Search This Blog

Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

Saturday, December 10, 2022

Theory of Stupidity

Dietrich Bonhoeffer was a Lutheran pastor and theologian in Germany during World War II. He was hanged in a concentration camp at Flossen burg because of his opposition to the Nazis and for that part, he played in an assassination plot against Hitler. 

In prison, he began to try to understand how good, intelligent, and peaceful people could become supporters of such an evil regime. That led to his theory that the greatest opponent to truth and reason was not evil, but stupidity. 

“If we want to know how to get the better of stupidity, we must seek to understand its nature.” — Dietrich Bonhoeffer

“If we want to know how to get the better of stupidity, we must seek to understand its nature,” wrote Bonhoeffer in his treatise. And the nature of stupidity has its roots deep in the subconscious. The fundamental mechanics of the human experience drives it. As ancient philosophers noted, humans are social animals. It is this very sociability that is at the base of stupidity.

“We note further that people who have isolated themselves from others or live in solitude manifest this defect less frequently than individuals or groups inclined or condemned to sociability. And so it would seem that stupidity is perhaps less psychological than a sociological problem.” — Dietrich Bonhoeffer

Stupidity is a group phenomenon. An individual can act stupidly, but that does not affect the whole. However, when a group works stupidly, that dramatically impacts the individual, compounding the entire effect. In many ways, something with initially positive ramifications stabbed humanity in the back.

Human nature doesn’t change as the years pass by. The inner workings of individual people are the same as those of their remote ancestors living on the savannas of Africa 50 thousand years ago. Some of these internal processes stretch even further back, millions of years into the past, when primitive brains started to develop.

When you speak with a stupid person, it does not seem like that person is speaking from their own heart or mind but in catchphrases and slogans adopted from others. Stupidity, to Bonhoeffer, originates when people give up their independent thinking and parrot the words and phrases of the rising power movement. They “jumped on the bandwagon” and ceased thinking independently. He observed that stupidity was found less among isolated people and more in social groups. As you reflect on the evening news and its daily presentation of people doing crazy things to others, consider that they may not be evil or malicious, but rather, stupid.

Italian economic historian Carlo M. Cipolla believes so. In his book 'The Basic Laws of Human Stupidity', Cipolla identifies four different kinds of people – stupid people, helpless people, intelligent people, and bandits.

As a group, stupid people are far more powerful than the Mafia and the Military-Industrial Complex because they actually drive and influence social outcomes. 

Cipolla found that the same proportion of people in any group tended to be stupid, even within the group of Nobel laureates or professors, or even blue-collar workers. The reality is that we have to face the same proportion of stupid people, no matter where we go or travel.

Everyone underestimates the effects of stupid people in action because it is not apparent. As a result, non-stupid people underestimate the damaging power of stupid people.

Intelligent people benefit themselves and society; bandits steal from others to benefit themselves; helpless people are exploited for their naivety despite contributing positively to society. However, stupid people are counterproductive to both their own individual and society's overall interests.

Cipolla says that a stupid person is far more dangerous, especially if the individual was born into the elite class. Their total damage capacity is infinite within their potential position as bureaucrats, generals, and even politicians.

As stated by Yuval Harari, history teaches us that people must never underestimate the role of stupidity in human history. It is one of the most powerful forces around the world.

We cannot trust human decency and supposedly good human leadership to do what is best for humanity. We can only hope that is the case, but stupid humans could win at the end of the day.

Thanks
https://medium.com/lessons-from-history/bonhoeffers-theory-of-stupidity-explains-the-world-perfectly-957cbb3fbac1
https://www.muskogeephoenix.com/news/lifestyles/grace-for-the-day-bonhoeffer-s-theory-of-stupidity/article_a384dc5f-6221-5208-bbfd-c109281db72e.html
https://www.nzinitiative.org.nz/reports-and-media/opinion/new-opinion-7/

Saturday, May 8, 2021

பன்றிமய கோட்பாடு என்றால் என்ன!

 


































ஒரு அநியாயக்கார அரசன் ஒருவன் ஒரு அப்பாவி குடிமகனை கைது செய்து மூன்று மீட்டர் மாத்திரமே பரப்பளவான ஒரு தனிச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான்.
நிரபராதியான அந்த குடிமகன் ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தான். " நான் நிரபராதி, ஏன் என்னை கைது செய்தீர்கள்? ஏன் என்னை சிறையில் அடைத்தீர்கள்?" என்று உரக்கக் கதறினான்.
பின்னர் அவனை ஒரு மீட்டர் மாத்திரமே விசாலமான ஒரு தனிச் சிறையில் அடைக்கும்படி கட்டளை வந்தது.
மீண்டும் ஆர்பாட்டம் செய்தான். ஆனால் இம்முறை "நான் நிரபராதி" என்ற வாதத்தையை மறந்துவிட்டான். "இது என்ன கொடுமை! இந்தச் சிறையில் எப்படி இருப்பது! உறங்குவது! அமர்ந்து கொண்டுதானே உறங்க முடியும்! இது உங்களுக்கே தப்பாக தெரியவில்லையா?" என கதறினான்.
சினம் கொண்ட ஜெயிலர் இன்னும் நான்கு சிறைக் கைதிகளை அவனோடு சோர்ந்து அந்த சிறிய கூட்டில் அடைத்துவிட்டான்.
இப்போது ஐந்து பேரும் இணைந்து கூக்குரலிட்டனர். "எங்களால் முடியாது. நாங்கள் மூச்சுத்திணறி செத்துதுவிடுவோம். உங்களுக்கு ஈவிரக்கம் எதுவும் இல்லையா?" என புலம்பினார்கள்.
மேலும் சினம் கொண்ட ஜெயிலர் ஒரு பன்றியை அவர்களோடு சிறையில் அடைத்து விட்டான்.
விரக்தியடைந்த அவர்கள், " நாங்கள் இந்த அசிங்கத்தோடு இந்தச் சிறிய கூட்டில் எப்படி இருப்பது! தயவுசெய்து இந்த பன்றியை மாத்திரமாவது வெளியே எடுத்துவிடுங்கள் "என கெஞ்சிக்கேட்டனர்.
தயவு காட்டிய ஜெயிலர் பன்றியை வெளியே எடுத்தான். அடுத்த நாள் அரசன் அந்தப் பக்கமாக வந்து " இப்போது உங்கள் நிலை எப்படி?" என்று விசாரித்தான்.
"நாங்கள் நல்ல சுகமாக இருக்கிறோம். எங்கள் பெரிய பிரச்சினை தீர்ந்துவிட்டது " என்று பதில் கூறினார்கள்.
இப்படித்தான் நாடுகளில் பன்றிமய கோட்பாடு அமுல்படுத்தப் படுகிறது. பன்றியை மாத்திரம் எடுத்து விட்டால் போதும் என்ற கோரிக்கையில் ஆர்பாட்டம் முடிந்துவிடுகிறது. அதற்கு முன்னால் இருந்த விவகாரம், அதற்கும் முன்னால் இருந்த மூல விவகாரம் எல்லாம் மறக்கடிக்கப்படுகிறது.
புதுப் பது பிரச்சினைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். முடிவில் பன்றிமய கோட்பாட்டை அவிழ்த்து விடுகின்றனர். பின்னர் நாம் அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக முதன்மைப் பிரச்சினைகளை மறந்துவிடுகின்றோம்.
தமிழாக்கம் / imran farook

Monday, January 11, 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் போலித் தமிழ் தேசியவாதிகளும்!

