Search This Blog

Showing posts with label Leadership. Show all posts
Showing posts with label Leadership. Show all posts

Sunday, November 28, 2021

டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் / Dr. B.R AMBEDKAR (1891-1956)

 நீயெல்லாம் படிக்கவே கூடாது என்று சொன்ன காரணத்திற்காக ஒரு மனிதன் இவ்வளவு படித்தார் அவர்தான்

டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் / Dr. B.R AMBEDKAR (1891-1956)
B.A., M.A., M.Sc., D.Sc., Ph.D., L.L.D.,
D.Litt., Barrister-at-La w.
B.A.(Bombay University)
Bachelor of Arts,
MA.(Columbia university) Master
Of Arts,
M.Sc.( London School of
Economics) Master
Of Science,
Ph.D. (Columbia University)
Doctor of
philosophy ,
D.Sc.( London School of
Economics) Doctor
of Science ,
L.L.D.(Columbia University)
Doctor of
Laws ,
D.Litt.( Osmania University)
Doctor of
Literature,
Barrister-at-La w (Gray's Inn,
London) law
qualification for a lawyer in
royal court of England.
Elementary Education, 1902, Satara, Maharashtra
Matriculation, 1907, Elphinstone High School, Bombay Persian etc.,
Inter 1909,Elphinston College, Bombay Persian and English
B.A, 1912 Jan, Elphinstone College, Bombay, University of Bombay,
Economics & Political Science
M.A 2-6-1915 Faculty of Political Science, Columbia University,
New York.
Main- Economics
Ancillaries-Sociology, History, Philosophy, Anthropology, Politics
Ph.D.
1917 Faculty of Political Science, Columbia University, New York,
'The National Dividend of India - A Historical and Analytical Study'
M.Sc. 1921 June London School of Economics, London 'Provincial
Decentralization of Imperial Finance in British India'
Barrister-at- Law 30-9-1920
Gray's Inn, London Law
D.Sc. 1923 Nov London School of Economics, London
'The Problem of the Rupee - Its origin and its solution' was accepted for the degree of D.Sc. (Economics).
L.L.D (Honoris Causa) 5-6-1952
Columbia University, New York For his achievements,
Leadership and authoring the constitution of India
D.Litt. (Honoris Causa) 12-1-1953 Osmania University, Hyderabad
For his achievements, Leadership and writing the
constitution of India!

Wednesday, March 17, 2021

யார் தீர்க்க தரிசி ?

 





