Search This Blog

Sunday, January 26, 2014

ஹரிவராசனம் விஸ்வமோகனம்


கார்த்திகை மாதம்,  முருகனுக்கும் சாமி ஐயப்பனுக்கும் உகந்த மாதம். இந்தப் பாடலை பதிவிடுவதில் மனதிற்கு இனிமை.

இசையமைப்பாளர் ஒரு கிறிஸ்துவர், பாடியவரும் ஒரு கிறிஸ்துவர். இருந்தும் நமது மனதில்  திருப்தியான ஒரு தெய்வீக தன்மையை கொண்டுவருவதில் வெற்றியடைந்துவிட்டார்கள்.

எப்படி விமர்சிப்பது என்று தெரியவில்லை. எல்லாமே முழுமை பெற்றது போல ஒரு பாடல்.

திரைப் படம்: சாமி ஐயப்பன் (1975)
இசை: G தேவராஜன்
குரல்: K J யேசுதாஸ்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: P சுப்பிரமணியம்
நடிப்பு: ஜெமினி, M N நம்பியார், ஸ்ரீவித்யா, லக்ஷ்மி

http://asoktamil.opendrive.com/files/Nl8yNDkzMDgzNF9iblI1Nl9kZWYw/Harivarasanam.mp3





ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா


இந்தப் பாடலுக்கு Sha Yamuna அவர்களின் விளக்கம் கருத்துரையில் இருப்பதை விட இங்கே பதிவது அன்பர்களுக்கும் உதவும் என நினைக்கிறேன்.
நன்றி ஷா யமுனா.


பாடல் பற்றிய விவரங்கள்

இசைஅமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பாடியவர்கள் : கே.ஜே. யேசுதாஸ்

பாடலாசிரியர் : கம்பன்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ஐயர்

பொருள்

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம்ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம்நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே


மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்)
பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்ய நர்த்தனம் புரிபவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம்ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

உலகின் உண்மைப் பொருளாகவும், உலக உயிர்களுக்கு நாயகனாகவும்
தன்னை சரணடைந்தவர்க்கு எல்லாவளமும் அளிப்பவரும், ஓங்கார மந்த்ரமாய் இருப்பவரும், இசையில் ப்ரியம்/நாட்டம் உடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

குதிரை வானரும், அழகிய முகமுடையவரும், கதாயுதம் ஏந்தியவரும்,
தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல ப்ரியம் உள்ளவரும், கீர்த்தனங்களில் ப்ரியமுடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

மூன்றுலகிலும் அர்ச்சிக்கப்படுபவரும், எல்லா தெய்வங்களின் அம்சமாக விளங்குபவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், வேண்டுவதை அளிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

சம்சார பயத்தை போக்குபவரும், பக்தருக்கருள்வதில் தந்தை போலும், உலகத்தை தன் மாயையால் மயக்குபவரும், விபூதி தரித்தவரும், வெள்ளை யானையை வாகனமாக கொண்டவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

மதுரமான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்க வைக்கும் உடலமைப்புக் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை போன்ற்வற்றை வாகனமாக கொண்ட
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து
வசிப்பவரும், வேதகோஷங்களில் மகிழ்பவரும், கீதங்களில் லயிப்பவருமான
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

சுவாமியே சரணம் ஐயப்பா

வளையாபதி - மூலக்கதை - குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்



நன்றி www.koodal.com/tamil/research/articles.asp?id=264&content=tamil&name=tamil-online