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான வரலாறு தெரியாத பலர் இன்று அதைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல கதைப்பதைப் பார்க்க சிரிப்புத்தான் வருகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழரசுக் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 1974 ஓகஸ்ட் 01 ஆம் திகதி அப்போதைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்களால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
அதற்கு முதல் தமிழரசுக் கட்சி அமைக்க இருந்த கற்பனைத் தனித்தமிழ் நாட்டின் தலைநகரான திரிகோணமலையில் தமிழ் பல்கலைக் கழகம் ஒன்றை அமைப்பதற்கென தமிழரசுக் கட்சி தமிழ் பொது மக்களிடம் பெருந்தொகை பணத்தைத் திரட்டியதுடன் திரிகோணமலையில் பல ஏக்கர் காணியையும் கொள்வனவு செய்தது. ஆனால் இன்று வரையும் அந்தப் பணத்துக்கும் காணிக்கும் என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. (தமிழரசுக் கட்சித் தலைவராகவும், பல வருடங்களாக திரிகோணமலைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் இரா.சம்பந்தன்தான் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்)
தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தமிழ் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அந்த இரு கட்சிகளும் 1965 இல் ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த அரசாங்கத்தில் சேர்ந்த பொழுதே அதைச் செய்திருக்க முடியும். ஆனால் என்ன செய்தார்கள்? தமிழரசு கட்சி தமிழ் பல்கலைக்கழகம்தான் அமைக்க வேண்டும் என்றும், தமிழ் காங்கிரஸ் கட்சி அமைவது இந்துப் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும் என்றும் சண்டை போட்டதில், ஐ.தே.க. அரசாங்கம் அதைச் சாக்காக வைத்து தமிழ் பகுதிகளில் பல்கலைக்கழகம் அமைவதை சாதுரியமாகத் தட்டிக் கழித்துவிட்டது.
இந்த நிலைமையில்தான் 1970 இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த அரசாங்கத்தில் இணைந்த இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியினதும், லங்கா சமசமாஜக் கட்சியினதும் வற்புறுத்தலாலும், அரசில் இணைந்திருந்த அமைச்சர் செல்லையா குமாரசூரியர், யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா போன்றோரினதும் மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும் முயற்சிகளினாலும் அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் ஒன்றை அமைக்க முன்வந்தது.
தம்மால் முடியாமல் போனதை மற்றவர்களின் முயற்சியால் அமைப்பதா என்ற காழ்ப்புணர்வு காரணமாக தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைவதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தது.
பல்கலைக்கழகம் அமைப்பதற்காக திருநெல்வேலியில் இருந்த பரமேஸ்வரா கல்லூரியினதும், மருதனாமடத்தில் அமைந்திருந்த இராமநாதன் மகளிர் கல்லூரியினதும் கட்டிடங்களை அரசாங்கம் சுவீகரித்தபோது, ‘ஐயோ சேர்.பொன்.இராமநாதன் தம்பதியினர் கட்டிய பாடசாலைகளை சிறீமாவோ அரசாங்கம் கபளீகரம் செய்கிறது’ எனத் தமிழரசுக் கட்சியினர் கூச்சல் போட்டனர். ஆனால் இராமநாதனின் அன்றைய வாரிசாகக் கருதப்பட்ட முன்னாள் செனட்டர் எஸ்.ஆர்.கனகநாயகம் (பிரபல சட்டத்தரணி) அவர்கள் இந்தக் கட்டிடங்களில் பல்கலைக்கழகம் அமைவதை முழுமனதுடன் ஆதரித்ததுடன், பின்னர் முற்போக்கு சக்திகளால் அமைக்கப்பட்ட ‘யாழ் பல்கலைக்கழக வளாக விஸ்தரிப்பு இயக்கம்’ என்னும் அமைப்புக்கு தலைவராகவும் பணியாற்றினார்.
பின்னர் தமிழரசுக்கட்சியினர், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைந்தால் தமிழர்களின் கலாச்சாரம் சீரழிந்துவிடும் என தமிழ் மக்களின் பழமைவாத சிந்தனைகளைக் கிளறி உசுப்பேத்தப் பார்த்தார்கள். அது எடுபடவில்லை. வட பகுதி கல்விமான்கள் மட்டுமின்றி, தமிழ் பொதுமக்களும் பல்கலைக்கழகம் அமைவதை முழுமனதுடன் வரவேற்றனர் என்பதை அதன் திறப்பு விழாவின் போதும், அதைத் தொடர்ந்து யாழ்.விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போதும் திரண்ட சனசமுத்திரம் எடுத்துக் காட்டியது.
தமிழரசுக் கட்சியினர் அகிம்சையே தமது வழி என்றும், தமது கட்சித் தலைவர் செல்வநாயகத்தை ‘ஈழத்துக் காந்தி’ என்றும் பேசி வந்தாலும், வன்முறைக்கும் தயங்காதவர்கள் என்பதை, யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் முதலாவது தலைவராக பேராசிரியர் க.கைலாசபதி நியமிக்கப்பட்டு, திறப்பு விழா ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக அவர் யாழ்ப்பாணம் வந்து வண்ணார்பண்ணையில் உள்ள மைத்துனர் பொன்னம்பலம் (பின்னாளில் யாழ் அரசாங்க அதிபராக இருந்தவர்) தங்கியிருந்தபோது, அந்த வீட்டின் மீது ஒரு இரவு வேளையில் வீசிய கைக்குண்டு வீச்சுச் சம்பவம் எடுத்துக் காட்டியது.
இந்தச் சம்பவத்தைப் பற்றிய செய்தியை அடுத்த நாள் காலை யாழ்ப்பாணத்தில் வெளியாகும் ‘ஈழநாடு’ பத்திரிகையில் பார்த்துவிட்டு நானும் இன்னுமொரு தோழரும் கைலாசபதி அவர்களைப் பார்க்கச் சென்றபொழுது அவர் சிரித்துக்கொண்டே, “நானும் யாழ்ப்பாணத்து பனங்காட்டு நரிதான் என்பது இந்த மடையன்களுக்குத் தெரியாது போலும்” என அவர் சொன்னது இன்றும் எனது நினைவில் பசுமையாக உள்ளது.
தமிழரசுக் கட்சியினரின் இந்த வகையான மிரட்டல்கள் பயனற்றுப்போய் திட்டமிட்டபடி பல்கலைக்கழகம் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் பல்கலைக்கழகத் திறப்புவிழாவையும், அதற்காக வருகை தரும் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க பங்குபற்றும் நிகழ்ச்சிகளையும் பகிஸ்கரிக்குமாறும், சிறீமாவோ யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்கும் இரண்டு நாட்களும் பொது மக்கள் பூரண ஹர்த்தால் அனுட்டித்து வெளியே வராமல் வீடுகளில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்றும் தமிழரசுக் கட்சி பொதுமக்களை வேண்டிக்கொண்டது. ஆனால் தமிழரசுக் கட்சி கேட்டுக்கொண்டதற்கு மாறாக, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல்கலைக்கழகத் திறப்பு விழா நிகழ்ச்சியிலும், சிறீமாவோ பங்கு பற்றிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதுடன், அவர் சென்ற வீதிகளின் இருமருங்கிலும் திரண்டு நின்று கையசைத்து தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழரசுக் கட்சியினர் பல்கலைக்கழகம் திறப்பதைத் தடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்விக்கு மேலே தோல்வி கண்டபோதும், ‘சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன்’ போல தமது எதிர்ப்பு நடவடிககைகளைத் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கான புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் வரை அந்தப் பீடத்தை இயக்குவதற்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் சில கட்டிடங்களை சுவீகரித்தபோது, அதற்கெதிராகவும் தமிழரசுக் கட்சி கூச்சல் போட்டதுடன், சில கிறிஸ்தவ மதகுருக்களையும் அழைத்துக் கொண்டுபோய் அரசாங்கத்தில் இருந்த செல்வாக்குமிக்க அமைச்சரான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவிடம் முறைப்பாடு செய்தனர். அதுவும் வெற்றியளிக்கவில்லை.
