்னிரண்டு வயசானதும் அவள் அப்பா அவளை நம்ர் மணியம் 
ராமசுவாமி ஐயர் குமாரன் நாகராஜனுக்கு கன்னிகாதானமாகக் கொடுத்தார். கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. தோழிப் பொங்கலன்னிக்கும், ஊர்கோலத்தன்னிக்கும் அவள் வருவதைப் பார்த்தேன். கண்பட்டுவிடும், அத்தனை அழகாயிருந்தது. அவள் தோழிகளுக்கு மத்தியில் இருந்ததை பார்க்கும்போது, மின்னற் கொடிகளெல்லாம் சேவித்து நிற்க மின்னரசு ஜொலிக்குமே அந்த மாதிரியேதான் இருந்தது. காமேசுவரையர் ருக்மிணிக்கு கல்யாணப் பந்தலில் நிறைய சீரும் செனத்தியும் செய்திருந்தார். ருக்மிணியின் மாமியாருக்கும் மாமனாருக்கும் ரொம்ப திருப்தியாயிருந்தது. கல்யாணத்துக்குப் பிறகு மாமியார் அவளை அடிக்கடி அழைச்சுக் கொண்டுபோய் அகத்திலேயே வைச்சுக் கொள்ளுவாள். ஆசையோடு அவளுக்கு தலை பிண்ணிப் பூச்சூட்டுவாள். தன் பந்துக்களைப் பார்க்கப் போகும்போது அவளை அழைச்சுக் கொண்டு போகாமல் போகவே மாட்டாள். இப்படி சகல விதமாகவும் ஜானகி (அதுதான் ருக்மிணி மாமியார் பேர்) தனக்கு ருக்மிணியின் பேரிலுள்ள அபிமானத்தை காட்டி  வந்தாள். மாப்பிள்ளை நாகராஜனும் நல்ல புத்திசாலி. அவனும்ருக்மிணியின் பேரில் மிகவும் பிரியமாய் இருப்பான். கிராமத்தில்அவர்கள் இருவருந்தான் ரூபத்திலும் புத்தியிலும் செலவத்திலும் சரியானஇணை என்று நினைக்காதவர், பேசிக்கொள்ளாதவர் கிடையாது. இப்படி என்று வருஷ காலம் சென்றது. அந்த ணு வருஷத்துக்குள் எத்தனை மாறுபாடுகள்! காமேசுவரையருக்குக் கையிளைச்சு போய்விட்டது. ரொக்க வேஷியையெல்லாம், ஏதோ அருபத்து நாட்டுக் கம்பெனியாம், அதில் வட்டிக்குப் போட்டிருந்தார். நம்ர் பணம் நாலுகோடி ரூபாயையும் முழுங்கிவிட்டு அது ஏப்பம் விட்டுவிடவே, காமேசுவரையர் ஒரு நாளில் ஸர்வ ஏழையாய்ப் போய்விட்டார். ருக்மிணியின் தாயார் மீனாட்சியம்மாள் உடம்பிலிருந்த நகைகள்தான் அவருக்கு மிச்சம். பூர்வீக சொத்தான வீட்டையும் நிலங்களையும் வித்துதான் அவர் கொடுக்க வேண்டிய கடன்களைதத் தீர்க்க வேண்டியதாயிருந்தது. இப்போ குப்புசாமி ஐயர் இருக்காரே வாய்க் காங்கரையோரத்திலே, அந்த வீட்டில் வந்து அவர் குடியிருக்கலானார். மீனாட்சியும் பார்க்கிறதுக்கு மஹாலட்சுமி மாதிரி இருப்பாள். அவளுடைய சாந்தத்துக்கு எல்லையே இல்லை. எத்தனை பெரிய கஷ்டம் வந்துவிட்டதே, இருந்தாலும் அவள் மனம் கொஞ்சமேனும் இடியவில்லை. ஏதோ இத்தனை நாள் சுகமாக வாழ்ந்தோம். யாரைக் கேட்டுக் கொண்டு ஸ்வாமி கொடுத்தார்! அவர் கொடுத்ததை அவரே எடுத்துக்கொண்டு விட்டார். இதனாலே என்ன இப்போ? அவாளும் ருக்மிணியும் ஆயுஸோடு இருக்கிறவரையில் எனக்கு குறைச்சலுமில்லை. இந்த தை மாஸத்திலே ருக்மிணிக்கு சாந்தி முகூர்த்தம் பண்ணிப் புக்காத்துக்கு அனுப்பிவிட்டால் அப்புறம் எங்களுக்கு நிர்விசாரம். கஞ்சியோ கூழோ சாப்பிட்டுக்கொண்டு வழக்கம் போல் பகவத்தியானம் பண்ணிக்கொண்டே எங்கள் காலத்¬க் கழித்து விடுகிறோம்'' என்று சொல்லுவாள். ஐயோ பாவம், நடக்கப் போகிற சங்கதியை அவள் எப்படி அறிஞ்சிருப்பாள்? காமேசுவரையர் ஐவேஷியில் கொஞ்சமேனும் தேறாது என்று ஏற்பட்டதும் ராமசுவாமி ஐயருக்கு அவருடனிருந்த சிநேகம் குளிர் ஆரம்பித்துவிட்டது. இதற்கு முன்னெல்லாம் அவர் காமேசுவரையர் அகத்துக்கு அடிக்கடி வருவார். வழியில் அவரைக்கண்டால் பத்து நிமிஷம்பேசாமல் போகவே மாட்டார். இப்பொழுதோ காமேசுவரையர் தூர வருகிறதை கண்டுவிட்டால், ஏதோ, அவசர காரியமாகப் போகிறதுபோல இன்னொரு பக்கம் திரும்பி வேகமாக போய்விடுவார். இப்படி செய்பவர், அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டார் என்று நான் சொல்லாமலேநீங்கள் நினைத்துக்கொண்டுவிடுவீர்கள். அவர் சம்சாரம் ஜானகியும் அதே மாதிரி மீனாட்சியம்மாளிடம் நெறுங்குவதை நிறுத்திவிட்டாள் ஆனால் இதையெல்லாம் மீனாட்சியம்மாளும் காமேசுவரையரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. செல்வமுள்ளபோது உறவு கொண்டாடுகிறது; அது போய்விட்டபோது வேத்து மனுஷாள்போல போய்விடுகிறது- இதெல்லாம் ஒரு சிநேகிதத்தோடு சேர்த்தியா? ஆனால்அவர்கள் ருக்மிணி விஷயத்திலுங்கூட வேத்துமை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அறுபத்துநாட்டு உடைகிறதற்கு முந்தி சில மாதங்களாக ஜானகி பிரதி வெள்ளிக்கிழமையும் சாப்பிட்டானதும், ருக்மிணியை அழைத்துக்கொண்டுவரும்படி வேலைக்காரியை அனுப்பிவிடுவாள். அன்னைக்கு, அவளுக்குத் தலைப்பின்னி, மை சாந்திட்டு, சிங்காரிச்சு, அகிலாண்டேசுவரி கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போய்த் தரிசனம் பண்ணிவிட்டு, அன்னைக்கு ராத்திரி முழுவதும் தங்கள் அகத்திலேயே வைத்துக்கொண்டிருந்து அடுத்தநாள் காலமேதான் அவளை அகத்துக்கு அனுப்புவாள். ஆனால், அறுபத்துநாட்டில் போனது போனதுதான் என்று ஏற்பட்டுவிட்டபிறகு வந்து முதல் வெள்ளிக்கிழமையன்னைக்கே, எனக்கு ஆத்தில் இன்னைக்கு ரொம்ப வேலையாக இருக்கும்' என்பாள். அடுத்த வெள்ளிக்கிழமை முதல் அவ்விதம் சொல்லியனுப்புவதைக்கூட நிறுத்திவிட்டாள். இது மீனாட்சிக்கும் காமேசுவரையருக்கும் மிகுந்த துக்கத்தை தந்தது. ருக்மிணியும், நம்மை இவ்வளவு இளக்காரம் செய்கிறாள் பார்த்தாயா! நம்ப மாமியார் கூட, என்று மிகவும் வருத்தப்பட்டாள். இப்படி கொஞ்ச நாளாச்சு. ஊரெல்லாம் குசு குசு'என்று பேசிக்கொண்டிருப்பார்கள். எல்லா ரகசியங்களும் குளத்தங்கரையிலேதான். அரைவார்த்தையும் குறை வார்த்தையுமாகத்தான் என் காதில் விழுமேயோழிய முட்ட முழுக்க ஒரு பேச்சும் எனக்கு எட்டாது. ஊரிலே இப்படி எப்போதும் இருந்ததில்லை.எனக்கு மனசு குருகுருத்துக் கொண்டேயிருந்தது. ஏதோ கெடுதலுக்குத்தான் இத்தனை ரகசியம் வந்திருக்கிறது என்று எனக்கு அப்பொழுதே தோன்றிவிட்டது. ஆனால் யாருக்கு என்று மாத்திரம் தெரியவில்லை. கடைசியாக அப்படியும் இப்படியுமாய், அத்தையும் இத்தையும் கூட்டிச் சேர்த்துப் பார்க்கப் பார்க்க, கொஞ்சங் கொஞ்சமாய் சமாசாரம் என் மனசுக்கு அத்துபடியாச்சு. ராமசாமி ஐயரும் ஜானகியும் ருக்மிணியை வாழாதே பண்ணிவிட்டு நாகராஜனுக்கு வேறு கல்யாணம் செய்து வைக்க நிச்சயித்து விட்டார்கள்! என்ன பண்ணுவேன்! என் மனசு இடிஞ்சி போய்விட்டது. குழந்தை ருக்மமிணியைத் தள்ளி வைக்கத் துணியுமா மனுஷாளுக்கு? அடிப்பாவி! உன்னைப் போலே அதுவும் ஒரு பெண்ணில்லையா! என்ன பண்ணித்து அது உன்னை! அதை கண்ணாலே பார்த்தால் கல்லும் இரங்குமே! கல்லையும்விட அழுத்தமா உன் நெஞ்சு! காமேசுவரையருக்கும் மீனாட்சிக்கும் முகத்தில் ஈ ஆடாது. எனக்கே இப்படி இருந்தபோது, பெத்த தாயார் தகப்பனாருக்கு கேட்கனுமா? இனிமேல் நாகராஜனைப்பற்றி ஏதாவது நம்பிக்கை வைத்தால்தான் உண்டு! அவன் பட்டணத்தில் படித்துக்கொண்டிருந்தான். மார்கழி பிறந்துவிட்டது. அவன் வருகிற நாளை எண்ணிக்கொண்டே இருந்தேன். கடைசியாக வந்து சேர்ந்தான். வந்த அன்னைக்குக் காலமே அவன் முகத்தில் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தது. சந்தோஷம் மாறி வேறாகிவிட்டது. தாயார் தகப்பனார் அவன் மனத்தைக் கலைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாளுக்கு நாள் முகத்தில் கலக்கம் 
அதிகரித்துக்கொண்டே வந்தது. கரைப்பார் கரைச்சால் கல்லுங்கரையும் என்பார்கள். அவன் கலங்கின முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வயித்திலே பகீர் என்னும். இனிமேல் ஏது? இந்த ஆசை இருந்தது. அதுவும் போய்விட்டது. ருக்மிணியின் கெதி அதோகெதிதான் என்று நினைத்துவிட்டேன். தை பிறந்தது. வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஏதோ கிழக்கத்தி பெண்ணாம். தகப்பனாருக்கு நாலு லட்ச ரூபாய்க்கு பூஸ்திதியாம். பிள்ளை கிடையாதாம். இந்த பெண்ணைத் தவிர காலக்கிரமத்தில் இன்னும் ஒரே ஒரு பெண்தானாம். ராமசாமி ஐயர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் சொத்து சேர்ந்து விடுமாம். இதெல்லாம் எனக்கு கர்ணகடூரமாக இருக்கும். ஆனால் என்ன செய்கிறது? தலைவிதியே என்று கேட்டுக்கொண்டிருப்பேன். இந்தப் பேச்சுப் புறப்பட்டது முதல், மீனாட்சி 
