Search This Blog

Monday, June 30, 2014

இந்தியாவில் முதலில் நாணயம் வெளியிட்டது தமிழர்களே

இந்தியாவில் முதன் முதலில் நாணயம் வெளியிட்டது தமிழர்களே ! கிமு மூன்றாம் நூற்றாண்டு நாணயம் கண்டுபிடிப்பு ! எனினும் தற்போது உள்ள இந்திய நாணயத்தில் தமிழுக்கு இடமில்லை என்பது வேதனையான விடயம்.
--------------------------------------------------------------


தென் இந்திய நாணயவியல் கழகத்தின் தலைவரான டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தனக்கு சமீபத்தில் கிடைத்த, கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய நாட்டு நாணயம் குறித்து விவரிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் நாணயங்கள் விற்பவரிடமிருந்து ஒரு சதுர வடிவ செப்புக்காசை வாங்கினேன். அது அமராவதி ஆற்றுப்படுகையில் எடுக்கப்பட்டது என்று அவர் சொன்னாலும், நான் வைகை அல்லது தாமிரபரணி பகுதியைச் சேர்ந்தது என்று கருதுகிறேன். அந்த நாணயத்தின் எடை 6.7 கிராம். 1.7 சென்டிமீட்டர் செ.மீ நீளமும், 1.9 சென்டிமீட்டர் அகலமும் உடையது.
அந்த நாணயத்தின் மேல் படிந்திருந்த கசடை நீக்கவே பல நாள்கள் ஆனது. அந்த நாணயத்தின் முகப்புப் பகுதியைக் கவனமாகச் சுத்தம் செய்த பிறகு, ஒரு மனிதத் தலை பொறிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அது நாணயத்தின் வலது பக்கம் கீழ்முனையில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த உருவம் ஒரு அரசனுடையதைப் போல இருந்தது. அந்த உருவம் அணிந்திருக்கும் கிரீடத்தின் பின்புறத்திலிருந்து வேலைப்பாடுகளுடன் கூடி ரிப்பன்கள் வெளித் தெரிகின்றன.
அரசனுக்கு கூர்மையான மூக்கு. உருவம் பொறிக்கப்பட்டிருப்பதற்கு மேலே, செழியன் என்று தமிழ்-பிராமியில் எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்து மிகவும் மெலிவாக இருப்பதால், எழுத்து வடிவங்களைக் கூர்ந்து கவனித்த பின்னரே படிக்க முடிந்தது.
புறநானூறில் உள்ள ஆறு பாடல்களில் செழியனின் பெயர் பதிவாகியுள்ளது. இந்த நாணயத்தில் உள்ள தமிழ்-பிராமி எழுத்து வடிவம் ‘மாங்குளம் குகைக் கல்வெட்டெழுத்துகளை’ ஒத்திருக்கின்றன. மாங்குளம் மதுரை மாவட்டத்தில் உள்ளது. அங்குள்ள கல்வெட்டு கி.மு.2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
நாணயத்தின் பின்பகுதியில் உள்ள குளத்தின் சின்னமும், மீன்களும் கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளி முத்திரை நாணயங்களிலும் உள்ளன. இந்தச் சாட்சியங்களைக் கொண்டு, இந்த நாணயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணிக்க முடிகிறது.
- An article on The Hindu (April 7, 2014), Tamil by Dr. R. Krishnamurty, President of South Indian Numismatic Society (SINS), of a 3rd Century B.C. coin of Pandya Kingdom.
நன்றி - இந்து நாளிதழ்

Wednesday, June 25, 2014

"Criticisms of Maslow’s Hierarchy of Needs


While some research supported Maslow's theories, most research has yet to substantiate the idea of a needs hierarchy. Wahba and Bridwell reported that there needed to be more evidence for Maslow's ranking of these needs and even less evidence that these needs are hierarchical.
Other criticisms of Maslow's theory note that his definition of self-actualization is challenging to test scientifically. His research on self-actualization was also based on a minimal sample of individuals, including people he knew and biographies of famous individuals that Maslow believed to be self-actualized, such as Albert Einstein and Eleanor Roosevelt. Regardless of these criticisms, Maslow’s hierarchy of needs represents part of a psychological shift. Rather than focusing on abnormal behaviour and development, Maslow's humanistic psychology focused on healthy individuals' development.
While there was relatively little research supporting the theory, the hierarchy of needs is well-known and popular both in and out of psychology. In a study published in 2011, researchers from the University of Illinois set out to put the hierarchy to the test. They discovered that while fulfilment of the needs was strongly correlated with happiness, people from cultures all over the reported that self-actualization and social needs were significant even when many of the most basic needs were unfulfilled."

Use Urine As Fuel

Here’s some news from Africa that will be of interest to all of the people waiting in line for gas to use in their generators after Hurricane Sandy.
Four teenage girls figured out a way to use a liter of urine as fuel to get six hours of electricity from their generator. Fourteen-year-olds Duro-Aina Adebola, Akindele Abiola, and Faleke Oluwatoyin, and 15-year-old Bello Eniola displayed their invention this week at Maker Faire Africa in Lagos, Nigeria, an annual event meant to showcase ingenuity.
• Urine is put into an electrolytic cell, which separates out the hydrogen.
• The hydrogen goes into a water filter for purification, and then into a gas cylinder, which looks similar to the kind used for outdoor barbecue grills.
• The gas cylinder pushes the filtered hydrogen into another cylinder that contains liquid borax, in order to remove moisture from the gas. Borax is a natural mineral, commonly used in laundry detergent.
• The hydrogen is pushed into a power generator in the final step of the process.
A big drawback is that hydrogen poses an explosion risk. But the girls used one-way valves throughout the device as a safety measure.
Three of the four girls with their ingenious invention. (Credit: makerfaireafrice.com)
Three of the four girls with their ingenious invention. (Credit: makerfaireafrice.com)
The idea of using urine as fuel is not new. The girls have come up with a practical way to put the idea into action, though. Their method for using urine to power a generator is one the average household can appreciate.
Power generators are used far more often in Africa than here, where they are relegated more to emergency use, as in the aftermath of Hurricane Sandy. The Maker Faire Africa blog says power outages happen multiple times a day in Lagos, so all those who can afford a backup generator have one.
Still, technology needs to evolve further before such a system is feasible, at least as far as applications like powering generators go.
Gerardine Botte, a professor of chemical and biomolecular engineering at Ohio University, is among those working on practical ways to make urine into a more useful hydrogen source, essentially by turning power into a byproduct of wastewater treatment. She says it takes more energy to extract hydrogen from urine than you end up getting in return as electricity. The energy equation gets even more skewed by the inefficiency of the generator used in the girls’ project.
“At first glance, they’re not having a net gain in energy,” Botte says. “But I think it’s important to say that these little girls, trying to do something like this, deserve a lot of credit.”
The idea behind the humble urine-powered generator is along the lines of Botte’s own thinking, and her research is all about efficient ways to break urine down into its useful components.
Once the urine is processed, purified hydrogen gas is pushed into the generator. (Credit: makerfaireafrica.com)
Once the urine is processed, purified hydrogen gas is pushed into the generator. (Credit: makerfaireafrica.com)
Botte’s approach is to use electrolysis of urea as a method of wastewater treatment. She says her process for converting urine into potable water is more cost effective and more energy efficient than current wastewater treatment methods. Pure hydrogen is produced as a byproduct and can be used in generating electricity.
“You cannot get net energy gain, but there is no more efficient way to get clean water from urine,” Botte says.
Botte founded E3 Clean Technologies in 2011 to work on scaling the process for use by municipalities and others.
The U.S. Department of Defense is trying out a portable system from E3 at military bases in remote areas, as both a way to treat wastewater and generate power. The system, which Botte calls GreenBox technology, converts a soldier’s urine into drinking water.
“At forward operating bases, the main needs are water and fuel,” Botte says. “With this project, they’re doing both: using less energy to reutilize water sources.”
So, when put in the context of wastewater treatment, the concept of using urine as a hydrogen source to produce energy has great potential.
Since wastewater treatment plants already collect the raw material needed – urine – extracting hydrogen from it makes sense, Botte says. Doing so could regain some of the vast amounts of energy already being spent all over the world to treat waste.
“You will never get more energy out than you put in,” she says. “But it is a unique and elegant way to treat urine waste, which will allow you to co-generate electricity.”
To give you a sense of how much energy it is possible to recapture from this method of treating urine, Botte offers this:
“At Ohio University, where there are about 22,000 students, if we would collect the urine and produce hydrogen, we would be able to produce enough electricity to perhaps power about 100 to 150 residential houses for a year, continuously.”
Consider that before you dismiss what the enterprising teens did with their own project.
Maybe, as the technology evolves, it could be applied to vehicles someday. Gasoline-powered internal combustion engines can be converted relatively easily to run on hydrogen, which raises the question of whether there is potential for pee-powered cars in the future.

How Nanotechnology Could Reengineer Us

Thanks http://www.keithley.com

முத்துக்கள் சிந்தி - Muthukkal Sindhi

நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் & ஹிய்ன்ரிச் லுய்ட்ப்போல்ட் ஹிம்லர்

ஹிட்லரின் “நாஜிப்படை” தளபதியும்,

ஜெர்மனியின் உள்துறை (பின்நாள்) மந்திரியுமான

ஹிய்ன்ரிச் லுய்ட்ப்போல்ட் ஹிம்லர்-ஐ..