யாழ் பல்கலைக்கழகம் அமையவுள்ள சுற்றாடலில் வசிக்கும் மக்கள் மாணவர்களுக்கு, குறிப்பாக சிங்கள மாணவர்களுக்கு தமது வீடுகளில் அறைகள் வாடகைக்குக் கொடுக்கக்கூடாது என தமிழரசுக் கட்சியினர் செய்த பிரச்சாரமும் மக்களிடம் எடுபடவில்லை.
அதுமட்டுமின்றி, ஒரு சமயம் புதிதாக வந்த மாணவர்கள் மீது வெளியார் ஒருவர் மேற்கொண்ட பகிடிவதையால் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் மோட்டார் சைக்கில் திருத்தும் கடையொன்றில் தினவரி குழுமி நின்று வம்பளக்கும் உள்ளுர் வாலிபர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட பொழுது, அதைப் பயன்படுத்திய தமிழரசுக் கட்சியினர், பல்கலைக்கழகத்தை இயங்கவிடாமல் செய்ததுடன், பல்கலைக்கழகத்தை சில வாரங்கள் மூடவும் வைத்தனர். அதன் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் பொலிஸ் பாதுகாப்புடன் 6 பஸ்களில் வெளியூர் மாணவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் வசித்த தமிழரசுக் கட்சியின் முன்னாள் மாநகர முதல்வர் சி.நாகராசா தலைமையில் தமிழரசுக் கட்சியினர் திரண்டு பல்கலைக்கழக (பரமேஸ்வரா) சந்தியிலுள்ள ஆலயத்துக்கு முன்னால் தெருவோரம் ஒரு கொட்டகை அமைத்து, அதற்குள் மணல் போட்டு, வாள்கள், கம்பிகள், பொல்லுகள் சகிதம் இரவு பகலாக மாணவர்கள் மீது வன்முறை பிரயோகிப்பதற்கு தயாராக இருந்தனர். அந்த நேரத்தில் அருகிலிருந்த வீதியால் சைக்கிளில் வந்த கல்வியன்காட்டைச் சேர்ந்த மாணவன் ஒருவரை கத்தியால் குத்தியதில் அவரது மண்ணீரல் பாதிப்புக்குள்ளானது.
தமிழரசுக் கட்சியினர் செய்த அட்டகாசங்கள் ஒருபுறமிருக்க, பின்னர் அவர்களால் உருவாக்கப்பட்ட புலிகள் யாழ் பல்கலைக்கழகம் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனம் கொஞ்சநஞ்சமல்ல.
புலிகளின் யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த கிட்டு, விஜிதரன் என்ற மாணவனைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவத்தை மறந்துவிட முடியாது. அதுமட்டுமல்ல, பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த செல்வி, மனோகரன், படிப்பை முடித்திருந்த தில்லை போன்றோரை ஒரே நாளில் கடத்திச் சென்று தமது வதை முகாம்களில் பல மாதங்கள் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தனர். விமலேஸ்வரன் என்ற மாணவனை நடுவீதியில் வைத்துச் சுட்டுக் கொன்றனர். அதுபோல மருத்துவ பீட பேராசிரியை ராஜினி திரணகமவை வீதியில் வைத்து பட்டப்பகலில் சுட்டுப் படுகொலை செய்தனர்.
இது தவிர, நாவாந்துறையைச் சேர்ந்த பீலிக்ஸ், இணுவிலைச் சேர்ந்த சண்முகநாதன் ஆகிய இரு பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்களை ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்துக்குச் சார்பானவர்கள் என்று சொல்லி கடத்திச் சென்று கொலை செய்தனர்.
1995 ஒக்ரோபரில் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பொழுது, புலிகள் வன்னிக்குத் தப்பியோடிவிட, பல்கலைக்கழகத்தில் இருந்த அவர்களது சில ஆதரவாளர்கள் பல்கலைக்கழகத்தை மூடி வன்னிக்குக் கொண்டு சென்று இயக்குவதற்கு முயற்சி செய்தனர். (இறுதி யுத்தத்தின்போது வன்னியிலிருந்து தப்பியோடி தற்பொழுது தமிழ்நாட்டில் பதுங்கியிருக்கும் ஒருவர் இதில் முக்கியமானவர்) ஆனால் பெரும்பான்மையான பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்திய அமைதிப்படை வந்திருந்த காலத்தில் பல்கலைக்கழகம் மூடப்பட்டு, அதன் பிரதான கட்டிடத்திலும், பெண்கள் விடுதியிலும் அமைதிப்படையின் சென்னைப் படைப்பிரிவு நிலை கொண்டிருந்தது. அவர்களிடமிருந்து அதை விடுவித்து பல்கலைக்கழகத்தை இயங்க வைப்பதற்கான முயற்சிகள் எதனையும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையோ அல்லது அவர்களின் தீவிர ஆதரவாளரான அப்போதைய உப-வேந்தர் சு.வித்தியானந்தனோ செய்யவில்லை. ‘முறிந்த பனை’ நூலின் ஆசிரியர்களில் இருவர்களான ராஜினி திரணகமவும், கே.சிறீதரனுமே இந்திய அமைதிப்படையுடன் கதைத்து, அவர்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு வழிவகை செய்தார்கள்.
இப்படியே தமிழ் தேசியவாதத் தலைமைகள் யாழ் பல்கலைக்கழகத்துக்கு எதிராக மேற்கொண்ட கைங்கரியங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். முதலில் பல்கலைகழகம் வருவதை எதிர்த்தவர்கள், பின்னர் அதைத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதாவது, இது ஒரு வகையில் ‘கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்ட கதைதான்’. இதை தொடர்ந்து அனுமதிப்பது தமிழ் மக்கள் தங்களது தலையில் தாங்களே மண் அள்ளிப் போடுவதற்கு ஒப்பானது.
இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்களும், உண்மையில் வரலாறு தெரியாது அறிக்கை விடுபவர்களும் இந்த உண்மைகளைக் கொஞ்சமாவது கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதற்கே இப்பதிவு.
(1960 களில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசு பாடசாலைகளைத் தேசியமயமாக்கியபோதும் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சயுடனும், கிறிஸ்தவ மத பீடங்களுடனும் இணைந்து அதை எதிர்த்த ‘கீர்த்திமிக்க’ வரலாறும் அதற்கு உண்டு. யார் கண்டது, சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கார இலவசக் கல்வியை அறிமுகம் செய்தபோது தமிழரசுக் கட்சி இருந்திருந்தால் அதையும் அவர்கள் எதிர்திருக்கக்கூடும். அவ்வளவு தூரம் அவர்களுக்கு கல்வி மீது ;பற்றுதல்’. இல்லாவிட்டால் மாணவர்கள் கல்வி கற்பதற்காக அரும்பாடுபட்டு உருவாக்கிய யாழ் பல்கலைக்கழகத்தை தமது சொந்த தேவைகளுக்காக அரசியல் சதுரங்க மேடையாக்குவார்களா ? )