பகலில் வெளியிலேயே வருவதில்லை. சூரியோதையத்துக்கு முன்னேயே குளத்துக்கு வந்து ஸ்நாநம் செய்துவிட்டு தீர்த்தம் எடுத்துக்கொண்டு போய்விடுவாள். அவள் முகத்தைப் பார்த்தால் கண்ட்ராவியாயிருக்கும். சரியான தூக்கமேது? சாப்பாடேது? ஓஹோவென்று வாழ்ந்துவிட்டு, இந்த கதிக்கு ஆளானோமே என்கிற ஏக்கம் அவள் அழகை அழித்துவிட்டது. வீடு வாசல் போய்விட்டதே என்றாவது , நகை நட்டெல்லாம் போய், வெறும் உரிசல் தாலியை மாத்திரம் கட்டிக்கொண்டிருக்கும்படியாகிவிட்டதே என்றாவது அவள் வருத்தப்படவில்லை. கிளிபோல் குழந்தை அகத்திலிருக்க , ஜானகி அதன் பேரில் கொஞ்சம் கூட இரக்கம் வைக்காமல் கண்ணுக்கெதிராகவே பிள்ளைக்கு வேறு விவாகம் பண்ணிவைக்க நினைத்துவிட்டாள் பார்த்தயா என்னும் ஏக்கந்தான் அவளுக்கு இரவு பகலெல்லாம். அவள் முகத்தைப் பார்த்தால் ஜானகிக்குக் கூட மனசு உருகிப் போய்விடும். ஆனால் ராணி, அவளெங்கே பார்ப்பாள்! அப்போதெல்லாம் ருக்மிணி எப்படி இருந்தாளோ, என்ன நினைத்தாளோ, எனக்கொண்ணுந்தெரியாது. அறியாக்குழந்தை அது என்ன நினைத்திருக்குமோ! ஒரு வேளை, மாமியார் நம்மை கட்டோடே கெடுத்துவிடமாட்டாள் என்று நினைத்தாளோ? அல்லது மாமியார் என்னநினைத்தாலும், நாகராஜன் சம்மதிக்கமாட்டான் என்று நினைத்தாளோ? 
இன்னும் முட்ட முழுக்க ஐந்து வருஷமாகவில்லையே அவர்களிருவரும் ஜோடியாய் நம்ம குளக்கரையில் விளையாடி! கல்யாணமான பிறகுங் கூட ஒருவருக்குந் தெரியாமல் எத்தனை தடவை பார்த்துப் பழைய நாள் போலவே அன்பும் ஆதரவுமாக நாகராஜன் அவளோடு பேசியிருக்கிறான்!அவன் கைவிடமாட்டான் என்றேதான் ருக்மிணி நினைத்திருப்பாள். ஆனால் நாளாக ஆக நாகராஜனுடைய கல்யாணப் பேச்சு முத்திக்கொண்டே வந்தது. நாகராஜனுடைய மனதில் மாத்திரம் இன்னது  இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. பட்டணத்திலிருந்து வந்த அன்று, மாமனாரையும் மாமியாரையும் நமஸ்காரம் செய்வதற்காக அகத்துக்கு வந்தானே அவ்வளவுதான். பிறகு ருக்மிணியை அவன் ஸ்மரித்தான் என்பதற்கு எள்ளளவுகூட அடையாளமில்லை. ஆனால் முகத்தை விட்டு முதனாள் போன உல்லாஸக்குறி மறுபடியும் திரும்பி வரவேயில்லை. யாருடனும் பேசாமல் எப்பொழுதும் சுளித்த முகமாகவேயிருப்பான். கடைசியாக, நாள் வைத்தாகிவிட்டது. பெண் அகத்துக்காரர் வந்து லக்கினப் பத்திரிக்கையையும் வாசித்துவிட்டுபோய்விட்டார்கள், ஐயோ! அன்னைக்கு மேளச் சத்தத்தைக் கேட்க என் பஞ்சப் பிராணனும் துடித்தது. காமேஸ்வரையருக்கு எப்படியிருந்திருக்குமோ? மீனாட்சி மனசு எப்படி துடித்ததோ? ருக்மிணி எப்படி சகித்தாளோ? எல்லாம் ஈசுவரனுக்குதான் தெரியும். நாகராஜனுக்குக்கூடத் துளி இரக்கம் பச்சாத்தாபமில்லாமற் போய்விட்டது பார்த்தாயா என்று நான் அழாத நாள் கிடையாது. சில வேளைகளில், இப்படியெல்லாம் பண்ணினால் இவன் மாத்திரம் நன்றாக இருப்பானோ என்று கூடச் சொல்லிவிடுவேன்.... இப்படி என் மனசு தளும்பி தத்தளித்துக் கொண்டிருக்கிறபோது, ஒரு நாள் வயித்திலே பால் வார்த்தார்போல ஒரு சங்கதி என் காதில் விழுந்தது. நாகராஜனோடு கூட படித்துக்கொண்டிந்தவனாம் ஸ்ரீநிவாசன் என்ற ஒரு பையன். அவன் நாகராஜனை பார்க்கறதற்கென்று வந்தான். அவர்களுக்கெல்லாம் ரகசியமாகப் பேச இடம் வேறெங்கே ? நம்ம குளத்தங்கரைதானே? ஒரு நாள் சாயங்காலம் ஏழெட்டு மணிக்கு எல்லோரும் போய்விட்ட பிறகு இவர்கள் இரண்டு பேரும் இங்கே வந்தார்கள். ஸ்ரீநிவாசன் ரொம்ப நல்லவன். அவன் ஊர் ஐம்பது அறுபது கல்லுக்கந்தண்டை இருக்கிறது. நாகராஜன், பெண்ணிருக்க, பெண் கல்யாணம் பண்ணிக்கொள்ள போகிறான் என்று யாரோ அவனுக்கு எழுதிவிட்டார்களாக்கும். உடனே தபால் வண்டி மாதிரி ஓடிவந்துவிட்டான். குளத்தங்கரைக்கு வந்ததும், தான் கேள்விப்பட்டதைச் சொல்லி அதெல்லாம் வாஷ்தவந்தானா என்று அவன் நாகராஜனைக் கேட்டான். நாகராஜனும், அம்மாவும் அப்பாவும் சேர்ந்து நிச்சயம் செய்துவிட்டபோது நான் மாட்டேன் என்று சொன்னால் தான் தீரப்போகிறதா? தவிர, பெண்ணும் லட்சணமாக இருக்கிறதாம். அவள் தகப்பனார் லட்ச ரூபாய் ஆஸ்தி அவள் பேருக்கு எழுதி இருக்கிறாராம். அவருக்குப் பிற்காலத்தில் இன்னொரு லட்ச ரூபாய் சொத்து சேருமாம். இப்படி, தானே வருகிற ஸ்ரீதேவியை எதற்கு வேண்டாமென்று சொல்லுகிறது?'' என்று சொன்னான். இந்த வார்த்தையெல்லாம் சொல்லும் போது ஸ்ரீநிவாசன் முகம் போன போக்கை என்ன என்று சொல்வது? நாகராஜன் நிறுத்தினதும் அரைமணி தேசகாலம் ஸ்ரீநிவாசன் அவனுக்கு எத்தனை லட்சந்தான் வரட்டுமே, ஒரு பெண் பாவத்தைக் கட்டிக் கொள்ளலாமா? கல்யாணப் பந்தலில் மந்திர ரூபமாகச் செய்த பிரமாணத்தையெல்லாம் அழித்துவிடலாமா?'' என்று நானாவிதமாய்த் தர்மத்தையும் நியாயத்தையும் எடுத்துச் சொல்லி, கல்லுங்கரையும் படியாக ருக்மிணிக்காக பரிஞ்சு பேசினான். அவன் நன்றாக இருக்க வேணும், க்ஷேமமாக இருக்கவேணும், ஒரு குறைவுமில்லாமல் வாழ வேணும் என்று நிமிஷத்துக்கு நிமிஷம் நான் வாழ்த்திக்கொண்டே இருந்தேன். ஆனால் அவன் பேசினதும் நாகராஜன் அவனைப் பார்த்து , ஸ்ரீநிவாசா, உன்னிடம் இதுவரை சொன்னதெல்லாம் விளையாட்டாக்கும். நான் காசுக்காக இவ்வளவு அற்பமாக போய்விடுவேன் என்று நினைக்கிறாயா? நான் யாருக்கும் தெரியாமல் வைத்துக்கொண்டிருக்க வேணும் என்றிருந்தேன். ஆனால் எப்போ இவ்வளவு தூரம் பேசிவிட்டோமோ, இனிமேல் உனக்குதெரியாமல் வைக்கிறதில் காரியமில்லை, என்று நினைத்துவிட்டேன். ஆனால் ஒன்று மாத்திரம்; இதை நீ யாருக்கும் சொல்லக்கூடாது. இவர்களெல்லாம் ஆரியத் தன்மையை விட்டு மிலேச்சத்தனமாய் நடக்க உத்தேசித்திருக்கிறபடியால், இவர்களை நன்றாக அவமானம் செய்துவிட வேண்டியது என்று நிச்சயித்துவிட்டேன். நான்எத்தனை மறுத்தும் அம்மாவும் அப்பாவும் ஒரே பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆகையால் மன்னார் கோவிலுக்கே போகிறேன். அங்கே போயும் மாட்டேனென்றே சொல்லுவேன். ஆனால் கட்டாயப்படுத்தத்தான் போகிறார்கள். முகூர்த்தப் பந்தலிலும் உட்காருவேன். ஆனால் என்ன இருந்தாலும் திருமாங்கல்யத்தில் நான்தானே முடிச்சு போடவேணும்? வேறு ஒருவரும் போட முடியாதே. அந்தச் சமயத்தில் கண்டிப்பாக மாட்டேனென்று சொல்லிவிடப் போகிறேன். எல்லோரும் இஞ்சித்தின்ற குரங்கு போலே விழிக்கட்டும். ருக்மிணியைத் தொட்ட கையினாலே இன்னொரு பெண்ணையும் நான் தொடுவேன் என்றிருக்கிறாயா?'' என்று சொல்லி முடித்தான். ஆனால் நீ விவாகத்துக்கென்று போகுங்காலத்தில், ருக்மிணி, அவள் அப்பா அம்மா மனதெல்லாம் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தாயா?'' என்று ஸ்ரீநிவாசன் கேட்டான். அதற்கு நாகராஜன், யோசித்தேன்; ஆனால் எல்லாம் போய்விட்டதென்று அவர்கள் நிராசையாய்த் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் , திடீரென நான் ஓடிவந்து மாமியார் மாமனாரை வணங்கி, துயரப்படாதீர்கள்! என் ருக்மிணியை நான் ஒரு நாளும் கைவிடமாட்டேன்! பணத்தாசை பிடித்தவர்களையெல்லாம் மணப்பந்தலில் மானபங்கம் செய்துவிட்டு இங்கே வந்துவிட்டேன்' என்று நான் சொல்லுங்காலத்தில் அவர்களுக்கு எத்தனை ஆனந்தமாக இருக்கும்! அதைப்பார்த்து அனுபவிக்க விரும்புகிறேன்'' என்றான். அந்த நாள் வரையில் அவர்கள் மனசு எப்படி அடித்துக்கொண்டிருக்கும்? நினைத்துப்பார்'' என்றான் ஸ்ரீநிவாசன். அதற்கு நாகராஜன், இன்னும் ஐந்து நாளில்லை; இன்று வெள்ளிக் கிழமை. ஞாயிற்று கிழமை இவ்விடமிருந்து எல்லோரும் புறப்படப்போகிறோம்.  அடுத்த நாள் முகூர்த்தம் அன்றைக்கே புறப்பட்டு அடுத்தநாள் காலையில் இங்கே திரும்பிவிடுவேன். இத்தனை நாள் பொறுக்க மாட்டார்களா? என்றான். என்னவோ அப்பா, எனக்கு இது சரியில்லை என்று தோன்றுகிறது'' என்று ஸ்ரீநிவாசன் பேசிக் கொண்டிருக்கும் போதே இருவரும் நகர ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு மேலே ஒன்றும் கேட்கவில்லை. அன்னைக்கு ராத்திரியெல்லாம் எனக்கு தூக்கமே வரவில்லை. பார்த்தாயா, நாகராஜனை வையக்கூட வைதேனே பாவி, அவனைப்போல ஸத்புத்திரன் உண்டா உலகத்திலே' என்று சொல்லிக் கொண்டேன். இனிமேல் பயமில்லை; அஞ்சு நாளென்ன, பத்து நாளென்ன? நாகராஜன் பிடிவாதக்காரன்; சொன்னபடியே செய்துவிடுவான். ருக்மிணிக்கு இனிமேல் ஒரு குறைச்சலுமில்லை' என்று பூரித்துப் போய்விட்டேன்.
