Search This Blog

Showing posts with label Veda Thoughts. Show all posts
Showing posts with label Veda Thoughts. Show all posts

Wednesday, March 6, 2019

ஏழு வகையான அனுபவப் பொருட்கள் (பிருஹதாரண்யக உபநிஷதத் தத்துவங்கள்)

 ஸப்தான்ன பிராம்மணம் :

படைப்பு முழுவதையும் ஏழு வகையான அனுபவப் பொருட்களாகப் பகுக்கிறது இந்தப் பிராம்மணம். அனுபவப் பொருட்களை ‘அன்னம்’ அல்லது ‘உணவு’ என்ற பெயரால் இது அழைக்கிரகுடு. ஏழு வகை ‘உணவுகளை’க் கூறுவதால் இந்தப் பிராம்மணம் ‘ஸப்தான்ன பிராம்மணம்’ எனப்படுகிறது.
எல்லோருக்கும் பொதுவாக முதல்வகை உணவு, இரண்டு வகை உணவுகள் தேவர்களுக்கு, மூன்று வகைகள் மனிதர்களுக்கு, ஒரு வகை உணவு மிருகங்களுக்கென்று வகைப்படுத்தப்படுகிறது.
முதலில் இந்த ஏழு வகை உணவையும் சுலோகங்களாகக் கூறி விட்டு, பிறகு ஒவ்வொன்றாக விளக்குகிறது உபநிஷதம்.
ஏழு வகை உணவுகள்
யத் ஸப்தான்னானி மேதயா தபஸாஅஜனயத் பிதா I
ஏகமஸ்ய ஸாதாரணம் த்வே தேவானபாஜயத் II
த்ரீண்யாத்மனேஅகுருத பசுப்ய ஏகம் ப்ராயச்சத் I
தஸ்மின் ஸர்வம் ப்ரதிஷ்டிதம் யச்ச ப்ராணிதி யச்ச ந II
கஸ்மாத்தானி ந க்ஷீயந்தே அத்யமானானி ஸர்வதா I
யோ வைதாமக்ஷிதம் வேத ஸோஅன்னமத்தி ப்ரதீகேன II
ஸ தேவானபிகச்சதி ஸ ஊர்ஜமுபஜீவதி இதி ச்லோகா II 1 II
பொருள்: மேதா சக்தியாலும் தவத்தாலும் பிரஜாபதி ஏழு வகை உணவுகளைப் படைத்தார். அவற்றுள் ஒன்று அனைவருக்கும் பொதுவானது. இரண்டு வகை உணவுகள் தேவர்களுக்கு அளிக்கப்பட்டது. மூன்று வகை உணவுகளை மனிதனுக்காக வைத்தார்; ஒரு வகையை விலங்குகளுக்கு அளித்தார். எவையெல்லாம் உயிர் வாழ்கின்றனவோ, வாழவில்லையோ அவை அனைத்தும் [விலங்குகளுக்கு அளிக்கப்பட்டதான] கடைசி வகை உணவில் நிலைபெற்றுள்ளன.
எப்போதும் உண்ணப்பட்டும் இந்த உணவு வகைகள் ஏன் குறையவில்லை? உணவின் இந்தக் குறையாத தன்மையை யார் அறிகிறானோ அவன் நன்றாக உணவை உண்கிறான். அவன் தேவர்களை அடைகிறான். அவன் அமுதத்தை உண்கிறான். இவை ரிக் மந்திரங்கள்.
இந்த உணவு பற்றிய விளக்கத்தை அடுத்த மந்திரத்தில் காண இருக்கிறோம். ஆனால் இங்கே மிகவும் சிந்தனைக்குரிய கேள்வி ஒன்று எழுப்பப்படுகிறது---‘எப்போதும் உண்ணப்பட்டும் இந்த உணவு வகைகள் ஏன் குறையவில்லை?’ அதாவது, வாழ்க்கையில் அனுபவங்கள், ஒன்று போனால் மற்றொன்று, அந்த மற்றொன்று போனால் இன்னும் மூன்று என்று ஏன் குறைவின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பது கேள்வி. இதற்கான பதிலையும் அடுத்த மந்திரங்களில் காண இருக்கிறோம்.