Abdul Majeed 
யாழ்.பல்கலையின் மற்றொரு பக்கம் !(Whatsup பதிவொன்று)

Wednesday, November 18, 2020

Neural mechanisms behind support for political violence

Psychologists have often studied the "bright side" of morality—its role in promoting cooperation, for example. But new research from the University of Chicago suggests that morality also has a "dark side": Sometimes, social values held with moral conviction can be used to justify violence.
The study, led by Prof. Jean Decety, used MRI scanning to map participants' evaluations of photos of political violence—defined as physical assaults of other people, not property damage—that were either aligned with or contrary to the views they held.
"When study participants held strong moral convictions and saw photos of violent protests that were congruent with their own views, we detected activation in the reward system in the brain—almost as if the violence was a 'valuable' thing," said Decety, a cognitive neuroscientist and leading scholar of moral psychology.
Thanks:Robert Stonjek
https://medicalxpress.com/news/2020-11-explores-neural-mechanisms-political-violence.html?fbclid=IwAR0ZC99CBsWDs1e4yP09PbN4QU4iIW34OFTfsiEY7GPRT7j2emDueYKFFIA

Monday, September 21, 2020

தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல

தேசியமென்பது சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை புறமொதுக்கி ஆதிக்க வர்க்க நலன்களை முதனிலைப்படுத்துவது அல்ல. மேட்டுக்குடிகளின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதற்கு பெயர் தேசியமல்ல. மாறாக பரந்துபட்டு பெரும்பான்மையாக வாழும் அடித்தள மக்களிடமிருந்து அவர்களின் பிரச்சனைகளில் மையம்கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியவாத குரலாகும். தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல. அது குறிக்கின்ற எல்லைக்குள் வாழும் முழு சமுதாயங்களினதும் வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்கவேண்டும். ஒரு தேசியவாதத்தின் தொடக்கத்தில் அந்த இனத்தின் சிந்தனை மட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் பிரச்சனைகளே முன்னிறுத்தப்படுவது சிலவேளைகளில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களது குறைபாடுகளையும் உள்வாங்கி தன்னை முற்போக்கான தேசியமாக வளர்த்துக்கொள்வதுண்டு. ஆனால் தமிழ் தேசியத்தில் அது இம்மியளவும் சாத்தியமாகவில்லை. ஒரு தேசிய இனத்தின் முதன்நிலை பண்பு கூறுகளான மொழி, நிலம், பண்பாடு, பொருளாதாரம் என்பவற்றை வெறும் சடத்துவ நோக்கில் அணுகுவதால் மட்டும் தேசிய கூட்டுணர்வை உருவாக்கி விட முடியாது.

உண்மையில் தமிழ் தேசிய கொள்கை சார்ந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் எத்தனை சிவில் அமைப்புக்கள் செயலாற்றுகின்றன?

எத்தனை தன்னுரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வேலை செய்கின்றனர்? என்று கேட்டால் என்ன பதில்?

ஆனால் தேசியவாதமென்பது இதுவல்ல. பொங்கு தமிழ் ஆரவாரம் பண்ணி மக்களை அணிதிரட்டுவதாலோ பொங்காத தமிழ் ஆர்ப்பரிப்போ செய்து தென்னிலங்கைக்கு சவால் விடுவதாலோ தமிழ் தேசியம் தழைத்தோங்க முடியாது. பூர்வீகம் பற்றிய புல்லரிக்கும் வீர வசனங்களாலோ முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுக்கின்ற ஆசாமிகளாலோ தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது.
தேசியம் என்பது பற்றி ரஷ்ய புரட்சியாளன் லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக் ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் நமக்கு புதியவையல்ல. இவையனைத்தையும் எமது முன்னோர்களே சொல்லிச்சென்றுள்ளனர்.
'துடியன்,பாணன் கடம்பன்,பறையன் என இந்நான்கல்லது குடியும் இலவே' என்கின்றது புறநானுற்று அறம்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பான் கணியன் பூங்குன்றனார் என்னும் சங்ககால தமிழ் புலவன்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பார் திருவள்ளுவர்.
இவைதான் அனைவரையும் உள்ளீர்க்கின்ற தேசிய தர்மம் ஆகும். தமிழர்தம் தேசியத்தின் போற்றத்தக்க முதிசங்கள் இவையே ஆகும். இத்தகைய அரவணைப்பிலும் அகன்று விரிந்த மனப்பான்மையிலும் உருவாகின்ற தமிழுணர்வுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும்.
தேசியவாதமென்பது இன வெறி, மதவெறி, சாதிய ஆதிக்கம், தனவந்தரதிகாரம், பிரதேச வெறி, ஆணாதிக்கம், பரம்பரையதிகாரம், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சுரண்டல், ஏகாதிபத்தியம் போன்ற அனைத்துவித அதிகாரங்களுக்கும் எதிரான ஒருமித்த குரல்களின் சங்கமமாக உருப்பெறவேண்டியதாகும். அதனுடாக சுயநிர்ணயம் கொண்ட வன்முறையற்ற சமூகநீதியுடன் கூடிய சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்பும் இலட்சிய வேட்கை கொண்டதே தேசியவாதமாகும்.
ஆனால் நமது தமிழ் தேசியமோ யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் மையத்தில் நின்றுகொண்டு இவன் பள்ளன், இவன் பறையன் அவன் வன்னிக்காட்டான், அடுத்தவன் மட்டக்களப்பு மடையன், அதற்கப்பால் சோனி, தொலைவில் இருப்பவன் தோட்டக்காட்டான் என்று வக்கணம் சொல்லி சொல்லியே தன்னை உருவாக்கியது.
பன்மைத்துவ தன்னிலைகளையும் தனித்துவங்களையும் அங்கீகரித்து உள்ளீர்ப்பதற்கு பதிலாக அனைவரையும் நிராகரித்து தனிமையப்படுத்தி வெளித்தள்ளியது.
நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும், நீர்நிலைகளையும் பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும் உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே அதன் தாற்பரியமாகும்.
அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும் மனதளவிலும் செயலளவிலும் திரளாகின்ற உணர்வே தேசிய உணர்வாகும்.
நன்றி - ஸ்டாலின் ஞானம்

Saturday, September 12, 2020

கள்ளத்தோணி (பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன்)



ஓர் எழுத்தாளர் ஓர் விடயத்தை தகுந்த மூல ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும்பொழுதே அது வலிமையான ஆவணமாக உருமாற்றம் பெறும். சமூக, அரசியல், வரலாற்று விடயங்களை எழுதுபவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான விடயமாக இது உள்ளது.
அவ்வகையில் இலங்கையின் சமூக, அரசியல், வரலாற்றுத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு பேசாப் பொருளை பேசுபொருளாக்கிப் பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன் அவ்வாறான வலுவான நூல்களை எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றார் என்றால் மிகையல்ல இவரது படைப்புகளில் கண்டிக் கலவரம் 1915, தலித்தின் குறிப்புகள் வரிசையில் இந்த கள்ளத்தோணி நான் வாசித்த மூன்றாவது நூலாக இணைகின்றது.
மலையகத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர்கள் என்று இலங்கைக் கரையை அடைந்தனரோ அன்று தொடக்கம் இன்று வரை அவர்களிற்கு இழைக்கப்பட்டுவரும் சமூக அநீதிகளை இந்நூலில் பிரதானமாக கோடிட்டுக் காட்டியுள்ள நூலாசிரியர் அவற்றிற்கான நீதியையும் வேண்டி வலியுறுத்தி நிற்கின்றார். இதற்குப் பக்கபலமாக இறுதி அத்தியாயங்களில் தான் எதிர்கொள்ளும் இடர்பாடுகளையும் எழுதத் துணிந்தமை "எண்ணித் துணிக கருமம்....." எனும் குறள் வரிகளிற்கேற்ப ஆசிரியர் தனது கருத்தில் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துரைக்கின்றது.
வலிமை மிக்கவன் தனது எதிரி தன்னைப் பற்றி ஏதாவது உரைக்கும்பொழுது தனது எதிரியை பழிவாங்குவதாக எண்ணி அவனது வலிமை குறைந்த அயலவனை பழிவாங்குவது போல் இலங்கையில் மலையகத் தமிழர்களிற்கெதிராக 1939ல் நாவலப்பிட்டியில் ஏற்பட்ட முதலாவது இனக்கலவரத்தையும் அதன்நீட்சியாக தொடர்ந்து வந்த அரசுகள் ஏற்படுத்திய சட்டங்கள், ஒப்பந்தங்கள், நடவடிக்கைகள் வரை பல விடயங்களை சுட்டிக்காட்டி அவற்றால் ஏதுமறியா அப்பாவி மக்கள் வஞ்சிக்கப்பட்ட விதத்தையும் வலியுடன் வெளிக்காட்டியுள்ளார்.
தேசங்கள் என்றும் தமது நலன்களுக்கே முன்னுரிமை வழங்கும் எனும் உண்மையை 'கச்சத்தீவு' இலங்கைக்கு வழங்கப்பட்ட வரலாற்றினூடாக இந்நூல் அழகாக வெளிக்காட்டியுள்ளது, வடக்கு கிழக்கை ஆதாரமாகக் கொண்ட மக்களும் வரலாற்றிலிருந்து எதிர்கால நகர்வு தொடர்பான பாடங்களைக் கற்க வேண்டுமென்பதனை இது வலியுறுத்துகின்றது.
இதற்கப்பால், தலைமுறை தலைமுறையாக உரிமைகள் மறுக்கப்பட்டு, இழக்கப்பட்டு,வாய்ப்புகளின்றி, தேசங்களாலும் தேசிய இனங்களாலும் பந்தாடப்பட்ட மக்கள் தங்களை ஏன் மலையகத் தமிழர் என ஓர் தனித்தன்மையுள்ள இனமாகக் காட்ட வேண்டிய அவசியமேற்பட்டதையும் அதற்கான காரணங்களையும் வெளிக்கொணரும் இந்நூல் வரலாற்றை கற்கத் தூண்டுபவர்களிற்கும் வரலாற்றினூடே பாடங்களை கற்க வேண்டிய அவசியமுள்ளவர்களிற்கும் ஓர் பிரதான உசாத்துணையாகவே உள்ளது என்றால் மிகையல்ல.
வரலாற்றில் மலையகத்தை தளமாகக் கொண்ட தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மறைக்கப்படக்கூடாதவை மட்டுமல்ல அது மன்னிக்கப்பட முடியாதவையுமாகும்.
குறிப்பு :- அனைவருக்கும் பயனுள்ள இந்நூலை இலங்கையிலுள்ள பல புத்தக நிலையங்களில் வாங்குவதற்குரிய வசதிகள் உள்ளன. அனைத்து விடயங்களையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியுள்ள இந்நூலின் ஓர் பிரதியை தனிப்பட்ட வகையில் கொள்வனவு செய்வதன் மூலம் எம்மவரை நாமே ஊக்குவிக்க முதற்காரணியாக அமைவோம்.
Sarawanan Komathi Nadarasa
Thanks