ஞாயிற்றுக் கிழமை; இவர்களெல்லாம் மன்னார் கோவிலுக்குப் புறப்படுகிறார்களென்று ஊரெல்லாம் அல்லோல கல்லோலப் பட்டது. ராமஸ்வாமி ஐயரையும் ஜானகியையும் வையாதவர்கள் கிடையாது ஆனால் அவர்களை கூப்பிட்டு நல்ல புத்தி சொல்வதற்கு மாத்திரம் ஒருவரும் இல்லை. அப்படியே யாரேனும் சொன்னாலும் அவர்கள் கட்டுப்படுபவர்களும் இல்லை. அவர்கள் புறப்படுகிற அன்னைக்கு ஊரிலிருந்து கண்ணாலே பார்த்தால் இன்னுங்கொஞ்சம் வயித்தெரிச்சல்தான் அதிகமாகுமென்று நினைத்து, காமேசுவரையரும் மீனாட்சியும் சனிக்கிழமை மத்தியானமே புறப்பட்டு மணப்பாறைக்குப் போய்விட்டார்கள். அகத்தில் ருக்மிணிக்கு அவள் அத்தை சுப்புலட்சுமி அம்மாள்தான் துணை. சனிக்கிழமை ராத்திரியாச்சு. றுரடங்க ஆரம்பித்துவிட்டது. ஒன்பது ஒன்பதரை மணி இருக்கும். நாகராஜன் தனியாக குளத்தங்கரைக்கு வந்தான். வந்து வேப்பமரத்தடியில் உட்கார்ந்துகொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். சில  நாழிக்கெல்லாம் தூரத்தில் ஒரு பெண் உருவம் தென்பட்டது. அது குளத்தங் கரைப்பக்கம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அடிக்கொருதடவை பின் பக்கம் திரும்பி பார்த்துக்கொண்டே வந்தது. கடைசியாக நாகராஜன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தில் வந்து நிற்கும்போதுதான் அது ருக்மிணி என்று நான் அறிந்து கொண்டேன். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் உடனே தெளிஞ்சுக் கொண்டு என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று கண்ணைத் துடைத்துக்கொண்டு உன்னிப்பாய் கவனிக்கலானேன். ஐந்து நிமிஷம் வரையில் நாகராஜன் கவனிக்கவேயில்லை. ஆழ்ந்த யோசனையில் இருந்தான். ருக்மிணி அசைவற்று அப்படியே நின்று கொண்டிருந்தாள். எதேச்சையாய் நாகராஜன் தலையை தூக்கினான். ருக்மிணியைப் பார்த்தான். பார்த்ததும் அவனும் திடுக்கிட்டுப் போய்விட்டான். ஆனால் உடனே நிதானித்துக்கொண்டு, ருக்மிணி, இத்தனை நாழிகைக்கு மேலே தனியாக இங்கே வரலாமா நீ?'' என்று கேட்டான். நீங்கள் இருக்கிற இடத்தில் தனியாக நான் இருக்க வேண்டிய நாள் வரவில்லையே '' என்று பதில் சொல்லிவிட்டு ருக்மிணி நின்றாள். இரண்டு ன்று நிமிஷத்துக்கு ஒரு வரும் வாய்திறக்கவில்லை. இரண்டு பேர் மனதும் குழம்பிக் கொண்டிருந்தது. ஆனால் எப்படி ஆரம்பிக்கிறது, என்ன பேசுகிறது என்று அவர்களுக்கு ஒன்றுந்தெரியவில்லை. கடைசியில் நாகராஜன், இந்த வேளையில் நாம் இங்கே இருப்பது தெரிந்தால் ஊரில் ஏதாவது சொல்லுவார்கள்; வா, அகத்துக்கு போய்விடலாம் என்றான். அதற்கு ருக்மிணி, உங்களிடத்தில் சில வார்த்தைகள் சொல்ல உத்தரவு கொடுக்க வேணும்'' என்றாள். சொல்லேன்'' என்று நாகராஜன் சொல்ல, ருக்மிணி பேசலானாள்: எனக்கு உங்களிடத்தில் என்ன சொல்லுகிறது என்று தெரியவில்லை. இந்த ணு மாசமாய் மனசு படுகிறபாடு அந்த அகிலாண்டேசுவரிக்குத்தான் தெரியுமே யொழிய மனுஷாளுக்கு தெரியது நீங்கள் பட்டணத்திலேயிருந்து வந்தவுடன் என் கலக்கமெல்லாம் போய்விடும் என்றிருந்தேன். மாமாவும் மாமியும் என்ன செய்தாலும் நீங்கள் என்னைக் கை விடமாட்டீர்கள் என்று நம்பியிருந்தேன். ஆனால் நீங்களும் என்னைக் கைவிட்டுவிட்டால் அப்புறம் எதை நம்பிக்கொண்டு நான் வாழ்வேன்? வேலியே பயிரைஅழித்துவிட ஆரம்பித்தால், பயிரின் கதி என்னவாகும்? இது வரையில் நடந்ததெல்லாம் என் மனசை உடைத்துவிட்டது . நீங்கள் அதைச் சேர்த்து வைத்தால்தான் உண்டு, இல்லையானால் என் ஆயுசு இவ்வளவுதான்; அதில் சந்தேகமில்லை.'' இந்த வார்த்தையைப் பேசும்போது ருக்மிணியின் கண்களில் ஜலம் வந்துவிட்டது. அத்தோடு நின்றுவிட்டாள். நாகராஜன் பேசவில்லை. ருக்மிணியும் சில நாழி வரைக்கும் பார்த்துவிட்டு, நாளைக்குப் பயணம் வைத்திருக்காப் போலிருக்கிறதே; நீங்கள் போகத்தானே போகிறீர்கள்?'' என்று கேட்டாள். கொஞ்ச நாழி யோசித்துவிட்டு நாகராஜன், ஆமாம், போகலாம் என்றுதான் இருக்கிறேன்'' என்றான். அப்படி அவன் சொன்னதும் ருக்மிணிக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு துக்கம் வந்துவிட்டது. உடம்பு கிடு கிடு என்று நடுங்கியது. கண்ணில் ஜலம் தளும்பிவிட்டது. ஆனால் பல்லைக் கடித்துக்கொண்டு அதையெல்லாம் வெளியே காட்டிக்கொள்ளாமல் அப்படியானால் நீங்கள் என்னை கைவிட்டு விட்டீர்கள்தானே ?'' என்று கேட்டாள். அதற்கு நாகராஜன், உன்னை நான் கைவிடுவேனா ருக்மிணி? ஒரு நாளும் விடமாட்டேன். ஆனால் அம்மா அப்பாவைத் திருப்தி பண்ணி வைக்க வேண்டியதும் கடமைதானே? ஆனால் நீ கவலைப்படாதே, உன்னை ஒரு நாளும் தள்ளிவிட மாட்டேன்'' என்றான். ருக்மிணிக்குப் பொறுக்கவில்லை. நீங்கள் மறுவிவாகம் பண்ணிக்கொண்டுவிடுகிறது. நான் கவலைப்படாமல் இருக்கிறது. என்னை ஒரு நாளும் கைவிடமாட்டீர்கள். ஆனால் அம்மா அப்பா சொல்லுகிறதை இது விஷயத்தில் தட்டமாட்டீர்கள். நான் சொல்லக்கூடியது இனிமேல் என்ன இருக்கு? என் கதி இத்தனைதானாக்கும்''என்று சொல்லிக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.
நாகராஜன் ஒன்றும் பேசவில்லை. கல்யாணத்தை நிறுத்திவிடுகிறேன்' என்கிற ஒரு வார்த்தையைத் தவிர வேறே எந்த வார்த்தையை சொன்னால் தான் ருக்மிணியின் மனதைத் தேற்றலாம் ? அந்த வார்த்தையை இப்போது சொல்லவோ அவனுக்கு சம்மதமில்லை. ஆகையால் அவன் வாயால் ஒண்ணும் பேசாமல் தன் மனதிலுள்ள அன்பையும் ஆதரவையும் சமிக்கினையால் மாத்திரம் காட்டினான். அவள் கையைத் தன்னுடைய கைகளால் வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மிருதுவாய்ப் பிடித்தான். குழந்தையைத் தட்டிக் கொடுத்துத் தேத்துவது போல், முதுகில் ஆதரவோடு தடவினான். அப்பொழுது அவள் தலைமயிர் அவன் கையில் பட்டது. உடனே திடுக்கிட்டுப் போய், என்ன ருக்மிணி, தலை சடையாய்ப் போய்விட்டதே; இப்படித்தானா பண்ணிக்கொள்கிறது? உன்னை இந்த அலங்கோலத்தில் பார்க்க என் மனசு சகிக்கவில்லையே! எங்கே உன் முகத்தைப் பார்ப்போம்! ஐயோ, கண்ணெல்லாம் செக்கச் செவேர் என்று சிவந்து போயிருக்கிறதே! முகத்தின் ஒளியெல்லாம் போய்விட்டதே ! என் கண்ணே, இப்படி இருக்காதே. உன்னை நான் கைவிடமாட்டேன் என்று சத்தியமாய் நம்பு. உன் மனசில் கொஞ்சங்கூட அதைரியப்படாதே. என் ஹிருதய பூர்வமாகச் சொல்லுகிறேன், எனக்கு பொறுக்கவில்லை உன்னை இந்த ஸ்திதியில் பார்க்க. சின்ன வயது முதல் நாமிருந்த அன்னியோன்யத்தை மறந்துவிட்டேன் என்று கனவில் கூட நீ நினையாதே. வா, போகலாம், நாழிகையாகிவிட்டது, இனிமேல் நாம் இங்கே இருக்கக்கூடாது'' என்று சொல்லி முடித்தான். ருக்மிணி எழுந்திருக்கவில்லை. ஏக்கம் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். அதைப் பார்த்ததும் நாகராஜனுக்குக் கண்ணில் ஜலம் ததும்பிவிட்டது. அந்தச் சமயத்தில் தன் மனதிலுள்ள ரகசியத்தைச் சொல்லித்தான் விடலாமே என்று அவன் புத்தியில் தோன்றியது போலிருந்தது. சொல்லித்தான் வைத்தானா பாவி! ஆனால் அவனுக்கு அவனுடைய விளையாட்டுதான் பெரிதாய்பட்டது. ஆகையினாலே அதை மாத்திரம் அவன் வாய்விடவில்லை. ஆனால் அவனுக்குத்தான் எப்படித் தெரியும் இப்படியெல்லாம் வரும் என்று? அத்தனை வயசாகி எனக்கே தெரியவில்லையே. அந்த சமயத்திலே, எங்கே தெரிந்திருக்கப்போகிறது குழந்தைக்கு? அப்படி நினைத்துபோய் உட்கார்ந்திருந்த ருக்மிணியை நாகராஜன் மெல்லப் பூத்தாப்போல் தூக்கி மார்போடே அணைத்துக்கொண்டு, என்ன, ஒன்றும் பேசமாட்டேன் என்கிறாயே ருக்மிணி; நான் என்ன செய்யட்டும்?''என்று கருணையோடு இரங்கி சொன்னான். ருக்மிணி தலை நிமிர்ந்து அவனை ஏரிட்டு பார்த்தாள். அந்த பார்வையின் குறிப்பை உங்களுக்கு எப்படிச் சொல்வேன்? பிரவாகத்தில் அகப்பட்டுக் கை அலுத்துப்போய் ஆத்தோடு போகிற ஒருவனுக்கு, தூரத்தில் கட்டை ஒன்று மிதந்து போவது போல் தென்பட, அவனும் பதை பதைத்துக் கொண்டு ஆசையும் ஆவலுமாய் அதன் பக்கம் நீந்திக்கொண்டு போய் அப்பா, பிழைத்தோமடான்னு சொல்லிக்கொண்டு அதைப் போய்த் தொடும்போது, ஐயோ பாவம், அது கட்டையாக இராமல், வெறும் குப்பை செத்தையாக இருந்துவிட்டால் அவன் மனசு எப்படி விண்டுவிடும், அவன் முகம் எப்படியாகிவிடும், அப்படி இருந்தது ருக்மிணியின் முகமும், அந்த முகத்தில் 