முத்தமிழில் ஒன்றான நாடகத்தினின்று வளர்ந்த வடிவம் திரைப்படம். கற்றார்க்கும் கல்லாதவர்க்கும் களிப்பு நல்கும் திரைப்படம் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் இயைந்ததாகக் காணப்படுகிறது. இது கல்வியறிவு முழுவதும் பெறாத கிராமங்களில் கூடத் தனது கவர்ச்சியினால் வெகுவிரைவில் வளர்ந்தது. இங்ஙனம் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் புராணக் கதைகளைத் திரைப்படமாக்கி அதில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். புதுவையில் பிறந்த சுப்புரத்தினம் தமிழ் பயின்று புலவராகத் திகழ்ந்தார். பாரதியின் நட்பால் தன்னைப் பாரதிதாசனாக்கிக் கொண்டு பாடு பொருளில் புதுநடை கண்டார். திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பால் தனது படைப்புகளைப் புரட்சிகரமாக்கி வந்தார். பாரதிதாசன் தமிழனாய், தமிழாசிரியனாய், புரட்சிக்கவிஞனாய் வாழ்ந்த காலத்தில் திரைப்படத்துறையில் பாடலாசிரியராகக் கால்தடம் பதித்தார். புதுவைக்குயிலின் இனிய கானங்கள் பாடல்களாகத் திரைவானில் ஒலிக்கத் தொடங்கின. கவிஞரின் எழுத்துப் புலமை அறிந்தோர் தம் படத்திற்குத் திரைக்கதை, உரையாடலையும் எழுத அவரை அழைத்தனர். அந்த வகையில் பாவேந்தர் பாரதிதாசன் வளையாபதி என்னும் படத்திற்குத் திரைக்கதை உரையாடல் (ஒரு பாடல்) எழுதினார். பாரதிதாசன் எழுதிய இப்படத்தின் திரைக்கதை  உரையாடலைக் கட்டுரை புரப்பாகக் கொண்டது இக்கட்டுரை. பாரதிதாசன், மூலக்கதையை எவ்வாறு திரைக்கதையாக்குகிறார் என்பதையும், எவ்வாறு கதை மாற்றம் பெறுகின்றது என்பதையும், திரையில் பாரதிதாசனின் தமிழ்ச்சுவை எப்படி உள்ளது என்பதையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வளையாபதி - மூலக்கதை:
ஐம்பெருங்க காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. அழகிய விருத்தங்களாலான இக்காப்பியத்தின் எழுபத்தி இரண்டு பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. அபிதான சிந்தாமணி, நவகோடி நாராயணன் வளையல் வியாபாரம் செய்யும் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவன். அவனைப் பற்றிப் பாடிய தமிழ்நூல் வளையாபதி என்கிறது. நவகோடி நாராயணன் வளையாபதி காப்பியத் தலைவன், வைசிய புராண முப்பத்தைந்தாவது சருக்கத்தில் அமைந்த வளையாபதியின் மூலக்கதை, நவகோடி நாராயணன் எனும் வைர வாணிகன் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை மணந்தான். அதனால் வணிகர் குலத்தினர் அவனை வெறுத்தனர். அப்பெண்ணைப் பிரிந்து அயல்நாடு சென்று பொருளீட்டி, காவிரிப்பூம்பட்டினத்தில் தன் குலத்துப் பெண்ணொருத்தியுடன் வாழ்ந்து வருகிறான். முன்பு தொடர்பு கொண்டிருந்த பெண்ணுக்குப் பிறந்த பிள்ளை வளர்ந்து, தந்தையை அறிந்து வணிகர் அவையினரால் நாராயணன் மகனே இவன் என முறை வழங்கப்பெற, தன் தாயைத் தந்தையுடன் சேர்த்து வைக்கிறான்.
திரைக்கதை அமைப்பு:
காப்பியக் கதையைத் திரைக்கதையாக மாற்றித் திரைக்கதைக்கென உரையாடலையும் தீட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். செல்வம் கொழித்த காவிரிப் பூம்பட்டினத்தில் நவகோடிப் பொன்னுக்கு அதிபதியாக நேர்மையான வாணிபனாக வாழ்ந்து வருபவன் வளையாபதி. தன் குலத்துப் பெண்ணொருத்தியை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வருகிறான். ஆறு வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமையாலும் ஊர்மக்களின் கேலிக்கு உள்ளானதையும் மனதில் கொண்டு மனமுடைந்த வளையாபதி சத்தியவதி என்பவளை விரும்பி இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொண்டு ஊருக்கு வருகிறான். ஆத்திரமும் வருத்தமும் அடைந்த முதல் மனைவி சுந்தரி சத்தியவதியைப் பழி தீர்க்க அவளை ஒழுக்கங்கெட்டவள் எனத் தன் கணவனை நாடகமாடி நம்ப வைக்கிறாள். கருவுற்ற நிலையில் கணவனாலும் தந்தையாலும் விரட்டியடிக்கப்பட்ட சத்தியவதி தற்கொலைக்கு முயல, அவளை மூதாட்டி ஒருத்தி காப்பாற்றுகிறாள். அவள் அரவணைப்பில் உத்தமன் என்னும் ஆண் மகனைப் பெற்று வளர்க்கிறாள். வளர்ந்த உத்தமன் காவிரிப்பூம்பட்டினத்துப் பள்ளி ஒன்றில் படித்து வருகிறான். இதற்கிடையில் சுந்தரியின் தம்பி சாத்தானின் காதலி அல்லிக்குப் பிறந்த குழந்தையைத் தம் குழந்தையென வளையாபதியிடம் கூறி அவனை நம்ப வைக்கிறாள் சுந்தரி. உத்தமன் படிக்கும் பள்ளியில் வளையாபதி மகன் அழகனும், படிக்க, இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. உத்தமன் யார் என்பதை சுந்தரி, சாத்தான் அறிகின்றனர். சுந்தரி சாத்தான் மூலம் சத்தியவதியைக் கொல்ல முயல்கிறாள். தாயைக் காப்பாற்றிய உத்தமன் தந்தை மீது வழக்கு தொடர்கிறான். வழக்கில் உத்தமன் வளையாபதி மகன் என்பதும் அல்லியின் மகனே அழகன் என்பதும் தெரிய வருகிறது. சத்தியவதி கணவருடன் சேர்கிறாள். தன்னை வளையாபதியும் சத்தியவதியும் மன்னிக்கும்படிக் கூறிய சுந்தரி தற்கொலை புரிகிறாள். வளையாபதி, சத்தியவதி உத்தமனுடன் வாழ்கின்றனர். இதுவே வளையாபதியின் திரைக்கதை.
கதை மாற்றம்:
மூலக்கதையில் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்கிறான் நவகோடி நாராயணன். மகன் தன் தந்தையைக் கண்டுபிடித்து வாணிகர் அவையினரால் தான் நாராயணன் மகனென ஏற்றுக் கொள்ளப் பெறுகிறான். தன் தாயைத் தந்தையிடம் சேர்க்கிறான். திரைக்கதையில் வளையாபதி குழந்தை இன்மையால் தன் மனத்திற்குப் பிடித்த பிற்பட்ட குலப்பெண்ணை இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். அவன் மகன் உத்தமன் தன் தந்தையின் தவறை உலகுக்கு உணர்த்தி தக்க பாடம் புகட்டித் தன்னை அவன் மகன் என உலகறியச் செய்கிறான்.
பாத்திரப்படைப்பு:
திரைக்கதை அமைப்பிற்கேற்ப கதை மாந்தர்கள் படைக்கப்பட்டால்தான் படமும் சிறக்கும். அந்த வகையில் கதைப் போக்கிற்கேற்ப வளையாபதியில் பதினெட்டு பாத்திரங்களை படைத்துள்ளார் பாரதிதாசன். படைப்புக்கு பாங்கு கொண்ட பாரதிதாசன் பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கேற்ப பாத்திரப் பெயர்களையும் சூட்டியுள்ளார். வளையாபதி எனும் படத்தின் பெயரே கதை நாயகனுக்கு நேர்மை, சத்தியம் தவறாத பெண் சத்தியாவதி உண்மையும் நேர்மையும்கொண்ட அவள் மகன் உத்தமன் வளையாபதியின் மைத்துனன் வஞ்சகன். அவன் பெயர் சாத்தான். ஏனைய பாத்திரப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக சுந்தரி, அல்லி, அழகன், வேம்பு என்றிவ்வாறு படைத்துள்ளார். தலைமைப் பாத்திரங்களாக வளையாபதி, சத்தியவதி, சுந்தரி, உத்தமன் ஆகியோர் படைக்கப்பட்டுள்ளனர்.
உரையாடல் திறன்:
திரைப்படத்தின் மூல ஆதாரம் கதை, திரைக்கதை, உரையாடல் திரைக்கதை, உரையாடலில் மட்டும் கவனம் கொண்டு கதாசிரியர்கள் எழுதி வந்தனர். அவர்கள அப்பணிக்கு மட்டுமே அமர்த்தப்படுவர். இன்றைய தமிழ் சினிமாவின் நிலையே வேறு. இசையும் பாடல்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு உரையாடல் (வசனம்) முக்கியத்துவம் பெற்ற காலத்தில் பாரதிதாசன் படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல் எழுதி வந்தார். அத்திம்பேர், அம்மாமி எனும் தமிழ் மறைந்து, தமிழ் சினிமாவில் தமிழுக்கு இடம் வாங்கிக் கொடுத்தவர் நம் பாரதிதாசன். வளையாபதி உரையாடல் மனித வாழ்க்கையில் கலந்திருந்த தினசரி மக்கள் பேசும் எளிய அழகு தமிழில் அமைந்துள்ளது. இயற்கைத் தன்மையுடன் தமிழ் வார்த்தைகளைப் படைத்துள்ளார் பாவேந்தர். எதுகையும், மோனையும், உவமை நயமுமாய் கதைக்கும் காட்சிக்கும் தக்க வகையில் எழுதப்பெற்ற வளையாபதி உரையாடலின் துளிகள் (சில) இங்கே சான்றுகளாக,
குழந்தை இன்மையால் மனமுடைந்த கணவரிடம் பேசுகிறாள் சுந்தரி,
சுந்தரி : அத்தான் எதிர்காலம் பலன் தராதா?
வளையாபதி : அன்பு மணமான ஆறாண்டுகளுக்குப் பிறகா? பட்ட மரத்தில் எதிர்காலம் பச்சிள நீர் தருமா? வறண்ட பாலைவனத்தில் எதிர்காலம் மண மல்லிகை தருமா?
சுந்தரி : நம்பிக்கை வையுங்கள் அத்தான்!
வளையாபதி : நம்பிக்கை உன்னிடத்திலா? தேக்கு மரத்தில் சந்தனம்! வெற்றுச் சிப்பியில் முத்து....!
சுந்தரி : (கண்ணீருடன்) நான் மலடி! வெற்றுச் சிப்பி! தேவைப்படுகிறது உங்களுக்கு ஒரு முத்துச்சிப்பி
நண்பர் மகள் சத்தியவதியிடம் அவளை மணப்பதாகக் கூறுகிறான் வளையாபதி அப்போது இருவரது உரையாடல்.
சத்தியவதி : உங்கள் உள்ளம் என்னை ஒப்புக் கொள்கிறது. இல்லையா?
வளையாபதி : வட்ட நிலா குடியேற வானம் ஒப்புக் கொள்ள வேண்டுமா?
சத்தியவதி : ஆனாலும் .... நான் வேளாளர் மகள். நீங்கள் வயிர வணிகர். ஊரார் நம்மை எதிர்ப்பார்கள்.
வளையாபதி : வையம் எதிர்த்தாலும் வளைந்து கொடுக்கப் போவதில்லை நான்! என் பெயர் வளையாபதி
அப்பா வீட்டிற்கு வந்த சத்தியவதியைப் பார்த்து யாரோடு வந்தாய் அம்மா என்கிறார். சத்தியவதியோ கண்ணில் பெருகும் நீரோடு கதியற்றவள் என்ற பேரோடு என்கிறாள். வேலைக்காரி வேம்பின் பேச்சு சுவையாக உள்ளது என்பதை வேம்பு உன் பேச்சு கரும்பு என்கிறாள் சத்தியவதி. வணிகர் குலத்தினர் சத்தியவதியை அவள் ஊருக்கு அனுப்பி வைக்கச் சொல்கின்றனர். அதற்கு வளையாபதியோ உயிரை விட்டு உடலை எங்கேனும் பிரிக்க முடியுமா? என்று கணவன் மனைவி உறவுப் பிணைப்பையும், வேலைக்காரி கூறும் அப்பேர்ப்பட்ட சீதையையே விரட்டிட்டாங்க என்னும் கூற்றில் காப்பியத்தன்மையையும் பாரதிதாசன் எழுதிய உரையாடலில் காண முடிகிறது. இவ்வுரையாடலுடன் ஒரு பாடலுடன் வளையாபதி திரைப்படம் 1952ல் திரைக்கு வந்தது. கூடவே புலமையுடையோரின் பாராட்டுக் கடிதங்களும் பாரதிதாசனுக்கு வந்தன.
முடிவுரை:
பாட்டுக்கவி பாரதிதாசனின் திரைக்கதை, உரையாடல் கதைப்போக்கிற்கென கதைமாந்தர் பண்பு நலனுடன் உணர்ச்சி வெளிப்பாட்டுடனும் சிறந்த சொல்லாட்சி, நடை, எதுகை, மோனையுடன் பழகு தமிழில் அமைந்துள்ளது. இசைப்புலமையும் இயற்றமிழும் கொண்டு விளங்கிய பாவேந்தர் திரைத்தமிழிலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. வளையாபதி திரைக்கதை, உரையாடல் அதற்குத் தக்கச் சான்றாகும்.
நன்றி: கட்டுரை மாலை