Pragash Sinnarajah

கள்ளத்தோணி புத்தகத்தை இவ்வாரம் கொழும்பு BMICH இல் புத்தக விற்பனை மற்றும் கண்காட்சியில் வாங்கி, ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.
முன்னர் நான் அறிந்திராத விபரங்களும் இதில் இருந்தன. குறிப்பாக, 'ப்ரஸ்கேர்டில்' பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
83 கலவரங்களைத் தொடர்ந்து தமிழ் நாட்டுக்கு இடம் பெயர்ந்து, அதனால் தமது அடையாளங்களைத் தொலைத்து விட்டவர்களில் சிலரைத் தனிப்பட்ட முறையில் நான் அறிவேன்.
இதிலுள்ள 23 கட்டுரைகளும் முக்கியமானவை.
என்னை மிகவும் திருப்திப்படுத்திய மிகச் சமீபத்திய வாசிப்பு இது.

Pathmanathan Mahadevah

Friday, August 7, 2020

ஒரு வாக்களிப்பு நிலையத்திற்குரிய வாக்குகள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை வாக்கெண்ணும் நிலையத்தில் வைத்து கணக்கிட முடியுமா??


ஒரு தேர்தல் தொகுதி சார்பாக பல வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் அவ்வாக்கெண்ணும் நிலையத்தில் தொகுதிக்குட்பட்ட வேறு வேறு பிரதேசங்களை சார்ந்த (நிலத்தொடர்பற்ற, வேறு வகையில் இலகுவாக யாரால் யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதனை இலகுவாக கணிக்க முடியாத வகையில்)வாக்களிப்பு நிலையங்கள் சார்பான வாக்குப்பெட்டிகள் எண்ணப்படும்

முதலாவது எண்ணிக்கையானது வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய பெட்டியிலுள்ள வாக்குகளின் எண்ணிக்கையை வாக்குச்சீட்டு கணக்குடன் சரிபார்ப்பது ஆகும். இவ்வாறு ஒவ்வொரு பெட்டியாக கணக்கு சரிபார்க்கப்பட்டு ஒட்டுமொத்தமாக கலக்கப்படும். அதன் பின்னரே இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் பெற்ற வாக்குகள் சார்பாக எண்ணப்படும். வாக்காளர்களது ஜனநாயக உரிமையையும் அவர் யாருக்கு வாக்களித்தார் என்ற இரகசியத்தையும் பேணும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது

ஆகவே ஒரு குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையத்தில் ஒரு கட்சிசார்பாக அல்லது சுயேட்சைக்குழு சார்பாக அல்லது வேட்பாளர் சார்பாக இத்தனை வாக்குகள் அளிக்கப்பட்டன என யாராவது கூறினால்..... அதனை நீங்கள் நம்பினால்......
(கோடிட்ட இடைவெளிகளை தேவையான வகையில் பூர்த்திசெய்க).


Pragash Sinnarajah SLAS

Sunday, April 19, 2020

வாழ்க எம்ஜியார் புகழ்

1987 டிசம்பர் மாதம் தன் மகள் திருமண உதவி கேட்டு நன்கு அறிமுகம் ஆன கழக தொண்டர் கணபதி என்பவர் தன் மகள் திருமண உதவி கேட்டு தலைவரிடம் அவர் இல்லத்தில் மனு ஒன்றை கொடுக்க.
தலைவர் அதை படித்து பரிசீலித்து அவரை மீண்டும் அழைத்து உன் மகள் திருமணத்தை 1988 ஜனவரி மாதம் பொங்கல் முடிந்து 18 ஆம் தேதி வைத்துக்கொள்...நானே வந்து நடத்தி வைக்கிறேன் என்று சொல்ல...
கணபதியின் கெட்ட நேரம் தலைவர் அந்த மாத இறுதியில் நம்மை விட்டு மறைய கணபதி நொறுங்கி போகிறார் மனதளவில். தலைவர் மறைவு ஒரு புறம் தன் மகள் நிலை குறித்து மறுபுறம்.
அடுத்த சிலநாட்கள் செல்ல முதல்வர் அன்னை ஜானகி எம்ஜியார் அவர்களிடம் இருந்து தொண்டன் கணபதிக்கு அழைப்பு வர.
அங்கே வீட்டுக்கு போன கணபதிக்கு.....நீங்கள் குறித்த படி உங்கள் மகள் திருமணம் ஜனவரி 18 இல் நடக்கட்டும் நான் அல்லது நம் குடும்பத்தில் ஒருவர் வந்து நடத்தி வைக்கிறோம் என்று சொல்ல.
தன் மகன் ராஜ ராஜன் உடன் தோட்டத்துக்கு வந்த கணபதிக்கு நடப்பது கனவா அல்லது நிஜமா என்று புரியாமல் அம்மா நீங்கள் எப்படி வர முடியும் தலைவர் இறந்து நாட்கள் ஆக வில்லையே என்று கேட்க...
அதை பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் உங்கள் ஏற்பாடுகள் நடக்கட்டும்.....அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் அவர் தன் கைப்பட எழுதிய ப்ரோக்ராம் டைரியில் .
ஜனவரி 1988....18 அன்று கணபதி வீட்டு திருமணம்....அவருக்கு செய்யவேண்டிய உதவிகள் பணம்..பட்டு புடவை..நகைகள் எல்லாம் பற்றியும் எழுதி வைத்து இருக்கிறார்...அதன் படி உங்கள் மகள் திருமணம் நடக்கும் என்று சொல்ல.
அதன் படி அவர் மகள் திருமணம் அருமையாக தலைவர் கொடுத்த சீதனங்கள் உடன் நடந்து முடிந்தது.
அன்னை ஜானகி அம்மா அவர்கள் கலந்து கொள்ள இயலாமல் தலைவர் குடும்பத்தில் ஒருவர் முன் நின்று அந்த திருமணம் நடந்து முடிந்தது.
இருக்கும் போது தொண்டனுக்கு உதவாத அரசியல்வாதிகள் கொட்டி கிடக்கும் இந்த நாட்டில் இறந்தும் அவருக்கு உதவ உயில் போல எழுதி வைத்து விட்டு சென்ற தலைவரை நினைத்து மகிழ்வதா....அதை மறைக்காமல் மறுக்காமல் அந்த சோக சூழலில் கூட அந்த தொண்டனுக்கு உதவிய அன்னை ஜானகி அவர்களை நினைத்து மகிழ்வதா. முடிவை உங்கள் வசமே விட்டு விடும்....
வாழ்க எம்ஜியார் புகழ்
நன்றி...தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி

Wednesday, February 12, 2020

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி எதற்காக ஏன் உருவாக்கபட்டது?