பிரதிபலித்துக்காட்டிய அவள் மனசும். எல்லையில்லாத துன்பம், எல்லையில்லாத கஷ்டம், அந்தப் பார்வையில் இருந்தது. அதைக் கண்டும் நாகராஜன் மௌனமாக இருப்பதைப் பார்த்து ருக்மிணி மெல்ல ஒதுங்கிக் கொண்டு, நான் சொல்லக்கூடியது இனிமேல் ஒன்னுமில்லை. மன்னார்கோவிலுக்குப் போகிறதில்லை என்கிற வார்த்தையை நீங்கள் எனக்கு சொல்லமாட்டேன் என்கிறீர்கள்; இன்றோடு என் தலைவிதி முடிந்தது. நீங்கள் எப்போது என்னை இவ்விதம் விடத்துணிந்தீர்களோ, நான் இனிமேல் எதைநம்பிக்கொண்டு யாருக்காக, உயிரை வைத்துக்கொண்டிருப்பது? உங்கள் மீது எனக்கு வருத்தமில்லை. ளுங்கள் மனது இந்தக் காரியத்துக்குச் சம்மதியாது. என்னுடைய விதிவசம், என் அப்பா அம்மாவுடைய கஷ்டம், உங்களை இப்படியெல்லாம் செய்யசொல்லுகிறது. இனிமேல் ருக்மிணி என்று ஒருத்தி இருந்தாள். அவள் நம் பேரில் எல்லையில்லாத அன்பு வைத்திருந்தாள், பிராணனை விடுகிறபோது கூட நம்மையே நினைத்துக் கொண்டுதான் பிராணனை விட்டாளென்று எப்பொழுதாவது நினைத்துக்கொள்ளுங்கள். இதுதான் நான் உங்களிடம் கடைசியாகக் கேட்டுக்கொள்வது'' என்று சொல்லிக்கொண்டு நாகராஜன் காலில் விழுந்து, காலை கெட்டியாய் பிடித்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.
நாகராஜன் உடனே அவளை தரையிலிருந்து தூக்கியெடுத்து, பைத்தியமே, அப்படி ஒன்றும் பண்ணிவிடாதே, நீ போய்விட்டால் என் ஆவியே போய்விடும். அப்புறம் யார் யாரை நினைக்கிறது? மழைத்தூற்றல் போடுகிறது. வானமெல்லாம் கறுகும்மென்றாகிவிட்டது. இன்னும் சற்று போனால் சந்தரத்தாரையாய்க் கொட்டும் போலிருக்கிறது; வா அகத்துக்கு போகலாம்'' என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு ரெண்டடி எடுத்துவைத்தான். ஆகாயத்தில் சந்திரன், நட்சத்திரம், ஒன்றும் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் ஒரே அந்தகாரம். சித்தைக்கொருதரம் மேகத்தை வாளால் வெட்டுகிறது போலே மின்னல் கொடிகள் ஜொலிக்கும். ஆனால் அடுத்த நிமிஷம் முன்னிலும் அதிகமான காடாந்தகாரமாகிவிடும். பூமியெல்லாம் கிடுகிடுவென்று நடுங்க ஆகாயத்தையே பிளந்துவிடும்போலே இடிஇடிக்கும். காற்று ஒன்று சண்டமாருதம்போல அடித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் மழை பெய்து கொண்டிருநத இரைச்சல் அதிகமாகவே நெருங்கிக் கொண்டு வந்தது. இந்தப் பிரளய காலத்தைப் போல இருந்த அரவத்தில் ருக்மிணியும் நாகராஜனும் பேசிக்கொண்டு போன வார்த்தைகள் என் காதில் சரிவரப்படவில்லை. அவர்களும் அகத்துப்பக்கம் வேகமாக சென்றுகொண்டிருந்தார்கள். ஒரு மின்னல் மின்னும்போது, ருக்மிணி வீட்டுக்கு போக மனமில்லாமல் பின்வாங்குவதும், ஆனால் நாகராஜன் தடுத்து முன்னால் அழைத்துச் செல்வதும் மாத்திரம் கண்ணுக்கு தென்பட்டது. அவர்கள் வார்த்தையும் ஒண்ணும் ரெண்டுமாகத்தான் என் காதில் பட்டது. .....பிராணன் நிற்காது....அம்மாவுடைய ஹிருதயம் திருப்தி.....வெள்ளிக்கிழமை காலமே.....ஸ்திரீகளின். ....உடைந்து விடும்..... சொல்லாதே..... கொடுத்துவைத்ததுதானே.....அந்தப் பெண்ணையாவது நன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.....மனப்பூர்த்தியாக வாழ்த்துகிறேன்.....அன்றைக்கு தெரிந்து கொள்வாய்.....கடைசி நமஸ்காரம்... வரையில் பொறுத்துக்கொள்.....'' இந்த வார்த்தைகள்தான் இடி முழக்கத்திலும், காற்றின் அமலையிலும், மழை இரைச்சலிலும் எனக்கு கேட்டது. மழை தாரை தாரையாகக் கொட்ட ஆரம்பித்துவிட்டது. ருக்மிணியும் நாகராஜனும் மறைந்து போய்விட்டார்கள். ஆச்சு, அடுத்த நாள் காலமே விடிந்தது. மழை நின்றுவிட்டது. ஆனால் ஆகாயத்திலே தெளிவு வரவில்லை.மேகங்களின் கருக்கல் வாங்கவில்லை. காற்று, ஸமாதானஞ் செய்ய மனுஷாள் இல்லாத குழந்தைபோல, ஓயாமல் கதறிக் கொண்டேயிருந்தது. என் மனசிலும் குழப்பம் சொல்லி முடியாது . எப்படி நிதானித்துக் கொண்டாலும் மனசுக்குச் சமாதானம் வரவில்லை. என்னடா இது, என்னைக்கும் இல்லாத துக்கம் இன்னைக்கு மனசில் அடைத்துக்கொண்டு வருகிறது? காரணம் ஒண்ணும் தெரியவில்லையே' என்று நான் எனக்குள் யோசித்துக்கொண்டேயிருக்கும்போது மீனா, என்னடியம்மா, இங்கே ஒரு புடவை மிதக்கிறது!'' என்று கத்தினாள்.
உடனே பதட்டம் பதட்டமாய், அந்த பக்கம் திரும்பினேன். குளத்திலே  குளித்துக் கொண்டிருந்த பெண்களெல்லோரும் அப்படியே திரும்பிப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு காதோடு காதாக ரகசியம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு பஞ்சப்பிராணணும் போய்விட்டது. புடவையைப் பார்த்தால் காமாக்ஷியம்மாள் புடவை போல் இருந்தது. சரி, அம்மா, அப்பா தலையிலே கல்லை தூக்கிப் போட்டுவிட்டு ருக்மிணிதான் மறுபடியும் வந்து குளத்திலே விழுந்துவிட்டாள் என்று நினைத்தேன் அதுதான் தெரியும். அப்படியே ர்ச்சை போட்டுவிட்டேன். அப்புறம் சித்த நாழி கழித்து எனக்குப் பிரக்கினை வந்தது. அதற்குள்ளே குளத்தங்கரையெல்லாம் கும்பலாய்க் கூடிப் போய்விட்டது. ஜானகியையும் ராமசுவாமி ஐயரையும் வையாதவர் இல்லை. இனிமேல் வைதாலென்ன,வையாதெ போனாலென்ன? ஊரின் சோபையையும் தாயார் தகப்பனார் ஷீவனையும், என்னுடைய சந்தோஷத்தையும் எல்லாம் ஒண்ணாய் சேர்த்துக் கட்டிக்கொண்டு ஒரு நிமிஷத்தில் பறந்துபோய்விட்டாளே என் ருக்மிணி. கீழே, அந்த மல்லிகைக்கொடி ஓரத்திலேதான் அவளை விட்டிருந்தார்கள். எத்தனை தடவை அந்த மல்லிகை மொக்குகளைப் பறித்திருக்கிறாள். அவள் பொன்னான கையாலே! குளத்தங்கரையெல்லாம், அவள் குழந்தையாயிருக்கிற போது அவள் பாதம் படாத இடம் ஏது, அவள் தொடாத மரமேது, செடியேது! ஐயோ, நினைக்க மனம் குமுறுகிறது. அந்த அழகான கைகள், அந்த அழகிய பாதங்கள், எல்லாம் துவண்டு, தோஞ்சு போய்விட்டன. ஆனால் அவள் முகத்தின் களை மாத்திரம் மாறவே இல்லை. பழையதுக்கக் குறிப்பெல்லாம் போய் முகத்தில் ஒருவித அத்தியாச்சரியமான சாந்தம் வியாபித்திருந்தது! இதையெல்லாம் கொஞ்சந்தான் கவனிக்கப் போது இருந்தது. அதற்குள்ளே, நாகராஜன் வ'றான், நாகராஜன் வ'றான், என்ற ஆரவாரம் கூட்டத்தில் பிறந்தது. ஆமாம், நிசந்தான், அவன்தான் தலைகால் தெரியாமல் பதைக்கப் பதைக்க ஓடி வந்துகொண்டிருந்தான். வந்துவிட்டான். மல்லிகை செடியண்டை வந்ததும், கும்பலையாவது, கும்பலில் இருந்த தாயார் தகப்பனாரையாவது கவனிக்காமல், ருக்மிணி, என்ன பண்ணிவிட்டாய் ருக்மிணி!''என்று கதறிக்கொண்டு கீழே மரம் போல் சாய்ந்துவிட்டான். கூட்டத்தில் சத்தம், கப் பென்று அடங்கிப் போய்விட்டது. எல்லோரும் நாகராஜனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ரொம்ப நாழி வரைக்கும் அவன் தரையில் ர்ச்கை போட்டே கிடந்தான். ராமசுவாமி ஐயர் பயந்து போய் அவன் முகத்திலே ஜலத்தைத் தெளித்து விசிறியால் விசிறிக்கொண்டிருக்கையில் அவனுக்குக் கடைசியாய் பிரக்கினை வந்தது. கண்ணை முழித்தான். ஆனால் தகப்பனாரிடத்தி லே ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ருக்மிணியின் உயிரற்ற சரீரத்தை பார்த்து, என்னுடைய எண்ணமத்தையும் பாழாக்கிவிட்டு ஜூலியத் மாதிரி பறந்தோடிபோய்விட்டாயே ருக்மிணி! ஸ்ரீநிவாசன் சொன்னது சரியாய் போய்விட்டதே! பாவி என்னால்தான் நீ உயிரை விட்டாய், நான்தான் உன்னைக் கொலைசெய்த பாதகன்! நேற்று நான் உன்னிடம் ரகஸ்யம் முழுவதையும் சொல்லியிருந்தால் இந்த கதி நமக்கு இன்று வந்திருக்காதே! குஸும ஸத்ருசம் ......ஸத்ய: பாதி ப்ரணயி ஹ்ரதயம்'' * என்கிற ஆழமான வாக்கியத்தை வேடிக்கையாக மாத்திரந்தான் படித்தேனேயொழிய அதன் சத்தியத்தை நான் உணரவில்லையே! இனிமேல் எனக்கென்ன இருக்கிறது? ருக்மிணி நீயோ அவசரப்பட்டு என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாய். எனக்கு இனிமேல் சம்சார வாழ்க்கை வேண்டாம். இதோ சன்னியாசம் வாங்கிக் கொள்ளுகிறேன்!'' என்று சொல்லிக்கொண்டே யாரும் தடுப்பதற்கு முந்தி தான் உடுத்தியிருந்த வேஷ்டியையும் உத்திரீயத்தையும் அப்படியே தாராய் கிழித்து விட்டான். அவன் தாயார் தகப்பனார் ஒருவரும் வாய் பேசவில்லை. நாகராஜனும் அவர்கள் திடுக்கிட்டதிலிருந்து சுதாரிச்சுக் கொள்ளுகிறதற்குள்ளே அவர்கள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு யாருடனும் பேசாமல் கௌபீனதாரியாய்ப் புறப்பட்டுப் போய்விட்டேன். இப்படி முடிந்தது என் ருக்மிணியின் கதை! என் அருமைக் குழந்தைகளே! பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்கு கொண்டுவந்து விடும் என்று யாரால் சொல்லமுடியும்? திதிதி *காளிதாசன், மேகஸமேதேசம் - பொருள்: பெண்ணியலாரின் அன்பு நிறைந்த இருதயம் பூப்போல மிகவும் மெல்லியது ; அன்புக்குக் கேடுவரின், உடனே விண்டு விழுந்துவிடும்.