டி எம் எஸ் அவர்களுக்கு இது ஆரம்ப கால பாடல். ஆகையால் நன்றாக அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது.
ஜமுனா ராணி ரொம்பவும் இலகுவாக பாடியிருக்கிறார்.

இசை S. தட்சிணாமூர்த்தி  மற்றும் P M. சுந்தரம் என்றாலும் இந்தப் பாடலுக்கு சுநதரம் இசையமைத்திருப்பதாக அறிகிறேன்.

கொஞ்ச காலம் பின்னரும் இதே மேட்டில், டி எம் எஸும், சுசிலா அம்மாவும் ஒரு பாடல் பாடியிருக்கின்றனர். இப்போது நினைவுக்கு வரவில்லை.

திரைப் படம்: வளையாபதி (1952)
குரல்கள்: டி எம் எஸ்,  K ஜமுனா ராணி
பாடல்: பாரதிதாசன்
இசை: S. தட்சிணாமூர்த்தி  மற்றும் P M. சுந்தரம்
நடிப்பு : G முத்துகிருஷ்ணன் , சுந்தரியாக T A. ஜெயலக்ஷ்மி, சத்யவதியாக சௌகார் ஜானகி, உத்தமனாக ராமகிருஷ்ணா
இயக்கம்: T R சுந்தரம்






குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

கொஞ்சிடும் அஞ்சுகமே ஓடி வந்த ஜோடி புறா
கூடி ஆனந்தமாய் கொஞ்சி பாடிடுதே பாடிடுதே
இன்பம் நாடிடுதே

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

கொஞ்சிடும் அஞ்சுகமே ஓடி வந்த ஜோடி புறா
கூடி ஆனந்தமாய் கொஞ்சி பாடிடுதே பாடிடுதே
இன்பம் நாடிடுதே

குளிருடன் மாலை வேளை கொல்லும் நெஞ்சம் என்ன சொல்வேன்

மனமும் தென்றல் காற்றும் ஒன்றை ஒன்று மருவிடுதே

குளிருடன் மாலை வேளை கொல்லும் நெஞ்சம் என்ன சொல்வேன்

மனமும் தென்றல் காற்றும் ஒன்றை ஒன்று மருவிடுதே

அன்னாவி வானத்தையே தாவும் ஒரு மாமருந்தே
அன்னாவி வானத்தையே தாவும் ஒரு மாமருந்தே
அரும்பாய் முல்லைக் கொடி ஓடி தாவிடுதே
ஆனந்தம் நாதா மேவிடுதே
ஆனந்தம் நாதா மேவிடுதே

