Search This Blog

Friday, February 22, 2013

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம்

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள்.

ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள.

1. வைகறை
2. காலை
3. நண்பகல்
4. எற்பாடு
5. மாலை
6. யாமம்

-என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.

தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள என்பதே உண்மையுமாகும்.

எம்.ஜி.ஆர். தோட்டம்

பரங்கிமலையிலிருந்து பூவிருந்தவல்லி போகும் சாலையிலிருக்கும் தமது தோட்டத்தில், எங்களை இன்முகத்தோடு கை கூப்பி வரவேற்றார் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன். படப்பிடிப்பு முடிந்த களைப்பு தீரக் குளித்துவிட்டு 'ஜில்'லென்று காட்சி தந்த அவரைப் பார்த்ததுமே மனத்திற்குக் குளிர்ச்சியாக இருந்தது. 'எம்.ஜி.ஆர். தோட்டம்' என்று புகழ்பெற்ற அந்த இடத்தைக் காண வேண்டும் என்ற ஆவலில் 'தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கலாமா?' என்று கேட்டோம்.

''தோட்டத்திலே என்ன இருக்கு? ரொம்ப சாதாரணமா ஏதோ...'' என்று அடக்கத்துடன் கூறினார் அவர்.

''ஒரு கரடி இருக்கிறதாமே...''

''இருந்தது. பாவம், அது பத்து நாட்களுக்கு முன்னே இறந்துவிட்டது. அது ரொம்பப் பொல்லாத குட்டி! அடங்கவே இல்லை. மூக்கு குத்தி வளையம் மாட்டி, கயிறு கட்டினால்தான் வழிக்கு வரும்னு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சேன். அங்கே துளை போட்டதும், ரத்தம் கொட்டி செத்துடுத்து. அதை மிருகக் காட்சி சாலைக்குக் கொடுக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்... என்ன செய்யறது? இதோ பார்த்தீங்களா, மான் குட்டிங்க. அறந்தாங்கி தோழர்கள் அன்புடன் கொடுத்தாங்க'' என்று அருகிலிருந்த மான்களைச் சுட்டிக் காட்டினார். அந்தக் குட்டிகளும் ஒரு துள்ளுத் துள்ளி எழுந்து, கண்களை உருட்டிப் பார்த்தன!

ஏழரை ஏகரா பரப்புள்ள அந்தத் தோட்டத்தில் வாழை மரங்களையும் மாமரங்களையும் தவிர, காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. நெல் விளைச்சலும் உண்டு. மத்தியில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. படம் போட்டுப் பார்க்க ஒரு சிறு தியேட்டரும் இருக்கிறது. தேகப் பயிற்சி செய்வதற்காக ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

''அண்ணாச்சிக்கு எடை அதிகமாயிடுச்சுன்னா இங்கேதான் எக்ஸர்ஸைஸ் செய்வார்'' என்று, உடன் வந்த பழைய நடிகர் திருப்பதிசாமி விளக்கம் கொடுத்தார்.

அந்தத் தோட்டத்தினுள் இருக்கும் அழகான பங்களாவுக்குத் தாயின் நினைவாக 'அன்னை நிலையம்' என்று பெயரிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதற்குக் கிழக்கே ஒரு மண்டபம் தென்பட்டது.

''அது என்ன மண்டபம்?'' என்று கேட்டேன் நான்.

''அதுதான் கோயில்?''

''என்ன கோயில்?''

''என் தாயாருடைய கோயில். அங்கே என் அன்னையின் படம் தான் இருக்கிறது. அவர்தான் நான் வணங்கும் கடவுள்.''

= 2 - 8 - 1964 , ஆனந்த விகடன் இதழில் .

ராச ராச சோழன் சமாதி

உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் , தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி தன் மகன் வெற்றி கொடி நாட்ட வழிவகுத்த மாமன்னன் ராச ராச சோழன்,
1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன்,உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை, இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். 

தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? 
ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்!!!!!
உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் , தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி தன் மகன் வெற்றி கொடி நாட்ட வழிவகுத்த மாமன்னன் ராச ராச சோழன்,
1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன்,உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை, இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள்.

தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?
ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்!!!!!