People can raise their pain threshold by altering brain chemistry


Chronic pain -- pain which lasts for more than six months -- is a real problem for many people.
However, some people seem to cope better than others with pain, and knowing more about how these coping mechanisms work might help to develop new ways of treating this distressing symptom.
It has been known for a long time that we have receptors in our brains that respond to natural painkilling opiates such as endorphins, but the researchers in Manchester have now shown that these receptors increase in number to help cope with long-term, severe pain.
By applying heat to the skin using a laser stimulator, researchers showed that the more opiate receptors there are in the brain, the higher the ability to withstand the pain.
The study used Positron Emission Tomography (PET) imaging on 17 patients with arthritis and nine healthy controls to show the spread of the opioid receptors.
This suggests that the increase in opiate receptors in the brain is an adaptive response to chronic pain, allowing people to deal with it more easily.
“Although the mechanisms of these adaptive changes are unknown, if we can understand how we can enhance them, we may find ways of naturally increasing resilience to pain without the side effects associated with many pain killing drugs" said the author.

1930- 1990 வரை பிறந்த மிக மிக அதிர்ஷ்டகாரர்கள்

1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!
• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
• புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.
• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்..

வெயிலும் மழையும்

வெயிலும் மழையும்
கலந்து பொழிகையிலெல்லாம்
நினைவுக்குள் மொக்கவிழ்க்கிற
ஒரு மழை நாளின்
வெதுவெதுப்பும் 
வெயிலாடும் சிறு பூவும்
இப்போதும் சிலிர்க்கச் செய்கிறது
மரங்கள் அடர்ந்த மலைச்சரிவில்
பொழிந்த
குறிப்பிட்ட அந்த மழை
அப்படியிருந்தது
வெயிலோடு மினுங்கும்படி
பூவொன்றை மலர்த்தும்படி
இன்று
அப்படியான மழை இல்லை
வெயிலும் இல்லை
என்றபோதும்
மழை நனைத்த வெயில்
நினைவுக்குள் இதழ் விரிக்கிறது
வாசமாகவோ வலியாகவோ
பதிந்திருப்பவைகளுக்கு
பருவங்கள் ஏதும் இல்லையென
மீண்டும் உணர்கிறேன்.
Sakthi Jothi

Monday, October 26, 2015

500 வருடம் பழைமையான இங்கிலாந்து நாணயத்தில் சிவன் பார்வதி உருவம்

500 வருடம் பழைமையான இங்கிலாந்து நாணயத்தில் சிவன் பார்வதி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது... இஸ்ட் இந்தியா கம்பனியால் 1616 ஆம் ஆண்டு வெளியானது...

‘தில்லானா மோகனாம்பாள்’

நாதஸ்வர அறிஞர் காருகுறிச்சி அருணாசலத்தின் தீவிர ரசிகர் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். தன்னுடைய இசைக்கு சினிமாவில் ஒரு சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறு காருகுறிச்சி, ஏ.பி.என்.னிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து நாதஸ்வர இசையை பிரதானமாக கொண்ட திரைப்படம் ஒன்றினை இயக்க கதை தேடினார் ஏ.பி.என். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ கதையை படமாக எடுத்தால், அதில் காருகுறிச்சியின் இசையை பயன்படுத்த முடியும் என்று அவருக்கு தோன்றுகிறது.
கதையின் உரிமை ஆனந்த விகடன் அதிபரிடமே இருக்கிறது என்று தெரிந்துகொண்டு அவரை தொடர்பு கொண்டார். “நானே அதை படமா எடுக்கலாம்னு இருக்கேன்” என்று சொல்லிவிட்டார் வாசன்.

இதையடுத்துதான் ‘திருவிளையாடலை’ கையில் எடுத்தார் நாகராஜன். ‘திருவிளையாடல்’ வெளியானவுடன் ஏ.பி.என்.னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுகிறார் வாசன். இதுதான் சமயமென்று அவரிடம் மீண்டும் தில்லான மோகனாம்பாளை கேட்கிறார். மீண்டும் மறுக்கிறார் வாசன்.
வேறு வழியில்லாமல் ‘சரஸ்வதி சபதம்’ எடுக்கப் போய்விட்டார் ஏ.பி.என். இந்த படமும் சூப்பர்ஹிட் ஆக மீண்டும் வாசனை அணுகுகிறார். “வேணும்னா பார்ட்னர்ஷிப் போட்டு பண்ணலாமா?” என்று கொஞ்சம் இறங்கி வந்தார் ஆனந்த விகடன் அதிபர். ஏ.பி.என்.னுக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால், திரும்பவும் ‘திருவருட் செல்வர்’ செய்ய போய்விட்டார்.
அதுவும் வெளியான பிறகு, தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தனாக மீண்டும் வாசனிடம் வந்து, ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று இழுக்கிறார்.
வாசனுக்கு இம்முறை மறுக்க மனமில்லை. ஐந்து ஆண்டுகளாக ஒரு பெரிய இயக்குனர், இந்த கதையை கேட்டு திரும்பத் திரும்ப வந்து நிற்கிறாரே என்று ஆச்சரியம்.
“அந்த கதையை என்னாலே சரியா திரைக்கதை அமைக்க முடியலை. நீங்களே எடுத்துக்கங்க. ஒரு பத்தாயிரம் மட்டும் கொடுத்துடுங்க” என்றார். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு கதைக்கு இது பெரிய தொகைதான்.
ஐம்பதாயிரம் கேட்டாலும் கொடுக்க தயாராகதான் இருந்தார் ஏ.பி.என். உடனே ஒரு பத்தாயிரத்துக்கு செக் கிழித்து விஜயலட்சுமி பிக்சர்ஸ் சார்பில் கொடுத்துவிட்டார்.
அடுத்து கதை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை தேடிப் போனார். சுப்பு அப்போது கண் அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்தார். மருத்துவமனையில் தேடிப்போய் ஒரு தொகையை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினார் நாகராஜன். “இந்த காலத்துலே அதுவும் சினிமாத்துறையிலே இப்படிப்பட்ட ஆளா இருக்கியேய்யா... உன் படம் நல்லா வரும்” என்று வாழ்த்தினார் சுப்பு.
ஏ.பி.என். கொடுத்த தொகையை வாங்க மறுத்து, ”என் கதைக்கு எனக்கு ஏற்கனவே சம்பளம் வந்தாச்சி” என்றார்.
இவருக்கு ஆச்சரியம். எப்படி என்று கேட்டபோது பாக்கெட்டில் இருந்த செக்கை எடுத்து நீட்டினார். இவரிடம் வாசன் வாங்கிய செக், அப்படியே சுப்பு பெயருக்கு endorse செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும் ஏ.பி.என். தன் திருப்திக்காக வற்புறுத்தி சுப்புவுக்கு ஒரு பெருந்தொகை கொடுத்தார்.
எந்த காருகுறிச்சிக்காக ‘தில்லானா மோகனாம்பாள்’ எடுத்தே ஆகவேண்டும் என்று ஏ.பி.என். அடமாக நின்றாரோ, அந்த காருகுறிச்சி ’தில்லானா மோகனாம்பாள்’ வெளிவருவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பே காலமாகிவிட்டார்.
படம் பிரமாதமான வெற்றியை பெற்றபிறகு அதற்கான கிரெடிட்டை ஏற்றுக்கொள்ளவும் ஏ.பி.என். மறுத்துவிட்டார். “அந்த கதையில் நடித்த நடிக நடிகையரின் வெற்றி அது” என்றார்.
அந்த காலத்தில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பெருந்தன்மை காட்டுவதில்தான் போட்டியாக இருந்திருக்கிறார்கள்.

அப்துல் கலாமின் தாயார் உண்மையிலேயே அரிய புகைப்படம்

அப்துல் கலாமின் தாயார், பொட்டு வைத்திருப்பதால் உண்மையிலேயே அரிய புகைப்படம் 

KILL BILL (கில் பில்):


கத்தியின்றி, துப்பாக்கியின்றி ரத்தம் வழிய வேண்டுமா? ஹாலிவுட் சூப்பர்
இயக்குனர் என்று வருணிக்கப்படும் குவெண்டின் டேரன்டினோவின் கில் பில் பார்த்தால் போதும். படம் முடியும்போது நிச்சயம் உங்கள் சட்டை முழுவதும் ரத்தம் படிந்திருக்கும். ஏனென்றால் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை, திரை முழுவதும் ரத்தம் தெறித்துக்கொண்டே இருக்கும்.
டைட்டானிக் படம் பார்த்தால் உடனே யாரையாவது காதலிக்கத் தோன்றும். சைனீஸ் டைப் சண்டை படம் பார்த்தால் உடனே குங்பூ கற்றுக்கொண்டு யாரையாவது அடிக்கத் தோன்றும். இந்த கில் பில் பார்த்தால்… இன்னும் நாம் உயிரோடு இருக்கிறோமா என்று தலையையும் கையையும் தொட்டு உறுதிப்படுத்தவும், கையாலாகாத குற்றவுணர்ச்சியும் தோன்றும்.

