Search This Blog

Monday, April 1, 2013

அன்ரோயிட் மொபைல் சாதனங்களை சிறந்த முறையில் பாவிப்பதற்கு

தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயங்குதளமாக கூகுளின் அன்ரோயிட் மாறிவருகின்றது.இதன் விளைவாக புதிதாக அறிமுகமாகும் பல்வேறு இலத்திரனியல் சாதனங்களும் அதிகளவில் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டவையாக காணப்படுகின்றன.
இவ்வாறு அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட மொபைல் சாதனங்களை வைரஸ்களிடமிருந்து மட்டுல்லாது பல்வேறு பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட Advanced Mobile Care மென்பொருளின் புத்தம் புதிய புதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது சிறந்த அன்டிவைரஸாக தொழிற்படுவதுடன் மின்கலத்தினை சரியான முறையில் பாதுகாத்தல், அப்பிளிக்கேஷன்களை முகாமைத்துவம் செய்தல், கணினி விளையாட்டுக்களின் வேகத்தை அதிகரித்தல், மற்றும் கிளவுட் பக்கப் போன்ற வசதிகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.
தரவிறக்கச் சுட்டி

விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணனியை Wi-Fi Hotspot ஆக மாற்றுவதற்கு

மொபைல் சாதனங்களை ஏனைய கணனிகளுடன் வலையமைப்புச் செய்வதற்கு Wi-Fi Hotspot பெரிதும் உதவியாகக் காணப்படுகின்றது.இவ்வாறு மைக்ரோசொப்ட் விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட கணனி ஒன்றினை Wi-Fi Hotspot ஆக மாற்றி அதனுடன் ஏனைய மொபைல் சாதனங்களை வலையமைப்பு செய்வதற்கு Virtual Router Plus எனும் அப்பிளிக்கேஷன் உதவுகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஓப்பன் சோர்ஸ் (Open Source) ஆகக் காணப்படுவதுடன் Wi-Fi, LAN, Cable Modem, Dial-up, Cellular போன்றவற்றினூடாக இணைய இணைப்பினையும் ஏற்படுத்தக்கூடிய வசதியையும் கொண்டுள்ளது.
தரவிறக்கச்சுட்டி

சர்வாதிகாரி முசோலினி

உலகைப் பயமுறுத்திய சர்வாதிகாரிகளில், ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி.


1922 முதல் 21 ஆண்டு காலம் ஆத்தாலியின் பயங்கரமான சர்வாதிகாரியாக விளங்கிய அவர் ஹிட்லரின் நண்பர்.ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு 2 நாட்களுக்கு முன்னால், முசோலினி புரட்சிக் காரர்களால் கொல்லப்பட்டார். இந்தக் கொலை நடந்த முறை, சாதாரணமானது அல்ல.எல்லோரக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த இந்த சர்வாதிகாரி யையும், அவருடைய காதலியையும் சுட்டுக் கொன்று, பிணங்களை விளக்குக் கம்பம் ஒன்றில் தலை கீழாகத் தொங்க விட்டனர்.


தொழிலாளியின் மகன் இத்தாலியில், இரும்புப் பட்டறை நடத்திய கொல்லர் ஒருவரின் மகனாக 1883-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி பிறந்தவர், முசோலினி, தாயார் பள்ளி ஆசிரியை.அப்போது இத்தாலியில் மன்னர் ஆட்சி நடந்தவந்தது முசோலினியின் தந்தை, மன்னர் ஆட்சி ஒழிந்து, மக்கள் ஆட்சி மலர வண்டும். என்ற கருத்துடையவர் தன் இரும்புப் பட்டறைக்கு வருகிறவர்களிடம் எல்லாம் அரசியல் பேசுவார்.அதனால், முசோலினிக்கும் இளமையிலேயே அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்ததும், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் ஆங்கிலம் முதலிய மொழிகளையும்

கற்றிந்த அவர், பேச்சாற்றலும். எழுத்தாற்றலும் மிக்கவர்.



ஆசிரியர் தொழிலை விட்டு, சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றினார். பிறகு, கம்யூனிஸ்ட் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரானார். பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபப்பை உண்டாக்கின. ஒரு கட்டுரைக்காக, அவருக்கு ஒராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.சிறையில் இருந்து விடுதலை யானபோது, பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் அவரை சிறை வாசலில் வரவேற்றனர்.மறுநாளே, அவந்தி ஊன்ற புரட்சிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பொற்றார்.உலகப் போர் இந்த நிலையில் 1914-ம் ஆண்டில் முதலாம் உலகப் போர் மூண்டது. முசோலினி ராணுவத்தில் சேர்ந்தார். (இதே ஆண்டில்தான் ஜெர்மனியில் ஹிட்லரும் ராணுவத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இரண்டாம் உலகப் போர்