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய

நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் சந்தித்து

ஆலோசனை நடத்திய காட்சி!

Solar: Solar Thermal: Making Electricity From The Sun’s Heat


  • Solar thermal electric power plant generates heat by using lenses and reflectors to concentrate the sun’s energy. Because the heat can be stored, these plants are unique because they can generate power when it is needed, day or night, rain or shine.
  • Solar thermal electric systems operating in the US today [Solar Parabolic Troughs] meet the needs of over 350,000 people (equal to the population of the city of Fresno, CA or Miami, FL) and displace the equivalent of 2.3 million barrels of oil annually.
  • Solar Energy Facts Sheets
  • Solar thermal power plants create two and one-half times as many skilled, high paying jobs as do conventional power plants that use fossil fuels.
  • A CEC (California Energy Commission) study shows that even with existing tax credits, a solar thermal electric plant pays about 1.7 times more in federal, state, and local taxes than an equivalent natural gas combined cycle plant. If the plants paid the same level of taxes, their cost of electricity would be roughly the same.
  • Solar Two, a “power tower” electricity generating plant in California, is a 10-megawatt prototype for large-scale commercial power plants. It stores the sun’s energy in molten salt at 1050 degrees F, which allows the plant to generate power day and night, rain or shine. Construction was completed in March 1996, and it is now in its three year operating and testing phase. (source: Southern California Edison)
  • Over 700 megawatts of solar thermal electric systems should be deployed by the year 2003 in the U.S. and internationally. The market for these systems should exceed 5,000 megawatts by 2010, enough to serve the residential needs of 7 million people (larger than the state of Georgia) which will save the energy equivalent of 46 million barrels of oil per year.
  • Utilizing only 1% of the earth’s deserts to produce clean solar electric energy would provide more electricity than is currently being produced on the entire planet by fossil fuels.
  • The sun’s heat can be collected in a variety of different ways: Solar Parabolic Troughs consist of curved mirrors which form troughs that focus the sun’s energy on a pipe. A fluid, typically oil, is circulated through the pipes which is used to drive a conventional generator to create electricity. Solar Parabolic Dish systems consist of a parabolic-shaped concentrator (similar in shape to a satellite dish) that reflects solar radiation onto a receiver mounted at the focal point at the center. The collected heat is utilized directly by a heat engine mounted on the receiver which generates electricity. Solar Central Receivers or “Power Towers” consist of a tower surrounded by a large array of heliostats. Heliostats are mirrors that track the sun and reflect its rays onto the receiver, which absorbs the heat energy that is then utilized in driving a turbine electric generator.

Comparison of Major  (tower,dish, trough)
Power
Tower
Parabolic
Dish
Parabolic
Trough
ApplicationsGrid-connected electric plants; process heat for industrial use.Stand-alone small power systems; grid supportGrid-connected electric plants; process heat for industrial use.
AdvantagesDispatchable base load electricity; high efficiencies; energy storage; hybrid (solar/fossil) operation.Dispatchable electricity, high conversion efficiencies; modularity; hybrid (solar/fossil) operation.Dispatchable peaking electricity; commercially available with 4,500 Gwh operating experience; hybrid (solar/fossil) operation.
[Source: Status Report on Solar Thermal Power Plants. Pilkington Solar International GmbH: Cologne, Germany,1996.]

கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கை தெரிந்து கொள்ளுங்கள்


Tuesday, June 24, 2014

1885-ல் பாசக்கார மதுரை மக்கள்


25 MEDICAL CAUSES OF ABDOMINAL PAIN


1. Abdominal aortic aneurysm (dissecting)
2. Abdominal cancer
3. Abdominal trauma
4. Adrenal crisis
5. Anthrax, GI
6. Appendicitis
7. Cholecystitis
8. Cholelithiasis
9. Cirrhosis
10. Crohn's disease
11. Cystitis
12. Diabetic ketoacidosis
13. Diverticulitis
14. Duodenal ulcer
15. Ectopic pregnancy
16. Endometriosis
17. Gastric ulcer
18. Gastritis
19. Gastroenteritis
20. Heart failure
21. Hepatic abscess
22. Hepatic amebiasis
23. Intestinal obstruction
24. Pelvic inflammatory disease
25. Peritonitis

பிசகு

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம









இளைப்பாறி ஏழெட்டு வருடங்களாகியும் ஆதியிலிருந்து எனக்கு ஆகிவந்த நல்ல பெயருக்கு இன்னும் பதினாறு வயசுதான். பொதுவில், ஒருவர் அரச சேவையிலிருந்து இளைப்பாறியதும் அவரிடமிருந்து மற்றவர்கள் பெற்று வந்த பயன்பாடுகள் அற்றுப் போக நேர்வதால் அவர் சார்ந்த ஈடுபாடு குறைவது அல்லது முற்றாக இல்லாமல் போவது வழமையான ஒன்று. என் விடயத்தில் இதற்கு மாறாக நடந்திருக்கிறது.

இன்றைக்கில்லை, வெள்ளைவேட்டி வாலாமணியில் படிப்பிக்கப் போய்வந்த அந்த ஆரம்ப நாட்களிலேயே மதிப்பும் மரியாதையும் அபரிமிதமாக வந்து அமைந்து விட்டது எனக்கு. அந்த மரியாதைப் பூவின் இதழ்கள் இன்னும் என் இல்லம் நாடி மணம் பரப்பியபடியே இருக்கின்றன. இதில் முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். கிடைத்த கௌரவத்தை கட்டுக்குலையாமல் காத்துக் கொள்வது ஒன்றும் சாதாரணமான விசயமல்ல. சிறிது பிசகினாலும் சரிந்து விட வாய்ப்புண்டு.

இன்னமும், என்னைத் தெரிந்தவர்கள் எங்கே கண்டாலும் நின்று நாலு வார்த்தை சுகம் விசாரிக்காமல் விலகமாட்டார்கள். அவசர காரியமிருப்பின் போகிறபோக்கில் தலையாட்டி சிரித்துவிட்டுத்தான் போவார்கள். சிநேகமான சைகைகள் வழி தம் அன்பை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஒரு திருப்தி.

சொந்த இடத்தில் மட்டுப்படாமல் வெளியூர்களிலும் என் கௌரவம் பாய்ந்து பரவியிருக்கிறது. நேற்றுக்கூட, நிலாவெளிப் பக்கமிருந்து கூட்டமாக வந்திறங்கினார்கள். எல்லாரும் வசதியாக இருக்க நாற்காலிகள் பத்தாமல் சிலர் முற்றத்திலும் நின்று கொண்டிருந்தார்கள். அடுத்த வாரம் அவர்கள் பகுதிப் பள்ளிக்கூடத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. மாவட்ட கல்வி அதிகாரி பிரதம விருந்தினராக வருவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். விழாவைத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கும்படி என்னை வற்புறுத்திக் கேட்டார்கள். வழக்கத்தில் நானாகத் தேடிப் போய் உதவி செய்கிற பழக்கமுள்ளவன், வீடு தேடி வந்து விண்ணப்பவர்களின் முகம் முறிப்பேனா? முன்னரைப் போல் உடம்புக்கு முடியாவிடினும், வருகிறேன் என்றதும் வந்தவர்கள் அத்தனை பேர் முகங்களிலும் முழுநிலவு!

என் வாழ்க்கை முழுக்கவும் இப்படித்தான். பிள்ளைகளுக்குப் படிப்பித்தது போக, மிகுதி நேரத்தில் பெரும்பகுதி மற்றவர்களின் கஷ்டங்களைக் கேட்பதிலும் நிவர்த்திகள் சொல்வதிலும் கழிந்திருக்கிறது. படிப்பித்தலை வெறும் தொழிலாகக் கொள்ளாமல் பிள்ளைகளை உயர்த்திவிடும் ஏணியாகவே கருதி வாழ்ந்திருக்கிறேன்.

இந்தக் குணம் என் தாயாரிடமிருந்து கிடைத்த பாரம்பரிய முதுசம். பத்து வருடங்களுக்கு முன் பரமபதம் அடைந்துவிட்ட என் அம்மா ஒரு இளம் வயதுக் கைம்பெண். இரத்தக் கொதிப்பென பின்னாளில் புரிந்து கொண்ட சுகவீனத்தில் தந்தையார் நித்திரைப்பாயிலேயே மூச்சு அடங்கிவிட, பிரச்சனைகளின் மத்தியில் தட்டத்தனியாக கஷ்டம் தெரியாமல் என்னை வளர்த்தாள் அம்மா. எழுத்துக்கூட்டி வாசிக்கும் படிப்பறிவை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி முடிந்தது இது என்று இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அயலாரோடும் மிக அன்னியோன்யமாக இருக்க முடிந்திருக்கிறது அவளால். யாரையும் மனம் நோக விடமாட்டாள். தராசைப் பிடித்துக்கொண்டு அளந்து பேசுவது போல் ஒரு நிதானம். சொல்லின் சிக்கனம் செயலின் தாராளத்தை மட்டுப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது அவளது சிறப்பு. நல்லது கெட்டதுக்கு முதலாளாய் ஓடிப்போவாள். அவசியத்துக்கு ஐஞ்சுபத்து கைமாற்றுக் கொடுக்கவோ அவசரத்துக்கு காப்புச்சங்கிலி இரவல் அளிக்கவோ தயங்கமாட்டாள். ஒருவிதத்தில் அம்மா அயலில் சம்பாதித்து வைத்த மரியாதை என் பெயருக்கு எருவாயிற்று என்றே சொல்ல வேண்டும்.