ஆரம்பமே அமர்க்களம், அதிரடி என்றெல்லாம் பார்த்திருப்போம். இது ஆரம்பமே உவ்வேக். ரத்தக் கோரமாக சிதைக்கப்பட்ட உமா தர்மன் முகத்தை டிஷ்யூ பேப்பரை வைத்து துடைக்கிறான் பில். நீ என்னை சாடிஸ்ட் என்று தவறாக எண்ணிவிடாதே என்று சமாதானம் சொன்னபடி துப்பாக்கியை எடுக்கிறான். என் வயிற்றில் உன் குழந்தை வளர்கிறது என்று உமா தர்மன் சொல்வதை கண்டுகொள்ளாமல் சுட்டுவிடுகிறான் பில். இது ஒரு பாகமாக சொல்லப்படுகிறது.
திடீரென மஞ்சக்கலர் காரில், மஞ்சக்கலர் டிரஸ் போட்டு ஒரு பெண்ணின் வீட்டுக்கு வருகிறாள் உமா. இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததும் முடியை பிடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார்கள். அந்த நேரம் பள்ளி பஸ் வந்துவிடவே, அந்தப் பெண்ணின் குட்டிப்பெண் வீட்டுக்குள் நுழைகிறாள். சண்டையினால் அமளிதுமளியாகிக் கிடக்கும் வீட்டைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறாள். சின்னப் பெண்ணின் முன்பு சண்டை போடவேண்டாம் என்று அவள் அறைக்குப் போகும் வரையிலும் காத்திருக்கிறார்கள். அவள் போனதும் உமாவை அந்தப் பெண் கொல்வதற்கு முயல, கத்தியை வீசி அவளை கொன்றுவிடுகிறாள். அதனை குட்டிப்பெண் பார்த்துக்கொண்டே இருக்கிறது. இது ஒரு பாகம்.
திருமணம் நடக்க இருந்த நேரத்தில் திடுமென ஏழெட்டு பேரை கொன்று போட்டிருக்கிறது பில்லின் அதிரடி படை. அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று சுற்றிலும் கோடு போட்டு இன்வெஸ்டிகேஷன் செய்யும்போதுதான், மணமகளாக இருக்கும் கர்ப்பிணி பெண் உமா தர்மன் இன்னமும் சாகவில்லை என்று தெரியவருகிறது.
இப்போது உமா தர்மன் ஆஸ்பத்திரியில் நான்கு வருடங்களாக கோமா நிலையில் இருக்கிறாள். அவளை கொல்வதற்கு பில்லின் அடிமை ஒருத்தி வருகிறாள். துர்மனை கொலைசெய்ய முயற்சிக்கும் நேரம், பில் போன் செய்து தடுத்து நிறுத்துகிறான். இந்த நேரத்தில் அவளை கொன்றுவிட்டால் நிம்மதியாக செத்துவிடுவாள். அதற்கு நாம் அவளை அனுமதிக்கக்கூடாது. அவள் திரும்பி எழுந்துவரட்டும், ரசித்து ருசித்து கொலை செய்வோம் என்கிறான். இது ஒரு பாகம்.
நான்கு ஆண்டுகள் கழித்து கோமா நிலையில் இருந்து கண் விழித்து எழுகிறாள் உமா தர்மன். தலையில் குண்டு துளைத்த இடத்தில் இரும்பு பிளேட் வைத்திருப்பது தெரிகிறது. யாரோ வரும் சத்தம் கேட்க… விழிப்பு வராதவள் போல் அமைதியாக படுத்துக்கொள்கிறாள். ஒரு மனிதனை உள்ளே அனுப்பும் ஆஸ்பத்திரி வார்டுபாய், உன்னுடைய இஷ்டம் போல் அவளை அனுபவித்துக்கொள் என்று அனுப்பி வைக்கிறான். இத்தனை அழகியான ஒருத்தியை (உமா தர்மனை அழகி என்று சொன்னதற்காகவே இவனை கொலை செய்யலாம்) அனுபவிக்கப் போகிறேன் என்று உமாவின் முகத்திற்கு அருகே செல்ல, படக்கென்று எழுந்து அவன் உதட்டையும் நாக்கையும் கடித்துத்துப்பி, கழுத்தையும் கடித்து தன்னையும் அவனையும் ரத்தாபிஷேகம் செய்து கொலை செய்கிறாள். அடுத்து உள்ளே வந்து எட்டிப்பார்க்கும் வார்டுபாயை, கதவு இடுக்கில் அடித்து அடித்து நசுக்கியே கொலை செய்கிறாள். இது ஒரு பாகம்.
தன்னை கொலை செய்த பில் மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த நான்கு பேரையும் பழிவாங்க வேண்டும் என்று கிளம்புகிறாள் உமா. சைனாவுக்குச் சென்று ஒரு மாதம் தங்கியிருந்து அபாரமான ஒரு கத்தியை வாங்கிக்கொள்கிறாள். ஜப்பானுக்குச் சென்று அங்கே இருக்கும் ஓ-ரென் இஷ்லியை (லூசி லியு) கொல்வதற்கு ஒற்றை மனுஷியாக கிளம்புகிறாள்.
இந்தப் படத்தில் ஒரே ஒரு அழகு தேவதையாக வரும் ஷோபியின் (ஜூலி டிரஃபஸ்) கையை தோள்பட்டைக்குக் கீழே வெட்டி எறிந்து ஆட்டத்தை தொடங்கிவைக்கிறார். ஒற்றைக் கையில் இருந்து பீய்ச்சியடிக்கும் ரத்தம் கூரையைத் தொடுகிறது. அதன்பிறகு தங்கள் தலைவி ஓ-ரென்னை காப்பாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான அடிமைகள் வந்து, அத்தனை பேரும் வெட்டுப்பட்டு ரத்தம் ரத்தமாக சிந்துகிறார்கள். இந்த சண்டையில் ஏகப்பட்ட தலைகள் உருளுகின்றன, கைகள் வெட்டப்படுகின்றன, கண்கள் சிதறுகின்றன, ரத்தம் நீருற்று போல் பீய்ச்சி பீய்ச்சி அடிக்கிறது. அதாவது கொலை செய்வதை கலை போல் காட்டியிருக்கிறாராம். ஒரு வழியாக அத்தனை பேரையும் கொன்றுவிட்டு ஓ-ரென்னுடன் சண்டை போடுகிறாள்.
மற்றவர்களை கொன்றுவிட்டதைப் போல் அவளையும் கொன்றுவிட்டால் அத்தனை நன்றாக இருக்காதே… அதனால் அவள் தலையை மூளை வெளியே தெரியும் அளவுக்கு மட்டும் வெட்டி எறிகிறாள். நுங்கு எடுப்பதற்காக பனங்காயை சீவியது போல் மூளை வெளியே தெரிவதை அழகியல் காட்சியாக தந்து ரசிக்க வைக்கிறார். இது ஒரு பாகம்.
சுருக்கமாகவும் இந்தப் படத்தின் கதையை சொல்லலாம். பில்லின் கூட்டாளியாக பணிபுரிந்து அவன் காதலியாக மாறியவள் உமா தர்மன். திடீரென நல்லவளாக மாறி அதாவது பழைய வாழ்க்கையில் இருந்து வெளீயேறி வேறு ஒருவனுடன் திருமணம் முடிக்க இருக்கும் நேரத்தில், அத்தனை பேரையும் சுட்டுப் போடுகிறான் பில். அப்போது கோமாவில் விழுந்துவிட்ட உமா தர்மன், விழிப்பு வந்ததும் அத்தனை பேரையும் பழிவாங்க முடிவெடுக்கிறாள். இதனை எப்படி முடிக்கிறாள் என்பதைத்தான் தனக்கேயுரிய கொடூர புத்தியுடனுடன் குண்டக்கமண்டக்க நான்லீனியர் திரைக்கதை உத்தியைக் காட்டியும் இயக்கியிருக்கிறார் குவெண்டின்.
இந்தப் படத்தை யாரும் பார்க்காமல் இருப்பது நலம். அப்படி பார்த்தே தீரவேண்டும் என்றால் குழந்தைகளுக்குத் தெரியாமல் பார்க்கவும். ஏனென்றால் இந்தப் படத்தில் தெறிக்கும் ரத்தத்தைப் பார்த்து, குழந்தைகளுக்கும் ரத்தம் பார்க்கும் ஆசை வரலாம். தூங்கும்போது உங்கள் கழுத்தை அறுத்து ரசிக்கலாம்.
ஒரே பாகமாக எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டு படமாக்கப்பட்ட கில் பில், நான்கு மணி நேரத்தைத் தாண்டும் அளவுக்கு வந்துவிட்டது. அதனால் இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டது. முதல் பாகம் 2003-ம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2004-ம் ஆண்டும் வெளியானது. மக்கள் மனதில் வன்முறையும் ரத்தத்தைப் பார்க்கும் ஆவலும் பெருகிவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, இரண்டு படமும் ஹிட்.
கா.அருண் பாண்டியன்.
It's a story of revenge: the traditional perfunctory pretext for martial arts - a unidimensional narrative motivation. Uma Thurman has never looked better than here, as the Bride, who, demure and pregnant in white, takes a bullet in the head on her wedding day, an attempted whack by her former associates under the control of our eponymous bad guy. They are Darryl Hannah, Lucy Liu and Vivica A Fox: not so much Charlie's Angels as Bill's Devils. (But who is the Groom, that unfortunate man whom the Bride appears to have deceived in the profoundest way possible? This may or may not be revealed in Volume 2.)
She awakens from her coma with none of the speech and motor-skill problems associated with serious head injury. A brief sojourn in a wheelchair triggers off the opening bars of the Ironside theme on the soundtrack, but she makes her legs work through sheer willpower. Uma has a fearsome samurai sword, fashioned for her in Okinawa by the Japanese master Hattori Hanzo (Chiba), and sets off on her blood-splattered odyssey in this through-the-looking-glass world where people fight without encountering guns or cops - a world perhaps inspired by British Hong Kong, where weapons were not as current as in the United States. Uma takes her sword into the plane as carry-on, and actually has it propped insouciantly next to her seat! Airport security presumably confiscated her tweezers and manicure scissors.


A superb, virtuoso anime -style sequence introduces her first enemy: the yakuza boss O-Ren Ishii (Liu), with whom she has a monumental showdown in a Tokyo nightclub. Tarantino shows us this happening after her second kick-ass confrontation with Vernita Green (Fox) in Pasadena, California leading to a horrible denouement - in parallel to O-Ren's early life - and the Bride solemnly offers a little girl her own future chance for violence. This is the movie's steeliest and most insolent provocation, and it has already moved Variety magazine to suggest it's obvious that Tarantino does not have children of his own. But all the violence is just too cartoonishly absurd to be culpable in that sense.
Outrageous and trashy it may be: but how many commercial American movies get to be set outside America with whole stretches of subtitled non-English dialogue? This is world cinema without the po-face. Weirdly, arthouse master Tsai Ming-Liang's forthcoming Goodbye Dragon Inn has a comparable reverence for classic Asian martial-arts pulp-celluloid, complete with appearances from its ageing stars. 

Remote-Controlled Mice

In vivo pharmacology and optogenetics hold tremendous promise for dissection of neural circuits, cellular signaling, and manipulating neurophysiological systems in awake, behaving animals.
Existing neural interface technologies, such as metal cannulas connected to external drug supplies for pharmacological infusions and tethered fiber optics for optogenetics, are not ideal for minimally invasive, untethered studies on freely behaving animals
.
Researchers introduce wireless optofluidic neural probes that combine ultrathin, soft microfluidic drug delivery with cellular-scale inorganic light-emitting diode (μ-ILED) arrays.
Click the link below to read more:
http://sciencemission.com/site/index.php…

Powerful plastic microscope for diagnostics

In a project funded by the Bill and Melinda Gates Foundation's Grand Challenges in Global Health Initiative, a research team from Rice University has recently developed a plastic, miniature digital fluorescence microscope that can quantify white blood cell levels in patients located in rural parts of the world that are far removed from the modern laboratory.
The fluorescence microscope system was described in a paper published in Biomedical Optics Express.
Click the link below to read more:
http://sciencemission.com/site/index.php…

