Search This Blog

Friday, April 10, 2020

இலஞ்ச சட்டத்தின் கீழ் குற்றமொன்றிற்கு குற்றவாளியாவதால் வழங்கப்படும் தண்டனை யாது?


இலஞ்சத்தைப் பரிந்து கேட்டல், ஏற்றுக் கொள்தல், கொடுத்தல் அல்லது இதில் ஏதும் ஒன்றைச் செய்ய எத்தனித்தல், சூழ்ச்சி செய்தல் அல்லது அனுசரனை வழங்குதல் போன்ற குற்றங்களுக்கு குற்றவாளியானால்.
7 ஆண்டுகளுக்கு விஞ்சாத .......... சிறைத் தண்டனையுடன் ரூபா 5000/= திற்கு மேற்படாத தண்டப் பணம் விதித்தல்.
மேற் குறிப்பிட்ட தண்டனைகளுக்கு மேலதிகமாக இலஞ்சத்திற்காக பரிமாற்றஞ் செய்யப்பட்ட அவாநிறைவொன்றின் பெருமதிக்கு சமமான தொகையை தண்டப் பணமாக அறவிடுதல்.
ஆதனம் தொடர்பில்:
ஏதும் ஆதனமொன்று இலஞ்சத்தின் மூலம் பெற்றுக் கொண்டதாக நிரூபிக்கப்படும் போது மேற் குறிப்பிட்ட 1(அ) தண்டனைக்கு மேலதிகமாக இலஞ்சத்தால் பெற்றுக் கொண்டதாக தீர்மானம் செய்யப்பட்ட ஆதனத்தின் பெருமதிக்கு குறையாத அல்லது மும்மடங்கிற்கு விஞ்சாத தொகையைத் தணடப் பணமாக நியமித்தல் அல்லது குறிப்பிட்ட ஆதனத்தை அரசுடமையாக்குதல்.
ஊழல் குற்றமொன்றில் குற்றவாளியாக்கப்பட்டின் 10 ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்குச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாவை விஞ்சாத தண்டப் பணம் அல்லது மேற் கூறிய இரண்டும் வழங்கப்பட வேண்டும்.

ஆதனச்சட்டம் எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது?
ஆளொருவர் 1954 மார்ச் 1 ஆம் திகதியன்றோ அதன் பின்னராகவோ தனதாக்கிக் கொண்ட பணம், பணமல்லாத ஆதனங்கள் அந்நபரின் அறியப்பட்ட வருவாயின் அல்லது வரவுகளின் பகுதியாக இருக்க முடியாத விடத்து அப்பணம் அல்லது பணமல்லாத அவ் ஆதனங்கள் இலஞ்சத்தின் மூலம் பெற்றுக் கொண்டதாக (அவை அவ்வாறு பெற்றுக் கொள்ளபப்டவில்லை என குறித்த நபரினால் நிரூபிக்கப்படும் வரையில்) சட்டத்தால் கருதப்படும்.

Thanks Ziyarathul Feros

No comments:

Post a Comment