Search This Blog

Friday, April 24, 2020

ஈழத்தின் நாடக - திரைப்படக் கலைத்தந்தை ஏ.ரகுநாதன்

ஈழத்தின் நாடக - திரைப்படக் கலைத்தந்தை ஏ.ரகுநாதன் அவர்கள் காலமானார்.
உலகத்தை உலுப்பி வரும் கொரோனா வைரஸ் தொற்று எங்கள் மூத்த கலைச்செல்வத்தையும் காவுகொண்டு விட்டது..

வாரம் தோறும் வைத்தியசாலை சென்று வருபவர் என்பதால் இவர் குறித்து ஒரு பயம் நிலவியது.




ஈழத்தின் நாடக திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவரான
மூத்த கலைஞர், கலையரசு சொர்ணலிங்கம் அவர்களைக் குருவாக ஏற்று நாடகக் கலையைக் கற்றவர்.

முதுமை நிலையை அடைந்திருந்த போதிலும் தனது குருநாதர் சொர்ணலிங்கம் அவர்கள் பற்றிப் பல்வேறு விடயங்களை அடிக்கடி கூறிவந்தவர்.
அவர் கூறியவற்றுள் மிகவும் அவதானத்துக்குரியது:
“நல்லதை எங்கு கண்டாலும் பாராட்டு, அந்த நல்லதை நீயும் கற்றுக்கொள்வாய்” என்ற அவரது குருநாதரின் தாரக மந்திரம்.
1967 ஜனவரி மாதத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ரயிலில் சென்று கொண்டிருக்கையில் நிகழ்ந்த உரையாடலில் “ஈழத்திலும் திரைப்பட நடிகர்கள் இருக்கிறார்களா” என்ற கேள்விக்குப் பதிலாக ஈழத்தின் நான்காவது திரைப்படமாக ‘நிர்மலா’ வைத் தயாரித்தளித்தவர்.
ஈழத்துத் திரைப்பட வரலாற்று நாயகன் ஏ.ரகுநாதன்.

‘நெஞ்சுக்கு நீதி’ ‘புதியகாற்று’ ஆகிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர்.
‘தெய்வம் தந்த வீடு’ திரைப்படத்தில் நாதஸ்வரக்கலைஞராக நாயகனாக நடித்திருந்தார்.
புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டுக்கு வந்து சேர்ந்தவர் இங்கும் நாடக, திரைப்படத் துறைகளில் ஈடுபட்டு வந்தார்.
பரிஸ் நகரில் பவளவிழா கண்ட ஒரே ஈழத்தமிழ்க் கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள்.
தான் சந்தித்த கலைஞர்கள் என நூல் ஒன்றினை கலைஞர் பரா அவர்களின் உதவியுடன் அவரது இறுதிக் காலத்தில் எழுதிக் கொண்டிருந்தார்.
நோய் அவரது உடலை வாட்டியது என்பது உண்மை.
ஆனால், அவரது உள்ளம் எப்பொழுதும் கலையையும் கலைஞர்களையும் பற்றியே சிந்தித்தது.
நிறைவேறாத ஆசைகள் பலவற்றுடன் கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களின் இறுதிப்பயணம்..

No comments:

Post a Comment