Search This Blog

Monday, May 20, 2013

Mango Prevent obesity

Mango contains a sufficient quantity of fiber, which causes
slow absorption of sugar into the
blood stream; helps reducing
appetite, maintain blood sugar
levels resulting in controlling body
weight. When the fiber passes
through intestines it also eliminates a number of harmful fats of the body.

Mango is also valuable to combat
acidity and poor digestion

ஊர் பெருமைகள் திருநெல்வேலி

:

ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன் நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என அழைக்கப்படுகிறார், "நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி "எனப்படுகிறது. இந்தியாவின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 3000ஆண்டு பழமையான இந்த நகரம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.நல்ல பசுமை வளமும் கொண்டது.

திருநெல்வேலி தமிழ் தனி இனிமையானதாகவும் வித்தியாசமான வழக்கும் கொண்டது. தமிழ் மொழி வளர்ந்த பொதிகை மலையும் இங்கே உள்ளது.
"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும்,"பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.

வீர வரலாறு:
பாண்டியர்கள் காலத்தில் திருநெல்வேலி தென்பகுதியின் தலைநகரமாக விளங்கியது. ஆற்காடு நவாப் மற்றும் நாயக்கர்கள் காலத்தில் இது முக்கிய வர்த்தகநகரமாக இருந்தது. அவர்கள் திருநெல்வேலியை நெல்லை சீமை என்று அழைத்தனர்.
பாண்டியர்கள் ஆட்சிக்கு பின் கி.பி. 900 முதல்1200 வரை சோழ பேரரசின் முக்கிய நகரமாக திருநெல்வேலி இருந்தது. பின்னர் விஜயநகர பேரரசின் கட்டுப்பாட்டிலும்,மறவர்,நாயக்கர்கள், நவாப்கள் கட்டுப்பாட்டிலும் இருந்தது.
பாண்டிய பேரரசு வீழ்ந்தவுடன் பாண்டிய வம்சத்தினரும் நிர்வாகிகளும் குறுநில மன்னர்களாய் ஆண்ட பூமி . வெள்ளையனை, நவாப் ,மருதநாயகம் யூசுப்கான் போன்றவர் கூடிய படையை குறைந்த வீரர்களைக் கொண்டு வெற்றி பெற்ற மன்னர் புலித்தேவர் பிறந்தமண். வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட மன்னர் கட்டபொம்மன், அவர் சகோதரர் ஊமைத்துரை, தளபதி வெள்ளையத்தேவன் வாழ்ந்த மண் அது. ஒரு நாயக்கர் பாளையமும் 24 மறவர் பாளையமாகவும் கடுமையாக வெள்ளையர்களை எதிர்த்தவர்களின் பூமி. இந்திய விடுதலை போரட்டத்திற்கு விதையை போட்டு வெற்றியையும் பெற்ற வர்கள்.

புரட்சி களம்:
சத்ரியர்கள் மட்டுமே ஆளவும், படைகளில் பங்கேற்கும் உரிமை பெற்றதை மாற்றி தாழ்த்தப்பட்ட அருந்ததிய சமூகம் சார்ந்த ஒண்டி வீரனை தளபதி ஆக்கி பல சமூகங்களை படைகளில் சேர்த்தவர். கட்டபொம்மனும் தாழ்த்தப்பட்ட சமூக சுந்தரலிங்கம் என்பவரை படைவீரனாக சேர்த்தார் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பினாலும் மன்னர்கள் கவலை கொள்ளாமல் புரட்சி விதைகளை முதலில் தூவினர். புலித்தேவரையும் ஒண்டிவிரனையும் கடவுளாக்கி வழிபடுகின்றனர்.