அம்மா சமைத்து நீங்கள் பார்த்திருக்க வேண்டும். கறிச்சட்டி அடுப்பில் ஏறி இறங்குகிற இடைவெளியில் அம்மாவின் அசைவுகளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்தமான விசயமாக இருந்திருக்கிறது. சாம்பலில் கழுவி மூடி வைத்த பாத்திரங்களில் காய்கறிகளை அதனதன் அளவுகள் மாறாமல் நறுக்கிப் போடுவாள். தேங்காயை சிதிலமாக்காமல் சரிபாதி பிளந்து பூ துருவி முதல்பால் கடைசிப்பால் என கறியின் தேவைக்கேற்ப அதற்குண்டான பாத்திரங்களில் பிரித்து வைத்துக் கொள்வாள். அம்மி முன்னால் கால்நீட்டியிருந்து பக்குவம் குறையாமல் அரைத்து வைத்துக் கொண்ட பலசரக்குத் திரணையை கொதிக்கும் குழம்பில் நேரம் அறிந்து இடுவாள். உப்புப்புளி பார்க்க அகப்பையில் துளியளவு கிள்ளி உள்ளங்கையில் விட்டு நாக்கிடம் ருசி கேட்கும் தோரணையில் கண்களை மேல்நிறுத்தி தனக்குள்ளே ரசிப்பாள். கொதித்துவரும் குழம்பில் முதல்பாலை விட்டு கறியின் கொதிப்பை அடக்கி இறக்கிவிட்டு அடுத்த கறிக்கான ஆயத்தங்களை தொடர்வாள். அம்மாவின் அசைவுகள் எல்லாமே ஒரு நேர்த்தியான சடங்கிற்குண்டான பொலிவோடு திகழ்வதைப் பார்த்திருக்கிறேன்.

மேகத்துள் மிதக்கும் பால்நிலவும் மெழுகு தந்தம் காட்டி தத்துபுத்தென நடந்து வரும் யானையும் அன்னையிடம் வயிறுமுட்ட பால் குடித்து மழலை உதிர்க்கும் குழந்தையும் என்றுமே அலுக்காத காட்சிகள் எனக்கு. அம்மாவின் சமையலுக்கு இவற்றோடு சேர்ந்து கொள்வதற்கான அத்தனை அருகதையுமுண்டு. கொய்யக மறைவில் குழந்தைக்குப் பாலூட்டும் தாயின் அக்கறையை அம்மாவின் ஒவ்வொரு அசைவிலும் நான் ரசித்திருக்கிறேன். அந்த ஈடுபாட்டுணர்வு என் இரத்தத்தில் ஊறிவிட்டது.

இதற்கு முன்வரிசை பின்வரிசை என்கிற வித்தியாசம் பாராத மனப்பாங்கு தேவை. வகுப்புகளில் வெறுமனே படிப்பித்தலோடு மட்டுப்படாமல் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க என்னால் முடிந்திருக்கிறது. குறிப்பாக, பின்வாங்குப் பிள்ளைகளின் ஒவ்வாமையை மனங் கொள்வது முக்கியமெனக் கருதினேன். அவர்களில் ஒளிந்திருக்கும் பலதரப்பட்ட திறமைக்கூறுகளை வெளிக்கொணர வேண்டியது ஆசிரியனின் கடமையென உணர்ந்தேன். படிப்பு தவிர்ந்த ஏனைய காரியங்களில் சிதறுகிற அவர்களது கவனத்தை ஒருமுகப்படுத்தி விட்டால் அவர்களது சிறப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்தி விடலாம்.

வீட்டுக்கணக்கு செய்ய புத்தகம் வாங்கமுடியாத பிள்ளைகளின் வறுமை கண்டு நான் உதவியிருக்கிறேன். மந்தமான மாணவர்களை பள்ளிக்கூடம் விட்டபின் நிற்பாட்டி சொல்லிக் கொடுப்பேன். விடுதலை நாட்களில் பாடம் எடுப்பேன். வகுப்பில் கடைசி மாணவன் எனக் கருதப்படுகிறவன் கூட என் பாடத்தில் சித்தியடைந்துவிடுவான்.

இளைப்பாறிய பின் உடல் நலம் சற்று குன்றிவிட்டது உண்மைதான். ஓடியோடி ஊருக்கு உழைத்ததால் அல்சர் நீரழிவு என்று நானாவித உபாதைகளின் ஊற்று நிலமாக ஆகிவிட்டீர்கள் என்று திடகாத்திரமான உடலைக் கொண்ட இளைப்பாறிய நண்பர் ஒருவர் சொன்னார். காலாகாலத்தில் கல்யாணம் பண்ணியிருந்தால் ஏலாத காலத்தில் மனைவிமக்கள் கையில் ஏந்தியிருப்பார்களே என்றும் ஆதங்கப்பட்டார்.

என்ன செய்வது - திருமண உறவில் கவனம் தீவிரமாகாமலே என் காலம் கடந்து விட்டது. தயாராயிருந்த போது பெண் பொருந்தி வரவில்லை. பொருந்தியபோது நான் தயாராயில்லை. அம்மா சதா சண்டை போட்டுக் கொண்டுதான் இருந்தாள். அவளுக்காகவாவது ஒப்புக் கொண்டிருக்கலாம். கடைசிவரை மாமிமருமகள் சண்டை அனுபவம் கிட்டாமலே அவள் காலமாகிப் போனாள். பார்க்க எடுக்க பக்கத்தில் ஆளில்லாமலிருப்பது ஒரு விதத்தில் கஷ்டந்தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அரக்கப் பரக்க ஓடித் திரிகிற சம்சாரிகளைப் பார்க்கிறபோது அந்தச் சாகரத்திலிருந்து தப்பிப் பிழைத்ததும் புரியவே செய்கிறது.

இப்போது என் சேவை வேறு தோற்றப்பாடுகளை எடுத்திருக்கிறது. ஆலோசனை கேட்டு வருபவர்கள் பெருகிவிட்டார்கள். ஐயாவிடம் போனால் நிச்சயமாக இதற்கு ஒரு புத்தி சொல்வார் என்கிற நம்பிக்கையோடு வருகிறார்கள். நானும் என்னாலான நல்லதுகளை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

நேற்றுக்காலை ஒரு தகப்பன் மகளைக் கூட்டி வந்தார். பத்தாம் வகுப்பு அரசு பரீட்சையை நல்ல தரத்தில் சித்தியெய்தியிருந்தாள் அவள். புதிய வகுப்பில் ஒரு குறிப்பிட்ட பிரிவை அவள் தேர்ந்தெடுக்க வெண்டும். அது கலையா வர்த்தகமா பொறியியலா அல்லது மருத்துவமா என்பதை என் மூலமாகத் தீர்மானித்துக் கொள்வதே அவரது வருகையின் நோக்கம். விசயத்தைச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார். அவர் இதே கேள்வியை வகுப்பாசிரியரிடம் கேட்டிருக்கலாம். ஒருவேளை இதற்குள் கேட்டுமிருப்பார். இருக்கச் சொல்லிவிட்டு முதலில் அவரிடமே பேச்சுக் கொடுத்தேன்.

எல்லாரையும் போல, மகள் டாக்டராக வரவேண்டும் என்று விரும்புவதாகச் சொன்னார். முடியாவிட்டால் எஞ்சினியர் என்று ஒரு படி மட்டும் கீழிறங்க அவர் தயாராயிருந்தார். பின்னர் பெண்ணிடம் பேசினேன். நாலைந்து பதில்களில் அவளைப் புரிந்து கொள்ள முடிந்தது. நான் அவரிடம் சொன்னேன். உங்கள் மகள் பாடங்களில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் - நீங்கள் விரும்புகிற துறைகளில் அவளுக்கு நாட்டமில்லை என்று தெரிகிறது, பிரகாசிக்கும் வாய்ப்பும் அரிது. கஷ்டமானதை திணிப்பதிலும், இலகுவாகக் கைவரக்கூடியதை ஊக்கப்படுத்துவதே வெற்றியைத் தரும். இவளை வர்த்தகத் துறையில் விடுங்கள். இன்றைய நவீன யுகத்தில் வேறெதையும் விட பரந்துபட்ட வாய்ப்புகளை அளிக்கும் துறை இது. நீங்களே வியக்கிற அளவிற்கு சிறப்பாக வருவாள் என்றேன். அவரும் நிம்மதியாகப் போய்ச் சேர்ந்தார்.