இரு தசாப்த காலமாக கூட்டமைப்பு சரியாக செயல்பட்டதா? ஒற்றுமை என்ற வார்த்தைக்கு மதிப்பளித்து இவர்களுடன் இனைந்த சக கட்சி தலைமைகளின் ஆதங்கங்கள் வேண்டுதல்கள் கோரிக்கைகள் எப்போதாவது உள்வாங்கப்பட்டதா?
பெயரில் மட்டுமே கூட்டமைப்பு முடிவுகள் அனைத்தும் தமிழரசுக் கட்சியின் பின்கதவால் நுழைந்த ஐ தே க ஏஜேன்டால் தான் எடுக்கப்பட்டன. கிஞ்சித்தும் சக கட்சி தலைமைகளின் ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளவில்லை. அனைத்தும் ஏதோச்சதிகாரமாக புறக்கணிக்கபட்டன.
கட்சிகளை புறம்தள்ளியதை விட்டு விடுவோம். மக்களின் மன ஆதங்கத்துக்கு மதிக்களிக்ப்பட்டதா? கிடையவே கிடையாது. சகலதும் அறளை பேர்ந்த முதியவருடன் இனைந்து தனி ஒருவரால் எடுக்கபட்டது.
இவற்றை ஒற்றுமைக்கு ஊறு விழைவிக்க கூடதேன எண்ணிய சுரேஷ் தலைமையிலான அணியினர் உள்ளிருந்தவாறே நீண்ட காலமாகவே கூட்டமைப்பை நிறுவனபடுத்தி கல்விமான்களையும் புலம் பெயர் சமூகத்தையும் இனைத்து பயணிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.
ஏற்றுக் கொள்ளப்பட்டதா?
செவிடன் காதில் ஊதிய சங்காவே போனது.
கடந்த நாலரைவருட கால நல்லாட்சியில் அரசில் அங்கம் வகித்து இவர்கள் பெற்றுத்தந்த நன்மைகளை பட்டியல் இட்டால் வெறும் வார்த்தை ஜாலங்களையே இவர்கள் பெற்று தந்தனர் ?
நாம் இவர்களை உரிமைசார்ந்த பிரச்சனையை பேசவே பாராளுமன்றம் அனுப்பினோம்.
இவர்கள் அதை செவ்வன செய்தனரா? அரசில் அங்கம் வகித்த சமயத்தில் அரசாங்க வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்தனரா?

பெரும்பாண்மை சகோதரர்கள் வடக்கில் இன்று மின்சார சபையிலும் வைத்தியசாலையிலும் பிற துறைகளில் வேலைவாய்பை பெற்றுள்ளனர் அதை தடுக்கமுடிந்ததா? அந்த வேலைவாய்ப்பை ஊரில் உங்களுக்கு குப்பை கொட்டியவர்களுக்கு பெற்றுக் கொடுதீர்களா?
இல்லவே இல்லை. உங்கள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் வாயை மூட அவர்களின் பிள்ளைகளுக்கு மங்கள சமரவீரவுடன் பேசி வேலைவாய்பை பெற்றுக் கொடுத்தீர்கள்.
இவர்கள் ஒற்றுமையை குலைக்காதீர்கள் என கூக்குரல் இடுவது தமது பிளைப்புக்கு பங்கம் என கருதியே. மக்கள் நலன் கருதியல்ல. கடந்த காலங்களில் பெரும்பாண்மை மக்கள் கோவித்து கொள்வார்கள் எனக் கூறி தமிழ் மக்களின் கோமணத்தையும் உருவியதை மக்கள் அறிவர்.
பல அபிவிருத்தி திட்டங்கள் வெறும் வாய் வார்த்தைகளுடன் நின்றுவிட்டன.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முற்றாக இதிலிருந்து மாறுபட்டது.
மக்களின் உரிமை சார்ந்த விடயம் மட்டுமே பிரதான செயல்பாடாக அமையும் குறிப்பாக கூட்டணிக்குள் உட்கட்சி ஜனநாயகம் பேணப்படும். கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படும்.

குறிப்பாக கூட்டமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என நாம் எதிர்பார்த்தோமோ அதை விட சிறப்பாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயல்படும்.
அன்புடன் ஸ்ரீரங்கன்.

Sunday, January 5, 2020

தமிழ்த்தேசியம் (பாமரத்தனமாக எதிர்பார்ப்பு)

எல்லாத் தரப்பும் எல்லா மனிதர்களும் தாம் சரியானவர்கள் என்றே நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால், நாம் மட்டுமே சரி என்று முறுக்கிக் கொண்டு நிற்பது ஒருபோதும் பிரச்சினை தீரப் போதுமானதில்லை. மற்றவர்களின் சரி என்ன என்பது பற்றிய கவனிப்பும் கணிப்பும் நமக்கு வேண்டியிருக்கிறது.
அநியாயங்கள், அடங்காப் போர்கள், பஞ்சங்கள், பாதகங்களினாலும் மனித உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உலகில், எவரும் நாம் முழுக்க முழுக்கச் சரியாக இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ள முடியாது. அப்படி நெஞ்சை நிமிர்த்திக் கொள்பவர்களையே மேலும் ஆபத்தானவர்களாய்க் கருத வேண்டியிருக்கிறது.
எதிர்த்தரப்பின் சந்தேகங்களைப் புறக்கணித்துவிட்டு எமது தீர்வை நாம் கோர முடியாது, பெற்றுவிடவும் முடியாது. மக்களிடமும் மனிதத்திடமும் நாம் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் எவரிடமும் பேச நமக்குத் தடை இல்லை. எல்லாத் தரப்புடனும் எல்லாச் சமூகங்களுடனும் நாம் பேச முடியும். நம்மிடம் மட்டுமே முழுச் சரியும் இருப்பதாக நினைத்துக் கொள்வதால்தான் இணக்கத்தைப் புறந்தள்ளும் இறுமாப்பு வெல்கிறது. வாழ்வு தோற்றுப் போகிறது.
இந்த நாட்டில் நமது தமிழ்த்தேசியம் போலவே, மறுதரப்பான சிங்கள தேசியத்தையும் கடந்த கால நடவடிக்கைகள் மூலம் வெகு தீவிரத்தன்மையுடன் வளர அனுமதித்து விட்டிருக்கின்றோம்.

அந்தச் சிங்கள தேசியத்தை மறந்துவிட்டு அல்லது அதை இல்லாதது போல் முற்றாக விலக்கி வைத்துக்கொண்டு நமது தமிழ்த் தேசிய கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருந்தால், எந்த வெளி சக்திகளாலும் அதற்கு உதவ முடியாது என்ற உண்மையைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம்.