Sunday, October 25, 2015

Contemporary Single Storey House






புராதன இலங்கை

தற்காலத்தில் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். ஆனால் அதிபூர்வீக இலங்கையில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். அவர்களது சமயம் சைவசமயமாகவே இருந்தது. இராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள் வாயிலாககும் புராணங்கள் வாயிலாகவும் இவ்வுண்மை அறியக் கூடியதாக இருக்கின்றது..எனவே இலங்கை தமிழரின் முதுசொத்து எனலாம். இதுயாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும்.
தோற்றுவாய்
அகத்திய முனிவர் இலங்கையின் பூர்விகம் பற்றி இராமனுக்குச் சொல்லுகின்ற பாங்கிலே இதன் மூல நூல் அமைந்தமையால் அதற்கு ஷஅகத்தியர் இலங்கை” எனப் பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் தமிழர் கண்டம் என்பதாகும். இதுவே பிற்காலத்தில் தமிழகம் என அழைக்கப்பட்டது. மிகப் புராதன காலத்தில் தமிழகத்தில் வாழ்தவர்கள் தமிழர்கள் மட்டுமே. ஆட்சி புரிந்த அரசர்கள் தமிழர். அவர்களது நெறி சைவநெறி. மொழி தமிழ். அக்காலத்திலுருந்தே தமிழர்கள் மிக முன்னேற்றமுள்ளவர்களாக விளங்கினார்கள். கமத்தொழில், கைத்தொழில் இரண்டையுமே இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தார்கள்.
அரசர்களோ நீதி வழுவா நெறிமுறையில் ஆட்சி புரிந்தனர். மக்களும் தென்புலத்தார், தெய்வம், விருந்து, தான் என்னும் பலமும் ஓம்பி வாழ்ந்து வாந்தனர். பிராமணர்கள், அரசர்கள், வைசியர் எனப்படும் வர்த்தகர்கள், வேளாண்மக்கள் எனப்படும் கமக்காரர் ஆகியோர் தமக்குரிய கடமைகளின்றும் வழுவாது ஒழுகிவந்தனர். அரசனது ஆணைகள் இவற்றுக்கு வழிவகுப்பதாய் அமைந்திருந்தன. இதன் பலனாக மாதம் மூன்று மழை பெய்தது. நீர்வளம் பெருகியது. நிலவளமும் பெருகியது.  உணவு உடை உறையுள் ஆகிய மனிதனின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. பசியால் மெலிபடைபவர்களோ, பிணியால் நலிவடைபவர்களோ மிக மிக அரிதாகவே காணப்பட்டனர். இத்தகையதோர் ஒப்பற்ற சமுதாயம் நிலவிய தமிழகத்தை அவ்வப்போது ஆட்சி புரிந்த தமிழரசர்கள் உருவாகினர்ர்கள்.
இவ்வாறு தமிழகத்தைச் சிறப்பாக ஆட்சி புரிந்த அரசர்களுள் மனு என்னும் அரசனும் ஒருவனாவன். இவன் தமிழன். இந்த மனு அரசனுக்கு தமிழர் வரலாற்றில் முதன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் நெப்போலியன் போர்ன்பாட் என்பவனால் உருவாக்கப்பட்ட சட்டவாக்கங்கள், பிற்காலத்திலும் இக்காலத்திலும் எழுந்த சட்டவாக்கங்களுக்கு எவ்வாறு அடித்தளமாக அமைந்தனவோ அது போலவே புராதன காலத்தில் மனு அரசன் எழுதிய சட்டவாக்கமும் அவனைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் சட்டவாக்கங்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது எனலாம்.
மனுதர்ம சாத்திர நூலும் இவ்வகையில் உருவானதே எனலாம். இந்த மனுசக்கரவர்த்தியானவன் தானுருவாக்கிய நீதி நெறியின் படியே ஆட்சியும் புரிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதி வேறுபாடு காட்டுதல் போன்ற அநாகரிகமான சட்டங்கள் அவனது நீதிநூலில் இடம் பெறவில்லை என்பதும், ஆனால் சுயநலவாதிகளும் சாதியின் பெயரால் தம்மைப் பெரியவர்களாகக் காட்டிக் கொண்டவர்களும் அதனால் தம்மை வளர்த்துக் கொண்டவர்களுமே இந்த அநாகரிகமான சட்டத்தை இந்நூலில் புகுத்தி இந் நூலுக்கு இழுக்குத் தேட முற்பட்டனர். இந்த உண்மையை நாம் உணர்ந்து தெளிவு பெற வேண்டும். இந்த மனு சக்கரவர்த்தி தமிழகத்தை நாற்பத்து நான்கு வருடங்கள் ஆட்சி புரிந்தான்.
இந்த மனுசக்கரவர்த்திக்கு ‘சமன்” என்னும் புத்திரனும் ‘ஈழம்” என்னும புத்திரியும் பிறந்தார்கள். மனுவின் பின் தமிழகம் இந்த இருவராலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. தென்னகத்தை மகனாகிய சமனும், அவனது சந்ததியினரும், வடபாகத்தை மகளாகிய ஈழமும் அவளது சந்ததியினரும் ஆண்டு வந்தனர். மனுவின் மகளாகிய ஈழம் என்பவளுக்கு குமரி என்று வேறு பெயரும் உண்டு. குமரி என்று அழைக்கப்பட்ட இந்த மனுவின் மகள் ஆட்சி புரிந்த பகுதி குமரிக்கண்டம் எனப்பட்டது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இந்த நான்கு மண்டலங்களும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாகவே இருந்தன. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட ஈழ மண்டலத்தை ஏனைய மூன்று மண்டலங்களிருந்து பிரித்து விட்டன.
எனினும் ஈழமண்டலமாகிய இலங்கையில் தமிழரே வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில்தான் தமிழலரல்லாதோர் இங்கு வந்து குடியேறினர் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே தமிழர்கள் இலங்கையில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் நாகரீக வளர்ச்சி பெற்றவர்களுமான ஓர் இனமாக வாழ்ந்து வந்தனர்.
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலைநகராகி விளங்கியது. பிற்காலத்தில் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதி கடல் கொள்ளப்பட்டது. இக்கடல் கோல்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் பல தமிழ் சங்க மண்டபங்கள், அவைகளில் இருந்த இலக்கண இலக்கிய நூல்கள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.
விஜயன் இலங்கையில் காலடி வைத்த பின்பே இலங்கையில் சிங்கள இனம் தோன்றியது. இந்த விஜயன் யார் ? இவன் இலங்கைக்கு எவ்வாறு வந்தான் என்பன ? பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
சிங்கள இனத்தின் தோற்றம்
வட இந்தியாவில் “லாலா” என்று ஒரு நாடு அதனைச் சிங்கபாகு என்பவன் ஆட்சி புரிந்தான். இவனது தந்தை சிங்கன் என்பவன் ஆவான். சிங்கனைப் பற்றிய பலவித புனை கதைகள் உண்டு. மிருக இராசவாகிய சிங்கமே இவன் என்பது அவற்றுள் ஒன்று. சிங்கத்தில் இருந:து வந்த சந்ததியினரே சிங்களவர் என்றும் சொல்லப்படுகின்றது. இதனாலேயே சிங்கள மக்களின் தேசியக்கொடி சிங்கமாக இருக்கின்றதென்றும் சொல்வாரும் உளர். இவையெல்லாம் ஆதாரமற்ற வெறும் ஐதீகங்களே என இவற்றை இவ்வளவில் விட்டு விடுவோம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிங்கபாக ஆசியவம்சத்தை சார்ந்தவன். வடஇந்தியாவில் இமயமலை அடிவாரம் வரை ஒரு காலத்தில் திராவிட இனம் வாழ்ந்து வந்தது என்றும் அந்தத் திராவிடரைத் துரத்திவிட்டு வந்து குடியேறிய நாடோடி மக்களே ஆசியராவர். இவர்கள் மெல்லிய சிவந்த மேனியைக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு நிரந்தரமான வதிவிடங்களோ நிலங்களோ இருக்கவில்லை. இவா்கள் அடிக்கடி கைபர்கணவாய் வழியாகத் திடீர் திடீரென இமய மலையின் தென்பகுதிக்குள் நுழைந்து அங்கு வாழ்ந்து வந்த திராவிட மக்களுக்குத் தொல்லை கொடுக்கு அவர்களது பொருட்களையும் உணவுப்பண்டங்களையும் மந்தைகளையும் அபகரித்து சென்று அதன் மூலம் வாழ்க்கையை நடாத்தி வந்தவர்கள். இவர்களது தொல்லை பொறுக்க முடியாமலே வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிடமக்கள் மெது மெதுவாகத் தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். ஆரியர் திராவிட மக்களைத் துரத்தி விட்டு அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் வந்து குடியேறினர். தம்மை ஆரியர் எனக்கூறி சிங்களவரும் இதனைத்தான் இங்கு செய்கின்றனர். இந்த அநாகரீகமான மக்களே ஆரியர்.
இத்தகைய ஆரிய வம்சத்தைச் சார்ந்தவன்தான் சிங்கபாகு ஆவான். அவனின் மைந்தனே விஜயன் ஆவான்.விஜயனின் சந்ததியினரே சிங்களவர்கள். எனவே சிங்களவரும் ஆரியர்களே. தமிழர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வகையிலேதான் இலங்கையில் வாழ்கின்ற ஆரியர்களாகிய சிங்களவர்களுக்கும் திராவிடர்களாகிய தமிழர்களுக்கும் ஒத்துப் போவதில்லை என்பது புலனாகின்றது.  சிங்கபாகுவின் மைந்தனாகிய விஜயன் இளவரசனாக இருந்த பொழுது அவனுக்கு எழுநூறு பேர் தோழர்கள் இருந்தார்களாம். விஜயன் இளவரசனாக இருந்தமையால் அவனுக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. அதனாலே அவனுக்கு எழுநூறு பேர் தோழராயினர். இந்த விஜயனும் இந்த தோழர்களும் நினைத்தவற்றையெல்லாம் செய்தார்கள். நாகரீக சமுதாயத்திற்கு ஒவ்வாத காரியங்களை எல்லாம் இவர்கள் மிகமிக விருப்பமாகச் செய்தார்கள். தந்தை சிங்கபாகுதான் தட்டி கேட்க வேண்டியவன். அவனாலும் தட்டிக் கேட்க முடியவில்லை. அவன் அந்த நாட்டின் அரசனாக இருந்தமையினால் அந்த நாட்டின் மக்களின் நன்மைக்காகத் தன் மகனேன்றும் பராது அவனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் நாடுகடத்த விரும்பினான். அவர்கள் அனைவரையும் ஒரு பாய் கப்பலில் ஏற்றி வங்கக் கடலில் அலையவிட்டான். அக்கப்பல் காற்றினால் அள்ளுண்டு அவர்களைக் கொண்டு வந்து எனது ஈழத்திருநாட்டில் மாந்தை நகரில் ஒதுக்கிவிட்டது.
வந்தாரை வரவேற்று உபசரிக்கும் தமிழர்களின் பண்பாட்டுக்கமைய வந்தாரை வாழவைத்தாள் ஒருத்தி. அவள்தான் இலங்கையில் அந்நாள் அரசி குவேனி என்பாள். அவள் ஒரு தமிழ் அரசி, அவள் வந்தவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தாள். விஜயனின் அழகில் மயங்கி தன்னையே கொடுத்து விட்டாள். அத்தோடு இலங்கையில் தமிழர்க்கு இருந்த இறைமையையும் கூடவே தரைவார்த்துக் கொடுத்து விட்டாள். இத் தொடர்பினால் விஜயன் இலங்கையின் இலங்கையின் ஆட்சியுரிமையை இலகுவில் பெற்றுக் கொண்டுவிட்டான். ஆட்சியுரிமையை தந்திரமாக கைப்பற்றிக் கொண்ட விஜயன் தன் காரியம் முடிந்ததும், தனது அதிகாரதுக்கு உதவிய மனைவி குவேனியையும் பிள்ளைகளையும் அடித்து துரத்திவிட்டான்.
குவேனியைத் துரத்திய பின் இவனும் இவனது தோழர்கள் ஏழுநூறு பேரும் பாண்டிய நாட்டிலுள்ள நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அழகுடையவர் ஆகிய தமிழ்ப்பெண்களை வரவழைத்துத் திரமணஞ் செய்த கொண்டனர். இவர்களது சந்ததியினரே இன்று இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர் ஆவர். அன்று அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருந்த விஜயனும் அவனது தோழர்களினது சந்ததியினரும் ஏற்கனவே இங்கு வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களோடு திருமணம் செய்து கலந்து கொண்டனர்.