மில்க் வொயிற் என்பது பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட்ட தமிழருடைய சோப்பு தயாரிக்கும் நிறுவனம். தனது விற்பனையினை பிற எந்த நிறுவனங்களை விடவும் மிக அதிகமாக அவரால் விரிவாக்க முடிந்தது. தனது பொருட்களை விற்க “உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள்” என்று அவர் கூறி முன்னெடுத்திருக்கிறார்.
தமிழ் மீது இருந்த தீராத பற்றினால் திருவள்ளுவரின் குறளையோ பாரதியின் பாடல்களையோ பனை ஓலையில் அச்சடித்து தனது சோப்புகளுடன் விநி யோகித்திருக்கிறார். தனது தயாரிப்புகளையும் அவர் பொதிந்து கொடுக்க களிமண்ணில் செய்த அழகிய பேழைகளில் வைத்து இலவசமாக கொடுத்தா ர். நூற்பவர்களிடம் இருந்து பெற்ற துணிகளைக் கொண்டு தந்து சோப்பை பொதிந்து விற்பனை செய்திருக்கிறார். இவைகளின் மூலம் அவர் குயவர்களையும், நெசவாளர்களையும் ஆதரித்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
மேலும் பனம்பழங்கள் கிடைக்கும் காலத்தில் தனது லாரி நிறை ய பனை விதைகளை எடுத்துக்கொண்டு தந்து பணியாளர்களைக்கொண்டு சாலைஓரங்களில் விசிறி எறியச் சொல்லுவாராம். பனை மீது மீளா க் காதல் கொண்ட பனைக் களப்போராளியான அவரது தயாரிப்புகள் இன்று வளர்ந்து வரும் தலைமுறையினருக்குத் தெரியாமலேயே போகப் போகிறது
உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று மண்ணில் விழும். இரண்டு விரல்களை வளையமாக்கி அதில் வைத்து ஊதி ஊதி மண்ணை நீக்கினால் வெளிநாட்டு ஒலிவ் பழம் தான் இப்போ நினைவை தட்டும் .
காய்ந்து உலர்ந்து போன வேப்பங்கொட்டைகளைக் குவித்து வைத்து அவற்றை இரவில் ஒரு சட்டி தணலில் போட்டு எரிக்கும் போது வெளிப்படும் புகை மண்டலம் வீட்டுக்குள் அழையா விருந்தாளிகளாக வரும் நுளம்புக் கூட்டத்தை விரட்டியடிக்கும்..
மருதடிப் பிள்ளையார் கோயிலிலும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலும் திருவிழா நாட்களில் “மில்க்வைற்” நிறுவனம் கடை பரப்பியிருக்கும் . அப்போது ஒரு அறிவிப்பை அச்சிட்டுப் பகிர்ந்தார்கள். ஒரு கிலோ வேப்பம் கொட்டை கொடுத்தால் ஒரு மில்க்வைற் தொப்பி கிடைக்கும் என்பது தான்.
எத்தனைபேர் தங்களால் முடிந்த கொட்டைகளை சேர்த்துக் கொண்டே வெள்ளைத் தொப்பி வாங்கியிருக்கிறார்கள்
ஒரு கல்லில் இரு மாங்காய் அல்லவா ?
ஓன்று சுயமாக சிந்திக்க வைப்பது சுதேச உற்பத்திக்களை கூட்டுவது ,இரண்டாவது இயற்கையை நேசிக்க வைப்பது .
அப்போது யாழ்ப்பாணத்தில் சுதேச உற்பத்திகள் செழிப்போட்டு இருந்த நேரம் “மில்க்வைற் தொழிலகம்” தம் பங்குக்கு சோப் உற்பத்தியில் பெரும் தொழிற் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. குளிக்க, உடுப்பு தோய்க்க என்றி வித விதமான சவர்க்காரங்கள். சுதேச உற்பத்திகளா கின .
பலரும் சேமித்துக் கொடுத்த வேப்பங் கொட்டைகளைச் சுத்தம் செய்து நுளம்பை விரட்ட மில்க்வைற் வேப்பங்கொட்டைகள் என்றும், அந்த வேப்பங்கொட்டைகளை மூலப் பொருளாக உபயோகித்து “நீம் சோப்” என்றும், வேப்பெண்ணெய் என்றும், “நீமியா” உரம் என்றும் மில்க்வைற் ஸ்தாபனத்தார் உற்பத்திகளை விரித்திருந்தனர்.
HAMMAM சோப்புக்கள் இதே பாணியில் தயாரிக்கப் படுபவையே .