Saturday, May 21, 2016

வேதத்தில் மறுபிறப்பு பற்றிய கருத்து


அதர்வவேதம்
முண்டக உபநிடதம்

 யாகத்தையும் சேவையையும் மேலானதாக நினைக்கும் அறிவீலிகள். இவற்றிற்கும் மேலானதை அறிய மாட்டார்கள். இவர்கள் புண்ணியத்தால் அடையப்படும் உயர்ந்த சுவர்க்கத்தை அடைந்து அதன் பலனை அனுபவித்து மீண்டும் இந்த உலகத்தை அடைந்து கீழான பிறவி எடுக்கிறார்கள்.

யஜுர்வேதம் கட உபநிடதம்
1.2.6. பக்குவமடையாத, கவனக்குறைவுடன் கூடிய, செல்வம் மீதான மோகத்தால் அறிவை இழந்தவனக்கு மேலான லோகத்திற்கான ஸாதனை விளங்காது, இவ்வளவுதான் உலகம் இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று நினைப்பவர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கிறார்கள்.

2.2.7.அவரவர் கர்மத்திற்கேற்பவும் அவரவர்களுடைய உபாஸனைக்கேற்பவும் சில ஜீவர்கள் மனித அல்லது மிருக உடலை எடுப்பதற்கான கர்பத்தை அடைகிறார்கள். வேறுசில ஜீவர்கள் மரம் முதலிய உடலை அடைகிறார்கள்
கைவல்ல உபநிடதம்.
14. முற்பிறவியில் செய்த கர்மபலனின் காரணமாக அதே ஜீவன் மீண்டும் கனவு காண்கிறான். பிறகு விழித்துக்கொள்கிறான். அந்த ஜீவன் பினவுபடாத ஞான ஸ்வரூபமான ஆனந்த மயமான அனைத்திற்கும் ஆதாரமாகவும் உள்ளான்.
சாமவேதம்-கேனோபநிடதம்
2.5. இந்த பிறவியிலேயே ஒருவன் பிரம்மத்தை அறிவானாகில் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமுண்டு, மாறாக இப்பிவியில் ஒருவன் பிரம்மத்தை அறியாவிடில், அவன் அடையும் நஷ்டம் மிகப்பெரியது, தீரர்கள், ஒவ்வொரு ஜீவனிடத்திலும் ப்ரம்மத்தை அறிந்து, இந்த உடம்பிலிருந்து நீங்கிய பின் மரணமற்றவர்களாக ஆகிறார்கள்..