எங்களுக்குத்தான் பிரச்சினை. எனவே சிங்கள மக்களைப் பொருட்படுத்தாது இலங்கை அரசைச் சர்வதேசம் அழுத்தவேண்டும் - அழுத்தும் என்று பாமரத்தனமாக எதிர்பார்க்கின்றோம். இதை அவர்கள் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மற்றபடி நம்முடைய தீர்வுக்கு, நாம் அரசாங்கத்துடன் பேசவேண்டும் என்பதையே பாந்தமாகவும் பலபடியாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை நாம் புரிந்துகொள்ள - ஒப்புக்கொள்ள விரும்பாததுதான் பிரச்சினையாகத் தெரிகிறது.
இலங்கை அரசுடனான பேச்சில் வெற்றி என்பது, சிங்கள மக்களிடமும் நம் கோரிக்கைகளின் நியாயத்தன்மை உணரப்படுவதனூடாகவே சாத்தியம். மோதல் போக்குடனான பேச்சுக்கள் மூலம் சிங்கள தேசியத்தை உசுப்பித் தீவிரப்படுத்தி விட்டுக்கொண்டு, இந்த நாட்டிற்குள் ஒரு தீர்வை நாம் கண்டுவிட முடியாது என்பதே யதார்த்தம்.
தமிழ்த் தேசிய உணர்வில் மட்டுமே நியாயம் இருக்கிறது என்று கருதிக்கொண்டு சிங்கள தேசியத்தைப் புறக்கணித்துப் பொங்குவது என்பது தனிநாட்டுக்கான பொருதலாகத்தான் இருக்கும். அது சாத்தியம் என்று நம்மில் எத்தனை பேர் இன்னும் கருதுகின்றார்கள் என்று கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.
சிங்கள தேசியத்துடன் உரையாடி அதை விரோதமற்ற நிலையில் வைத்திருக்கவேண்டும் என்பது எதிரிகளிடம் போய் கெஞ்சுவதா என்ற ரோசத்தையே நமக்கு உண்டாக்கும் என்றால், நாம் மனிதர்களாக வாழும் நம்பிக்கை அற்றவர்கள் என்பதே பொருள்!
ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் அரசொன்றை எப்படி எதிர்கொள்வது என்பதைக் குறித்து தமிழ் அரசியல் தரப்பினரிடத்திலே எந்த விதமான சிந்தனையும் செயற்திட்டமும் இல்லை. 1960, 70 களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் முறைமைகளையே இவை இன்று கைக்கொள்கின்றன. அதாவது நாற்பதாண்டுகளுக்கு முந்திய அரசியல் சிந்தனையையும் வழிமுறையையும்.
அந்தக் கால வழிமுறைகள் தவறு. தீர்வுக்குப் போதாது என்று இதற்குப் பிறகு எவ்வளவோ மாற்றங்கள் வெளிப்பரப்பில் நிகழ்ந்துள்ளன. ஆனால், நாம் இதையெல்லாம் புறக்கணித்து விட்டு நாற்பதாண்டுகள் பின்னோக்கிச் சென்று சக்குப் பிடித்த, காலாவதியாகிப்போன அரசியலை எடுத்து மேசையில் வைத்திருக்கிறோம். இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?


இன்று எந்தத் தமிழ்க் கட்சியும் நிகழ்கால - எதிர்காலத்துக்கான அரசியற் கொள்கை, செயற்திட்டங்கள், வழிமுறை, அணுகுமுறை எவற்றையும் கொண்டிருக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிகழ்காலத் தேவைகளை நிறைவேற்றக் கூடிய அரசியற் செயற்றிட்டங்கள் எதுவும் எந்தக் கட்சியின் இதயத்திலும் இல்லை. மூளையிலும் இல்லை.
இதனால்தான் இந்தக் கட்சிகளுக்கு இதயமும் இல்லை. மூளையும் இல்லை என்கிறேன். அப்படி இருந்திருந்தால் நிகழ்காலத்தை இப்படிச் சீரழிய விட்டிருக்க முடியாதல்லவா!
ஆகவே இதற்கான அரசியற் திடசித்தம் எந்தக் கட்சியிடத்திலுமில்லை. அரசியற் தரப்பினரிடத்தில் மட்டுமல்ல, தமிழ்ச்சமூகத்தின் இயங்கு சக்திகளாக இருக்கின்ற புத்திஜீவிகள், அரசியல் அறிஞர்கள், ஊடகத்துறையினர், பொது அமைப்புகளைச் சேர்ந்தோர் எனப் பிற தரப்பினரிடத்திலும் இவை இல்லை.
வேண்டுமென்றால் நாற்பதாண்டுகளுக்கு முன்பு வந்த பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளையும் இன்று வருகின்ற பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளையும் ஒரு தடவை எடுத்து ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது புரியும் இந்தச் சமூகம் எவ்வளவு தூரம் பின்னடைந்திருக்கிறது, மாற்றங்களைக் காணாதிருக்கிறது, அப்படியே இருக்கிறது என்று.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த அரசியலமைப்புத் தொடர்பான உண்மை நிலவரத்தை மனோ கணேசன் வெளிப்படுத்தியபோது கூட்டமைப்புக்குச் சங்கடம் ஏற்பட்டது. அரசியலமைப்புத் தொடர்பாக தமிழ்ச்சமூகத்துக்கு பல விதமான கற்பனைகளை உருவாக்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மனோ கணேசனின் உள்வீட்டுத் தகவல்கள் நெருக்கடியை உண்டாக்கி, உண்மையை அம்பலப்படுத்தின. இதனையடுத்து கூட்டமைப்புக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான மனோ கணேசனுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.
பின்னர் இது தொடர் விவாதங்களாக மாறியது. மனோ கணேசன் தன்னியல்பான அவருடைய வெளிப்படுத்தல்களின் மூலம் அரசாங்கத்தின் போக்கையும் தமிழ்ச்சமூகத்தின் நிலையையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார். இதுவும் கூட்டமைப்புக்கு நெருக்கடியைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எல்லாவற்றுக்கும் மௌனம் காப்பதும் எந்தக் கேள்வியும் இல்லாமல் எல்லாவற்றையும் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதும் தவறு என்று நேரடியாகவே விமர்சித்தார். இது நேரடியான மோதல் என்ற நிலையைத் தோற்றுவித்தது.
இதற்கெல்லாம் இன்னுமொரு உட்காரணமும் இருந்தது. கடந்த அரசாங்கத்தில் ரணிலுக்கு நெருக்கமாக யார் நிற்பது, யார் செல்வாக்கைப் பெறுவது என்ற போட்டி கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரனுக்கும் மனோ கணேசனுக்குமிடையில் நிலவியது. இது ஒரு பெரும் பனிப்போராகவே தொடர்ந்து கொண்டிருந்தது. மகிந்த – மைத்திரி கூட்டணி 2018 இல் ஆட்சிக்கவிழ்ப்பைச் செய்தபோது அதற்கெதிராக இந்த இருவரும் முன்னணிப்போராளிகளாக நின்று சமராடியது காட்சிகள் இந்தக் கணத்தில் உங்களுக்கு நினைவில் எழும்.
சுமந்திரன் நீதிமன்றத்தின் மூலம் போராடினார். மனோ கணேசன் கட்சிகளை ஒருங்கிணைத்து, எதிர்த்தரப்பின் முயற்சிகளை எல்லாம் முறியடிப்பதில் முன்னின்றுழைத்தார்.
ஆக மொத்தத்தில் தமக்குச் சாத்தியமான வழிகளில் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தனர். இது வெளிப்பரப்பில் செல்வாக்குப் பெறுவது வரையில் போட்டி நிலையை உருவாக்கியது. முக்கியமான வெளிநாட்டுத்தூதுவரங்கள் வரையில். மனோ கணேசன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற வகையிலும் சுமந்திரன், கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற வகையிலும் இந்த முக்கியத்துவப் போட்டி நிலவியது. ஆகவே பல முனைகளில் இந்த இருவரும் தம்மை நிறுவுவதற்கும் மேலெழுவதற்கும் முயற்சித்தனர். இதனால் கூட்டமைப்புக்கும் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் உரசல்கள் தீவிரமடைந்தன.
இதன் விளைவாக ஒரு கட்டத்தில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி வடக்குக் கிழக்கிலும் போட்டியிடும் என்ற அறிவிப்பை விடுத்தது. முற்போக்குக் கூட்டணியின் அறிவிப்பு கூட்டமைப்புக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. இதற்குப் பதிலடியாக உடனே “அப்படியென்றால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடக்குக் கிழக்குக்கு வெளியேயும் போட்டியிடும் என்று தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்தார்.
இருந்தாலும் முற்போக்குக் கூட்டணியின் அறிவிப்பு உண்டாக்கிய கலக்கம் கூட்டமைப்பை நிம்மதியாக இருக்க விடவில்லை. ஏற்கனவே வன்னி – கிளிநொச்சிக் களத்தில் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு மற்றும் வவுனியாவில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஆகியவற்றின் நெருக்கடிகள் ஒருபுறமிருக்கிறது.
இந்த நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வன்னியில் களமிறங்கினால் அது பெரிய நெருக்கடியாகி விடும் என்று பதறுகிறது கூட்டமைப்பு. இதன் விளைவாகவே வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மலையக மக்களுக்கான பிரதிநிதித்துவத்துக்கு ஒரு ஆசனத்தை ஒதுக்குவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Thanks 
Karunakaran Sivarasa,Tharunyan Ravi