மில்க்வைற் சோப் ஏழைகளின் தோழனாகவும், மத்திய வர்க்கத்தின் காவலனாகவும் அப்போது விளங்கியது..
எப்போதும் உள்ளூர் உற்பத்திக்கு மதிப்புக் கொடுப்பது குறைவு தானே .
பணக்கார வர்க்கம் எப்போதும் பகட்டுத்தானே . லக்ஸ் சோப், ராணி சோப் இவற்றில் தான்
பணத்தில் குளிப்போருக்கு மோகம் அதிகம். .
உடுப்புத் தோய்க்க சன் லைற் சவுக்காரம்,பத்து நீம் சோப் உறைகளை அனுப்பி ஒரு திருக்குறள் புத்தகத்தை வெல்லுங்கள், ஒரு தேகப்பியாசப் புத்தகத்தை வெல்லுங்கள். “பனையை வளர்ப்போம் பயனைப் பெறுவோம்” என்றெல்லாம் சவர்க்கார உறைகளில் அச்சிட்டு மில்க்வைற் காறர் உள்ளூர் மக்களைக் கவர்ந்தா ர்கள்.
ஆனால் பிரயோசனம் அடைந்தது .எல்லோரும் தான்
அரிவரியில் ஆனா ஆவன்னா எழுதிப் பழகப் பனையோலையில் அரிச்சுவடி செய்து பள்ளிக்கூடங்களுக்கும், கோயில்களுக்கும் அனுப்புவதில் இருந்து ஆத்திசூடி நீதி நூல் வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை அச்சிட்டு விநியோகிப்பது, “மில்க்வைற் செய்தி” என்ற சமூக, சமய, அறிவியல் சார்ந்த பத்திரிகையை வெளியிடுவது என்று மில்க்வைற் கனகராசா அவர்களின் பணி விரிந்தது அதனால் அவருக்குச் சிவ தர்ம வள்ளல் என்ற பட்டமும் கிட்டியது. அவருக்கு உறுதுணையாக எழுத்து முயற்சிகளுக்குப் பொறுப்பாக அறிஞர் க.சி.குலரத்தினம் விளங்கினார்.
இரண்டாம் கட்ட ஈழப் போர் கனத்த போது இலங்கை அரசின் பொருளாதாரத் தடை தமிழர் பிரதேசங்களுக்கு அமுலாகியது தொண்ணூறுகளின் முற்பகுதியில். பெற்றோல், டீசல் உட்பட ஐம்பத்துச் சொச்சம் பொருட்களைப் பட்டியலிட்டு இவை பயங்கரவாத நடவடிக்கையை முன்னிட்டுத் தடை செய்யப்படுகின்றன என்று
இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.
உடுப்புத் தோய்க்கும் சன் லைட் சோப்புக்கான காலம் போய் நோயாளிகளுக்கு என்று முத்திரை குத்தியிருந்த லைஃப் போய் சோப்புக்கும் மாறினர் . சோப்பைச் சின்னச் சின்னத் துண்டாக்கிப் பாவிப்பது, துணியில் சுருட்டிப் பாவிப்பது என்று சிக்கன நடவடிக்கைகள் அரங்கேறின. கொஞ்ச நாளில் இருப்பில் இருந்த எல்லா சோப்பும் கடைகளில் காலியாகின.
கையில்ருப்பில் இருந்த பகட்டான சவுக்காரங்கள் தீர்ந்து போக, தாய் வீடு தேடி வரும் மகள் போல எல்லாரும் மில்க்வைற் சோப் நோக்கி ஓடினார்கள் .
மில்க்வைற் சோப் விலை மலிவு என்றாலும் வேகமாகக் கரையக் கூடியது. . என்னதான் உள்ளூர் உற்பத்தியாக இருந்தாலும் சோப் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களுக்குத் தென்னிலங்கையையே தங்கியிருக்க வேண்டிய சூழல் நிலவியது இதனால்
மில்க்வைற் தொழிற்சாலையும் மெல்ல முடங்கிப் போக, இப்போது மில்க்வைற் சோப்பும் இல்லாத மாதங்களாக நீண்டன.
சுரக்காயைக் காய வைத்து அதன் உள் எலும்புக் கூட்டை எடுத்தால் ஸ்பொன்ச் மாதிரி இருக்கும். அதற்குள் சோப்புத் தண்ணியைக் கரைத்து ஊற்றி வெது வெதுவாக்கி குளிக்கும் போது சோப்புப் போடுவது போலப் போட்டுத் தேய்த்துக் குளிக்க ஆரம்பித்தார்கள்
தமிழன் படாத கஷ்டமா ? என்ன
சரி இப்பொழுது கனகராசா அவர்களின் அரசியல் .நாட்டுப்பற்று தொழில் பற்று பற்றி அறிந்து கொள்ளுங்கள்