இப்படிப் பல பேர் வருகிறார்கள். வருகிறவர்களின் மனங்களை அவற்றின் நுன்னிய தளங்களில் நின்று கூர்ந்து படிக்கிறேன் முதலில். பிரச்சனைகளின் ஆழஅகலம் புரிந்து கொண்டு அவர்களை அணுகுகிறேன். இந்த மாதிரி கவுன்சிலிங் செய்வதில் என் நேரமும் உபயோகமாகக் கழிகிறது. வந்தவர்களுக்கும் நன்மையாகிறது.

படித்தவர்களிடம் ஒரு குணம் இருக்கிறது. எல்லாம் தெரிந்த மனப்பான்மை. குறுக்குமறுக்காக கேள்விகள் கேட்பார்கள். அவர்களை ஆறுதல்ப்படுத்துவதற்கு சிறிது நேரம் எடுக்கும். படிக்காதவர்களிடம் அந்தக் கஷ்டமில்லை. கேட்டுக் கேள்வியின்றி ஏற்றுக் கொள்வதை அவர்களின் முகத்தெளிவில் கண்டிருக்கிறேன். இதிலுள்ள சுளிவுநெளிவுகள் எல்லாம் ஒரு கலையாகவே எனக்குக் கைவந்துவிட்டது அம்மாவின் சமையலைப் போலவே. வந்தவர்களின் முகம் அளந்து மனம் படித்து பொருத்தமாகப் பேசுகிற நுட்பத்தில்தான் கவுன்சிலிங் கலையின் வெற்றியே தங்கியிருக்கிறது என்பேன். அவரவருக்குப் பொருந்துகிற வார்த்தைப்பிரயோகம் மிகவும் முக்கியம், இன்னொன்று பொறுமையும்.

நேற்றுமாலை ஒரு பெண் வந்திருந்தாள். ஆடுகள் மேய்த்த சிறுவயதில் மழைக்கு மட்டும் பள்ளிக்கூடம் ஒதுங்கியதாகச் சொன்னாள். பிறந்து வளர்ந்தது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குக்கிராமம். வாழ்க்கைப்பட்டது தூரத்து உறவில் மலைநாட்டின் தலவாக்கொல்லையில். புருசன் திருகோணமலைக்கு வேலை தேடி வந்ததில் சீவியம் இங்கேயே அமைந்துவிட்டது. ஒரேயொரு மகன். வயசு பதினைந்து. பையனுக்கு எட்டு வயசில் தகப்பன் வயற்காட்டில் பாம்பு கடித்து நேரத்துக்கு வைத்தியம் கிடைக்காமல் காலமாகிவிட்டார். ஏனோ தெரியவில்லை மனுசி இங்கேயே தங்கிவிட்டது.

பையன் ஒன்பதாவது படிக்கிறான். பள்ளிக்குப் போகாத நாட்களே அதிகம். கூடாத கூட்டம் வேறு, படிக்காமல் ஊர் சுற்றுகிறான். எப்படியாவது புத்தி சொல்லி பள்ளிக்குப் போக வைக்கும்படி கேட்டுக் கொள்ள வந்திருந்தவள் மரியாதைக்காக எட்டத்தில் நின்றே பேசினாள். நாலு சாத்து சாத்துங்கய்யா என்று அடிக்கிற உரிமையும் அளித்தாள். இதுதான் படிக்காதவர்களின் பண்பு.

பையன் எங்கே என்று கேட்க, இன்றைக்குக் கூட்டி வருகிறேன் என்று போயிருக்கிறாள். அநேகமாக இப்போது வருகிற நேரந்தான். கைம்பெண்ணின் வலிகள் அம்மாவிடமிருந்து எனக்கு அனுபவப்பாடம். முகம் தெரியாத அந்தப் பையனில் என்னையே இனம் கண்டது போல ஒரு பிடிப்பு உண்டாயிற்று. இவனை மடக்கி வழிக்குக் கொண்டு வருவது பெரிய விசயமில்லை. அவனது உள்ளத்தைத் தொட்டுவிட்டால் எதிர்காலம் உறுதிப்பட்டுவிடும்.

கதவு தட்டிக் கேட்கிறது. அவர்கள்தான். மகனை எனக்கு இரண்டடி தூரத்தில் தேவையானால் எட்டி அடிப்பதற்கும் வசதியாக நிறுத்திவிட்டு அவள் பத்தடி தள்ளி குறுகிப் போய் நின்று கொண்டாள்.

என்னான்னு கேளுங்கய்யா?

நீங்க அப்பிடி கதிரைல இருங்கம்மா.

சொன்னவுடன் அவள் கதிரைப் பக்கமாகப் போனாள், இருக்கவில்லை. நான் பையனைப் பார்த்தேன். குளிக்க வார்த்து கன்னஉச்சி புறித்து தலை இழுத்து பவுடர் அப்பி தோய்த்த உடுப்பு உடுத்தி கூட்டி வந்திருக்கிறாள் தாய். தாயே எல்லாம் செய்திருக்கிறாள் என்பதற்கு முகத்தில் கூடுதலாக அப்பியிருந்த பவுடர் சாட்சி சொன்னது. ஐயாவுக்கு முன்னால் கையைக் கட்டி நின்று பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருப்பாள். பையன் கறுப்பு, தாயின் நிறம். தகப்பனுடைய மூக்காக இருக்கலாம். முழிப்பாக இருந்தான்.

கண்டிப்பக்கம் நாலு வருடங்கள் வேலை பார்த்ததில் அங்கு புழக்கத்திலிருக்கும் மொழி அசைவுகள் எனக்குப் பழக்கம். அவர்களோடு அவர்களது இழுவைகளுக்கு இசைவாகப் பேசமுடியும் என்பதே எனக்கு பலந் தருகிற விசயம். முகத்தில் மேலதிக கனிவு காட்டி பையனை உன்னிப்பாகப் பார்த்தேன்.

ஏந்தம்பி இப்ப என்ன படிக்கிறே?

ஒம்போது. .. .. .. அவன் தலை நிமிராமல் நிற்க அம்மா பதில் சொன்னாள்.

எங்க படிக்கிறே?

சந்திப்பள்ளியில படிக்கிறான்யா. நடைதூரத்தில வூடு இருக்குதுங்கய்யா. .. .. ..
இப்போதும் பதில் சொன்னது அவள்தான்.

அம்மா நீங்க சும்மாயிருங்க பையன் பதில் சொல்லட்டும்.

சரீங்கய்யா என்று சொன்னவள் நாலு விரல்களை வாயில் வைத்து மன்னிப்புக் கோருவது போல சற்றுப் பின்வாங்கி நின்றாள்.

போன பரீட்சையில கணிதத்தில் எத்தனை மார்க் வாங்கினே?

வலதுகால் பெருவிரலால் நிலத்தில் அரைவட்டம் போட்டுக் கொண்டிருந்தான் குனிந்த தலை நிமிராமல். அடுத்ததெரு சந்தி மில்லில் அரிசி அரைக்கும் ரீங்காரம் மட்டும் மிகக் கிட்டத்தில் கேட்ட அளவிற்கு அமைதி நிலவிற்று.

பத்தோ பதினைஞ்சு மார்க்குதான்ய்யா. .. .. .. எனக்குச் சங்கடம் நேராதிருக்க தாய்தான் இப்போதும் மெல்லிய குரலில் சொன்னாள்.

உங்க கணக்கு வாத்தியார் பெயர் என்ன?

..........

இப்போ ஒம்போதாவது வகுப்பு சிலபஸ் மாத்தியிருக்காங்கன்னு சொல்றாங்களே உண்மையா?

.........

அடுத்த வருசம் ஜீசீஈ பரீட்சை வருதே அதுக்கு ஒன்னை சேத்துப்பாங்களோ?

............

அவனிடமிருந்து பதிலில்லை. தாய் ஏதாவது சொல்ல முயற்சித்திருப்பாள். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சங்கடத்தில் நெளிந்ததைத் தவிர அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

அவன் பக்கமாக இருந்த சுவரில் திடீரென முளைத்த ஒரு பல்லி, அதனைத் துரத்திய இன்னொரு பல்லி, அந்தந்த இடத்திலேயே தரித்து நின்றன. பையனது பார்வை பல்லிகளின் பக்கம் படர்ந்தது. எனக்கு முன்னால் நிற்கிற பயம் அற்றுப் போய் அடுத்து நிகழப்போவதை ஆர்வம் துளிர்க்கப் பார்த்தான். எங்கள் இருப்பைச் சட்டை செய்யாத இரண்டாவது பல்லி முதலாவது பல்லிக்குப் பக்கத்தில் ஊர்ந்து அதன் மேல் ஏறிக் கொண்டது. பையன் வைத்தகண் எடுக்காமல் நின்றான். நான் தாயைப் பார்த்தேன். உங்களைத்தான் நம்பி வந்திருக்கிறேன் என்று கேட்கும் அதே வேண்டுதல் முகம். நிலைத்து நின்ற பல்லிகளைக் கலைக்கவும் பையனது கவனத்தைத் திருப்பவுமாக, சுவர்ப்பக்கம் கையை விசுக்கி நான் சப்தமிட, எதையும் காதில் போட்டுக் கொள்ளாத பல்லிகள் வெகு சாவதானமாக சிறிது நேரம் கழித்து தம்பாட்டில் எங்கோ மறைந்து கொண்டன.