வேதம் என்ன சொல்கிறது பார்ப்போம்

3.4 எந்த ப்ரம்மம் அனைத்து உயிரினங்களாக விளங்குகிறதோ அதுவே இந்த ஆத்மா. இவ்விதம் அறிகின்ற ஞானி பேச்சற்றவன் ஆகிறான். இவன் தன்னிடத்தில் மகிழ்ந்திருக்கிறான். அந்த ஒரே இறைவனே அனைவரின் இதயத்திலும் ஆன்மாவாக இருக்கிறார். அதர்வண வேதம்…….
2.10 மாசற்ற உடலற்ற ப்ரம்மம் மேலான ஒளி பொருந்திய இருப்பிடமாகிய மனத்தில் உள்ளது. அந்த ப்ரம்மம் துாய்மையானது. எது ஒளிக்கெல்லாம் ஒளியாய் உள்ளதோ அந்த ப்ரம்மத்தை ஆத்மாவை அறிந்தவர்கள் அனைத்தையும் அறிகிறார்கள்
(அதர்வண வேதம்…….முண்டக உபநிடதம் )
1.3.12.எல்லா உயிரினங்களுக்குள்ளும் மறைந்திருக்கின்ற இந்த ஆத்மா தெளிவாக விளங்குவதில்லை. கூர்மையான, நுட்பமான புத்தியின் மூலம் நுண்ணிய பார்வை உடையவர்களால் இந்த அத்மா அறியப்படுகிறது.
(யஜுர்வேதம்……கட உபநிடதம்)
அனைத்து உயிர்களுக்குள்ளும், மற்றும் அனைத்து இடங்களிலும் இறைவன் ஆன்மாவாக இருக்கிறார் என்கின்றன ஆன்மா பற்றி வேதங்கள் என்ன கூறுகின்றன? ஆத்மாவுக்கு பிறப்பில்லை, இறப்பில்லை, உருவமில்லை, அது வளர்வதில்லை, தேய்வதில்லை, அதை சாதாரண கண்களால் காணமுடியாது.
அப்படியென்றால் இந்துக்கள் எதை அனைத்து இடங்களிலும் வணங்குகிறார்கள்? வேதங்கள் யாரை இறைவன் என்று சொல்லுகின்றனவோ அந்த ஒரே இறைவனையே இந்துக்கள் அனைத்து இடங்களிலும் வணங்குகிறார்கள். மனிதனை வணங்கும்போது மனித உடலையைா வணங்குகிறார்கள்? மனிதன் என்றால் யார்? நாம் மனிதனை ஆன்மாவாக பார்க்கிறோம். ஆன்மா இந்த உடல் அழிந்தாலும் வேறு உடலை எடுக்கிறது. உண்மையான மனிதன் என்பவன் ஆன்மா, உடலும் மனமும் அவன் மேல் போர்த்தப்பட்ட போர்வைகள், உடலும் மனமும் அழிந்தாலும் உண்மை மனிதன் அழிவதில்லை. அந்த உண்மை மனிதனையே நாம் வணங்குகிறோம் மனைவி கணவனிடம் அன்புசெலுத்துவது கணவனுக்காக அல்ல, ஆன்மாவிற்காகவே, அவள் கணவனின் ஆன்மாவையே நேசிக்கிறாள். அதேபோல் கணவனும் மனைவியிடம் அன்பு செலுத்துவது மனையில் உடலையல்ல மனைவின் ஆன்மாவை நேசிக்கிறான். ஆன்மாவின் மூலமாகவே குழந்தைகளையும் நேசிக்கவேண்டும். அதேபோல் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் ஆ்மாவின் மூலமா நேசிக்கவேண்ம். ஆன்மாவே அனைத்துமாகியிருக்கிறது.
(பிருஹ தாரண்யக உபநிடதம் 2.4)
வேதங்கள் இந்த உலகிலுள்ள அனைத்து பொருட்களிலும் தூல மற்றும் சூட்சும நிலையை கடந்த ஆன்மா இருப்பதாக கூறுகின்றன. இந்த ஜடப்பொருட்களின் உள்ளே எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் ஆன்மா உள்ளது. மனிதன் போதிய அளவு மனத் தூய்மை உள்ளவனாக இருந்தால் இந்த ஜடத்தின் உள்ளே உருவமற்றதாக இருக்கும் ஆன்மாவைக்காணமுடியும் என்பது வேதவாக்கு. ஆகவே ஒரு இந்து தெரிந்தோ தெரியாமலோ எங்கும் நிறைந்திருக்கும் எப்போதும் மாறாத இறைவனைத்தான் வணங்குகிறானே தவிர கணத்திற்கு கணம் மாறிக்கொண்டிருக்கும் ஜடப்பொருளை வணங்கவில்லை. வணக்கம் எப்போதும் ஏக இறைவனுக்குத்தான். அந்த இறைவன்தான் எனக்குள்ளும் உனக்குள்ளும் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்.