திருநெல்வேலி அல்வா:
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக
வட இந்திய புண்ணியத் தலங்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச்
சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில் மயங்கிய அவர் அந்த அல்வா
தயாரித்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மூலம்
திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு துவங்கி இன்று அல்வா என்றாலே
திருநெல்வேலி என்றாகி விட்டது . திருநெல்வேலி முழுக்க அல்வாக் கடைகளின் எண்ணிக்கை அதிகமாக
இருக்கிறது. இருந்தாலும் திருநெல்வேலியில் இருக்கும் நெல்லையப்பர் கோவிலின்
எதிரே இருக்கும் "இருட்டுக்கடை"அல்வாவிற்குத்தான் முதலிடம்.
இந்த இருட்டுக் கடையில் அல்வா மாலை நேரத்தில் மட்டும் அதாவது மாலை ஆறு
மணிக்குத் துவங்கி இரவு பத்து மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. 82
ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணசிங் மற்றும்
அவரது மகன் பிஜீலிசிங் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த அல்வாக் கடையில் மாலை
நேரத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அல்வா வியாபாரம் செய்யப்பட்டு
வந்திருக்கிறது. இதனால் இந்த அல்வாக் கடையை திருநெல்வேலி மக்கள் இருட்டுக்
கடை என்று அழைத்தனர்.
இப்போதும் இந்த இருட்டுக் கடையில் தங்களது பழைய நிலையிலேயே அதே
மனோபாவத்தில் அதாவது வெறும் விளக்கு
வெளிச்சத்திலேயே கடையில் எவ்விதமான ஆடம்பரமும் செய்யாமல் அல்வா வியாபாரம்
நடப்பதால் இந்தக் கடைக்கு இருட்டுக் கடை என்கிற பெயரே நிலையான பெயராகி
விட்டது.

மெயின் அருவி, ஐந்தருவி, தேனருவி, சென்பகாதேவி, பழைய குற்றாலம் என பல அருவிகள் உள்ளன.

- வி. ராஜமருதவேல்

கலிகாலம் (மலையாளம்)

கலிகாலம் (மலையாளம்)

தனிமையில் வாடும் முதியவர்களின் பிரச்னை, விளையாட்டை, இயல்பை தொலைக்க வைத்த கல்விமுறை, பெண்கள் மீதான பாலியல் தொந்தரவு எல்லாவற்றையும் ஒரே படத்தில் சொல்லி விடமுடியும் என்று நிரூபித்திருக்கிறது கலிகாலம் மலையாளத் திரைப்படம்….

55 வயதான தேவகி டீச்சர் (சாரதா) தன் வீட்டில் தனியாக வசிக்கிறார்… திருமணமான அவரது பிள்ளைகள் வேறு ஊர்களில் வசிக்கிறார்கள்… கல்லறைக்குள் இருக்கும் கணவனோடு பேசுவது, அக்கம்பக்கம் குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது, தன் வயது நண்பர்களோடு உரையாடுவது என அவரது நேரம் போகிறது… பசு பிரசவித்ததை கூட கொண்டாடும் ஒரு மனது அவரிடம் இருக்கிறது…

தங்கள் வேலைகளில் அம்மாவை மறந்து போகும் பிள்ளைகளைத் தேடி அவர்களது வீடுகளுக்கு அடிக்கடி செல்கிறார் தேவகி டீச்சர்… பேரப் பிள்ளைகள் பாட்டியிடம் உயிராக இருக்கின்றன… வீட்டில் இருக்கும் நந்தினி பசு பிரசவிக்க, புதிய பாலில் செய்த இனிப்புகளோடு மங்களூர், பாலக்காடு என ஆளுக்கொரு திசையில் இருக்கும் பிள்ளைகள் வீட்டுக்கு பயணமாகிறார் தேவகி டீச்சர்.. 

ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு பேருந்து ஏற்றி விடும் வேலையைச் செய்வதற்கு கூட பிள்ளைகள் சலித்துக் கொள்கிறார்கள்… யாராவது ஒருத்தர் வீட்ல நிரந்தரமா இருந்தா என்ன? என எரிச்சல்படுகிறார்கள்… டீச்சரின் யாரையும் சாராமல் தனித்தியங்கும் குணநலன் அவர்களை எரிச்சல்படுத்துகிறது… இப்படியான பயணத்தின் போது, வணிகமயமாகி விட்ட கல்வி முறையால் தன் பேரப்பிள்ளைகள்  மீது திணிக்கப்படும் அழுத்தத்தை உணர்ந்து வருந்துகிறார் தேவகி டீச்சர்.