சரி படிப்பை விடு. அப்பனில்லாம ஒன்னை கஷ்டப்பட்டு வளர்த்திருக்கிறாவே உங்க அம்மா அதை நெனைச்சுப் பாத்தியா தம்பி.

இப்போது காலை மாற்றி மீண்டும் அரைவட்டம் போடுவதில் முனைப்பாக இருந்தான்.

காலை ஆட்டாம கொஞ்ச நேரம் சும்மா நில்லு.

காலை ஆட்டாதறா என்று தாயும் அதட்டினாள்.

ஆட்டம் சட்டென்று நின்றது. நான் ஆத்திரப்பட்டுவிட்டதாக அவன் நினைத்திருப்பான். எனக்கு ஆத்திரம் இலேசில் வராது. இது தேவை கருதிய ஒரு சிறு நடிப்பு. கடிதோச்சி மெல்ல எறிக - வள்ளுவப் பெருந்தகை சொன்னது - அடிக்கிற மாதிரி கத்து, கடிச்சு உதறுகிற மாதிரி நெருங்கு ஆனா அடி மெதுவாகப் படட்டும் என்று. பிள்ளையை பள்ளிக்குப் போக வைக்கத் துடிக்கும் இந்த ஏழைத்தாயை எப்படியாவது ஆறுதல்ப்படுத்த வேண்டும்.

கடேசியா எப்போ பள்ளிக்குப் போனே?

போய் பத்து நாளாச்சய்யா - தாய்.

கடைசிமணிக்கு காத்திருக்கிற மாணவனாக அவன் தெரிந்தான். தாயை திரும்பிப் பார்த்துவிட்டு தலை குனிந்தான்.

எனக்கு மூளை நரம்பில் மெலிதான துடிப்பு உண்டான ஒரு உணர்வு! இது அதிகம். முளைத்து மூனு இலை விடாத பையனுக்கு வயசுக்கு மீறிய கொழுப்பு. இத்தனை கேள்விகள் கேட்டும் ஒரு தலையாட்டல் கூட இல்லாமல் கல்லுளிமங்கனாய் நிற்பது நிச்சயமாக அதிகம்.

வாயில கொழுக்கட்டையா வைச்சிருக்கே?

அவன் திடசங்கற்பம் சிறிதும் குறையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான்.

களவாணிப்பயலே, இப்போ வாய தெறக்கப் போறியா இல்லையா?

எனக்குக் சதிரம் கொஞ்சமாக நடுங்கிற்று.

வாயைத் திறக்காட்டி ஒன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிப் புடுவன் களவாணிப்பய புள்ளை.

அவன் முகத்தில் முறைப்பு உருவானது போல் ஒரு அசைவு தோன்றிற்று. உறுதிப்படுத்திக் கொள்ள கண்ணாடியைப் போட்டுக் கொண்டேன். இல்லை அவன் முறைக்கவில்லை. முறைத்திருந்தாலாவது ஏதோவொரு விதத்தில் பதில் சொல்ல ஆயத்தமாகிறானெனக் கொள்ளலாம். ஒருவித சலனமுமற்று எப்படி இவனால் ஒற்றைப்பிடியில் நிற்க முடிகிறது!

டேய் கள்ளப்பயலே ஒன்னை

அப்போதுதான் நான் எதிர்பாராத அந்த இடி என் தலையில் நேராக இறங்கிற்று. அவனிடமிருந்தல்ல, அவளிடமிருந்து.

நானும் வந்ததிலிருந்து பாக்கிறேன். களவாணிப்பயமவனே கள்ளப்பயலேன்னு விடாம கத்திக்கிட்டிருக்கியே, இதுதான் நீ புத்தி சொல்ற லெச்சணமா? மத்தவங்க பொருளுக்கு ஆசைப்படாத ஆளய்யா என் புருசன். குடிப்பாருதான். களவுக்கெல்லாம் போகமாட்டாரு. எம் புள்ளை படிக்காம ஊர் சுத்துறவன்தான். களவெல்லாம் எடுக்கமாட்டான். அப்படிப்பட்ட புள்ளையை இப்பிடித் திட்றியே நீயெல்லாம் பெரிய மனுசனாய்யா?

நான் உறைந்து போய் அவளைப் பார்க்க, உரு வந்தவள் போல, நீ வாடா மவனே, பெரிய மனுசனாம் பெரிய மனுசன், பெரிசா பேச வந்துட்டாரு என்றவாறே மகனின் கையை தறதறவென இழுத்தாள்.

திடீரென உண்டான குழப்பத்தில் கண்மூடித் திறக்குமுன் தெருக்கதவை தடாரெனச் சாத்துகிற சத்தம் கேட்டது

A Rare & Original photo of Shiridi Saibaba


Friday, June 20, 2014

Perfect You - Award winning Musical Romance short film

சுரதா

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் (சுரதா) என்று மாற்றிக்கொண்டார்.
சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர்.
இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