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் ஹா ஹா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

ஆதலால் இன்ப வாழ்வு கைக் கூடும் எவ்வுயிர்க்கும்
ஆதலாலே மயிலே
காதலால் நாம் இருவர்
ஆதலாலே மயிலே
காதலால் நாம் இருவர்

சேர்ந்தே இன்பமெல்லாம் வாழ்ந்தே வாழ்ந்திடிவோம்
வாழ்ந்திடிவோம் நாமே வாழ்ந்திடிவோம்
ஓ ஓ
வாழ்ந்திடிவோம் நாமே வாழ்ந்திடிவோம்

என் போல் பாக்யவதி யாருமில்லை உலகினிலே
இன்பம் இன்பம் நம் இரண்டு மனம் ஒரு மனமே

ஓ ஓ ஓ ஓ ஓ

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் ஹா ஹா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறப்பபடும்


ஏசு பிரான் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைத்துலக மக்களுக்கும் எங்களுடைய அன்பான மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

நமது ஏசுபிரான் கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற அருமையான வாசகத்தை தந்துள்ளார். அதன் விளக்கத்தை நாம் அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நல்ல நாளில் தெரியப் படுத்திக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றால என்ன? எதைக் கேட்க வேண்டும்?எதைத் தட்ட வேண்டும் என்பதை அறிந்து கொண்டால்தானே கேட்கவும் முடியும் தட்டவும் முடியும்.

இதற்கு வள்ளலார் கொடுக்கும் உண்மையான பதில்.

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் மரணம் இல்லாமல் வாழ்ந்து மேல் நிலைக்கு செல்லும் தகுதி படைத்தவர்கள் ,மேல் நிலை என்றால் என்ன? நாம் எங்கு இருந்து வந்தோமோ அந்த இடம்தான் மேல் நிலை என்பதாகும். மேல் நிலைக்கு செல்வதற்கு, என்றும் அழியாத அழிக்க முடியாத அருள் என்னும் பொருள் வேண்டும். அதைப் பெற்றால் தான் மேல் நிலைக்கு செல்லமுடியும் அதை எப்படி பெற முடியும்?

நம்முடைய தந்தையாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடம் அருள் நிறைந்த மாபெரும் கோட்டையாகும். அந்த கோட்டையின் கதவு பூட்டப்பட்டு இருக்கிறது. அதை தட்டினால் திறக்காது. சாவிப்போட்டு திறந்தால்தான் திறக்கும் அந்த திறவு கோல் சாதரணமாக கிடைக்காது. அருள் கோட்டைக்குள் நுழைய அருள் என்னும் திறவு கோல அதாவது சாவி வேண்டும். அப்பொழுதுதான் நாம் கதவை திறந்து உள்ளே செல்ல முடியும்.

அந்த சாவியை எப்படிப் பெறுவது?

எல்லா உயிர்கள் இடத்தும் அன்பு செலுத்த வேண்டும். அந்த அன்பு உயிர் இரக்கத்தாலும் ஜீவ காருண்யத்தாலும் மட்டுமே கிடைக்கும். வேறு எந்த வழியாலும் கிடைக்காது எனபதை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

உயிர் இரக்கமும் ஜீவ காருண்யமும் எப்படி உண்டாகும். நம்முடைய தந்தையாகிய அருட்பெரும் ஜோதிக் கடவுளின் பெருமையும் தரத்தையும், நம்முடைய சிறுமையும் தரத்தையும் ஊன்றி விசாரிக்க வேண்டும். அப்படி விசாரிக்கும் போது எல்லா உயிர்களும் நம்முடைய சகோதர உயிர்கள் என்பது விளங்கும். அந்த உண்மை விளங்கினால் எந்த உயிர்களுக்கும் இம்சை என்னும் துன்பம் துயரம் அச்சம் பயம் உண்டாகாமல் நடந்து கொள்வோம். இதுவே உயிர் இர்க்கம் ஜீவ காருண்யம் என்பதாகும்.