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் இத் தொல்மரபுக்கமையச் சவர்க்காரம் செய்து வந்தோர் இருந்தனர்.
அவர்களில் சவர்க்காரம் கந்தையா இருந்தார். அவர் வளவில் குடிசைக் கைத்தொழிலாகச் சவர்க்காரம் செய்வார்கள்
.கந்தையா வழி வேதிப் பொருள்களைக் கைத்தொழிலாகத் தயாரித்தவர் கனகராசா.அவர்கள் .
கொழும்பில் ஆங்கிலேய lever Brothers சன் லைற் சவர்க்காரத்தைப் புகுத்தியதும் கனகராசா தம் பொருளுக்குச் சந்தை சேர்க்க
1950களின் தொடக்கத்தில் மில்க் வைற் சவர்க்காரம் எனப் பெயரிட்டதுடன் தொழிலகத்தையும் நவீன எந்திரமயமாக்கி ஆங்கிலேயக் கம்பனியாருடன் போட்டியிட்டு, தனக்கென இலங்கை முழுவதும் ஒரு சந்தை வலைப்பின்னலை உருவாக்கினார் .
சுதேச போராட்டம் இது .
1958 ஆனியில் இனக்கலவரம் கொழும்பில் வெடித்தது. சிங்களவர் தமிழரைத் தாக்கினர்
கலவரம் தொடங்கி நடந்த நாள்களில் கடையடைப்புக் கோரிக்கையுடன் திரு. கனகராசா தன் வண்டியில் நகரெங்கும் சுற்றிவந்து துண்டு விளம்பரம் கொடுத்துவந்தார் .
தமிழுணர்ச்சிப் பிழம்பாகத் திரு. கனகராசா யாழ்ப்பாணம் பெரிய கடை எங்கும் உலாவினார். கோபக் கனலுடன் அனைத்து வணிக நிலையங்களையும் இழுத்து மூடுவித்தார்.செயல்வேகத்தின் ஆளுமை அது .
யாழ்ப்பாணத்தில் 1973 ஆவணி தொடக்கம் 1974 தை வரை நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் பணிகளை த் தன் பணியாகக் கொண்டவர் திரு. கனகராசா.இது யாருக்கும் தெரியாத விடயமல்ல .
2 ம்திகதி கார்த்திகை 1927 ல் கந்தையா வீரகத்தி அவர்களுக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்,
செல்லையா மகள் நாகம்மா வை 1951 புரடாதிமாதம் பதினான்காம் திகதி மண ம் முடித்து இல்வாழ்வி ல் அடியெடுத்து வைத்தார்
1952 முதல், MILK WHite சவற்காரக் கம்பெனியின் ,உரிமையாளர் ஆகவும்
. தலைவர் Multi Oil Industries Ltd ஆகவும்
Multi Rice Industries ltd . தலைவர் ஆகவும்
Hatton National வங்கியின் ஆயுள் கால உறுப்பினராகவும்
இருந்தார்
1974 முதல் சமாதானநீ த வனாகவும் இருந்தார்
அன்று அவர் போட்ட விதைகள்
அந்தப் பனை மரங்கள்தான் வளர்ந்து இன்று பெரிய மரங்களாக வீதி ஓரமெல்லாம் காவல் வீரர்கள்போல நிற்கின்றன.
இதற்கெல்லாம் காரணமானவரை காலம் மறந்து விட்டது. காலம் மறந்து விட்டதா அல்லது அவற்றை எல்லாம் நினைத்துப் பார்க்கும் நிலையில் அங்குள்ள மக்கள் இல்லையா என்பதுகூடத் தெரியவில்லை.
சின்னவயது நினைவுகள் எனக்கு இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது. எவ்வளவு தீர்க்க தரிசனத்தோடு அன்று அவர் செயற்பட்டார் என்பதை நினைக்ககூட அங்கெ மக்கள் சுயநலமிகள் ஆக இருக்கிறார்களா ?
‘உண்மையிலே புதிதாக நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரக்காரணம் யாழ்ப்பாணம் வானம் பார்த்தபூமி என்பதால்தான். ஆறுகள் இல்லாததால், இந்த மண்ணில் மழையை நம்பியே விவசாயம் நடந்தது. கிணற்றில் இருந்தே குடிநீர் பெற்றார்கள். உயர்ந்த மரங்கள் இருந்தால் மழை பெய்வதற்குச் சந்தர்ப்பம் அதிகமுண்டு என்று கருதித்தான் தீர்க்கதரிசனத்தோடு மரம் நாட்டும் முயற்சியில் அன்று ஈடுபட்டார்கள். ஆனால் அதுவே பிற்காலத்தில் எறிகணைகளில் இருந்து குடிமனைகளைக் காப்பாற்றும் பாதுகாப்பு கேடயமாக மாறிவிட்டது.’
‘நாங்கள் அதற்காகத் தொழிலதிபர் கனகராஜாவைத்தன் பாராட்ட வேண்டும்.
-மாணிக்க வாசகர் manikkavasagar.vaitialingam