இந்த யுகத்தின் சிறந்த கவிஞரான "சுரதா'வை அறியாதவர்கள் இருக்க முடியாது. மரபில் தோய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, புதுக்கவிதைப் படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, உவமைக் கவிஞரின் கவிதைகளில் ஒரு கவிதையையாவது ரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.
மனதில் தனக்குச் சரியெனப்பட்டதை பளிச்சென்று வெளியிடும் துணிவு மிக்கவர்.
கவிஞர் சுரதா, தஞ்சை மாவட்டத்துப் பழையனூரில், திருவேங்கடம்-சண்பகம் தம்பதிக்கு 1921-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் இராசகோபாலன்.
பெரும்பாலும் கவிஞர்கள் பிறரைப் பின்பற்றி எழுதும் வழக்கமுடையவர்கள். அதை சுரதா விரும்பாதவர். ""தனக்கு அதில் உடன்பாடில்லை, "அந்த நிழல் வழி வாசலை' விட்டு நீங்கி எழுதும் கவிஞன் நான். இவரையோ, அவரையோ பின்பற்றி எழுதப் பிரியப்படாதவன்'' என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை என்பதை நிரூபித்தவர்.
ராஜகோபாலன், "சுரதா' ஆன வரலாறு சுவை மிக்கது. ராஜகோபாலன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கவிதை நூல்களை விரும்பிப் படிப்பாராம். ஒருமுறை, டீக்கடைக்காரர் ஒருவர், பாரதிதாசன் கவிதைப் புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். அந்தக் கணம் முதல் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். புதுவைக்குச் சென்று, பாரதிதாசனைச் சந்திக்கும் துடிப்பு ஏற்பட்டது. செல்வதற்குப் பணம் வேண்டுமே...? ஒரு வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசும் வேலை செய்து ஆறணா கூலி பெற்று, பாரதிதாசனார் வீட்டை அடைந்தார். இளைஞர் ராஜகோபாலனின் வேட்கையை அறிந்த பாரதிதாசன், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தன்னைக் காண வந்ததறிந்து, ""பெற்றோரின் அனுமதி பெற்றுப் பிறகு வா! என்னுடன் பல நாள் தங்கலாம்'' என்று வலியுறுத்தி, அவருக்குச் சிறு தொகையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.
"இவரன்றோ பண்பு மிக்க கவிஞர்' என்று முடிவு செய்து, அந்தக் கணம் முதல் பாரதிதாசனுக்கு அடிமையானார்.
1941-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் பாவேந்தரது தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. பாரதிதாசனாரின் இயற்பெயர் சுப்புரத்தினம். அதனால், "சுப்புரத்தினதாசன்' என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். கடிதம் எழுதிக் கையெழுத்திடும்போது இட வசதிக்காக "சு ர தா' என்று இடம்விட்டு எழுதுவார். அந்த மூன்று எழுத்துகளே "சுரதா' ஆனது. சுரதாவின் முதல் கவிதை "கவி அமரன்', "பிரசண்ட விகடன்' இதழில் வெளிவந்தது.
பல ஆண்டுகள், பாரதிதாசனின் வீட்டிலேயே தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கு உதவியாக இருந்தார்.  நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கும் உதவியாக இருந்தார்.
"உவமைக் கவிஞர்' என்று மக்கள் அளித்த விருது அவரிடம் பிரிக்க முடியாமல் ஒட்டிக்கொண்டது. தன்னைப்போன்று "உவமை கொட்டி' எழுதுபவரை ஆதரித்தாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவிஞர்கள், இவர் தலைமையில் பாடியிருக்கிறார்கள். உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையைத் தொடங்கிய இவர், தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிலும் புதுமை, புரட்சி செய்வதில் நாட்டம் கொண்ட சுரதா, வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், படகுக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம் எனப் பல்வேறு கவியரங்க நிகழ்ச்சிகளை நடத்தி, இளங்கவிஞர்களை ஊக்குவித்துள்ளார்.
சுரதாவின் கொள்கைகள் வித்தியாசமானவை. ஆனால் அழுத்தமானவை. ""கணக்கைப் போன்றதே கவிதை என்பதால், கவிதை புனைந்திடக் கற்பனை வேண்டும் என்னும் கருத்தை ஏற்பதே இல்லை'' என்று அவர் தம் கவிதை ஒன்றில் கூறுவதற்கும் துணிவு வேண்டும்.
புகழைத் தேடி அவர் சென்றதில்லை; அவரைத் தேடித் தேடிப் புகழ் வந்தது.
அறிஞர் வ.ரா.வை முதன் முதலில் சந்தித்தபோது கவிதை ஒன்றைப் பாடுங்கள் என்று வ.ரா. சொல்ல, உவமைக் கவிஞரின் கவிதையைக் கேட்டவுடன், ""மற்றொரு பாரதி பிறந்து விட்டான்'' என்று பலர் முன்னிலையில் மனமாரப் பாராட்டியிருக்கிறார். "சிவாஜி' ஆசிரியர் திருலோக சீதாராம், தம் இதழில் உவமைக் கவிஞரின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார். முரசொலி நாளிதழும் சுரதாவின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1944-ஆம் ஆண்டு "மங்கையர்க்கரசி' என்ற திரைப்படத்துக்கு சுரதா முதன் முதலில் வசனம் எழுதிக்கொடுத்தார். மிகக் குறைந்த வயதில் திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் "சுரதா' என்றே கூறலாம். சுரதாவின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை.
திரைப்படங்கள் பலவற்றில் சுரதாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெனோவா, நாடோடி மன்னன், அமரகவி, தை பிறந்தால் வழி பிறக்கும், தலை கொடுத்தான் தம்பி, நீர்க்குமிழி, மறக்க முடியுமா, நேற்று இன்று நாளை முதலிய படங்களின் பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை.
எழுதாமல் இருப்பவர்களைப் பார்த்தாலும், எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தாலும் ""எழுதுக! எழுதுக! இன்னும் எழுதுக! விழுதின் ஆலமரம்போல் விரிந்து பரவும் பான்மையில் எழுதுக'' என்று ஊக்கப்படுத்துவார்.
"மங்கையர்க்கரசி' வசனம் மிகவும் புகழ் பெறவே, அதை நூலாக வெளியிட்டார். திரைப்பட உரையாடல் (வசனம்) கதைப் புத்தகமாக முதன் முதலில் வெளிவந்தது கவிஞர் சுரதா எழுதியதே. 1946-இல் "சாவின் முத்தம்' என்ற நூலை எழுதினார். வி.ஆர்.எம்.செட்டியார் அதை வெளியிட்டார். 1955-இல் "பட்டத்தரசி' என்ற சிறு காவிய நூல் வெளிவந்தது.
சுரதா, "உவமைக் கவிஞர்' என்ற புகழ் பெற்றவுடன், "காவியம்' என்ற பெயரில் கவிதை வார இதழ் ஒன்றைத் தொடங்கினார். முதன் முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்தியவர் என்ற பெருமையும் பெற்றார். பிறகு, "இலக்கியம்', "ஊர்வலம்', "விண்மீன்' எனப் பல இலக்கிய ஏடுகளை நடத்தினார்.
வெள்ளையாம்பட்டு சுந்தரம், சுரதாவின் "தேன் மழை' என்ற கவிதை நூலை வெளியிட்டார். அதற்குத் தமிழக அரசு 1969-ஆம் ஆண்டு பரிசளித்தது. ஆனந்த விகடனில் வாரம்தோறும் கவிதைகள் எழுதினார். திரைப்பட நடிகைகளைப் பற்றி அவர் எழுதியது பலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதற்கு சமாதானமான பதிலைச் சாதுர்யமாக அளித்திருக்கிறார்.
1972-ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் பெருமை பெற்றது. 1982-இல் எம்.ஜி.ஆர்., பாவேந்தர் விருதும், பத்தாயிரம் ரூபாயும், தங்கப்பதக்கமும் வழங்கிச் சிறப்பித்தார். 1990-இல் இன்றைய தமிழக முதல்வர், பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்தார். 1995-இல் அன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவால், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "இராஜராஜன்' விருது வழங்கப்பட்டது.
20-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை நூல்களும் 100-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களும், நான்கு திரைப்படங்களுக்கு வசனம்மும் எழுதிப் புகழைச் சேர்த்துக்கொண்டார்.
சுரதா, தன் சகோதரியின் மகள் சுலோசனாவை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகன். பெயர் கல்லாடன்.
ஒழுக்க சீலரும், வாழ்க்கைநெறியைச் சற்றும் மீறாதவருமான கவிஞர் சுரதா, 2006-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி நள்ளிரவு காலமானார்.
மணிவிழா, பவழவிழா, முத்துவிழா கண்ட உவமைக் கவிஞர் 85 ஆண்டுகள் தன் கவிதையின் வலிமையால், நல்ல நண்பர்களின் நட்பால் உயிர் வாழ்ந்தவர். தமிழ் உள்ளவரை வாழ்வார்.
""உண்மையில் அவர் மறையவில்லை; உவமைகள் உள்ளவரையில் வாழ்வார்'' என்று எழுதிய கவிஞர் சுரதாவின் கவிதையும் அழியாது.

நான்தான் தமிழ்


உலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது. 1816இல் எல்லிஸ் என்ற அறிஞர் தென்னிந்திய மொழிகள் வடமொழியல்லாத மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றுள் தமிழ்மொழியின் தொன்மையினையும் வடமொழியினின்றும் தனித்து இயங்குதற்குரிய ஆற்றலையும் உலகறிய நிலைநாட்டினார்.

இவர் நிகழ்த்திய ஆராய்ச்சியின் அடித்தளத்தில்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தமிழ்த்தெய்வ வணக்கம் பாடியதும், பரிதிமாற்கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்) தாம் எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு" எனும் நூலில் தமிழ்மொழி உயர்தனிச்செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தியதும் அமைந்தன. இவர்களைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கத்தினைத் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தொடங்கினார். இவ்வியக்கத்தினைத் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட பலரும் பேணி வளர்த்தனர். உலகின் முதல் செம்மொழி தமிழ் என்ற கருத்தினைப் பாவாணர் The Primary Classical Language of the World என்ற தம் நூலில் விளக்கியுள்ளார்.

கால்டுவெல் காலத்திற்கு முன்பே, வடமொழியிலும் வல்ல தமிழறிஞர்கள் வடமொழியில் காணப்படாத தமிழ்மொழியின் தனி இயல்புகளைக் கண்டறிந்து கூறினர். இவர்களுள், கி.பி 18 ஆம் நூற்றாண்டினராகிய மாதவச் சிவஞான முனிவர் முதலில் சுட்டத்தக்கவர். இச்சான்றோர் தொல்காப்பியப் பாயிரவிருத்தியில், “தமிழ்மொழி புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா.....” என்று எழுதியிருத்தல் எண்ணத்தக்கது.

தமிழ் மொழியையும் வடமொழியையும் ஒப்பிட்டு முறையாக ஆராய்ந்த முதலறிஞராகச் சிவஞான முனிவர் கருதுதற்கு உரியர்.

பன்மொழிப் புலமைமிக்க, புகழ்பெற்ற தமிழியல் அறிஞர்கள் பலரும் செவ்வியல் மொழிக்குரிய தகுதிகள் யாவும் தமிழ்மொழியில் நிரம்பப் பெற்றுள்ள நிலையினைத் தம் ஆய்வுநூல்களில் நிலைநாட்டியுள்ளனர்.

“இருபத்தாறாயிரத்து முந்நூற்று ஐம்பது அடிகளில் உருப்பெற்றுள்ள சங்க இலக்கியம், சிறந்த உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழை உயர்த்துகிறது. தமிழர் பண்பாட்டின் விளைவாக விளங்கும் இம்மொழி இந்தியத் திருநாட்டில் ஒப்பற்றது. தனித்தியங்கும் ஆற்றலையும், தமிழ்மண்வாசனை கமழும் உயர்தரம் கொண்ட இலக்கியக் கொள்கையினையும், யாப்பியல், பாவியல், அணியியல் முதலிய இலக்கணங்களையும் பெற்று விளங்குவது.

சங்கச் செய்யுள் என்பது மொழியியல், யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமைபெற்ற வெளிப்பாடாகத் திகழ்வது. தமிழர் பண்பாட்டின் நனி சிறந்த கூறாகத் திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளரால் படியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், செப்பமும் முழுமையும் வாய்ந்த படைப்பாகவும் திகழ்கிறது. இவ்வகையில், சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும்" எனக் கமில் சுவலபில் குறிப்பிடுகிறார்.

உலகப்புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஏ . கே . இராமாநுசன் மேலே கூறப்பெற்ற கருத்தினை வழிமொழிவதுடன், இந்தியச் செம்மொழிகள் இரண்டினில் வடமொழி வழக்கில் இல்லை என்றும் தமிழ்மொழி தொன்றுதொட்டு வழங்கிவரும் சிறப்புக்குரியது என்றும் கூறியுள்ளார்.