மகள் வீட்டில் இருந்து மகன் வீட்டிற்கு செல்லும் பேருந்து பயணத்துக்கு இடையில், கேரளாவில் திடீர் வேலைநிறுத்தத்தை ஒரு கட்சி அறிவிக்கிறது… அம்மாவிற்கு என்ன ஆனது எனத் தெரியாமல் பிள்ளைகள் பதறுகிறார்கள்….. மயங்கிய நிலையில் காட்டிற்குள் தேவகி டீச்சர் போலீஸாரால் கண்டெடுக்கப்படுகிறார்…. மருத்துவமனையில் நினைவு திரும்பும்போதெல்லாம், அடக்க முடியாமல் தன்னை  மீறி சப்தமெழுப்புவார் தேவகி டீச்சர்… அப்போதுதான் அவர் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது பிள்ளைகளுக்கு தெரிய வருகிறது…

ஒரு வயதான பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த ஆண்கள் மீது கோபம் வருவதற்கு பதிலாக, தன் அம்மா மீது பிள்ளைகளுக்கு எரிச்சல் வருகிறது… அவரது சுயமாக இயங்கும் தன்மையை கேள்வி கேட்கிறார்கள்… தங்களை அவமானப்படுத்தி விட்டதாக, கோபம் கொள்கிறார்கள்… அம்மாவை யார் பார்த்துக் கொள்வது என சண்டையிடுகிறார்கள்…. இறுதியில் யாருக்கும் தெரியாமல் அம்மாவை ஒரு அறைக்குள் அடைத்து வைக்கிறார்கள்… பேரப் பிள்ளைகளை கூட அருகில் நெருங்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்… அம்மாவை பார்க்கும் பார்வையில் வெறுப்பு மட்டுமே தெரிகிறது….

ஒரு பெண் எந்த வயதில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாலும் அவளை நம் குடும்பங்கள் இப்படித்தான் நடத்துகின்றன…. குடும்பத்தின், சமூகத்தின் வெறுப்பை சுமப்பதற்கு அவள் தான் பெண்ணாய் பிறந்ததை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை… தேவகி டீச்சரின் நாட்கள் இப்படியே போய்க் கொண்டிருக்க, அவர் கருவுற்றிருப்பதாய் மருத்துவர் சொல்ல.. பிள்ளைகள் இன்னும் எரிச்சல் அடைகிறார்கள்…. அம்மாவை அருவெருப்பாய் பார்க்கிறார்கள்… அபார்ஷன் செய்வது இந்த வயதில் உயிருக்கு ஆபத்தாய் முடியும் என டாக்டர்கள் எச்சரிக்க, அம்மா இறந்தாலும் பரவாயில்லை என பிள்ளைகள் சொல்கிறார்கள்…

பிள்ளைகளின் அவமதிப்புகளை அவ்வளவு நாட்கள் பொறுத்துக் கொண்ட தேவகி டீச்சர்,  குழந்தையை கலைக்க முடியாது என மறுக்கிறார்… இந்த இடம் தான் படத்தில் என்னை வெகுவாக கவர்ந்த இடம்.. பாலியல் வன்புணர்வால் கிடைத்த குழந்தையை கூட பெற்றுத்தான் ஆக வேண்டுமா என்கிற கேள்வியை இங்கு எழுப்ப முடியாது… ஏனெனில் தன் உயிரைக் கொடுத்து இந்தக் குழந்தையை கலைக்க முடியாது என தேவகி டீச்சர் மறுப்பார்… தான் செய்யாத தவறுக்கு ஏன் சாக வேண்டும் என்கிற கேள்வி மிக ஆணித்தரமானது… மானம், அவமானம் என்கிற கற்பிதங்களை விட தனக்கு உயிர்வாழ உரிமை இருக்கிறது என தேவகி டீச்சர் நம்புகிறார்… ஒரு நொடியில் எல்லோரையும் உதறித்தள்ளிவிட்டு அவர் வயிற்றில் குழந்தையோடு கிளம்புவார். அதைப் பெற்று வளர்க்கவும் செய்வார்… தியேட்டராய் இருந்திருந்தால், இந்த இடத்தில் விசில் அடித்து கொண்டாடி இருப்பேன்…

55 வயதில் ஒரு பெண் அப்படி முடிவெடுப்பதாய் காண்பிப்பதற்கு துணிச்சல் வேண்டும்… இந்த துணிச்சலுக்காகவே நான் மலையாளப் படங்களை அதிகம் விரும்புகிறேன்… பெண்ணின் பார்வையில் படைப்புகள் மலையாளத்தில் மட்டுமே வருவதாக நம்புகிறேன்… இந்த சமூகம் பெண் மீது திணித்து வைத்துள்ள எல்லா நம்பிக்கைகளையும் மலையாளப் படம் தகர்த்தெறியத் தொடங்கி வெகுநாளாகி விட்டது… தமிழில் அப்படியாகத் தேடினால் ‘’பூ’’ படத்தை மட்டுமே சொல்ல முடிகிறது… 

கலிகாலம்
இயக்கம் : ரெஜிநாயர்