Friday, January 29, 2021

டொமினிக் ஜீவா எனும் பேராளுமை

டொமினிக் ஜீவா “மல்லிகை” எனும் மாதத் சஞ்சிகை ஆரம்பித்து 2012 நவம்பர் – டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர்.

இவர் இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் விருதை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அவ்விருதினைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஜோசெப்-மரியம்மா தம்பதிகளின் இரண்டா வது புதல்வராக 1927ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி இவர் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் டொமினிக் என்பதாகும். பெற்றோர்கள் சிகை அலங்கார தொழிலாளர் பரம்பரையை சேர்ந்தவர்களாவர். அதன் காரணமாக இவர் பல சமூக குறைபாடுகளை எதிர் கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

இளமைப் பருவத்தில் இவர் யாழ். சென். மேரிஸ் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்டார். அப்போது அங்கு பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் இவரைப் பார்த்து சாதியின் பெயரைக் குறிப்பிட்டு பேசியதால் மனம் நொந்து ஐந்தாம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய சாலியானார்.

அவ்வாறு வெளியேறியவர் தான் இன்று உலக அரங்கில் அனைவராலும் அங்கீகரிக்கப்படும் ஒரு இலக்கிய கர்த்தாவாக மாறியிருந்தார்



"ஈழத்து இலக்கிய உலகின் எழுத்துப் போராளியாய் இறுதி மூச்சு வரை சமரசமில்லா முற்போக்கு முகம் கொண்ட மல்லிகை மன்னனாய் எல்லோராலும் கொண்டாடப் பட்ட மல்லிகை ஜீவா தன் வாழ்வுப் பயணத்தை முடித்துக் கொண்டார் என்ற செய்தி துயரத்தை சுமந்து நிற்கிறது.
யாருக்கும் தலை வணங்கா எங்கும் தன் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்த சமத்துவ சகோதரன் அவர்.
1977ஆம் ஆண்டு யாழ் பல்கலைக் கழகத்தில் ஒரு புத்தகப் பையோடு சந்தித்த அதே ஜீவாவை நான் அதே கோலத்திலெயே கடைசியாகவும் சந்தித்தேன் தன்னிலை மாறா கொள்கையாளன் 
ஈழத்து இலக்கிய உலகம் இனி இவர் போல் ஒருவரை காண முடியுமா என்றால் நிச்சயமாக இல்லை என்பதே சரியான பதில்.ஓர்மம் மிக்க படைப்பாளி.
யாழ் பல்கலைக்கழகம் அவருக்கு முறைப்படி இலக்கிய கலாநிதி பட்டம் கொடுத்திருக்க வேண்டும் அப்படி இருக்க பேருக்கு ஏதோ ஒரு உப்புச் சப்பு இல்லாத பட்டத்தை கொடுக்கப்  பரிந்துரைத்த போது அதனை மிகத் துணிச்சலுடன் நிராகரித்து தன் மதிப்பை மேலும் உயர்த்திக் கொண்டு சரித்திரத்தில் இடம் பிடித்த சமூக நீதிக் குரலாய் ஒலித்த சோசலிச யதார்த்தவாதி ஜீவா.
ஜீவா எனும் பெயரை ஈழத்து நவீன தமிழ் இலக்கியத்திலிருந்து நீக்கிப் பார்த்தால் அது வறுமைப் பட்டுப் போகும் .
மல்லிகை அவர் நடமாடும் வரை நடமாடிய இலக்கியத் தொடர் அது ஒரு முற்போக்கு சுடர் அணையாத சுடர் வருங்காலம் முழுவதுக்குமான வரலாறாய் நம்முள்.
என்றும் வாழும் ஜீவா
என் செவ்வணக்கத்துடனான அஞ்சலிகள்" Balasingam Sugumar

Tuesday, December 29, 2020

கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் (Arch T. Colwell Cooperative Engineering Medal)

 


அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றும், கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் என்ற இலங்கைத் தமிழர், பொறியியல்துறையில் மதிப்புமிக்க உலகளாவிய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் டாங்கிகள் வடிவமைப்பு ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் பொறியியல் நிலையத்தில், மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார் கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார்.

இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பட்டம் பெற்றதுடன், 1982-83 காலப்பகுதியில், பேராதனைப் பல்கலைக்கழக கணிதபீடத்தில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு SAE International என்ற மதிப்புமிக்க அனைத்துலக பொறியியலாளர் அமைப்பினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும், ஆர்ச் ரி கொல்வெல் ஒத்துழைப்பு பொறியியல் பதக்கம் (Arch T. Colwell Cooperative Engineering Medal) வழங்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்த அமைப்பின் நிகழ்வில் இந்த விருது வழங்கப்படும். இந்த உலகளாவிய விருதை வழங்கும், SAE International அமைப்பு உலகெங்கும் உள்ள 138 ஆயிரம் பொறியியல் வல்லுனர்களை உறுப்பினராக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சின்னப்பா பரஞ்சோதி மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது அனலைதீவு மக்கள் எமக்கெல்லாம் பெருமகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

Saturday, November 21, 2020

அ. முத்துலிங்கம் கொக்குவில் தந்திருக்கும் கொடை

 1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.

 

இலக்கியப் பணிகள்

. முத்துலிங்கம், பேராசிரியர் .கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 'அக்கா' சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு .கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்.

நாவல்களை விரும்பிப் படிக்கும் பலரும் சிறுகதைகளை விரும்புவதில்லை. இலக்கை நோக்கிய பயணத்தைவிடவும் இலக்கின்றிய பயணங்கள் சுவாரஸ்யமானவை. எனவேதான் ஒற்றை முடிச்சைக் கொண்டு நகரும் சிறுகதைகளை பலரும் விரும்பிப் படிப்பதில்லை. ஆனால் அ.முத்துலிங்கத்தின் கதைகள் இதற்கு மாறானவை. அவர் கதைகள் படிப்பதற்கு சுவாரஸ்யமானவை. எனவே யாரும் அவர் கதைகளை விரும்பிப் படிக்க முடியும். கல்கி, சுஜாதா இருவருக்குப் பிறகு வாசிப்பை சுவாரஸ்யமாக்கியவர் அ.முத்துலிங்கமே என்று ஜெயமோகன் குறிப்பிடுவது அதனால்தான். 

கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது

 

நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று .முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் .முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

 ஏன் எழுதுகிறீர்கள்?

"முதல் காரணம் எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். இதே கேள்வியை 500 புத்தகங்கள் எழுதிய அறிவியல் எழுத்தாளரான ஐஸக் அசிமோவிடம் கேட்டார்கள். அவர், ‘வேறு என்ன? என்னுடைய டைப்ரைட்டரில் அடுத்து என்ன வார்த்தை வந்து விழுகிறது என்பதைப் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார். உலகத்தில், முன் இல்லாத ஒன்றை சிருட்டிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதில் உண்டு? ஒரு பெண், குழந்தை பெற்றால் அது சாதாரண விசயமா? புது உயிரை உண்டாக்கும் மகத்தான காரியமல்லவா? ஒரு சிற்பி சிலையை வடிப்பதும், ஓவியர் புதிதாக ஒன்றை வரைவதும், இசையமைப்பாளர் புதிய இசையை உருவாக்குவதும் இந்த வகைதான். படைக்கும்போது எழுத்தாளருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அதைப் படிக்கும் வாசகருக்கும் கிடைக்கிறது. மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இது தவிர, உங்கள் படைப்பினால் உலகத்துக்கு ஏதாவது நன்மை கிட்டுமானால் அதைவிடப் பேரானந்தம் வேறு என்ன இருக்க முடியும்!"