1939-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. ஹிட்லரும், முசோலினியும் ஒரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர்.
முதலில் இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது பிறகு போரின் போக்கு மாறி ஹிட்லருக்கும், முசோலினிக்குமு தோல்விகள் எற்பட்டன.ஆதனால் இத்தாலி மக்களிடம் செல்வாக்கு இழந்தார். முசோலினி அவரைப் பாசிஸ்ட் கட்சி மேலிடம் பதவி நீக்கம் செய்து. வீட்டுக் காவலில் வைத்தது.முசோலினியைக் காப்பாற்ற விரும்பிய ஹிட்லர், தனது உளவுப்படையை அனுப்பினார். உளவுப்படையினர் முசோலினியை மீட்டர்

சர்வாதிகாரிகளின் கடைசி காலம்

சர்வாதிகாரிகளின் கடைசி காலம் மிகவும் கொடூரமானதாகவே இருக்கும். . சர்வாதிகாரி என்றாலே அதில் ஹிட்லர், முசோலினி இல்லாமல் முழுமை பெறாது. அவர்களின் இறுதிக்காலம் எப்படி இருந்தது?

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தோளோடு தோள் நின்று உதவிய தோழன் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி. போரில் தோற்றபிறகு ஒரு வேனில் ஏறி எல்லையை கடந்து தப்பிக்க முசோலினி முயன்றார். கூடவே தனது இணை பிரியா காதலி கிளாரா பெட்டாசியையும் அழைத்துச் சென்றார்.

1945, ஏப்ரல் 26 அதிகாலையில் எல்லையை கடக்க முயன்றபோது அவர்களை புரட்சிப்படை தடுத்து நிறுத்தியது. முசோலினியை அடையாளம் கண்டுகொண்டு காதலியோடு சேர்த்து அவரை கீழே இறக்கினார்கள். "இவனை கைது செய்து நேச நாடுகளிடம் ஒப்படைத்து விடலாம்" என்று பலரும் கூறினார்கள். முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்த முசோலினி அவர்கள் முன் மண்டியிட்டு, "என்னை கொள்ளாதீர்கள்..." என்று கெஞ்சினார். எப்படிப்பட்ட சர்வாதிகாரிக்கும் உயிர் பயம் இருக்கும் போல... முசோலினியின் பேண்ட் சிறுநீரால் நனைந்திருந்தது. 

எதிரே நின்ற இளைஞர்கள் முசோலினியையும், அவர் காதலியையும் சல்லடையாக துளைத்தெடுத்தார்கள். அவர்கள் உடலை மிலான் நகரின் நடுவீதியில் போட்டார்கள். ஒரு சாமானியப்பெண் முசோலினியின் முகத்தில் காரித்துப்பினாள். பிறகு நிறைய பெண்கள் வந்து துப்பினார்கள். இளைஞர்கள் சிலர் சுற்றிலும் நின்று முசோலினியின் உடல் மீது சிறுநீர் கழித்தார்கள். பின் ஒரு பெட்ரோல் பங்க் வாயிலில் தலை கீழாக தொங்கவிட்டு போய் விட்டார்கள். முசோலினியின் கொடூரமான முடிவு ஹிட்லருக்கு தெரியவந்தது. அப்போதே அவர் உடல் நடுங்கியது. "இந்த கொடூர முடிவு எனக்கு வரக்கூடாது. நான் இறந்தவுடன் என் உடலை எரித்து விடுங்கள். என் சாம்பல் கூட எதிரிகள் கையில் கிடைத்து விடக்கூடாது. "சத்தியம் செய்து கொடுங்கள்" என்று தன் உதவியாளர்களிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். அப்போதே அவரது இறுதி நேரம் நெருங்கி இருந்தது. ஹிட்லர் ஏதாவது ஒரு அரபு நாட்டுக்கு தப்பித்துப் போயிருக்கலாம். யூதர்களை கொன்றதால் அரபு நாடுகள் இவரை வரவேற்று இருக்கும். ஆனால், ஹிட்லருக்கு கடைசி வரை அந்த எண்ணம் இல்லை. 

"எந்த விளைவுகளையும் சந்திக்கும் துணிவு ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டும். நான் வாழ்ந்த இடம் இது. இங்கிருந்தபடியே என் முடிவை சந்தித்துக்கப் போகிறேன். நாளை... கோடிக்கணக்கான மக்கள் என்னை சபிக்கப்போகிரார்கள் என்பது எனக்கு தெரியும். விதி அப்படியொரு நிலையை எனக்கு தந்து விட்டது" என்று சொன்னார் ஹிட்லர். தனது காதலி ஈவாபிரானுடன் கைகோர்த்தவாறு மெல்ல உல் அறைக்கு நடந்தார். இருவரும் சோபாவில் அமர்ந்தனர்.

ஈவா முதலில் சயனைட் விழுங்கி தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் ஹிட்லர் தன் கைத்துப்பாக்கியை எடுத்து வலது நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு தற்கொலை செய்து செய்து கொண்டார். ஹிட்லர் விருப்பபடி அவர்களின் உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. உடலின் சாம்பலை சிறு கோணிப்பையில் சேகரித்து, மண்ணை ஆழமாக தோண்டிப் புதைத்தார்கள். சாம்பல் கூட எதிரிகளுக்கு கிடைக்கவில்லை. ஹிட்லரின் விருப்பப்படிதான் அவரது மரணமும் நிகழ்ந்தது.