Search This Blog

Sunday, August 9, 2020

ஸ்ரீ ருத்ரத்தில் மஹிமை

:


ஜாபாலோபனிஷத்தில் எதை ஜெபித்தால் மோக்ஷம் அடையலாம் என்ற கேள்விக்கு ருத்ரம் ஜெபித்தால் மோக்ஷம் அடையலாம் என்ற பதில் காணப்படுகிறது.

ருத்ரம் கேட்பது எத்தனை சிறந்ததோ ருத்ரத்தின் உயர்வைக் கேட்பது கூட அதே அளவு சிறப்பு வாய்ந்தது. அதனைக் கூறிக் கொண்டிருந்தால் பரமேஸ்வரன் ஆனந்தமடைவான்.

கர்ம காண்டத்திற்கும் ஞான காண்டதிற்கும் பயன்படுவதற்கு ஏற்றாற்போல் வேதத்திற்கு ஹிருதயமாக ருத்ரத்தை வைத்துள்ளார்கள்.

* "யஜுஷாம் ஸாரம்" என்பதால் ருத்ரம் யஜுர் வேதத்தின் ஸாரமாகும்.

* சாதாதப ஸ்மிருதியில்

"மத்யபானம் செய்தாலும் குருதாரகமனம் ஸ்வர்ணஸ்தேயம் ப்ரஹ்மஹத்யை இவற்றையெல்லாம் செய்தாலும் விபூதி தாரணம் கொண்டு ருத்ரத்தை ஜபம் செய்கிறவன் ஸமஸ்த பாவங்களிருந்து விடுபடுகிறான்"

* அத்ரி ஸ்மிருதியில்

மஹாபாபங்களை செய்தவனும் ருத்ர பாராயணம் மிக சிறந்தது என்று அறிந்து பதினொரு முறை ஜபிப்பதால் அந்த பாபங்களில் இருந்து விடுபடுகிறான் இதில் ஐயமில்லை

*யாக்ஞவல்ய ஸ்மிருதி

ஸுரபானம் செய்தவனும் ஸ்வர்ணஸ்தேயம் செய்தவனும் தண்ணீரில் இருந்து கொண்டு ருத்ரமும் புருஷ சூக்தமும் ஜபிப்பதால் எல்லா பாபங்களில் இருந்து விடுபடுகிறான்

* சத ருத்ரேண இதி’ என்று. ‘சத ருத்ரம் ஜபம் செய்தால் சித்தம் சுத்தமாகி மோட்சம் கிட்டும்’ என்கிறார்.

* வேதம் முழுவதும் ஒரு தடவை ஜபம் செய்வதால் அந்த பகலிலேயே சுத்தி அடைவான் ஆனால் ருத்ரத்தை ஜபிப்பதால் அந்த க்ஷணமே சுத்தியடைந்துவிடுவான்.

* மஹாபாரதத்தில் "வேதேசாஸ்ய விஞ்ஞான சதருத்ரீய முத்தமம்" மற்ற வேத பகுதிகளை விட ருத்ரம் உத்தமானது

அநுஸாசனிக பருவத்தில் காலையில் எழுந்து சுத்தமாக இருந்து அஞ்சலி பந்தத்துடன் ருத்ரத்தை ஜபிக்கின்றவன் அடைய முடியாது ஒன்றுமில்லை

* அவிமுக்தம் மம க்ஷேத்ரம் மந்நாம பரமம் சுபம்
சதருத்ரீய ஜாபித்வம் ததா சன்யாச முத்தமம்!’
அவிமுக்தத் தலத்தில் மரணமடைந்தவன், சன்னியாசம் ஏற்றுக் கொண்டவன், சத ருத்ரீயம் ஜபம் செய்பவன் – இவர்கள் மோட்சத்தை அடைவார்கள்’ என்று கூறப்படுகிறது. சத ருத்ரீயத்தின் பெருமை எவ்வளவு உயர்ந்தது என்பது இதன் மூலம் தெரிகிறது.

* யார் சத ருத்ரீயத்தை நிரந்தரம் அனுஷ்டானம் செய்வாரோ அவருக்கு ருத்ர க்ரந்தி பேதனம் நிகழ்ந்து கைவல்யத்தை அடைவார். சத ருத்ரீய ஜபம் சகல பாவங்களையும் பஸ்மம் செய்ய வல்லது என்பது பராசர புராணம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள விஷயம்.

* ததோ பூத ப்ரேத பிசாச பத்த ப்ரஹ்ம ராக்ஷச யக்ஷ யமதூத சாகினீ டாகினீ சர்வ ஸ்வாபத தஸ்கர ஜ்வராத் யுபத்ரவாத்!’ என்று மஹா ந்யாசத்தில் கூறப்பட்டுள்ளது.

* சத ருத்ரீய சன்யஸ்து’ – சத ருத்ரீயம் மட்டும் படிக்க வேண்டுமாம். பிரணவத்திற்கு எத்தனை முக்கியத்துவமோ சத ருத்ரீயத்திற்கும் அத்தனை முக்கியத்துவம் கூறப்படுகிறது.

* ஆயிரம் பிராயச்சித்த கர்மாக்களை விட ஒரு ருத்ர அத்யாயம் எத்தனையோ உயர்ந்தது. பிராயஸ்சித்த செயல்களால் செய்த பாவம் தீருமே தவிர, மீண்டும் பாவம் செய்ய வேண்டுமென்ற குணம் மாறாது. ருத்ர அத்யாயம் அதைச் செய்யக் கூடியது.

* ருத்ரத்தை யக்ஞம் போன்ற செயல்களிலும், உபாசனைகளிலும் ஏன் பயன்படுத்துகிறோம்? ‘இஷ்டப் ப்ராப்தி. அனிஷ்ட பரிஹாரம்’ ஏற்படுவதற்காக. அதாவது விரும்பியவை கிடைப்பதற்கும், விருப்பமில்லாதவை விலகுவதற்கும்

* நிரந்தரம் சிவனை பூஜிப்பவர்களைப் பார்த்து வியாதிகளும் பாவங்களும் உபத்திரவங்களும் பூத பிரேத பிசாசுகளும் விலகி நின்று பயம் கொள்ளும். ‘சர்வே ஜ்வலந்தம் பஸ்யந்து’ – அவற்றுக்கு இவர்கள் அக்னி ஜ்வாலை போல் தென்படுவார்களாம்

* சிவனை தியானித்து சத ருத்ரீயம் படித்தால் பூமியிலுள்ள அனைத்து செல்வத்தையும் சிவனுக்கு அர்ப்பணித்த புண்ணியம் கிடைக்கும். ஒரு முறை ருத்ரம் ஜபம் செய்தால் பூமியிலுள்ள சகல பொருட்களாலும் சிவனை பூஜித்த பலன் கிடைக்கும்’ என்று கூறியுள்ளார்.

इडा देवहूर्मनुर्यज्ञनीर्बृहस्पतिरुक्थामदानि
शसिषद्विश्वेदेवाः सूक्तवाचः पृथिवीमातर्मा
मा हिसीर्मधु मनिष्ये मधु जनिष्ये मधु वक्ष्यामि
मधु वदिष्यामि मधुमतीं देवेभ्यो वाचमुद्यास
शुश्रूषेण्यां मनुष्येभ्यस्तं मा देवा अवन्तु
शोभायै पितरोऽनुमदन्तु ॥

No comments:

Post a Comment