இவரது நூல்கள்

புதினம்

உண்மை கலந்த நாட்குறிப்புகள் - உயிர்மை பதிப்பகம் (2008)

கடவுள் தொடங்கிய இடம்

சிறுகதை தொகுப்பு

அக்கா (1964)

திகடசக்கரம் (1995)

வம்சவிருத்தி (1996)

வடக்கு வீதி (1998)

மகாராஜாவின் ரயில் வண்டி (2001)

.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)

ஒலிப்புத்தகம் - (சிறுகதைகள் தொகுப்பு - 2008)

அமெரிக்கக்காரி (2009)

Inauspicious Times - 2008 - (Short stories by Appadurai Muttulingam - translation by Padma Narayanan - available at Amazon.com)

குதிரைக்காரன் - (2012)

கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) - (2013) - காலச்சுவடு பதிப்பகம் - தொகுப்பு ஆசிரியர் .மோகனரங்கன்

பிள்ளை கடத்தல்காரன் (2015)

ஆட்டுப்பால் புட்டு (2016)

After Yesterday - Translated from Tamil – Short stories – 2017

.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்புஇரண்டு பாகம்- 2016

கட்டுரைத் தொகுப்பு

அங்கே இப்ப என்ன நேரம்? (2005)

பூமியின் பாதி வயது - உயிர்மை பதிப்பகம் (2007)

கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு - 2006)

வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) - காலச்சுவடு பதிப்பகம் (2006)

அமெரிக்க உளவாளி - கிழக்கு பதிப்பகம் (2010)

ஒன்றுக்கும் உதவாதவன் - உயிர்மை பதிப்பகம் (2011)

தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லைநேர்காணல்கள்  (2013)

தோற்றவர் வரலாறு (2016)