தயவு என்பது இரண்டு வகைப்படும். அவை யாதெனில் கடவுள் தயவு, ஜீவர்கள் தயவு என்பதாகும். அதே போல் அருள் என்பது இரண்டு வகைப்படும். கடவுள் அருள் ஜீவர்கள் அருள். அதனால் ஜீவ தயவால் ஜீவ அருளைப் பெற்றுக் கடவுள் தயவால் கடவுள் அருளைப் பெறமுடியும். அந்த அருள் எங்கு இருக்கும் என்றால், கடவுளின் கோட்டையாகிய பரலோகமாகும் அதாவது பரமாகாசமாகும்.

அந்த கடவுளின் கோட்டைக் கதவு சாத்தப் பட்டு இருக்கும். அந்தக் கதவை திறப்பதற்கு அருள் என்னும் திறவு கோல் வேண்டும். அந்த அருள் எதனால் பெறமுடியும் என்றால் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, தயவு, கருணை என்னும் உயிர் இரக்கம் வேண்டும். அந்த இரக்கத்தின் வாயிலாக நம்முடைய ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும். அந்த அருள் உடம்பு முழுவதும் பரவி ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும். அந்த ஒளி உடம்பைக் கொண்டு ஆண்டவர் இருக்கும் கோட்டையின் கதவை திறந்து தட்ட வேண்டும். அப்பொழுதுதான் கதவு திறக்கும். அந்த அருள்தான் சாவியாகிய திறவு கோலாகும்.

ஆதலால் நாம் கேட்க வேண்டியது அருள் என்னும் திறவு கோலாகும். அதுவே கேளுங்கள் தரப்படும் என்பதாகும்.

தட்டினால் கதவு திறக்காது அருள் என்னும் திறவு கோல கொண்டுதான் மேல் வீட்டுக் கதவை திறக்க முடியும்.

கடவுள் இருக்கும் இடம் என்பது நமது உடம்பில் உள்ள தலை பாகத்தில் உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்க்கும் மேலே புருவ மத்தியில்அசையாது ஒரு தீபம், அதாவது ஒளி இயங்கிக் கொண்டு உள்ளது. அதை சுற்றிலும் அசைக்க முடியாத மாயை என்னும் திரைகளால் மறைக்கப் பட்டுள்ளது.  அதுதான் கோட்டையின் கதவு என்பதாகும். அந்தக் கதவை தட்டினால் திறக்காது. ஜீவ காருண்யத்தால் பெற்ற அருள் என்னும் திறவு கோலைக் கொண்டு திறந்தால்தான் திறந்து உள்ளே போக முடியும்.

இதுவே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பதாகும் .

http://asoktamil.opendrive.com/files/Nl8yNDkzMTk3MV9xMmtkTl9jOWFj/Kelungal%20tharapadum.mp3






கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா 
 சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

ஆறு வயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே 
ஆகமங்கள் ஐம்பத்தாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்
இயற்கை உலகமே தூய்மையானது என 
இயேசு நினைத்தாரே
எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே
எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே



கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்


ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே

ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே
பணிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே 
இயேசு கேள்வியில் ஆலயகுருக்கள் ஆனந்தமானாரே
இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே

இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே
இளமைபருவத்தில் எளிய வாழ்கையில் இருப்பிடமானாரே

இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்


தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே 
தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே

தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே


நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உழுங்கள் என்று 
உலக பிதா சொன்ன போது உழவர்கள், தொழிலாள 
ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டார்  
இயேசு ஒன்றாக பதிந்துவிட்டார் 

அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டுயென்றார் 
இயேசு ஆண்டவன் தொண்டுயென்றார்
முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்தானமும் பெற்றாரே

துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே

துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக்கொடுத்தானே 
முப்பது காசுக்காகவே காட்டிக்கொடு
த்தானே 



ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே 
தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே

தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே
சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே 
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே 



கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்