Showing posts with label Images Photos and Paintings. Show all posts
Showing posts with label Images Photos and Paintings. Show all posts
Tuesday, March 5, 2019
Monday, March 4, 2019
Tuesday, February 26, 2019
Underground cathedral , Monolithic Church of Saint-Jean of Aubeterre Aubeterre-sur-dronne , france.
The lower part of the village the Underground Church of St Jean, also known as the Monolithic church, Eglise Monolithique, or the troglodyte church is outstanding. The church has been carved out of the rock and inside is enormous. The height reaches to 20 meters at its highest - taller than that of St Emillion. Indeed the Monolithic church of Aubeterre sur Dronne is the tallest in the world. (St Emillion's, though not as tall, is the largest in Europe).
The church was hidden for years by a large rock fall and only rediscovered in the 1950s.| Reactions: |
Thursday, February 14, 2019
ப்ரயோக சக்கர ஆசனத்தில் அமர்ந்து இருக்கும் ஶ்ரீ நரசிம்மர்
Wednesday, February 13, 2019
Sunday, February 10, 2019
கபாலீஸ்வரர் கோவிலில் நர்த்தன விநாயகர்
சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும், முதலில் தல விநாயகர் நர்த்தன விநாயகர் திருக்காட்சி தருகிறார்.
இங்கு அன்னை கற்பகாம்பாளிடம் முருகப்பெருமான் சூரனை சம்கரிக்க சிங்கார வேல் பெற்றபோது, ஈசன் இங்குள்ள விநாயகரை வழிபட்ட பின்பே முருகப்பெருமானை போருக்கு செல்ல பணித்தாராம். இதனால் சிங்காரவேலர் இத்தல விநாயகரை வழிபட்டாராம். இதனைக்கண்டு மகிழ்ச்சி அடைந்த விநாயகர், அந்த மகிழ்ச்சியில் ஆனந்தித்து நர்த்தனம் ஆடினாராம்.
நர்த்தன கோலத்திலேயே முருகப்பெருமானையும் ஆசீர்வதித்தாராம். இதனால்தான் இத்தல விநாயகர் நர்த்தன விநாயகர் என்றானார் என்கிறது தலபுராணம். விநாயகர் என்றும் இத்தலத்தில் ஆனந்தித்த நிலையில் நர்த்தன திருக்கோலத்தில் இருப்பதால் விநாயகர் அகவல் பாராயணம் செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் வாழ்வில் சகல நலத்தையும், வளத்தையும் தருவார் என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, முருகப்பெருமான் சூரனை வதைப்பதற்கு நர்த்தன விநாயகர் அருளாசி வழங்கியதால் இத்தல நர்த்தன விநாயகரை அருகு சாற்றி விநாயகர் அகவல் பாராயணம் செய்து தொடர்ந்து வழிபட பகை, பில்லி, சூன்யம், எதிரி தொல்லை, கடன் தொல்லை அகலும் என்கிறார்கள். நர்த்தன விநாயகரை சங்கட ஹர சதுர்த்தி நாட்களில் அபிஷேகம் செய்வித்து வழிபட்டு வந்தால் வாழ்வின் கவலைகளை ஒழிப்பாராம்.
இங்கு அன்னை கற்பகாம்பாளிடம் முருகப்பெருமான் சூரனை சம்கரிக்க சிங்கார வேல் பெற்றபோது, ஈசன் இங்குள்ள விநாயகரை வழிபட்ட பின்பே முருகப்பெருமானை போருக்கு செல்ல பணித்தாராம். இதனால் சிங்காரவேலர் இத்தல விநாயகரை வழிபட்டாராம். இதனைக்கண்டு மகிழ்ச்சி அடைந்த விநாயகர், அந்த மகிழ்ச்சியில் ஆனந்தித்து நர்த்தனம் ஆடினாராம்.
நர்த்தன கோலத்திலேயே முருகப்பெருமானையும் ஆசீர்வதித்தாராம். இதனால்தான் இத்தல விநாயகர் நர்த்தன விநாயகர் என்றானார் என்கிறது தலபுராணம். விநாயகர் என்றும் இத்தலத்தில் ஆனந்தித்த நிலையில் நர்த்தன திருக்கோலத்தில் இருப்பதால் விநாயகர் அகவல் பாராயணம் செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் வாழ்வில் சகல நலத்தையும், வளத்தையும் தருவார் என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, முருகப்பெருமான் சூரனை வதைப்பதற்கு நர்த்தன விநாயகர் அருளாசி வழங்கியதால் இத்தல நர்த்தன விநாயகரை அருகு சாற்றி விநாயகர் அகவல் பாராயணம் செய்து தொடர்ந்து வழிபட பகை, பில்லி, சூன்யம், எதிரி தொல்லை, கடன் தொல்லை அகலும் என்கிறார்கள். நர்த்தன விநாயகரை சங்கட ஹர சதுர்த்தி நாட்களில் அபிஷேகம் செய்வித்து வழிபட்டு வந்தால் வாழ்வின் கவலைகளை ஒழிப்பாராம்.
Wednesday, February 6, 2019
Monday, February 4, 2019
பௌர்ணமி நிலவை அன்னை அபிராமி வர வைத்த நாள் இன்று (தை அமாவாசை)
தன்னுடைய திருச்செவியில் அணிந்திருந்த தாடங்கத்தை வானிலே அபிராமி பட்டருக்காக வீசி அமாவாசை அன்று பௌர்ணமி நிலவை அன்னை அபிராமி வர வைத்த நாள் இன்று (தை அமாவாசை).
அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் (Serfoji I) ஆண்டு வந்தார் (கி. பி. 1675–1728). தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின், ஸ்ரீ அமிர்தகடேசுவரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார்.
அரசர் திருக்கோயிலுக்கு உள்ளே செனறபொழுது கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று கேட்டார். அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்; தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு ஏதோ ஒரு துர்தேவதையை வழிபடுகின்றவர்” என்று கூறினார்கள்.ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.ஆகையால் திரும்பி வரும்போது பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அம்பிகையின் அருள்மிகு தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்றார்.
அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி, அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்."உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார்.அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய,
“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப் பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”
என்ற பாடலை பாடிய உடன், ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள்.தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள்.
அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.
மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார்.அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார்.
இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் "அபிராமி அந்தாதி" என்றப்பெயரில் வந்தன, அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முதல் வரி 'உதிக்கின்ற'என்ற வார்ததையுடன் ஆரம்பிக்கும் முதல் பாடல் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது.
Labels:
Arts,
Images Photos and Paintings,
Spiritual
| Reactions: |
Sunday, February 3, 2019
Saturday, February 2, 2019
இசைஞானி இளையராஜா_75
Monday, January 21, 2019
Subscribe to:
Posts (Atom)


































































