.முத்துலிங்கம் கட்டுரைகள்முழுத்தொகுப்புஇரண்டு பாகம்

Tuesday, November 10, 2020

இந்திய பெண் முதுகலை மருத்துவர் ஆனந்தி கோபால் ஜோஷி


"உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன், ஆனா ஒரே கண்டிஷன். அவளை படிக்க வைப்பேன் நீங்க தடுக்க கூடாது " என்ற கோபாலை பார்த்து அதிர்ச்சி அடைந்த யமுனாவின் அம்மா தன் கணவனின் காதில், "இந்த கிறுக்கனை வெளியே அனுப்புங்க. பிரிட்டிஷ் அரசாங்கத்து போஸ்ட் ஆபீஸ் குமாஸ்தாவாக இருக்கும் ஒரே காரணத்திற்காக இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது" என்கிறாள். "சும்மா ஒப்புக்கு ஒத்துப்போம். பின்னாடி பாத்துக்கலாம்" என்று சமாதானம் சொல்கிறான்.
கல்யாணமும் ஆகி விடுகிறது. பத்து வயதே ஆன யமுனாவிற்கு பஜ்ஜி சுடுவது பத்து பாத்திரம் தேய்ப்பது போன்ற அரிய கலைகளை அவள் அம்மா சொல்லி கொடுத்து கொண்டிருக்க,  அடுக்களையிலிருந்து அவளை வெளியே இழுத்து ஒரு பத்து புத்தகத்தை கையில் கொடுத்து, இதை படித்து முடித்தால்தான் நான் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்று சொல்லிவிட்டு போய் விடுகிறான்.
கணவனுடன் சேர்ந்து வாழும் ஆசையில் அம்மாவிற்கு தெரியாமல் ரகசியமாய் படிக்கிறாள். அந்த புத்தகத்தை படித்து முடிப்பதற்குள் அவள் வயதுக்கே வந்து விடுகிறாள்.
இனி இந்த பெண்ணை வீட்டில் வைத்திருக்க முடியாது, நீங்கள் கூட்டிக்கொண்டு சென்றாக வேண்டும் என்று கட்டாய படுத்தி யமுனாவை கோபாலுடன் அனுப்பி வைக்கிறார்கள்
முதல் இரவு அறைக்குள் இருவரையும் தள்ளி தாளிட்டு, இந்த கிறுக்கனை நம்ப முடியாது என்று கதவில் காதை வைத்து உள்ளே எதாவது நடக்கிறதா என்று ஒட்டு கேட்க ஆரம்பிக்கிறாள் யமுனாவின் அம்மா.
அதை அறிந்த கோபால் கட்டிலை தன் கையை வைத்து ஆட்டியபடி, " நீ படித்த 10 ஆம் பெருக்கல் டேபிளை சொல்லு " என்று பள்ளி அறையை பரிட்சை அறை ஆக்குகிறான்.
அவள் முப்பதாவது டேபிளையே அனாசயமாக சொல்லிவிட்டு
"கட்டிலை ஆட்டாமலே கேட்கலாம்ல" என்று அப்பாவியாய் கேட்பவளை ஆனந்தமாய் பார்த்து, "இன்று முதல் உன் பெயர் கரைக்குள் அடங்கும் யமுனா அல்ல. கரையில்லா ஆனந்தி" என்கிறான். 
தினமும் இரவு பள்ளி அறையில் இவன் பாடம் சொல்லி கொடுக்கிறான். வேண்டா வெறுப்பாய் கற்கிறாள். காலை முதல் வீட்டு வேலை செய்து களைப்பாக இருப்பதாக சொல்லி படிக்க முடியாது என்று அடம் பிடித்து  தூங்க ஆரம்பிக்கிறாள்.
மறுநாள் எழுந்து பார்த்தால் அவனே சமையல் வேலையை முடித்து வைத்து "இப்போ என்ன செய்வ?" என்பதை போல் பார்த்து விட்டு வேலைக்கு செல்கிறான். இரவு வந்த பொழுது அவள் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து கோபமாகி,  எழுப்பி அறைய போகும் பொழுது தடுத்து கர்ப்பமாய் இருப்பதாக சொல்லிறாள்.
கர்ப்பமாய் இருப்பதை விட இந்த சாக்கில் படிக்காமல் இருக்கலாம் என்று சந்தோசம் ஆகிறாள்.  அவளை ஒரு ஆங்கிலேய ஆண் கைனக்காலஜிஸ்டிடம் கூட்டி செல்கிறான். அவள் மிகவும் சங்கோஜப்படுகிறாள்.
"பெண் டாக்டராய் இருந்தால் நன்றாக இருக்கும்" என்கிறாள் திரும்பி வரும் பொழுது. "பெண்கள் படித்தால்தானே?" என்கிறான் புன்னகையுடன்.
இவளுக்கு பிரசவம் பார்த்த கையோடு தன் சொந்த ஊருக்கு விடுப்பில் போகிறார் அந்த டாக்டர்.
பத்தாவது நாளில் குழந்தை மிகுந்த காய்ச்சலில் அழுது கொண்டே இருக்கிறது. பக்கத்தில் வேறு ஆங்கிலேய மருத்துவர்கள் இல்லாததால் ஒரு கை வைத்தியரை கூப்பிட்டு வருகிறான். அவனிடம் மகிழ்ச்சியாக,  அரை மணி நேரம் முன்பு வரை கத்திக்கொண்டிருந்த தன் மகள் இப்பொழுது அமைதியாக தூங்குகிறாள் என்றாள். நாடியை பார்த்து விட்டு இறந்து விட்டதாக கூறுகிறான். அதிர்ச்சியில் உறைகிறாள்.
"குழந்தையை காப்பாற்ற முடியாமல் போன காரணம் என்ன? " என்று கோபாலிடம் கேட்டு புலம்புகிறாள். படித்த டாக்டர் பக்கத்தில் இல்லாததே என்கிறான். அவள் கண்களை துடைத்து கொண்டு, ஒரு உறுதியுடன், "என்னை டாக்டர் ஆக்குங்கள்" என்கிறாள்.