Sunday, October 13, 2019

Dr Abiy Ahmed Ali -2019 அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமரான அபி அகம்மது அலிக்கு

2019 அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமரான அபி அகம்மது அலி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவரை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதற்கு காரணம் ஊடக வன்முறை.
இவர் நோபல் பரிசை பெறுவதற்கு நூறு சதவீதம் தகுதியுடையவர்.
எத்தியோப்பியா பெரும் ஆயுத போராட்ட வன்முறையில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த வேளையில், 2018 ஏப்ரலில் ஆட்சியை பிடித்தார்.
ஆட்சிக்கு வந்தவுடன், அந்நாட்டில் இருந்த அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்தார்.
அரசியல் கைதிகளை எந்த நிபந்தனையும் இன்றி விடுவித்தார்.
போராடிய ஆயுத இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நாட்டில் அமைதியை நிலைநாட்டினார்.
அவர்களுக்கு அரசியல் அதிகார பதவிகளை வழங்கினார்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஆட்சியதிகாரத்தில் பெண்கள் மூன்றில் ஒரு பங்கு அரசியல் அதிகாரத்துக்கு போராடி கொண்டிருக்கும் அதே காலகட்டத்தில், எத்தியோப்பிய நாட்டு ஆட்சியதிகாரத்தில் பெண்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி செய்தார்.
இங்கே இந்தியா காஷ்மீர் போல, எத்தியோப்பியாவுக்கும் எரித்திரியா என்ற சிறிய நாட்டிற்கும் நீண்ட காலமாக இருந்துவந்த சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்தார்.
எரித்ரியாவின் முழு சுதந்திரத்தை அங்கீகரித்தார்.
தனது அண்டை நாடான சூடானில் நடைபெற்ற பிரச்சனையில் தலையிட்டு அங்கு அமைதி நிலவ பெரிதும் காரணமாக இருந்தார்.
பிரேசில் நாட்டில் கார்ப்பரேட் நலன்களுக்காக காடுகள் தீவைத்து எரிக்கபடுகிறது. ஆனால் எத்தியோப்பிய பிரதமர்
சுற்றுச்சூழலை மேம்படுத்த, எத்தியோப்பிய பள்ளிக்கூட பிள்ளைகளை வைத்து ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நட செய்தார்.

எத்தியோப்பிய விமான சேவையை உலக தரத்திற்கு உயர்த்தினார்.
இன்று விமான சேவையில் உலகிலேயே சிறந்தது எத்தியோப்பியாதான் என்பது உறுதியாகியுள்ளது.

இதையெல்லாம் தான் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே செய்து முடித்தார்.
The Norwegian Nobel Committee has awarded the 100th Nobel Peace Prize to the Prime Minister of Ethiopia, Dr Abiy Ahmed Ali, for "his efforts to achieve peace and international cooperation" and for his "decisive initiativeto end the long-running military stalemate with neighbouring Eritrea.
was one of the people who nominated Abiy Ahmed - not just for his remarkable achievements, but also for his profound commitment to the cause of peace and friendly relations among nations in the Horn of Africa and beyond.
In the nomination letter, I wrote: "By saving a nation of 108 million people from the precipice of an economic and political explosion, he captured the imagination of his own people, and people across the African continent as an embodiment of hope ... and his messages of peace, tolerance, and love and understanding are being felt far beyond Ethiopia."
Awol K Allo is Lecturer in Law at Keele University, UK.
Thanks, https://www.aljazeera.com

Wednesday, September 18, 2019

கடித்த நாயைத் திருப்பிக் கடித்து

ஜப்பானும், ஜேர்மனியும் யுத்தத்தில் நிர்மூலமாக்கப்பட்ட பிறகு அந்நாட்டு மக்கள் எவரும் கடித்த நாயைத் திருப்பிக்கடித்து விட்டே மறுவேலை என கிளம்பவில்லை!
மாறாக பொருளாதாரத்தை_நிமிர்த்தவே_போராடினார்கள். பொருளாதாரத்தால் எதிரியுடன் சமகதிரையுடன்_உட்காந்திருந்து பேரம்பேசுவதே உண்மையான வெற்றி என அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது.
விளைவு??
1.தோற்கடித்தவர்களின் வாகனங்களைவிட முதற்தர வாகனங்களை உலகுக்கே ஏற்றுமதி செய்தார்கள்.
2.எதிரிகளே அசந்துபோகும் தொழில்னுட்பங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள்
3. சரிக்குச்சமன் உலக அரங்கில் தோற்கடித்தவர்களுடன் வலம் வந்தார்கள். சில இடங்களில் சற்று மேலே எனலாம்.

இன்னும் பல.
அவ்வளவும் எண்ணி 20 வருடங்களில்!

ஆனால்_நாம்?????
1. திருப்பிக்கடிக்க வெறிபிடித்து அலைகிறோம்.
2. கடித்துவிட்டால் வெற்றி என மாயையில் மிதக்கிறொம்.
3.மாறிவந்த உலக ஒழுங்கில் யுத்தம் தவிர்க்கமுடியாதது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்
4. பொருளாதாரத்தின் மீள்கட்டுமானம் பற்றி எவ்வித அக்கறையும் இல்லை.
5. நிவாரணம் வாங்கி சாப்பிட மனதை பழக்கப்படுத்தியாயிற்று.
6. உற்பத்தியைபற்றி அக்கறை இல்லை. எல்லாவற்றையும் எவனிடமாவது கொள்பனவு செய்வதில் பெருமை வேறு!
7. உசுப்பேற்றல்களுக்கு_இன்னும எடுபடுகிறோம்.
8எல்லாவற்றிற்கும். அடுத்தவன்மேல்_பழி போடுகிறோம்.
9. எவனாவது ஒருவன் இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு எழும்பினால் அவனை மடையன் என்று முத்திரை குத்தி அமர வைக்கிறோம்
10. பொருளாதாரம் நிமிர எல்லாமே சரியாகும் என்ப்தை ஏற்றுக்கொள்ளமறுக்கிறோம்.

11. ஒன்றுமில்லை என்று தெரிந்த பிறகும் அரசியல் வாதிகளை நம்பிக்கிடக்கிறோம்..