மேலே கூறப்பெற்ற மொழிவல்லுநர்களின் கருத்துகள் ஒருபுறமாக, வரலாற்றறிஞர்களும் புதைபொருளாய்வாளர்களும் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என்றும், தொல்பழந்தமிழர் நாகரிகம் என்றும், அங்கு வாழ்ந்தோர் பேசிய மொழி செம்மொழித்தமிழின் மூலமொழி என்றும் நிலைநாட்டியுள்ளனர். திராவிடமொழிகளிலும் வல்ல மேலைநாட்டு வடமொழிப் பேராசிரியர்கள் டி. பர்ரோ, எம். பி. எமனோ உள்ளிட்டோர் வடமொழி வேதங்களில் காணப்படும் எண்ணற்ற தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். பாணினியின் அட்டாத்தியாயி என்னும் வடமொழியின் மூல இலக்கண நூலுக்குப் பேருரை கண்ட காத்தியாயனர், பதஞ்சலி ஆகியோர் தமிழ் தொடர்பான தம் அறிவினைப் புலப்படுத்தியுள்ளனர். கிரேக்கம், ஈபுரு, சீனம், சப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட உலக மொழிகளில் காணப்படும் பற்பல தமிழ்ச் சொற்களைத் துறைவல்ல அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். மேலை, கீழை நாடுகளுடனும் தமிழ்மக்கள் கொண்டிருந்த பண்பாட்டு, வணிகத்தொடர்புகளை நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் ஆராய்ச்சிஅறிஞர்கள் நிலைநாட்டியுள்ளனர்.

எனவே, செம்மொழித்தமிழின் சிறப்பும் உலகமக்களுடன் தமிழர் கொண்டிருந்த தொடர்பும் தெள்ளிதிற் புலனாகும்.

Submerged Park in Austria


சாயிபாபா விரத விதிமுறைகள்


1. இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம்.
2. இந்த விரதம் அற்புதப் பலன்கள் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.
3. விரதத்தை எந்த ஒரு வியாழக் கிழமையானாலும், ஸாயிநாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் ஸாயிபாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
4. காலை அல்லது மாலையில் ஸாயிபாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் ஸாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி ஸாயிவிரத கதையைப் படிக்கவும். ஸாயிபாபாவை ஸ்மரணை செய்யவும். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும்.
5. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும், அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.
6. வியாழக்கிழமைகளும் முடிந்தால் ஸாயிபாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோயில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே ஸாயிபாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யவும்.
7. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.
8. விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக் கிழமைகள் நிறைவு செய்யவும்.
விரத நிறைவு (உத்யாபனம்) விதிமுறைகள்
9வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும். ஸாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, ஸாய்பாபாவின் விரதம் மற்றும் மகிமை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்யலாம். 9வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும்.
மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதம், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது ஸாயிபக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

குங்குமம் … அதன் மகிமை


திருவாரூரை அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியம். வேத விற்பன்னர். மகாபெரியவர் சன்னிதானத்தில் முதல் பக்தர். ஒரு முறை மகாபெரியவர் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தார். கற்பகாம்பாள் சன்னிதியில் கொடுக்கப்பட்ட குங்குமப் பிரசாதத்தைப் பார்த்ததும், அந்தக் குங்குமம் சுத்தமான தயாரிப்பாக இருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது. தூரத்தே கோஷ்டியில் நின்றுகொண்டிருந்த வேங்கட சுப்பிரமணியத்தை அருகில் வரும்படி கட்டளையிட்டார். ஓடோடி வந்து பவ்யமாக குனிந்தபடி நின்றார் அவர். உனக்கொரு வேலை கொடுக்கப் போறேன். செய்வியா?” என்றார். உத்தரவு” என்றார் வேங்கட சுப்பிரமணியம். தமிழ்நாட்டில் பல கோயில்களில் அம்பாள் சன்னிதியில் கொடுக்கப்படும் குங்குமம் அசலான தயாரிப்பாக இல்லை. எனவே, பக்தர்களுக்காக நீ சாஸ்திரோக்தமாக குங்குமம் தயாரிக்க வேண்டும்” என்று ஆக்ஞையிட்டார் மகாபெரியவர்.

மகாபெரியவர் கட்டளையிட்டவுடன் சும்மா இருக்க முடியுமா? வேதங்கள், உபநிஷத்துக்கள், அம்பாளின் மகத்துவத்தை விளக்கும் ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றில் குங்குமத்தின் பெருமைகளைக் குறித்த தகவல்களைச் சேகரித்தார். குங்குமம் தயாரிப்பு தொடர்பான புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்தார். பின் தயாரிப்பைத் துவக்கினார். நல்ல தரமான குண்டு மஞ்சள், எலுமிச்சை, படிகாரம், வெண்காரம், நல்லெண்ணெய் ஆகியவைதான் குங்குமத் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள். பழந்தயாரிப்புப்படி கைகளாலேயே தயாரிக்கப்பட்ட குங்குமத்தைச் செய்து முடித்ததும் வேங்கட சுப்பிரமணியத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தயாரித்த குங்குமத்தை ஒரு துணிப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு மகாபெரியவரைப் பார்க்க கும்பகோணம் விரைந்தார். குங்குமத்தை உள்ளங்கையில் இட்டுப் பார்த்தவுடன் மகாபெரியவரின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. இந்தப் பணியை நீ தொடர வேண்டும்” என்று சைகையிலேயே ஆணையிட்டார். வேங்கட சுப்பிர மணியம் ஸ்ரீவித்யா உபாசகர். அம்பாள் குங்குமப் பிரியை ஆயிற்றே! ஒரு அர்ப்பணிப்போடு குங்குமத் தயாரிப்பில் இறங்கிவிட்டார் வேங்கட சுப்பிரமணியம்.

ஸ குங்கும விலேபனாம் அளிக சும்பி கஸ்தூரிகாம்
ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸ ஸரஸாப பாசாங்குசாம்
அசேஷஜ நமோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸூம பாசுராம் ஜப விதௌ ஸ்மரேத் அம்பிகாம்என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது குங்குமப் பூவின் விழுதைப் பூசிக் கொண்டிருப்பவளும், நெற்றியை அலங்கரிக்கும் கஸ்தூரி திலகம் இட்டவளும், புன்னகைக்கும் கண்கள் உள்ளவளும், வில், அம்பு, பாசம், அங்குசம் ஏந்தியவளும், எல்லா மக்களையும் தன்பால் ஈர்ப்பவளும், செந்நிற மாலை, ஆடைகள் அணிந்து, செம்பருத்திப் பூ போல ஒளிமயமாக இருப்பவளுமான அம்பிகையை ஜபகாலத்தில் நினைவு கொள்கிறேன் என்பதுதான் இதன் பொருள். அம்பாள் உமைக்கு பல அம்சங்கள். திரிபுரசுந்தரி, காமாட்சி, அபிராமி, பார்வதி, லலிதா என்று பல திருநாமங்கள். ஒவ்வொரு அம்சத்திலும், பல பாக்கியங்களை பக்தர்களுக்கு அள்ளித் தருகிறாள் அம்பாள். எப்போதும் சுமங்கலியாகவே இருப்பவள் லலிதா” என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுமங்கலியான பெண்ணை பளிச்சென்று வெளிப்படுத்துவது, அவளது நெற்றியில் அலங்கரிக்கும் குங்குமம்தான். ஒரு பெண் தன் திருமணத்தின் போதுதான் குங்குமம் வைத்துக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறாள். நெற்றியிலுள்ள குங்குமம், ஒரு பெண்ணின் சுமங்கலித் தன்மையை மட்டும் சொல்வதல்ல. அவளுக்குள் பொதிந்திருக்கும் ஞானத்தையும், ஆற்றலையும் குறியீடாக உணர்த்தும் தன்மையும் கொண்டது. சௌந்தர்ய லஹரியும் லலிதா சகஸ்ரநாமமும் குங்குமத்தின் பெருமைகளை எடுத்து வைக்கின்றன.

சுமார் 5,000 வருடங்களாக, குங்குமம் வைத்துக் கொள்வது என்பது நமது சம்பிரதாயமாக இருந்து வருகிறது என்கிறது ஒரு புராணத் தகவல். இரண்டு இமைகளுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. நமது உடலில் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஏழு சக்கரங்கள் உள்ளன. நமது செயல்கள், சாதனைகள், சாகசங்கள் என்று அனைத்துக்குமே காரணமாக அமைந்தவை இந்தச் சக்கரங்கள். இந்தச் சக்கரங்களின் செயல்பாட்டைத் தூண்டி விடுவதில், முதுகுத் தண்டுக்கு அடிப்பகுதியில் பொக்கிஷமாக இருக்கும் குண்டலினி சக்திக்கு பெரும்பங்கு உண்டு. யோகம், தியானம் போன்றவற்றின் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி, இந்த ஏழு சக்கரங்களைத் தூண்டி விடலாம். இந்த ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை, நெற்றிப்பொட்டில், புருவங்களின் மத்தியில்தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்பட காரணமாக அமைவது இந்த ஆக்ஞா சக்கரம் தான். அதைக் குறித்துத்தான் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைக்கிறோம்.

நெற்றியில் குங்குமம் வைப்பதால் என்ன நன்மை?