அவளை பள்ளியில் சேர்ப்பதற்காக அலைந்து திரியும் இவனை "மனு நீதியை மதிக்காத இவனெல்லாம் பிராமணன் இல்லை, பித்தன்" என்று ஊர் பழிக்கிறது.
1880 இல் கிறிஸ்டியன் மிஷனரிகளே பெண்களுக்கான பள்ளிகளை நடத்தி வருகிறது. பெரும்பாலும் அது வெள்ளைய பெண்களுக்கே. 
இவன் விடுவதாக இல்லை. அந்த பள்ளியின் பாதரை பார்த்து,  இயேசு அடிக்கடி கனவில் வருவதாகவும், தான் கிருஸ்துவத்துக்கு மாற விரும்புவதாகவும், அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு தன் மனைவிக்கு படிப்பறிவு இல்லை, அவளை பள்ளியில் சேர்ந்து படித்தால் அதை புரிந்து கொண்டு தான் குடும்பத்துடன் கிறிஸ்துவத்திற்கு மாற உதவியாய் இருக்கும் என்று புருடா விட்டு சீட்டை வாங்கி விடுகிறான்.
சீட்டு வாங்கினாலும் சீட்டு இல்லை. கருப்பு பெண் என்று பழிக்க பட்டு தரையில் உட்கார வைக்க படுகிறாள். அவள் அதை பொருட் படுத்தாமல் படிப்பில் முனைப்பாய் இருக்கிறாள்.
அதற்குள் ஊர் பஞ்சாயத்து கூடி, மனு தர்மத்தின் படி பெண்கள் படிப்பது பாவச்செயல் என்பதால் இவன் குடும்பத்தை தீண்ட தகாத குடும்பமாய் அறிவிக்கிறது.
தெரியாமல் ஒரு முறை பெஞ்சில் உட்கார்ந்து விட்டதனால் இவளை சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்புகிறது பள்ளி. ஒரே சமயத்தில் மத மற்றும் இன பேதங்களால் இரு முனையிலும் அவமான படுத்த படுகிறாள்.
இவர்கள் என்ன நம்மை புறக்கணிப்பது. நாம் இவர்களை புறக்கணிப்போம் என்று மஹாராஷ்டிரத்தை விட்டு கல்கத்தாவிற்கு வந்து இவளை பள்ளி படிக்க வைக்கிறான்.
அமெரிக்கா நாட்டில் உள்ள பல்கலை கழகங்கள் மற்றும் மிஷனரிகளுக்கு சலிக்காமல் கடிதம் எழுதுகிறான்.
நியூ ஜெர்சியில், பல் வலி தாங்க முடியாமல் இருக்கையில் நெளிந்து கொண்டிருக்கிறாள் தியோடிஸியா.
அந்த பல் டாக்டருக்கோ கூட்டம் அதிகம், காத்திருந்துதான் ஆக வேண்டும் என்று அலுத்துக்கொண்டே அந்த வரவேற்பு அறையில் உள்ள அந்த பத்திரிக்கையை எடுத்து உத்தேசமாக ஒரு பக்கத்தை பிரித்தால்,  அதில் ஆனந்தி என்ற இந்திய  பெண் மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல் சிரம படுவதை பற்றி அவள் கணவன் எழுதிய கடிதத்தை வைத்து ஒரு கட்டுரையை படித்த ஆச்சரியத்தில்,  அவளுக்கு பல் வலியே மறந்து,  அந்த முகம் தெரியாத ஆனந்தி மேல் ஒரு நேசம் வந்து விட்டது.
அவர்கள் விரைவில் கடித நண்பர்கள் ஆனார்கள். தியோடிஸியை சித்தி என்றே அழைப்பாள் ஆனந்தி. அது தியோடிஸிக்கு விநோதமாகவும், மிகவும் பிடித்தும் இருந்தது. அவள் ஆனந்திக்கு பென்சில்வேனியா மருத்துவ காலேஜில் சேருவதற்கு உதவி செய்தாள்.
இவள் அமேரிக்கா பயணப் படுவதற்கு அதே மனு தர்மத்தை வைத்து பெண் படிப்பே பாவம் அதுவும் கடல் கடந்து படிப்பது பெரும் பாவம் என்று கலாட்டா செய்தவர்களை பார்த்து
"ஹிந்து பெண் டாக்டர்கள் இல்லாததாலேயே ஹிந்து பெண்கள் பலர் இறக்கிறார்கள். அவர்களை காப்பதற்காக நான் படிக்க போகிறேன். ஹிந்து பெண்கள் சாவதை வேடிக்கை பார்ப்பதுதான் உங்கள் தர்மம் என்றால் அதை ஏற்க போவது இல்லை " என்று தெளிவாக சொல்லி விட்டு படகு எறியவளை என்ன சொல்லி தடுப்பது என்று ஸ்தம்பித்தது, அந்த கும்பல்.
அமெரிக்கா சென்று டாக்டர் மட்டும் அல்ல எம். டி ஓ. ஜி யும் முடித்து விட்டு ஊர் திரும்பிய போது அதே கும்பல் அவளை தன் தலை மீது தூக்கி வைத்து கொண்டாடியது.
டிபி யில், தன் 22 ஆம் வயதில் மரண படுக்கையில், "நான் மெனக்கெட்டதெல்லாம் வீணாகி விட்டதே. பலருக்கும் மருத்துவம் பார்க்க முடியாமல் இறக்க போகிறேனே?" என்று விரக்தி அடையும் பொழுது, கோபால் சொல்கிறான் " நீ வீண் அல்ல. துருவ விண்மீன். உன்னை வழிகாட்டியாக கொண்டு, கோடி பெண்கள், பல்வேறு துறைகளிலும் திறக்காத கதவுகளை உடைத்து திறப்பார்கள்"
முதல் இந்திய பெண் முதுகலை மருதுவரானா ஆனந்தி கோபால் இன்றும் பலருக்கு வழிகாட்டியே.
( படம் : ஆனந்தி கோபால், மொழி : மராத்தி, உபயம் : zee 5 )