Search This Blog

Tuesday, December 17, 2019

First road with plastic waste in Sri Lanka (பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகித்து தார்ச்சாலை அமைத்தல்.)



A 500 metre road from Ratmalana to Borupana, South of Colombo had been paved with an asphalt mixture containing shredded and molten plastic extracted from municipal waste.
Non-recyclable plastic waste is taken from municipal waste (in Sri Lanka plastic, paper and food waste is now separated in households) shredded and heated with aggregates at 165 degrees centigrade.
"The molten waste-plastic-mix coats the heated aggregates before being coated with bitumen," the firm said.
"The new material – waste plastic modified asphalt concrete mix – will be applied for surfacing of roads under 150 degrees centigrate temperature. "
The plastic asphalt mixture not only solves the waste problem but cuts road construction costs and makes the pavements more durable.
Tests are conducted on the pilot project, the company said.
"Similar waste plastic modified asphalt mixes are successfully applied to road surfacing in countries such as UK, Canada, Netherlands, Philippines, India and Indonesia," 

The Plastic and Bitumen Mixture

Using recycled plastic for road building sounds simple, but it actually requires a complex process to create the right material. "Different plastics do different things to bitumen," he explains. "If you use the wrong mix, it actually can make the bitumen more brittle."
It is good to avoids using PET bottles and other types of plastic that are easily recycled, and instead concentrates on types of waste plastic that might otherwise end up buried in the ground. Reid declined to go into too much detail, so as not to reveal too much about MacRebur's proprietary process.
In addition to keeping plastic out of landfills, the company's plastic road materials can save about 1 ton (.907 metric tons) in carbon dioxide output for each ton of bitumen that the plastic replaces, according to this fact sheet from MacRebur's website.
Thanks 

https://economynext.com/

பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகித்து தார்ச்சாலை அமைத்தல்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், 1.60 மி.மீ. முதல் 2.50 மி.மீ. அளவுள்ள சிறு சிறு துகள்களாக வெட்டு இயந்திரங்களின் உதவியால் வெட்டப்பட்டு, சேகரித்து வைக்கப்படுகிறது. பின்பு இவை, தார்ச்சாலை அமைக்க சேகரிக்கப்பட்ட 110° செல்சியஸ் அளவிற்கு சூடுபடுத்தப்பட்ட கற்களுடன் சேர்த்து சுழற்சி முறையில் கலக்கப்படுகிறது. அவ்வாறு கலக்கப்படும் போது, கற்களில் உள்ள 1709 செல்சியஸ் வெப்பத்தினால், 30லிருந்து 60 வினாடிகளுக்குள் சிறு துகள்களாக நறுக்கப்பட்ட, பிளாஸ்டிக் துகள்கள் இளகி, கற்களின் மேல் போர்த்தியது போல், கற்களின் மேற்பரப்புகளை முழுவதுமாக மூடிவிடுகிறது.
இவ்வாறு இளகிய பிளாஸ்டிக் கழிவுகளுடன் சேர்க்கப்பட்ட கற்கள், உறுதியானவையாகவும், பிடிப்புத் தன்மையுள்ளதாகவும், மாறிவிடுகிறது. மேலும், கற்களின் மேற்பரப்பில் உள்ள சிறு சிறு நுண் இடைவெளி முழுவதுமாக மூடப்படுவதால், அதனுள், மழைநீர் அல்லது உப்பு கலந்த நீர் புகாமல் தடுக்கப்படுகிறது. இதனால், கற்கள் மழைநீரை உறிஞ்சி சிறு சிறு கற்களாக உடைவது தவிர்க்கப்படுவதுடன், சாலை குறுகிய காலத்திற்குள் பாழ்படுவது தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு, இளகிய பிளாஸ்டிக் கழிவுகளுடன் சேர்க்கப்பட்ட கற்களுடன், 1650 செல்சியஸ் வெப்ப அளவில் சூடுபடுத்தப்பட்ட தார் சேர்க்கப்படுகிறது.
மேலே கூறப்பட்ட வெப்ப அளவுகளில், தயார் செய்யப்பட்ட கலவையானது, 1109 - 1209 செல்சியஸ் வெப்ப அளவிற்குள்ளாக, தயார் நிலையில் உள்ள சாலைகளில் பரப்பப்பட்டு, கனமுள்ள சாலை உருளை வண்டி மூலம் இறுக்கம் கொடுக்கப்பட்டு, பிளாஸ்டிக் தார்ச் சாலை அமைக்கப்படுகிறது. 10 சதுர மீட்டர் அளவும் 25 மி.மீட்டர் கனமும் உள்ள பிளாஸ்டிக் தார்ச்சாலை அமைக்க, 27 கிலோ தார்க்கலவையும் 3 கிலோ பிளாஸ்டிக் நறுக்குகளும் தேவைப்படும். சாதாரண தார்ச் சாலை அமைக்க 30 கிலோ தார்க்கலவை தேவைப்படும். ஒரு பிளாஸ்டிக் சாலை அமைக்க தார்க்கலவையின் அளவில் 10 சதவீதம் பிளாஸ்டிக் நறுக்குகள் தேவைப்படும். இவ்வாறு அமைக்கப்பட்ட சாலைகள், உறுதி வாய்ந்தவையாகவும் மழைக்காலங்களில் சேதமடையாமலும் பிளாஸ்டிக் கழிவுகளின் பயன்பாட்டினால் புற ஊதா நிறக் கதிர் வெளிப்பாடு இல்லாமலும், அதிக கனரக வாகனப் போக்குவரத்தை தாங்கக் கூடியவையாகவும், குறைந்தது 7 வருடங்களுக்கு எந்தவித சேதாரம் இல்லாமலும் பயன்பாட்டில் இருக்கும்.

Alternative Method 
தற்போது பல்கலைகழகங்களில், கழிவு பிளாஸ்டிக் பொருட்களைக்கொண்டு வீதி அமைத்தல் எனும் விடயத்தின் கீழ் (Using Waste Plastic in Road Construction) எனும் தலைப்பின் கீழ் பல ஆய்வுக்கட்டுரைகள் வெளி வந்துள்ளன. இதில் பாவிக்கப்படும் தாருக்கு சிபாரிசு செய்யப்பட்டளவு பிளாஸ்டிக் சேர்க்கப்பட்டு தார் வீதிகளுக்கு பாவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே எனிவரும் காலங்களில் கார்பட் வீதிகளுக்கு போடப்படும் அஸ்போல்ட் கொங்கிறீட்டுடன் சிபாரிசு செய்யப்பட்ட அளவு பிளாஸ்டிக் சேர்க்கப்பட்டு கார்பட் வீதிகள் அமைக்கப்படவுள்ளது.
இவ்வாறு பிளாஸ்டிக் சேர்ப்பதனால் வீதியின் பாவனைக்காலம் கூடுதலாகவும் வீதிகள் உறுதியாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது அத்துடன் மிக முக்கியமான விடயம் நகரிலே சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் மீள் பாவனைக்கு உட்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் முடியும்.










 திருகோணமலை  நகராட்சிமன்றம் பரீட்சாத்தமாக இராஜவரோதயம் சதுக்கத்திலுள்ள சிறிய வீதியொன்றிற்கு துண்டுகளாக வெட்டப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களை தாருடன் உருக்கி 12.03.2021 அன்று வீதி தாரிடும் வேலையை ஆரம்பித்தது. தாரினையும் பிளாஸ்டிக்கினையும் உருக்கிய கலவையைக்கொண்டு சிறப்பாக வீதியை அமைத்துக்கொண்டது. 


No comments:

Post a Comment