நாகரிகமோகத்தில் நிகழும் தவறுகளில் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வதும் ஒன்று. நெற்றியில் புருவமத்தியில் மூளையின் முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. இதை, யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா சக்ர ஸ்தானம் என குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் இதற்குப் பெயருண்டு. சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரமே நெற்றிக்கண்ணாக இருப்பதைக் காணலாம். திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சடங்கு செய்கின்றனர். இதன் சிறப்பை உணர்வதற்காகவே நெற்றியில் குங்குமம் இடுகிறோம். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் குங்குமம் வைக்க வேண்டும். உடல் முழுவதும் மின்காந்த சக்தி வெளிப்பட்டாலும், நெற்றியில் புருவமத்தியிலுள்ள நுண்ணிய பகுதியில் அதன் சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. இதன் காரணமாகத்தான், மனக்கஷ்டம் வந்தாலோ, ஏதாவது ஒன்றை தீவிரமாக சிந்தித்தாலோ அந்த இடம் உஷ்ணமடைந்து தலைகனம், தலைவலி போன்ற பிரச்னை உண்டாகிறது. இதை தவிர்த்து, குளிர்ச்சியை உண்டாக்கவே சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடுகிறோம். இதனால், உடல், மனோசக்தி வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. முகம் களையோடு பிரகாசமாகத் திகழ்கிறது. பொட்டு வைப்பது என்பது அலங்காரத்திற்காகவும், ஆன்மிக காரணத்திற்காகவும் மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்காகவும் நம் பெரியவர்கள் இப்பழக்கத்தை ஏற்படுத்தினர்

மகாகாளி சாலிஸா!

பொதுவாக, நமது தமிழ் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் காளி பற்றிய பல சுலோகங்கள், பாடல்கள் இருந்தாலும், அவற்றுடன் நாம் மகாகாளி சாலிஸாவை தினமும் பாராயணம் செய்தால், அவள் பிரத்தியட்சமாக வந்து நம்மைக் காப்பாள். சகல சவுபாக்கியங்களையும் கொடுப்பாள். நாற்பது வரியில் அமைந்துள்ள ஹனுமன் சாலிஸா தரும் நற்பயன்போல ஸ்ரீராம் சாலிஸாவைப்போல் ஸ்ரீமகாகாளி சாலிஸா வும் சக்திவாய்ந்தது. நன்மைகளையெல்லாம் கற்பக விருட்சமாகத் தந்து, தீமைகளை தீயினால் தூசாக்கி, நம்மை புகழுடனும் பொருளுடனும் வாழ்வாங்கு வாழவைக்க ஸ்ரீ மகாகாளி சாலிஸா ஒரு வரப்பிரசாதம். காரிய சித்திக்கும், கஷ்ட நிவர்த்திக்கும் அவசியம் படிக்க வேண்டிய சாலிஸா இது!.

மகாகாளி சாலிஸா தோஹா

ஜய ஜய சீதாராம கே
மத்யவாஸினி அம்ப
தேஹு தர்ஷ ஜகதம்ப அப்
கரோ ந மாது விளம்ப
ஜய தாரா ஜய காளிகா
ஜய தச வித்யா வ்ருந்த
காளி சாலிஸா ரசத்
ஏக சித்தி கவிஹிந்த ப்ராத
கால உட்ஜோ படே
து பஹரியா ஷாம்
துக்க தரித்திரதா தூர் ஹோ
சித்தி ஹோய் சப்காம்

சௌபாயி

ஜய காளி கங்கால மாலினி
ஜய மங்களா மஹாகபாலினி
ரக்த பீஜ பதகாரிணி மாதா
சதா பக்த ஜனனகி சுக்தாத
ஷிரோ புத்தி அங்கே ஜய காளி
ஜய மத்ய மதங்கே
ஹர ஹ்ருதயாரவிந்த சுவிலாஸினி
ஜய ஜகதம்ப சகலதுக்க நாசினி
ஹ்ரீம் காளி ஸ்ரீம் மகாகாளி
க்ரீம் கல்யாணி தக்ஷிணகாளி
ஜய கலாவதி ஜய வித்யாவதி
ஜயதாரா சுந்தரி மஹாமதி
தேஹு சுபுத்தி ஹரஹீசப் சங்கட்
ஹோகு பக்த கே ப்ரகட்
ஜய ஓம்காரே ஜய ஹூம்காரே
மஹாசக்தி ஜய அபரம்பாரே
கமலா கலியுக தர்பவினாசினி
சதா பக்த ஜனகே பயநாசினி
அப் ஜகதம்ப ந தேர் லகா வஹு
துக்க தரித்திரத்தாயோர் ஹடாவகு
ஜயதி கராள காளிகா மாதா
காலானல சமான் துதிநாதா
ஜய சங்கரி சுரேஷி சனாதனி
கோடி சித்த கவிமாது புரானி
கபர்த்தினி கலி கல்ப சனாதனி
ஜயவிகசித் நவநளின விலோசனி
ஆனந்த கரணி ஆனந்த நிதானா
தேஹீமாது மோஹி நிர்மல ஞானா
கருணாம்ருத சாகர க்ருபாமயி
ஹோஹீ துஷ்டஜனபர அப்நிர்தயி
சகல ஜீவ தோஹி பரம ப்யாரா
சகல விஷ்வதேரே ஆதாரா
ப்ரளய கால மேம் நர்த்தன காரிணி
ஜயஜனனி ஸப் ஜககோபாலினி
மஹோதரி மஹேஷ்வரி மாயா
ஹிமகிரிசுதா விஷ்வ கீ சாயா
ஸ்வசந்த் ரத மாரத துனா மாஹி
கர்ஜத் தும்ஹிஅவுர் கோயிநாஹி
ஸ்பூர்தி மணிகணாகர் ப்ரதானே
தாராகண தூப்யோம்ம விதானே
ஸ்ரீ தாரே சன்தன ஹிதகாரிணி
அக்னி பாணி அதி த்ருஷ்ட விதாரிணி
தூம்ர விலோசனி ப்ராண விமோசனா
சாமுண்டே மர்கட கோ வாசினி
கப்பர் மத்ய சு÷ஷானாத் சாஜி
மாரேஹீமாம் மஹிஷாசுரபாஜி
அம்ப அம்பிகா சண்டி சண்டிகா
சப் ஏக தும் ஆதிகாளிகா
அஜா ஏகரூபா பஹுரூபா
அகத சரித்ரதப் சக்தி அனூபா
கல்கத்தா கே தக்ஷிண துவாரே மூர்த்தி
தோர் மஹேஷி அபாரே
காதம்பரி பான ரத ஸ்யாமா
ஜய மாதங்கி காம கே தாமா
கமலாசன வாஸினி கமலாயனி
ஜய ஸ்யாமா ஜய ஜய ஷ்யாமாயனி
மாதங்கி ஜப் ஜயதி ப்ரக்ருதி ஹே
ஜயபக்தி உர் குமதி சுமதி ஹே
கோடி ப்ரம்ஹ சிவ விஷ்ணு காமதா
ஜயதா அஹிம்ஸா தர்ம ஜன்மதா
ஜல் தல் தச்சு மரிரின நாதினி
ஜப் ஸரஸ்வதி வீணா வாதினி
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயே விச்சே
கலித கண்ட÷ஷாபித நாமுண்டா
ஜய ப்ரம்மாண்ட சித்தி கவி மாதா
காமாக்யா அவுர் காளி மாதா
ஹிங்க ராஜ் விந்த்யாசல வாசினி
அட்டஹாசினி அரு அதன நாசினி
கித்னி ஸ்துதி கரூம் அகண்டே
துப்ரம்மாண்டே சக்தி ஜிதசண்டே
கரஹு க்ருபா சர்பே ஜகதம்பா
ரஹஹும் நிஷங்க தோர் அவலம்பா
சதுர்புஜி காளி தும் ஸ்யாமா
ரூப தும்ஹார மஹா அபிராமா
கடக அவுர் கப்பர் கர சோஹத
சுர் நரமுனி சப்கோ மன மோஹித்
தும் ஹரி க்ருபா பாவே ஜோ கோயி
ரோக சோக நஹிம் தாகஹம் ஹோயி
ஜோ யஹ் பாட் கரே சாலிஸா
தாபர் க்ருபா கரஹி கௌரீஸா

தோஹா

ஜய கபாலினி ஜய சிவா
ஜய ஜய ஜய ஜகதம்பா
சதா பக்த ஜன கேரி
துக்க ஹரஹி மாது அவலம்ப.

Boost for dopamine packaging protects brain in Parkinson's model

Boost for dopamine packaging protects brain in Parkinson's model
Dopamine and related neurotransmitters are stored in small storage packages called vesicles by the vesicular monoamine transporter (VMAT2). When released from these packages dopamine can help regulate movement, pleasure, and emotional response. Low dopamine levels are associated with neurodegenerative diseases such as Parkinson's disease and recent research has shown that VMAT2 function is impaired in people with the disease.
Scientists generated transgenic mice with increased levels of VMAT2 and found it led to an increase in dopamine release. In addition, the group found improved outcomes on anxiety and depressive behaviors, increased movement, and protection from MPTP, the chemical that can cause Parkinson's disease-related damage in the brain.
The complete study is available in the journal Proceedings of the National Academy of Sciences (PNAS).