இவர்களது சந்ததியாரும் சிங்களவராயினர். இவ்வகையிலும் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராகப்பட்டனர். இவ்வாறு தமது தனித்துவத்தையும் பண்பாட்டையும் கைவிட்டுச் சிங்களவர்களாக மாறிய தமிழர்களே தமது தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வருகின்ற உண்மையான தமிழர்களுக்கு எதிராகத் கிளம்பி இலங்கை சிங்களவருக்கு மாத்திரமே உரியதென்று விதண்டாவாதம் பேசுகின்றனர். கூப்பாடு போடுகின்றனர். எஞ்சிய தமிழர்களையும் சிங்களவர் ஆக்க முனைகின்றனர். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள். இலங்கையின் சுதேசிகள் தமிழர்கள். விஜயன் வழி வந்தவர்கள் அந்நியர்.  இத்தகையோர் இலங்கைக்குத் தாம் மாத்திரமே உரிமையுடையோம் என்றும், தமிழர்களுக்கு எவ்வித உரிமை இல்லை என்றும், சிங்களப் பொது மக்களிடையே பிரச்சாரஞ் செய்து வருகின்றனர். துட்டகைமுனுவின் தாயாகிய விகாரமகாதேவியும் இதனையே செய்தாள். இதனால்தான் துட்டகைமுனு தமிழருக் கெதிராகக் கிளர்ந்து எழுந்தான்.
தமிழர் படையுடன் நேர் நின்று யுத்தம் புரிய முடியாத துட்டகைமுனு கபட நாடகமாடி மனுநீதி தவறாது செவ்வனே ஆட்சி புரிந்த தமிழரசனாகிய எல்லாளனைக் கொன்றான். இளைஞனாகிய துட்டகைமுனு கிழவனாக இருந்த எல்லாளனைத் தனிப் போருக்கு அழைத்துப் போர்புரியும் வேளை எல்லாளனது பட்டத்து யானை போரில் கால் தடுக்கி விழ ஈட்டியால் குத்திக் கொன்றான். இத்தகைய வாரலாற்று உண்மையை இன்றைய எம் நிலைகளோடு ஒப்பிட்டு நோக்கிச் செயற்பட வேண்டியது ஈழத்தமிழராகிய எம் கடனாகும்.
பரதன் என்னும் தமிழ் அரசன்
குமரியின் சந்ததியில் தோன்றிய தமிழ் அரசர்களுள் பரதனும் ஒருவன். இந்தப் பரதன் குமரிகண்டத்தை நாற்பது வருடங்களாக ஆட்சி புரிந்தான். ஒரு தாயானவள் தனது பிள்ளைகளை எல்வளவு கரிசனையுடனும் அன்புடனும் பராமரிப்பாளோ அது போலவே பரதனும் தனது குடிமக்களையும் பராமரித்தான். இதனால் அவனது குடிமக்கள் அவளை மிகவும் நேசித்தார்கள். அது மாத்திரமன்றி இக் குமரிகண்டமானது பரதனது திறமையான ஆட்சி முறையினால் பலவகைகளிலும் சிறப்புற்று விளங்கிற்று. இக்காரணங்களினால் அவன் ஆட்சி புரிந்த நிலப்பரப்பாகிய குமரிக் கண்டமே பரதகண்டமென வழங்கப்படலாயிற்று.
இப்பரத கண்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அந்நிய நாட்டினர் பலவாறு அழைத்தனர்.                             அவை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என்பனவாகும். இராமாயணத்தில் தமிழர்களை வானரர் (குரங்குகள்) என்றும் இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர். அனுமான் சுக்கிரீவன் வாலி போன்ற பலம் பொருந்திய திறமைமிக்க போராளிகளை குரங்குகளின் அரசர்கள் என்றும் இலங்கையை ஆண்ட ஒப்புயர்வற்ற சிறந்த அரசனாகிய இராவணன் தமிழன் என்ற காரணத்தால் அவனையும் அவனது இனத்தினரையும், நரமாமிசம் புசிக்கின்ற இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர். உண்மை அவ்வாறு அன்று. இராமன் இலக்குமணன் போன்ற திராவிடர்கள் (தமிழர்கள்) பலசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் சித்துக்களில் வல்லவர்களாவும் விளங்கினர் என்பதே உண்மை.
உண்மையில் இவர்கள் அவர்கள் குறிப்பிடுவது போன்று குரங்குகளோ, இராட்சதர்களோ அல்லர். சிறப்புற்று விளங்கிய தமிழர்களோயாவர். இவ்வாறு அந்நியர்களால் பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்ட போதிலும் எல்லோரும் சமத்துவம் உடைய தமிழர்களேயாவர்.
அன்று வாழ்ந்த தமிழ் மக்கள் தம்மிடையே உயர்வு தாழ்வு காட்டுவதில்லை. ஒருவருடைய பிறப்பினைக் கொண்டு அவரின் உயர்வு தாழ்வுகளைக் கணிக்காது அவரவரின் சிறப்பினைக் கொண்டே, செயற்பாடுகளைக் கொண்டே கணித்தனர். ‘இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்”என்னும் ஒளவை வாசகங்களும் இவ்வகையில் எழுந்தனவே. செயற்கரியனவற்றைச் செய்பவர்கள் பெரியோர் என்னும் செயற்கரியன செய்ய முடியாதவர்கள் சிறியோர் என்றும் வள்ளுவன் வாய்மொழியும் இதனையே தெளிவுபடுத்துகின்றது.
இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி
சுகேசனின் ஆட்சி
சுகேசன் தெய்வதி என்னும் அரச குமாரியை விவாகஞ் செய்து மாலியவான், மாலி என்னும் புத்திரர்களைப் பெற்றான். சுகேசனின் ஆட்சி மிகவும் மெச்சத்தக்தாக அமைந்திருந்தது. இவன் கிராமங்கள் தோறும் ஆலயங்களை அமைப்பித்தான். பல வீதிகளைப் புதிதாக உருவாக்கினான். பழைய வீதிகளைப் புதிப்பித்தான், காடுகளை அழித்து நாடுகளாக்கினான். விவசாயத்தை விருத்தியடையச் செய்தான்.
குளங்கள், கால்வாய்கள் பல வெட்டியும் புதுப்பித்தும் பயிர்ச் செய்கைக்கு உதவியளித்தான். நூல் நூற்றல், ஆடை நெய்தல் ஆகிய கைத்தொழில்களையும் விருத்தி பண்ணினான். வைத்தியரையும் வைத்திய நூல்களையும் ஆதரித்ததோடு பல வைத்தியசாலைகளிலும் நிறுவினான். பல பாடசாலைகளை அமைத்தான். பல தமிழ்ச்சங்கங்களையும் உருவாக்கினான். இவன் காலத்தில் தமிழ் மொழியில் எல்லாத் துறைகளிலும் நல்ல நல்ல நூல்கள் எழுந்தன. நீதி பரிபாலனமும் செவ்விதாய் அமைந்திருந்தது. சுகேசன் நாற்பத்தொரு வருடங்களும் ஏழுநாட்களும் ஆட்சி புரிந்த பின் தனது மூத்த புத்திரனாகிய மாலியவானை இலங்கைக்கு அரசனாக்கி காட்டுக்கு சென்றான்.
மாலியவான் ஆட்சி
தமிழ் அரசனாகிய மாலியவான் நாகதீவுக்கு அரசனாகி இலங்காபுரம் என்னும் நகரத்தை அழகாக கட்டுவித்து, அதைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை என்னும் நாகதீவை ஆண்டான். இவன் கட்டுவித்த அரண்மனைகளும் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் விலையுர்ந்த இரத்தினக் கற்களாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டன. இவனது முடியின் மீது பத்துக் கிரீடங்கள் அமைந்திருந்தன. இவனுடைய சிங்காசனமும் வாளும் முடியும் செங்கோலும் கட்டிலும் நவரத்தினங்களாலும் முத்துகளாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. அக்காலத் தமிழர்களில் பலர் எல்லா வசதிகளும் ஒருங்கே அமைந்த பல அடுக்கு மாளிகைகளில் வாழ்ந்தனர்.
இவனது முடியை அலங்கரித்துக் கொண்டிருந்த பத்து கிரீடங்களும் பத்து நாடுகளுக்கு இவன் அதிபதி என்பதை எடுத்து காட்டுகின்றன. இவன் இருபத்தொரு வருடங்கள் இலங்கையை மகோன்னதமாக ஆட்சி புரிந்து வந்தான். மாலியவான் இறந்த பின்பு அவனுடைய தம்பியாகிய சுமாலி என்பவன் ஆட்சி புரிந்தான். இவன் மாந்தையிலிருந்தும் இலங்காபுரத்தில் இருந்தும் அரசான்டான். சுமாலி கேதுமதியை மணந்து ஒரு மகளைப் பெற்றேடுத்தான். அவளின் பெயர் கைகேசி என்பதாகும். சூரியப் பிரகாசம் என்னும் ஆகாய விமானத்தை அவன் வைத்திருந்தான்.
சுமாலியின் ஆட்சி முன்னையவர்களது ஆட்சி போன்று அத்துனை சிறப்பாக அமையாமையால் அவனால் ஐந்தரை வருடங்களும் மூன்றரை மாதங்களுமே ஆட்சி புரிய முடிந்தது. மக்கள் கிளர்ச்சி செய்து அவனை சிங்காசனத்தில் இருந்து நீக்கி விட்டனர். இவனது ஆட்சியில் வெறுப்படைந்த தமிழ்மக்கள் பாண்டி நாடு, சேரநாடு, சோழ நாடு முதலிய தமிழ் நாடுகளில் சென்று குடியேறினர். சுமாலிக்குப்பின் அரசாட்சிக்குரிய கைகேயி சிறு குழந்தையாய் இருந்த படியால் இலங்கையை ஆழ அரசனில்லாதிருந்தது. இதனால் வச்சிரவாகு என்பவன் தனக்கும் இயக்கப் பெண்ணாகிய தேவகன்னி என்பவளுக்கு பிறந்த புத்திரனாகிய வைச்சிரவணானை இலங்கைக்கு அரசனாக்கினான். வச்சிரவாணனுக்கு குபேரன் என்னும் மறு பெயரும் உண்டு.
குபேரன் ஆட்சி
குபேரன் அரசானான பின்பு அவனது தாய் வழியைச் சேர்ந்த பல இயக்க குடிகள் இலங்கையில் வந்து குடியேறினார்கள். இவர்களும் தமிழர்களே. நாகரிகத்திலும் கல்வியிலும் இயக்கர் என்னும் தமிழர் மிகவுஞ் சிறந்தவர்களாய் இருந்தார்கள். இயக்கரும் தமிழரும் பேசிய மொழி தமிழேயாகும். பண்டைக்காலத்தில் வரன் என்பவன் புலத்தியவனைப் பெற்றான். புலத்தியன் குணவதியை மணந்து வச்சிரவாகுவைப் பெற்றான். இந்த வச்சிரவாகு குபேரனுடைய தந்தையவான். இந்தக் குபேரன் இலங்கையை நீதியாக ஆண்டான். இவன் புட்பக விமானம் என்னும் ஆகாய ஊர்தியை வைத்திருந்தான்.
இராவணன் ஆட்சி
கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான்.
அழகாபுரியில் வாழ்ந்தவர்களும் இயக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். குபேரனோடு இலங்கையில் வந்து குடியேறிய தமிழர் குபேரனோடு திரும்பிப் போகாமல் இலங்கையிலேயே தங்கி விட்டனர். குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இவன் இலங்கையை பல வருடங்களாக மாற்றாரும் மெச்சும் வகையில் சிறப்பாக அரசோச்சி வந்தான். இவன் தனது மூதாதைகளில் ஒருவனான மாலியவனைப் போன்றே பத்து நாடுகளுக்கு அரசனாக முடி சூடப்பட்டான்.
இதனால் இவனை தசக்கீரிவன் என்றும் அழைத்தனர். இரமாயணத்தில் கூறுவது போன்று இவனுக்கு பத்து தலைகள் இல்லை. பத்து கிரீடங்களே அன்றி பத்து தலைகள் அன்று. இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள். இராவணன் பல துறைகளிலும் ஒப்பற்று விளங்கினான். சங்கீத துறையானாலும் சரி, போர்த் திறமையானலும் சரி, தவ வலிமையிலும் சரி, கடவுட் பக்தியிலும் சரி இவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கினான். இவற்றை விட யோக சித்திகளும் கைவரப்பட்டவனாக விளங்கினான். இதனால் இவன் தான் நினைத்த வடிவத்தை கொள்ளவும், எதிரிகளுக்கு தெரியாமல் மறைத்து நிற்கக் கூடிய பல சித்துகளில் வல்லவனாக விளங்கினான்.
யாகங்களில் மிருகங்களை பலி கொடுத்தலை இராவணனும் அவனுடைய இனத்தவர்களும் வெறுத்தார்கள். மிருக வதை அவனுடைய காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பிடிக்காது. இராவணன் சிவபூசை செய்யும் நியமம் உடையவன். ஏகபத்தினி விரதம் பூண்டவன். பழிக்குப் பழி வாங்கும் நோக்குடனேயே சிதையை சிறை வைத்தான். இம்சித்து அல்ல. இவனது பகைவர்களாகி ஆரியர்களே இவன்மீது இவ்வாறு வீண் பழி சுமத்தினர். இவனும் இவனது தாயாகிய கைகேசியும் மனைவியாகிய மண்டோதரியும் சிவபெருமான் இடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். இந்த இராவணன் ஆகியோரின் ஆட்சிக்காலம் ஈழத்தமிழரின் பொற்காலம் எனப்போற்றப் படுகின்றது.
இராம இராவண யுத்தத்தில் இராவணன் தம்பி விபீஷணன் தமையனாகிய இராவணனை விட்டு நீங்கி இராமன் பக்கம் சேர்ந்து இராவணன் படைப்பலம் யுத்ததந்திர முறைகள், அந்தரங்கள் எல்லாவற்றையும் இராமனுக்கு காட்டிக் கொடுத்து இராவணனின் அழிவுக்கு ஏதுவாக இருந்தான். இராவணனுக்குப் பின் இராமனுடைய அனுசரணையுடன் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டான்.