Search This Blog

Saturday, May 18, 2019

ராபியா அல் அதாவிய்யா(Rabia Al-Adawiyya) பெண் சூஃபி ஞானி

ராபியா அல் அதாவிய்யா(Rabia Al-Adawiyya) எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் சூஃபி ஞானி.பொது ஆண்டு 714-718 இற்கு இடையில் பிறந்து பொது ஆண்டு 801இல் மறைந்தார் என்கிறார்கள்.
ஒருமுறை ராபியா பஸ்ரா(ஈராக்) நகரின் வீதிகளில் ஒரு கையில் தீயெரியும் பானையுடனும் மறுகையில் நீர் நிறைந்த வாளியுடனும் ஓடிக்கொண்டிருந்தாராம்.
என்ன செய்கிறீர்கள் என்று அவரை பஸ்ராவாசிகள் கேட்டபோது,
நான் நரகத்தின் நெருப்பை அணைக்கவும், சொர்க்கத்தின் இன்பங்களை எரிக்கவும் விரும்புகிறேன்.அவை அல்லாஹ்வுக்கான பாதையை தடைசெய்கின்றன.
நான் நரகத்தின் தண்டனை குறித்த அச்சத்தினாலோ, சொர்க்கத்தின் இன்பங்கள் மீதான ஆசையினாலோ இறைவனை வழிபட விரும்பவில்லை.அல்லாஹ்வின் மீதான அன்பின் மிகுதியாலேயே அவனை வழிபட விரும்புகிறேன் என்றாராம்.
அவர் பிரார்த்தனை இப்படி இருந்தது,
"O Lord, if I worship You because of Fear of Hell,
then burn me in Hell;
If I worship You because I desire Paradise,
then exclude me from Paradise;
But if I worship You for Yourself alone,
then deny me not your Eternal Beauty.
இதை நான் இப்படி எழுதிக்கொள்கிறேன்.
'இறைவா,நான் நரகத்திற்கு அஞ்சி உன்னை வழிபட்டால் என்னை நரக நெருப்பில் இடு
சொர்க்கத்திற்கு ஆசைப்பட்டு வழிபட்டால்
என்னை அதிலிருந்து புறத்தாக்கி விடு
உனக்காக மட்டுமே உன்னை வழிபட்டால் உன் திகட்டாத பேரழகை மறைத்துவிடாதே'
இஸ்லாமிய போதகர் முகமது மறைந்து(பொது ஆண்டு 632) நூறு வருடங்களுக்குள் ராபியா பிறந்துவிட்டார்.
அவர் இஸ்லாத்திலிருந்து தனக்குரியதை உருவாக்கிக்கொண்டார்.
ஆனால் 1400 ஆண்டுகளுக்குப் பின்னரும் சிலர் சொர்க்கத்தின் பொருளை உணராமல் 72 நடமாடும் நித்திய பாலியல் பொருள்களுக்காக தாமும் செத்து மற்றவர்களையும் சாகடிக்கிறார்கள்.


No comments:

Post a Comment